01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, October 31, 2012

குடி பழக்கம், போதை பழக்கம், சாராயம் கல் ஏன் ?ஒருவருக்கு குறிப்பிட்ட கிரக அமைப்பு இருந்தால் அவருக்கு சிறு வயது முதலே தீய பழக்க வழக்கங்கள் இருக்கும். சனி+கேது அல்லது சனி+ராகு அல்லது சனி+சுக்கிரன்+ராகு அல்லது செவ்வாய்+சுக்கிரன்+ராகு ஆகிய கிரக சேர்க்கை காணப்பட்டால் அந்த ஜாதகருக்கு ஏதாவது ஒரு தீய பழக்கம் (போதை தொடர்பான) இருக்கும். 

சனி போதைக்கு உரிய கிரகம். எனவே, சனி+செவ்வாய் சேர்க்கை அல்லது சனி+செவ்வாய் பார்வை இருந்து, அதோடு சந்திரன் அல்லது சுக்கிரன் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் குடிகாரர்களாக இருப்பார்கள். அறிவுரை கூறி திட்டினால் 4 நாட்களுக்கு குடிக்காமல் இருப்பார்கள். 5வது நாள் மீண்டும் குடிக்கத் துவங்கி விடுவார்கள்.

எது எப்படி இருந்தாலும் லக்னாதிபதி நன்றாக இருந்தால் அவர்களுக்கு போதைப் பழக்கம் ஏற்படாது. உதாரணமாக ஒருவர் சிம்ம லக்னத்தில் பிறக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவரது லக்னாதிபதியான சூரியன், பாவ கிரங்களின் சேர்க்கை/பார்வை இல்லாமல், லக்னத்தை பாவ கிரகங்கள் பார்க்காமல் இருந்தால் அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்.

சனி/ராகு தசையில் ஏழரைச் சனி அல்லது ஆறாம், 8ஆம் அதிபதியின் தசையில் ஏழரை சனி/அஷ்டமத்து சனி வரும் போது போதை வஸ்துகள் மீது நாட்டம் வரும் அல்லது போதைப் பழக்கம் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.

Tuesday, October 30, 2012

திசா புத்தியின் காலங்கள்

புதன் 17 வருடம்

கேது திசை 7 வருடங்கள்

சுக்கிரன் திசை  20 வருடம்

சூரியன் திசை  6 வருடம்

சந்திரன் திசை 10 வருடம்

செய்வாய் திசை 7 வருடம்

ராகு திசை 18 வருடம்

குரு திசை 19 வருடம்

சனி திசை 19 வருடம்

எ‌ந்த ஜாதக அமை‌ப்பு இரு‌ந்தா‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய‌க்கூடாது?

சனி திசை, ஏழரை சனி என இரண்டும் நடக்கும் போது தவிர்க்கலாம். அடுத்து ஏழரைச் சனி நடக்கும் போது இராகு திசை நடந்தாலும் தவிர்க்கலாம். இதேபோல, ஏழரைச் சனி நடக்கும் போது கேது திசை நடந்தாலும் திருமணத்தை தவிர்க்கலாம். 

சந்திரன் மஹா திசை பலன்கள்


நவகிரகங்களில் மிக மக்கிய கிரகமான சந்திர பகவான் தனது திசை புத்தி காலத்தில் பல்வேறு விநோதமான பலன்கள் உண்டாக்குகிறார். சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். சந்திரன் மனோகாரகன் ஆவார். அது மட்டும் இன்றி தாய் ஜலம் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.


பொதுவாக சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் நல்ல மன வலிமை, தைரியம் துணிவு உண்டாகும். சந்திரனின் திசை ஒருவருக்கு எப்படி இருக்கும் என்று பார்த்தால் சந்திரன் கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்று திசை நடத்தினால் சமுதாயத்தில் பெயர் புகழ் அந்தஸ்து கௌரவ பதவிகள் வரும் சூழ்நிலை என்று பல்வேறு நற்பலன்கள் உண்டாகும். அதுவும் சந்திரன் 12ம் வீட்டில் இருந்தாலும் 12ம் அதிபதி சேர்க்கையோ தொடர்போ உண்டாகி இருந்தால் வெளியூர், வெளிநாடு பயணம், பயணமும் அதன் சார்ந்த விஷயங்கள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகும். சந்திரன் நீசம் பெற்றோ, பகை பெற்றோ அமையப் பெற்று திசை நடைபெற்றாலும் சர்ப கிரகமும் என வர்ணிக்கப்படும் ராகு கேது சேர்க்கை பெற்று அமையப் பெற்று திசை நடைபெற்றாலும் மன குழப்பம், ஜல தொடர்புள்ள நோய்கள், பொருளாதார நெருக்கடி, தைரியம் இல்லாத நிலை உண்டாகும்.

