01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, October 24, 2012

பதினோராம் வீடுபதினோராம் வீடு லாப ஸ்தானம் எனப்படும். ஒருவருடைய லாபம் மூத்த சகோதர சகோதரிகள் ஆகியவற்றைப் பற்றி கூறுவது பதினோராம் வீடு.

பதினோராம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல லாபம் வரும் நல்ல படிப்பு வரும் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் நல்ல லாபங்களை பெறுவார்கள். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்

2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல வருமானம், செல்வாக்கு, அதிகாரம் கிடைக்கும்.


3 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர சகோதரிகளில் நல்ல நிலையில் இருப்பார்கள் . சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

4 ஆம் வீட்டில் இருந்தால் தெய்வீக வழியில் செல்பவராக இருப்பார்கள் நல்ல பணி ஆட்கள் கிடைப்பார்கள். வீடு வாகனத்துடன் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை அனுபவிப்பார்கள்.

5 ஆம் வீட்டில் இருந்தால் இவர்களின் புத்திரர்களால் நல்ல வருமானம் கிடைக்கும். இவர்கள் செய்யும் தொழில்களை இவர்களின் பிள்ளைகளும் செய்வார்கள். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.

6 ஆம் வீட்டில் இருந்தால் செய்கின்ற தொழிலில் எதிரிகள் இருப்பார்கள் வரும் லாபம் எல்லாம் கடன் கட்டவே போய்விடும்.

7 ஆம் வீட்டில் இருந்தால் மனைவியின் மூலம் லாபங்கள் வரும். திருமணத்திற்க்கு முன்பு ஏழையாக இருந்தவர்கள் திருமணத்திற்க்கு பின்பு நல்ல நிலையில் இருப்பார்கள். நல்ல யோகங்கள் அமையும். வண்டி வாகனம் அமையும்.

8 ஆம் வீட்டில் இருந்தால் பல தொழில்கள் செய்ய மணம் ஈடுபடும். பல வழியில் பணம் செலவு செய்ய நேரிடும். கஷ்டத்துடனே வாழ்க்கை ஓடும்.

9 ஆம் வீட்டில் இருந்தால் வண்டி வாகனம் வரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தந்தை செய்யும் தொழிலே இவர்களுக்கு கிடைக்கும் . பெரிய தொழில்கள் செய்து நல்ல லாபங்களை பெறுவார்.

10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல வேலையில் இருப்பார்கள். அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும். தெய்வீக அருள் நிறைந்து காணப்படுவார்கள்.

11 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர சகோதரிகளின் மூலம் லாபங்கள் வரும். மூத்த சகோதர்கள் நல்ல அந்தஸ்தோடு இருப்பார்கள்.

12 ஆம் வீட்டில் இருந்தால் கடன் தொல்லைகள் வியாதிகள் ஏற்படும். செய்யும் தொழிலில் லாபங்கள் குறைந்து காணப்படும்.

-------------------------------------------

பதினோன்றாம் வீடு
பதினோன்றாம் வீடு மூத்த சகோதரம். லாபம். எதிர்பார்த்தது நண்மையில் முடிதல். நண்பர்கள். ஆசைகள் முழுமையாக எதிர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசகம். உதவி கிடைக்குமிடம். எல்லாவற்றிற்கும் வெற்றி. மருமகன். மருமகள். நீர்ப் பாசன வசதியுள்ள விவசாய நிலங்கள். அரசு வகை கூட்டுக் குழுக்கள் (சட்ட சபை. ஊராட்சி. நகராட்சி. ,,,) நிரந்தர நட்பு. திட்டங்கள்,
-->
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
11ஆம் வீடு: கால்களின் கீழ்ப்பகுதி, முழங்கால் முதல் பாதத்திற்கு முன் பகுதிவரை
-->
1. செல்வத்தை (பணத்தை) விரும்பாத மனிதனே கிடையாது. செல்வத்தைத் தருவது பத்தாம்வீடும், பதினொன்றாம் வீடும், அவை இரண்டைவிட முக்கியமாக இரண்டாம் வீடுமே ஆகும். அப்படி அந்த வீட்டு நாயகர்கள் நமக்கு அள்ளித்தரும் பணத்தை நம் கைகளில் இருந்து கரைப்பவர்கள், 6, 8, மற்றும் 12ஆம் வீட்டு நாயகர்களே. முதலில் கூறிய மூவரும் (அதாவது 10th, 11th & 2nd Lords) நம்முடைய ஹீரோக்கள் பின்னால் கூறிய மூவரும் (6, 8, மற்றும் 12ஆம் அதிபதிகள்) நம்முடைய வில்லன்கள்

2. ஹீரோக்களின் வீடுகளைப் பாருங்கள். அங்கே அஷ்டகவர்கத்தில் 30ம், அதற்கு மேலும் பரல்கள் இருந்தால் நல்லது. கவலையே படவேண்டாம். வில்லன்கள் எவ்வளவு வேகமாகக் கரைத்தாலும், அதற்கு மேலேயே உங்களுக்குப் பணம் வரும்

3. இதற்கு மாறாக வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகமாக இருந்தால், எவ்வளவு பணம் வந்தாலும், அல்லது நீங்கள் எவ்வளவு பணம் சம்பாத்தித்தாலும், அல்லது உங்கள் தந்தைவழிச் சொத்து எவ்வளவு இருந்தாலும், அவ்வளவும் கரைந்து விடும் கையில் ஒன்றும் தங்காது. பூட்டுப்போட்டுப் பூட்டிவைத்தாலும் தங்காது!

