01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Friday, May 25, 2012

ஜென்ம குரு என்ன செய்யும் ? ,jupiter at first place?


குரு ராசியிலேயே கோச்சார ரீதியாக வரும் போது அது ஜென்ம குரு என்று சொல்லபடுகிறது.

குரு ஜென்மத்தில் இருந்தால் வனவாசம் . வனவாசம் என்றால் நிம்மதி இல்லாத நிலை, எதையோ இழந்ததைபோல மனது அலைபாயும். அந்தஸ்து குறையும். அலைச்சல் அதிகமாகும்.

பகவான் ராமர் கூட வனவாசம் சென்ற போது அவருக்கு ஜென்மத்தில் குரு இருந்தது.

Wednesday, May 23, 2012

பதவி இழப்பு ? ,WHEN ONE PERSON GET TERMINATED OR LOSES HIS JOBS ?


பொதுவாக குரு பகவான் பத்தாம் இடத்தில் இருக்கும் போது பதவி இழப்பு, வேலை பறிபோதல் இது போன்றவை நிகழும்.

பகவான் ஸ்ரீ ராமனுக்கு கிடைக்க வேண்டிய பட்டாபிழேகமே பறிபோனது. அப்போது ஸ்ரீ ராமருக்கு பத்தில் குரு இருந்தது.


ஆறாம் இடத்து சனி என்ன செய்யும் ? ,WHEN MR. ABDUL KALAM BECAME PRESIDENT OF INDIA ?


சனி பகவான் என்ன செய்வார் ?

ஆறாம் இடத்திற்கு சனி வரும் போது மிக அற்புதமான காரியங்களை நிகழ்த்துவார்.

நமது ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு சனி ஆறாம் இடத்தில் இருக்கும் போது அவருக்கு ஜனாதிபதி பதவி அவரை தேடி வந்தது.

மேலும் பொதுவாக ஆறாம் இடத்தில் சனி இருக்கும் போது பலருக்கு பரிசு பாராட்டு பட்டம் அவார்டு கிடைக்கும்.

Friday, May 18, 2012

குரு , JUPITER1 - ம் இடத்தில் குரு :மனஸ்தாபங்கள் குறைய வேண்டுமே என்று நினைத்தது நிறைவேறும். மொத்தமாக இடப்பெயர்ச்சி நேரும். புகழ், கௌரவம், அந்தஸ்து இவை குன்றியதுபோல தோன்றும். இழந்தவை திரும்பாதோ எனவும் தோன்றும். குடும்ப கலகங்கள் தங்கள் பார்வைக்கு வராது. எதையும் யோசித்து, நிதானமாக செய்தல் நல்லது.குடும்பத்தினருடன் கோபம், குறை மற்றும் பரஸ்பர எதிர்வாதங்கள் வேண்டாம். அதர்மமான காரியங்களில் ஈடுபட்டு அல்லலில் விழ வேண்டி வரும்.உகந்த ஒருவரை பிரிய வேண்டி வரலாம். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெறுவார்கள். நீண்ட காலமாக விற்பனையாகாத, தங்களுக்கு உரிமையான இடத்தை தற்போது நல்ல விலைக்கு விற்கலாம். தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான சாதனையைச் செய்வார்கள். காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைக்கும். நண்பர்கள் சகோதரர்கள் உதவியுடன் வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். கிணறு, ஆழ்துளை கிணறு இவற்றில் நீர் ஊற்று ஏற்படுத்தும் முயற்சிகளில் தற்போது ஈடுபடுதல் நன்மை பயக்கும்.