யார் பைத்தியம் ஆவார் ?

சந்திரனும் கேதுவும் சேர்ந்து ஜாதகத்தில் இருந்தால் அவர் மனக்குழப்பம் அதிகம் பெறுவார், மேலும் பைத்தியமாக போவதற்கும் வாய்ப்பு உள்ளது .

குரு திசை நடக்கும் போது குரு பலன் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாமா?
 சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்து, யோகாகாதிபதி தசையாக, குரு தசை/புக்தி நடந்தால் குரு பலன் இல்லாமலேயே திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட சுபகாரியங்களை அவர் மேற்கொள்ளலாம்.

குரு திசை பலன்கள்


குரு பகவான் 64 கலைகளையும் அறிந்தவர். வேதங்கள், உபநிடதங்களில் தேர்ச்சி பெற்றவர் என அவரது பெருமையை ஜோதிட நூல்கள் கூறுகின்றன. உலகில் உள்ள அனைவருக்கும் நல்ல குரு (ஆசான்) அமைவது இல்லை. ஒரு சிலர் தனக்கு முதன் முதலில் கல்வி கற்பித்த ஆசிரியரை வாழ்நாள் முழுவதும் புகழ்ந்து பேசுவார்கள். சிலர் கல்லூரியில் கற்பித்த பேராசிரியரை மறக்க மாட்டார்கள். 

ஒரு மாணவனுக்கு படிக்கும் போது குரு தசை (16 ஆண்டுகள் நடக்கும்) வந்தால் அவருக்கு நல்ல ஆசிரியர் கிடைப்பார். பிற மாணவர்களுக்கு கிடைக்காத தனி கவனம், அன்பு, ஆதரவு சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இருந்து குரு தசை நடக்கும் மாணவனுக்கு கிடைக்கும்.

Saturday, October 27, 2012

ராகு இருக்கும் இடத்தின் பலன் ஜாதகத்தில்

ஒன்றாம் இடம் : பிடிவாதம் , சொந்த பந்தம் எல்லாம் ஒதுங்கி செல்லும்.

இரண்டாம் இடம் : சுட்டு பொசுக்கும் பேச்சி, பேச்சி பலிக்கும், தொட்ட காரியம் இழுத்து கொண்டே போகும், நிறைய கடன் இருக்கும், நிறைய சம்பாதிக்கும் அமைப்பும் உண்டு. ஏழாம் அதிபதி பலம் இல்லை என்றால் வேறு பெண்ணிடம் தொடர்பு ஏற்படும்.

மூன்றாம் இடம் : நிறைய சம்பாதிக்கலாம். தைரியம் இருக்கும்.

நான்காம் இடம் : சுகத்துக்கு கேடு, பாட்டன் சொத்துக்கு கேடு, தாய்க்கு கேடு, கல்வி கேடு, சமூக விரோத செயலில் ஈடுபாடு, பெண்ணாக இருந்தால் காமத்தில் அதிக ஈடுபாடு, உடல் நல கேடு.

ஐந்தாம் இடம் : எடுத்த காரியம் இழுபறியாக இருக்கும். மந்திரவாதி, பிசாசு விரட்டுதல் போன்ற காரியத்தில் ஈடுபட வைக்கும்.

ஆறாம் இடம் : காரிய சித்தி, குறி தப்பாது,எதிரியை வீழ்த்தும் வலிமை, ஆதாயம் கிடைக்கும். வருமானம் பெருகும்.குரு கேந்திரத்தில் அமைந்தால் லச்சாதிபதி ஆவார்கள் .பலான விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

யாருக்கு எதிரியே இல்லை !!!


6ல் ராகு/கேது

ஜாதகர் எந்த லக்கினத்தில் உதித்தவராக இருந்தாலும், அவருடைய ஜாதகத்தில் 6மிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் ஜாதகருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். இவரை எதிர்ப்பவர்கள் தாமாகவே அழிந்து விடுவர், அல்லது மனம் திருந்தி நண்பர்களாகி விடுவர்.

ராகு கேது


1. லக்கினத்தில் ராகு ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க வேண்டியிருக்கும், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!