4. அப்படிக் கரையும் பணம்கூட, வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தாலும் அந்த வீடுகளைச் சுபக்கிரகங்கள் பார்க்கும் என்றால், நல்ல வழியில் கரையும். உங்கள் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளும் வழியில் கரையும். உங்களுக்குப் பெருமை சேர்க்கும் வழியில் கரையும்.

5. இதற்கு மாறாக வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தாலும்,அந்த வீடுகள் பாவக்கிரகங்கள் அல்லது தீய கிரகங்களின் பார்வையில் இருந்தால் உங்கள் பணம் தீய வழியில் கரையும். சீட்டு, சூதாட்டம், குதிரைப் பந்தயம், குடி, பெண்பித்து, என்று தீய வழியிலேயே கரையும். உங்களுக்குப் பெருமை சேர்க்காத வழியில் கரையும், நீங்கள் மற்றவர்களுக்குப் பதில் சொல்ல முடியாத வழியில், ஏன் வெளியில் சொல்ல முடியாத வழியில் கரையும்

6. அதுபோல 12ஆம் வீட்டை நல்ல கிரகங்கள் பார்த்தால், உங்கள் தந்தை அல்லது மனைவி, அல்லது நண்பர்கள் உங்கள் மீது கவனம் செலுத்தி, உங்கள் பணம் கரையாமல் காப்பார்கள்.

7. அதற்கு மாறாக 12ஆம் வீடு தீயகிரகங்களின் பார்வையில் இருந்தால், உங்களுக்குப் புத்தி சொல்ல ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஓட்டைப் பானையில் ஊற்றும் தண்ணீர் போல உங்கள் பணம் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது.

8. 12ஆம் வீட்டுக்காரனும், ஒன்பதாம் வீட்டுக்காரனும் பரிவர்த்தனையாகியிருந்தால் ஜாதகன் தன் பணத்தை அறவழியில் செலவு செய்வான். நிறைய தர்ம கரியங்களைச் செய்வான்.

9. 12ஆம் வீட்டு அதிபதி உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும் ஜாதகன் பெருந்தன்மையானவனாக இருப்பான்.

10. அதே அமைப்பில் (12ஆம் வீட்டு அதிபதி உச்சம் பெற்றிருத்தல் அல்லது நட்பு வீட்டில் இருத்தல்) நல்ல வர்க்கத்துடன் கூடிய ஒன்பதாம் அதிபதியின் பார்வை பெற்றால் ஜாதகன் அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான்.

11. பன்னிரெண்டாம் வீட்டில் குரு, சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்கள் இருக்கு மென்றால் ஜாதகன் கஞ்சனாக இருப்பான். தன்னுடைய பணத்தை யாருக்கும் கொடுக்க மாட்டான்.

12. 12ஆம் வீடும் நன்றாக இருந்து (நிறைய பரல்களுடன் இருப்பது) சுக்கிரனும் நன்றாக இருந்தால், ஜாதகனுக்கு, அதீத பெண்சுகம் கிடிக்கும், அதுவும் வேண்டும் போது வேண்டிய நேரத்தில் கிடைக்கும். 'அந்த' விஷயத்தில் கொடுத்து வைத்தவனாக இருப்பான்.

13. அதே சுகம் 12ஆம் வீட்டு அதிபன், சுபக்கிரகத்துடன் கூட்டணி போட்டு ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருந்தாலும், அப்படி அமைப்புள்ள ஜாதகனுக்கும் கிடைக்கும்.

14. குடும்ப சூழ்நிலை, வறுமை, உடல் நலக்குறைவு, அல்லது உடல் ஊனம் இது போன்ற இன்ன பிற காரணங்களால் சிலருக்கு 'அந்த' சுகம் (sexual pleasures) கிடைக்காமல் இருக்கலாம். அல்லது மறுக்கப் பட்டிருக்கலாம். ஆண் அல்லது பெண் - இருபாலருமே அதற்கு விதிவிலக்கல்ல! அப்படி அமைவதற்குக் காரணம் லக்கின அதிபதி, 6, 8, 12 ஆம் வீடுகளில் அமர்வதோடு, அல்லது நீசமாவதோடு சனி, ராகு, மாந்தியுடன் சேர்ந்திருக்கும் அமைப்பு உள்ளவர்களுக்கு அது நடக்கும்!

15. பன்னிரெண்டில் சூரியன் இருந்து, அது தீய கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால், ஒருவனின் செல்வம் நீதிமன்றம், அரசு தண்டனை என்று கரையும்.