ஒன்பதாம் வீடு ஜனன ஜாதகம்ஒன்பதம் வீடு தந்தை. மத ஆச்சாரம். குல வழக்கம். குரு. உடனே பலம் தரும் தெய்வம். மதப்பற்று. மறுஉலக தொடர்பு. பெரியவர்கள். தூரத்து செய்திகள். திருமண மண்டபம். கலாச்சார விருப்பம். நீண்ட தூரப் பயணம். தொழில் விரயம். தெய்வ வழிப்பாட்டு இடம். தம்பியின் மனைவி. ஒன்றினை தியாகம் செய்தல். பணம் புரட்டுதல். ஜபம். உயர் கல்வி. வெளிநாட்டுப் பயணம்,தந்தை, தந்தை வழி உறவுகள், பூர்வீகச்சொத்துக்கள், தான, தர்ம குணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள், முயற்சி இன்றிக் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள்.
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:

9ஆம் வீடு: இடுப்பு, இடுப்பு இணைப்புக்கள் அனைத்தும்

ஒன்பதாம் வீடு.
1. ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால், ஜாதகன் பொறுப்புணர்வு மிகுந்தவனாக இருப்பான். இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். ஜாதகன் எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருப்பான். ரசனை, நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தவனாக இருப்பான்.

2. ஒன்பதில் சூரியனும், புதனும் சேர்ந்து அமர்ந்திருந்தால் (அதற்கு புத ஆதித்ய யோகம் என்று பெயர்) ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், செல்வம் மிகுந்தவனாகவும் இருப்பான்.

3. ஒன்பதில் சூரியனுடன், சுக்கிரன் கைகோர்த்து அமர்ந்திருந்தால் ஜாதகன் நோய்கள் உள்ளவனாகவும், மிகுந்த உடல் உபாதைகள் உள்ளவனாகவும் இருப்பான்.

கேந்திர திரிகோண ஸ்தானங்கள்


அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் கேந்திர திரிகோண ஸ்தானங்கள்மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற்றமடைவதற்கும், சுக வாழ்க்கையை வாழ்வதற்கும அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறார்கள். தற்போதைய மக்கள் தொகை பிரச்சினைகளால் எல்லாப் பொருட்களின் விலை உயர்ந்து இருப்பதால், அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குக்கூட அரும்பாடு பட வேண்டி இருக்கிறது. சேமிப்பு என்பது இயலாத காரியமாகவே உள்ளது.  இந்த நிலையில்  செல்வச் செழிப்போடு வாழக்கூடிய யோகம் என்பது எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஒருவர் செல்வச் செழிப்போடு வாழ்வதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். பிறக்கும்போதே  வசதியுள்ளவராய் பிறந்து விட்டால் பூர்வீக வழி புண்ணியங்களால்  சொகுசான வாழ்க்கை அமைகிறது. அதுவே சுயமாக சம்பாதித்து வாழ்வதற்கும் சேமிப்புகளை வைத்திருப்பதற்கும் அவரவரின் ஜனன ஜாதக கிரக நிலைகள் பலமாக இருந்தால் மட்டுமே முடிகிறது. 
ஜனன ஜாதகத்தில் உள்ள  ஸ்தானங்களில் சில ஸ்தானங்கள் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஸ்தானமாக விளங்குகிறது. ஒருவரது ராசிக்கட்டத்தில் 1,4,7,10 ம் வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகவும் 1,5,9ம் வீடுகள் திரிகோண ஸ்தானங்களாகவும் விளங்குகிறது. கேந்திர ஸ்தானங்களான  1,4,7,10 ல் 1 ஐ விட 4ம், 4 வை விட 7ம் 7ஐ விட 10ம் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதுபோல திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ல் 1ஐ விட 5ம், 5 ஐ விட  9ம் பலம் வாய்ந்த ஸ்தானங்களாக உள்ளது.

எப்போது கண்டம் / விபத்து உண்டாகிறது?


  
  நாம் அனைவருக்கும் எப்பொழுதும் நல்லதே நடப்பதில்லை. அதுபோது எப்பொழுதும் கெட்டதே நடப்பதில்லை.

வாழ்க்கை என்பது வண்டிச் சக்கரம் போல் ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும். பொதுவாகநமது வாழ்க்கையை வழி நடத்துவது நவ கிரகங்கள் தான்.

ஜனன ஜாதகத்தில் நவ கிரகங்கள் பலமாக இருந்தால் தான் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். யாருக்கு எப்போது கண்டம் உண்டாகிறது. கண்டத்திற்கு ஒப்பான உடல்நிலை பாதிப்புகள் எப்போது உண்டாகிறது என்பதனை பற்றி பார்ப்போம்.
   
 நவகிரகங்களில் ஆயுள் காரகனாக விளங்கக் கூடிய கிரகம் சனி பகவான்.  சனி ஒருவர் ஜாதகத்தில் வலுவாக அமையப் பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும்.

சனி பகவானுக்கு மட்டும்தான் நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற கிரகமாகும். சிறப்பு வாய்ந்த கிரகமான சனி பகவான் ஆயுள் காரகன் மட்டுமின்றி ஜீவன காரகனாகவும் வர்ணிக்கப்படக் கூடியவராவார்.

 சனி ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றாலும் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன் புதன் சேர்க்கைப் பெற்றாலும், சுக்கிரன் புதன் வீட்டில் இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். சனி நீசம் பெற்றோ சூரியனுக்கு அருகில் அமையப் பெற்று அஸ்தங்கம் பெற்றோ ஆட்சி உச்ச ஸ்தானத்தில் வக்ரம் பெற்றோ இருந்தால் ஆயுள், ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகிறது.
       

சனி ஜனன ஜாதகத்தில் எந்த இடத்திற்கு என்ன பலன் ?நவகிரகங்களில் சனி பகவானை அறியாதவர்களே இருக்க முடியாது. பகவான் ஒரு சிலருக்கு கெடுதிகளை தந்தாலும் ஒரு சிலருக்கு நற்பலனையும் அளிக்கிறார். செல்வம், செல்வாக்கு பொருளாதார மேன்மை உண்டாக்குகிறார். சனி பகவான் கோட்சாரத்தில் ஜென்ம ராசிக்கு 12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும். அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும். 4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள்.

கோட்சார ரீதியாக சனி பகவான் சாதகமற்று சஞ்சரித்தால் கெடு பலன் மட்டும்தான் தருவார் என்பதில்லை. சனி ஜெனன ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் கோட்சாரத்தில் கெடுதியான ஸ்தானங்கள் இருந்தாலும் அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரிவு, மந்தமான சூழ்நிலை, வீண் வாக்குவாதம், தந்தை சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.

சனி கோச்சார ரீதியாக பலன்


ஜோதிட விதிப்படி ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாகக் கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும். பொதுவாக நாம் அன்றாடம் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பார்க்கும் பலன்கள் அனைத்தும் கோட்சார ரீதியாக கூறப்படும் பொதுப் பலன்களே ஆகும்.

கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக் கூடிய கிரகமாக சனி பகவானே இருக்கிறார். சனி என்ற பெயரைக் கேட்டாலே எல்லோர் மனதிலும் ஒரு பய உணர்வு இருக்கத்தான் செய்கிறது. சனியைப் போல கொடுப்பாரும் இல்லை. சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம். 

சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால்தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை, 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது. பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர். குறிப்பாக சனி பகவான் 3, 6, 11ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை, உடல் நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.

Thursday, October 25, 2012

குரு கோச்சார ரீதியாக 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்


குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்


நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார். 

குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும். 

கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார். குரு தனுசு மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். குருவிற்கு சூரியன், சந்திரன் செவ்வாய் நண்பர்கள், புதன் சுக்கிரன் பகைவர். சனி,ராகு, கேது சமம். பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்கள் குரு கிரக சேர்க்கை போது உண்டாக்குவார்.

சுக்கிரன் 12 பாவங்களில் ஏற்படுத்தும் பலன்கள்


சுக்கிரன் 12 பாவங்களில் ஏற்படுத்தும் பலன்கள்
நவ கிரகங்களில் களத்திர காரகன் என வர்ணிக்கப்படும் சுக்கிரன் மன வாழ்வு அமைவதற்கு மிக முக்கிய கிரகமாக விளங்குகிறார். பொதுவாக திருமண வாழ்வு, ஆடை, ஆபரணம், கலை, சுக வாழ்வு, வண்டி வாகனம், பெண் தொடர்பு, உடல் உறவு, வீடு மற்றும் எண்ணற்ற விஷயங்களுக்கு காரகனான சுக்கிரன், ஒருவர் ஜாதகத்தில் பலமாக இருந்தால் தான் சுக வாழ்வு, திருமண வாழ்வு, வசதி வாய்ப்பு உண்டாகும். 

சுக்கிரன் பலம் இழந்தால் ரகசிய நோய்கள், மண வாழ்வு உடல் உறவு போன்ற விஷயங்களில் பிரச்சனை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் சென்றால் அஸ்தங்கம் பெற்று பலம் இழப்பார். பொதுவாக சுக்கிரன் பலம் இழக்காமல் இருப்பது மிகவும் நல்லது. பெண் கிரகமான சுக்கிரன் ரிஷபம் துலாத்தில் ஆட்சியும், கன்னியில் நீசமும், மீனத்தில் உச்சமும் பெறுவார். 