16. அதே நிலைமையில் சூரியனுக்குப் பதிலாக செவ்வாய் இருந்தால், ஒருவனின் செல்வம், அடிதடி, வம்பு, வழக்கு, எதிரிகள் என்கின்ற வகையில் கரையும். ஏமாற்றங்கள், துரோகங்கள் என்கின்ற வகையிலும் கரையும்.

17. அதே நிலைமையில் புதன் இருந்தால், ஒருவனின் செல்வம் அல்லது பணம் வியாபாரம் அல்லது பங்கு வணிகம் என்று காணாமல் போய்விடும்.

18 அதே நிலைமையில் இருக்கும் சுக்கிரனால், ஒருவனின் செல்வம், பெண்பித்தால் தொலைந்து போய்விடும். சிலருக்கு, ஊழலில் சிக்கிக் கொண்டு இழப்பாகிவிடும்.

19. பன்னிரெண்டில் சனியும், செவ்வாயும் கூட்டணி போட்டு, நல்ல கிரகங்களின் பார்வையின்றி இருந்தால் பணத்தை, உடன்பிறப்புக்காளால் தொலைக்க நேரிடும் அல்லது கரைக்க நேரிடும்.

20. பன்னிரெண்டாம் வீட்டில் லக்கினாதிபதியும் சந்திரனும் கூட்டணியாக அமர்ந் திருந்து, குரு அல்லது சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்களின் பாரவையின்றி இருந்தால் ஜாதகனின் பணம் மருத்துவச் செலவுகளிலேயே கரைந்து விடும். சிலருக்கு இந்த அமைப்பில், பணம், பிறருக்குக் கடனாகக் கொடுத்து அல்லது ஷ்யூரிட்டிகளில் கையெழுத்து இட்டு மாட்டிக் கொள்வதன் மூலம் காணாமல் போய்விடும்.

21. இவற்ரைப் பார்த்துப் பயந்து விடாமல், ஜாதகத்தை முழுமையாக அலசுவதன் மூலமே அவற்றை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு அஷ்டகவர்க்கம் உங்களுக்குத் துணை செய்யும்

3 comments :

 1. Hello,
  நான் மார்க் பைசா கூட, ஒரு தனியார் கடன் கடன், நான் யார்
  வாழ்க்கை முறை வாய்ப்பு கடன் கொடுக்கிறது.
  நீங்கள் உங்கள் கடன்களை துடைக்க ஒரு அவசர கடன் வேண்டும் அல்லது நீங்கள் உங்கள் வணிக மேம்படுத்த ஒரு மூலதன கடன் வேண்டும்?
  நீங்கள் நிராகரிக்கப்பட்ட
  வங்கிகள் மற்றும் இதர நிதி அமைப்புகள்?
  நீங்கள் ஒரு ஒருங்கிணைப்பு கடன் அல்லது ஒரு அடமான வேண்டும்?
  நாம் அனைவரும் உங்கள் நிதி பிரச்சினைகள் கடந்த ஒரு விஷயம் செய்ய இங்கே இருக்கும் இன்னும் தேட. தனி நபர்கள் வெளியே நிதி கடன்
  நிதி உதவி தேவை மோசமான கடன் அல்லது பணம் தேவை இல்லை என்று
  2% என்ற விகிதத்தில் வணிக முதலீடு செய்ய, மின் கட்டணம் செலுத்த வேண்டும். நான் நாம் நம்பத்தகுந்த மற்றும் பயனாளியின் உதவிகள் மற்றும் ஒரு loan.So நீங்கள் வழங்க மின்னஞ்சல் வழியாக இன்று எங்களை தொடர்பு தயாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் தெரிவிக்க இந்த நடுத்தர பயன்படுத்த வேண்டும்:
  (pennymacloanservices@gmail.com)

  ReplyDelete
 2. வணக்கம் நீங்கள் 2% ஒரு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வேண்டும்? நீங்கள் எந்த இணை அல்லது மோசமான கடன் இல்லை, ஏனெனில் நீங்கள் வங்கி கடன்கள் மறுக்கப்படுகின்றன? நீங்கள் வங்கி மன அழுத்தம் சோர்வாக? பிறகு நீங்கள் சரியான இடத்தில் உள்ளன, உங்கள் மின்னஞ்சல் வழியாக இப்போது எங்களை தொடர்பு (mabelhernandezloan@gmail.com)

  ReplyDelete
 3. நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவை?
  * உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
  * கடனை திருப்பி செலுத்தும் நீங்கள் பணம் கிடைக்கும் எட்டு நாட்களுக்குப் பிறகு தொடங்குகிறது
  வங்கி கணக்கு
  2% * குறைந்த வட்டி விகிதம்
  * நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
  * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
  *. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
  நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
  அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
  நீங்கள் இருந்து.

  அங்கீகரிக்கப்பட்ட இந்த நியாயமான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு
  எல்லோரும் நிதி உதவி கொடுக்க
  மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான

  மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com


  சிறந்த அன்புடன்
  சர் ஜோயல் வில்லியம்ஸ்
  பண கடன் FIRM நிறுவனம்
  தலைமை நிர்வாக அதிகாரி
  தொலைபேசி: +60183723787

  ReplyDelete