சந்திர திசை 12 பாவங்களின் பலன்கள்


சந்திர திசை 12 பாவங்களின் பலன்கள்வளர்பிறை சந்திரனாகி சந்திர பகவான் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்று சுபகிரக சேர்க்கையாகி, ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்று சுபகிரக சேர்க்கை பெற்று திசை நடைபெற்றால் வாசனை திரவியங்களை பயன்படுத்தும் அமைப்பு, புதிய ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் சேரும் அமைப்பு உண்டாகும். 

தாய் வழியில் மேன்மை வாழ்க்கைத் துணை புத்திரர்களால் சிறப்பான அனுகூலம் தன சேர்க்கை, அரசாங்கம் மூலம் அனுகூலம் உண்டாகும். விரும்பிய உணவு வகைகளை உண்பது ஜல தொடர்பானவை, மற்றும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் அற்புதமான உயர்வு லாபம் உண்டாகும். கடல் கடந்து செல்லும் அமைப்பு கல்வியிலும் மேன்மை அமையும். பெண்களால் அதிக யோகம் உண்டாகும். திருமணம் பெண் குழந்தை, யோகம் போன்ற அமைப்புகளும் ஏற்படும்.

உடல் ஊனம்

உடல் ஊனம்

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி நீசம் பெற்றோ அஸ்தங்கம் பெற்றோ பலஹீனமாக இருந்து, ஜென்ம லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ சுப பார்வை இல்லாமல் சனியின் பார்வை இருந்தால், உடல்நிலையில் அங்கஹீனம், தோற்றத்தில் ஒரு குறைபாடு உண்டாகும். நவகிரகங்களில் ரத்த காரகன் செல்வாயாவார். செவ்வாய் பலஹீனமாக  இருந்து சனி, ராகு சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால் ரத்த சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு உடல் நலிவடையும். 

ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு வாக்கு ஸ்தானம் ஆகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2ம் அதிபதி பலமிழந்து சனி ராகு போன்ற பாவிகள் 2ல் பகை பெற்று அமையப் பெற்றால்  பேச்சில் கோளாறு உண்டாகும்.

Wednesday, October 24, 2012

சந்திரன்சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் நல்லது நட்பு வீடாக இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார் திடீர் பணவரவு இருக்கும்.

2-ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.

பன்னிரண்டாம் வீடுபன்னிரண்டாம் வீடு விரய ஸ்தானம் எனப்படும். மோட்ஷம் தரும் வீடும் இதுதான். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள், துன்பங்கள், பாவங்கள் வறுமை, துரதிஷ்டம ஆகியவைகளை இந்த வீட்டை வைத்து சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாழ்க்கை உள்ளதா என்று இந்த வீட்டை வைத்துதான் சொல்ல வேண்டும். அதைப்போல் ஒருவர் தன்னலம் இல்லாது பிறர் நலனுக்காக செய்யும் சேவையை குறிக்கும் வீடு தான் இந்த பன்னிரண்டாம் வீடு. நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளைக் குறிப்பதும் இந்த வீடுதான். நாம் வாங்கிய கடனை திருப்பி தருவதும் இந்த வீடுதான். நம் உடம்பில் இடது கண், பாதங்களை குறிப்பதும் இந்த வீடுதான். தனிமையான வாழ்க்கையை குறிக்கும் வீடு பன்னிரண்டாம் வீடுதான்.

பன்னிரண்டாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

1 ம் வீட்டில் இருந்தால் நல்ல உணவுகளையும் நல்ல நித்திரையும் கொடுக்கும். நல்ல செலவு செய்து வசதி வாய்ப்புகளை பெறுவார்

பதினோராம் வீடுபதினோராம் வீடு லாப ஸ்தானம் எனப்படும். ஒருவருடைய லாபம் மூத்த சகோதர சகோதரிகள் ஆகியவற்றைப் பற்றி கூறுவது பதினோராம் வீடு.

பதினோராம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல லாபம் வரும் நல்ல படிப்பு வரும் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் நல்ல லாபங்களை பெறுவார்கள். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்

2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல வருமானம், செல்வாக்கு, அதிகாரம் கிடைக்கும்.

பத்தாவது வீடுபத்தாம் வீடு
-->
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
10ஆம் வீடு: தொடைகள், கால்களின் மேற்பகுதி
-->
தொழில். ஜீவனம். புகழ். கவரவம். சமூக அந்தஸ்த்து. கர்மம். கருமாதி. இறுதிச்சடங்கு. புனித வழிபாடு. கூட்டத் தலைவர். குழந்தையின் நோய். மூத்த சகோதரத்தின் விரயம். தத்துக் குழந்தைகள். தீர்ப்பு,
-->
பத்தாம் வீட்டு அதிபதி மற்ற இடங்களில் சென்று அமர்வதால் ஏற்படும் பொதுப் பலன்கள் பத்தாம் வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் ஜாதகன் தான் ஈடுபடும் தொலில் வெற்றிமேல் வெற்றியைக் காண்பான். பத்தாம் வீட்டு அதிபதி நீசம் பெற்றிருந்தாலோ அல்லது தீய வீடுகளில் (6,8,12ஆம் வீடுகளில்) அமர்ந்திருந்தாலோ
 சிரமப்படுவான். போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். மூன்றடி ஏறினால் நான்கடி சறுக்கும்!

ஒன்பதாம் வீடுஒன்பதாவது வீட்டின் பலன் பிதுருக்கள் தகப்பனார் உயர்கல்வி முன்பின் தெரியாதவர்கள், தெய்வதரிசனம் போன ஜென்மத்து அதிர்ஷ்டம்,ஒருவர் செய்யும் தர்மம், நீண்ட தூர பயணம் அதாவது வெளிநாடு ஆகியவற்றை பற்றி தெரிவிப்பது இந்த வீடுதான்.

ஒன்பதாவது வீட்டுக்கிரகம் லக்கினத்தில் இருந்தால் அதாவது முதல் வீட்டில் இருந்தால் பெரியவர்களிடம் பிதா, குரு, தெய்வம் ஆகியவற்றுகளிடம் பிரியத்தை கொண்டவர்களாகவும் தான தர்மங்கள் செய்வர்களாகவும் இருப்பார்கள். பிதுர் சொத்துக்கள் கிடைக்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 2 ம் வீட்டில் இருந்தால் செல்வாக்குடன் முன்னோர்கள் சொத்துக்களை பெற்றவராகவும் இருப்பார்கள். அயல்நாட்டு மூலம் பணவரவு இருக்கும்.

எட்டாம் வீடு


எட்டாம் வீடுஎட்டாவது வீட்டைக்கொண்டு ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். எட்டாவது வீடு மறைவு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு மரணம் இயற்கையானதாக வருமா அல்லது துர்மரணமா என்று பார்பதற்க்கும் எட்டாம் வீட்டை வைத்துதான் பார்க்கவேண்டும். ஒருவரின் துன்பங்கள் தடைகள் தோல்விகள் வாழ்க்கையில் படபோகிற கஷ்டங்கள் ஆகியவற்றையும் எட்டாம் வீட்டை வைத்து சொல்லலாம்.மூதாயர்களின் சொத்து உயில்கள் இன்ஷீரன்ஸ். பிராவிடண்ட் பண்டு ஆகியவற்றையும் எட்டாம் வீட்டைக்கொண்டே பார்க்க வேண்டும். பெண்களுக்கு எட்டாம் வீடு மிகவும் முக்கியம் அவர்களின் மாங்கல்ய பாக்கியம் எட்டாம் வீட்டை கொண்டே கணிக்க முடியும்.

இப்பொழுது எட்டாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

ஏழாம் வீடு


ஏழாம் வீடு
ஏழாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஏழாம் வீட்டின் கிரக குணங்களை கொண்டு எப்படி பட்ட கணவன் அல்லது மனைவி வருவாள் என்று கூறலாம். ஆசை சொத்துக்கள் சேர்க்கை , மரணம் ஆகியவற்றை கூறலாம்.

இப்பொழுது ஏழாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டின் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால் அவன் கவர்ச்சி கொண்டவனாக இருப்பான். அவனிடம் பெண்கள் அன்பு வைத்து இருப்பார்கள் பாபகாரியகள் அறியாது காமகாரியங்கள் செய்வான். இவர்களுக்கு மனைவியின் மூலம் வருமானம் இருக்கும்.

ஆறாம் வீடு


ஆறாம் வீடு
இப்பொழுது நாம் ஆறாம் வீட்டை பற்றி பார்க்கலாம். ஆறாம் வீடு சத்ருஸ்தானம் ரோக ஸ்தானம் ஆகும். கடன், வியாதி பகைவர்களின் தொல்லை, சிறைபடுதல், விரோதங்கள், விஷபீடைகள், திருட்டுப்போதல் ஆகியவற்றைப் பற்றி ஆறாம் வீட்டின் மூலம் நாம் அறியலாம்.

இப்பொழுது ஆறாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

ஆறாம் வீட்டு அதிபதி 1 ஆம் வீட்டில் இருந்தால் சதா வியாதிகளும் நோய் நொடிகளும் இருக்கும் தைரியமில்லாதவராகவும் எதிரிகளால் தொல்லை இருந்துகொண்டே இருக்கும்.

முதல் வீடு


முதல் வீடுஇதுவரை நாம் பொதுவானபலன்களை மட்டும் பார்த்தோம். இப்பொழுது ஜாதகத்தில் ஒவ்வொரு வீட்டையும் பார்க்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் என்ன என்ன குணங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.

முதலில் முதல் வீட்டுக்கு என்ன குணங்கள் என்று பார்ப்போம். முதல் வீட்டை எப்படி கண்டுபிடிப்பது. ஜாதகத்தில் ல என்று போட்டிருக்கும் அது தான் முதல் வீடு. அது தான் ஒருவரின் தலைபகுதி. அவர் முகம் எப்படி இருக்கும். குணம் எப்படி இருக்கும். உயரம் எவ்வளவு. அவர் வாழ்க்கையில் எந்தளவு முன்னேறுவார் என்று காட்டும். இதை மட்டும் வைத்து பலன் சொல்லகூடாது.

லக்கினத்தின் மீது எந்த கிரகத்தின் பார்வை விழுகிறது. லக்கினம் சென்று அமர்ந்த இடம் எல்லாத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பலன் சரியாக வரும்.

சிலபேருக்கு லக்கினம் கெட்டு இருந்தாலும் மற்ற வீட்டின் கிரகங்கள் மூலம் நல்ல வாழ்க்கை அமையும். அதனால் அனைத்து வீட்டின் தன்மைகளும் கணக்கில் கொண்டு பலன் சொல்ல வேண்டும். லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் நல்லது. கெட்ட கிரகங்கள் இருந்தால் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டும்.

இரண்டாம் வீடு


இரண்டாம் வீடு

இரண்டாம் வீடு என்பது குடும்ப ஸ்தானம்.தன ஸ்தானம். வாக்கு ஸ்தானம் எனப்படும். இரண்டாம் வீட்டை வைத்து என்ன பலன் கூறலாம் என்று பார்க்கலாம். முதலில் இரண்டாம் வீட்டு அதிபதி யார் அவர் எங்கு இருக்கிறார். இரண்டாம் வீட்டை எந்த கிரகங்களின் பார்வை இருக்கிறது என்று பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் பலன் சரியாக வரும். இரண்டாம் வீடு என்பது ஒருவரின் பணநிலமை. வங்கியில் இருக்கும் பணம் மற்றும் தங்க நகைகள் குறிக்கும். குடும்பம் எப்படி இருக்கும் குடும்பத்தில் அமைதி இருக்குமா அல்லது குடும்பத்தில் கலவரம் இருக்குமா ஒருவர் எப்படி பேசுவார் திக்கிதிக்கி பேசுவார அல்லது வேடிக்கையாக பேசுவார அல்லது பேசவே மாட்டாரா என்று கூறலாம். ஒருவருடைய கண்பார்வை எப்படி இருக்கும் என்பதும் பற்றியும் கூறலாம்.

ஒருவருக்கு குழந்தை பாக்கியத்தையும் இந்த வீட்டை வைத்து சொல்லலாம் ஒருவருக்கு குழந்தை பாக்கியத்ததை கொடுக்கும் வீடு 5 ஆம் வீ்டு ஆனால் குழந்தை பாக்கியம் என்றால் ஒரு நபர் குடும்பத்தில் கூடுகிறார் என்று அர்த்தம் குடும்பத்தின் நபர்களை குறிப்பது இரண்டாம் வீடு இரண்டாம் வீடு நன்றாக இருந்தால்தான் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் இரண்டாம் வீடு கெட்டால் குழந்தை பாக்கியம் இருக்காது. இப்பொழுது புரிகிறதா இரண்டாம் வீட்டின் பயன் என்ன வென்று.

மூன்றாம் வீடு


மூன்றாம் வீடுமூன்றாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். மூன்றாம் வீடு சகோதர ஸ்தானமாகும். ஜாதகன் குணங்கள் மனோவலிமை இளைய சகோதரம் எப்படி இருப்பார் . அவர் ஜாதகருக்கு நன்மை செய்வாரா தாயாரின் விரையம் தபால் போக்குவரத்து இப்பொழுது ஏது தபால் போக்குவரத்து email லை வைத்துக்கொள்ளலாம் பக்கத்துவீட்டு நபர்கள் எப்படி இருப்பார்கள் குறுகிய பயணம் எப்படி இருக்கும், காது சம்பந்தமான நோய், நீங்கள் இருக்கும் வீடு எப்பொழுது காலி செய்வது ஆகியவைகள் எல்லாம் மூன்றாம் வீடு மூலம் காணலாம்.

இப்பொழுது மூன்றாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

மூன்றாம் வீட்டு கிரகம் 1 வது வீடாகிய லக்கினத்தில் இருந்தால் இளைய சகோதரம் இருக்கும் பல வேலைகளை வைத்து வேலை வாங்கும்படியான அதிகாரம் கிடைக்கும். சங்கீதம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும். உடல் பலம் போகங்களுடன் இருப்பார்கள் வைரம்.நகைகள பெறுவார்கள் சகோதர. சகோதரிகளின் ஆதரவை பெறுவார்கள்.

நான்காம் வீடு


நான்காம் வீடு


இப்பொழுது நாம் நான்காம் வீட்டைப்பற்றி பார்க்கலாம். நான்காம் வீடு தாயார் ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. தாய்,தாய்மாமன்,வாகனம்,உறவினர், இன்பங்கள், மூதாதையர்கள் சொத்து,பயிர்,நிலம்,வீடு வாசல் பள்ளிக்கல்வி ஆகியவற்றை நான்காம் வீட்டின் மூலம் காணலாம்.

இப்பொழுது நான்காம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

நான்காம் வீட்டு அதிபதி 1 ஆம் வீட்டில் இருந்தால் பங்களா போன்ற வீடுகள், நிலபுலங்கள், வண்டி வாகனங்கள், மாடு கன்று, பால் பாக்கியம் ஆகியவற்றுடன் நன்றாக வாழ்வான். தாய் வழி பாட்டி மாமன் முதலானேர் ஆதரவு நிரம்பி இருக்கும். கல்வியில் திறமையுடன் இருப்பார்கள் அதைப்போல் உயர்ந்த பதவியில் அமருவான். 4 ஆம் வீட்டு அதிபதி கெட்ட சேர்க்கை ஏற்பட்டால் கெடுதிபலன் நடைபெறும்.


ஐந்தாம் வீடு


ஐந்தாம் வீடுஇப்பொழுது நாம் ஐந்தாம் வீட்டைப்பற்றி பார்க்கலாம் ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானம் எனப்படுகிறது.

ஐந்தாம் வீட்டு மூலம் குழந்தை பிறப்பு, பூர்வ புண்ணிய பலன்கள், வித்தை, எண்ணங்கள், கல்வியில் திறமை, மஹான்களின் சந்திப்பு, பதவி உயர்வு, குலதெய்வம் வழிபாடு ஆகியவற்றை காணமுடியும்.

இப்பொழுது ஐந்தாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

ஐந்தாம் வீட்டு அதிபதி 1 ஆம் வீட்டில் இருந்தால் குழந்தை பாக்கியம் பெற்றவனாகவும் அந்த குழந்தைகள் நல்ல பெயர் பெற்று நலமுடன் வாழும். மஹான்களிடம் ஆசி பெறுவான் அரசாங்கத்திலும் மக்களிடம் நல்ல பெயர் பெற்று விளங்குவான்.

Sunday, October 21, 2012

புத்திர பாக்கியம் / குழந்தை பாக்கியம் எப்போது ?


ஜாதக கட்டம் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆதிபத்யம் உள்ளது. அந்த வகையில் ஐந்தாம் இடம், குழந்தை பாக்யத்தைக் குறிக்கும். அந்த வீட்டின் அதிபதியும் மிக முக்கியம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தோடு, நான்காம் வீட்டையும் பார்க்க வேண்டும். இந்த 4, 5, 9 ஆகிய வீடுகள் (ராசிகள்) பலம் பெற்றும் அந்த வீட்டிற்குடைய கிரகங்கள் நீச்சம் அடையாமலும் 6, 8, 12ல் மறையாமலும் இருப்பது அவசியமாகும். நீச்ச கிரகத்துடன் சேராமல் இருப்பது மிக முக்கியமாகும்.

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். குருவிற்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு உண்டு. ஏனென்றால் குரு புத்திர காரகன் ஆவார். அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர். மேலும், போககாரகனும்கூட. அதாவது தம்பதிகளின் தாம்பத்தியத்தில் சம்போகம் எனும் போகசக்தியை தரக்கூடியவர். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் இவர். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம். ரத்த சம்பந்தமான நோய்கள் இவர் மூலம் உண்டாகும்.