01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, October 24, 2012

மூன்றாம் வீடு


மூன்றாம் வீடுமூன்றாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். மூன்றாம் வீடு சகோதர ஸ்தானமாகும். ஜாதகன் குணங்கள் மனோவலிமை இளைய சகோதரம் எப்படி இருப்பார் . அவர் ஜாதகருக்கு நன்மை செய்வாரா தாயாரின் விரையம் தபால் போக்குவரத்து இப்பொழுது ஏது தபால் போக்குவரத்து email லை வைத்துக்கொள்ளலாம் பக்கத்துவீட்டு நபர்கள் எப்படி இருப்பார்கள் குறுகிய பயணம் எப்படி இருக்கும், காது சம்பந்தமான நோய், நீங்கள் இருக்கும் வீடு எப்பொழுது காலி செய்வது ஆகியவைகள் எல்லாம் மூன்றாம் வீடு மூலம் காணலாம்.

இப்பொழுது மூன்றாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

மூன்றாம் வீட்டு கிரகம் 1 வது வீடாகிய லக்கினத்தில் இருந்தால் இளைய சகோதரம் இருக்கும் பல வேலைகளை வைத்து வேலை வாங்கும்படியான அதிகாரம் கிடைக்கும். சங்கீதம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும். உடல் பலம் போகங்களுடன் இருப்பார்கள் வைரம்.நகைகள பெறுவார்கள் சகோதர. சகோதரிகளின் ஆதரவை பெறுவார்கள்.


மூன்றாம் வீட்டு கிரகம் 2 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர.சகோதரிகளின் ஆதரவில் காலம் கழிப்பவனாகவும்.தைரியமில்லாதவனாகவும் உடலில் வியாதி உடையவனாகவும் இருப்பார்கள். மூன்றாம் வீட்டு அதிபதி கெட்ட கிரகங்கள் பார்வை இல்லை என்றால் சகோதர சகோதரிகளின் சொத்து கிடைக்கும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 3 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் நல்ல அந்தஸ்த்தோடு இருப்பார்கள் அவர்களால் இவருக்கு எல்லாவிதத்திலும் ஆதரவு இருக்கும். கலைகளில் பிரியம் கொண்டவனாக இருப்பார்கள் . நல்ல பலசாலியாகவும் இருப்பார்கள். தங்கம்.வெள்ளி ஆடை மீது ஆசை இருக்கும் அதுபோல் கிடைக்கும். தெய்வ வழிபாடு கிடைக்கும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 4 ஆம் வீட்டில் இருந்தால் சுபபலமிருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் சகோதர சகோதரிகள் நீண்ட ஆயுளுடனும் தாயார் தாய்வழி ஆதரவை பெற்றவர்களாகவும் குடும்பத்தில் செல்வமும் சுகமும் நிறைந்து விளங்கும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 5 ஆம் வீட்டில் இருந்தால் குழந்தை பாக்கியங்களை பெற்றவனாகவும். சகோதர சகோதரிகளின் ஆதரவை பெற்றவராகவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து விளங்கும் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக வழிபாட்டில் உள்ளவர்களிடம் தொடர்பு கிடைக்கும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 6 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் பரம எதிரிகளாக இருப்பார்கள் உடல் பலமில்லாமலும் இருப்பார்கள் அடிக்கடி நோய் வந்து தொந்தரவு தரும்.

மூன்றாம் வீட்டு கிரகம் 7 ஆம் வீட்டில் இருந்தால் பெண்களின் மீது ஈர்ப்புடன் இருப்பான். வேலை இல்லாமல் ஊர் சுற்றி திரிபவனாகவும் இருப்பான். தன்னுடைய சுகங்கள் மட்டும் பார்ப்பான். மனைவியின் சொத்துக்களை பெற முயல்வார்கள். நன்றாக சாப்பிடுவார்கள்.

மூன்றாம் வீட்டு கிரகம் 8 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் உடன் சண்டை இருந்து கொண்டு இருக்கும். உடல் ஊனம் ஏற்படும். சிரமத்துடன் குடும்பம் நடத்த வேண்டும். சில பேர்க்கு கடன்கள் ஏற்படும். சிலருக்கு அவமானம் ஏற்படும்

மூன்றாம் வீட்டு கிரகம் 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாகவும் பூர்வ புண்ணியத்தில் நல்ல வசதி பெற்றவராகவும் இருப்பார்கள். தெய்வபக்தியுடன் இருப்பார்கள்.

மூன்றாம் வீட்டு கிரகம் 10 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகளின் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் குடும்பத்தை நடத்துபவர்களாக இருப்பார்கள்.

மூன்றாம் வீட்டு கிரகம் 11 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகளின் அன்பை பெற்றவர்களாக இருப்பார்கள் அவர்களிடம் இருந்து லாபம் கிடைக்கும்


மூன்றாம் வீட்டு கிரகம் 12 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் மூலம் விரையம் ஏற்படும். சொத்துகள் விரையத்தை ஏற்படுத்தலாம். அலைச்சலும் மன சஞ்சலம் ஏற்படும்.


**********************************************************************


சகோதரம். தைரியம். வீரியம். வெற்றி. அண்டை வீடுகள். சிறு தூரப் பயணம். கடிதப் போக்குவரத்துகள். எழுத்துத் துறை. தபால் நிலையம். முன்னேரிய அறிவியலின் அத்துனை தகவல் தொடர்பு சாதனங்களும். போன் கால்கள். வீடு விற்பனை. வேலைக்காரர்கள். செய்திகள். பேரம் பேசுதல். பாகப்பிரிவினை. ஆரம்ப கல்வித் தடை. நிருபர்கள். புரோக்கர்கள்,தொழில் தந்தி. தொலைத்தொடர்பு. கொரியர். செய்தித்தாள். எழுத்து. எடிட்டிங். புத்தகம். கல்விச்சாலை. வாகனம். நெடுச்சாலை
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:

3ஆம் வீடு: காதுகள், கைகள், உணவுக்குழாய், மூச்சுக் குழாய்

மூன்றாம் வீட்டில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்.

1. மூன்றில் சூரியன் இருந்தால். இங்கே வந்தமரும் சூரியனால் ஜாதகத்திற்கு அதீத வலிமை கிடைக்கும். Sun's placement in the third is a strong point to any horoscope! If the Sun is in the third, the native will be courageous and authoritative ஜாதகன் அதீத துணிச்சல் மிக்கவன். ஜாதகன் சமயோசித புத்தியுள்ளவன் எந்தக் கஷ்டத்தையும் சமாளிக்கும் ஆற்றல் மிக்கவன். எதிலும் வெற்றி பெறக்கூடியவன். இங்கே வந்தமரும் சூரியனின் மேல் சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பட்டால் அது ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கு நல்லதல்ல!

2. மூன்றில் சந்திரன் இருந்தால். இந்த இடம் பத்தாம் வீட்டிற்கு, அங்கிருந்து ஆறாம் வீடு. ஆகையால் இங்கே அமரும் சந்திரனால், ஜாதகனின் வேலைகளுக்கு உபத்திரவம். மனமாற்றம் உடையவன். ஒரே வேலையில் ஒழுங்காக இருக்கமாட்டான். Jumping from one job to another job. அடிக்கடி வேலையை மாற்றுவான் அல்லது ஊரை மாற்றுவான். சுறுசுறுப்பான மனதை உடையவன். துறுதுறுவென்று இருப்பான். ஜாதகனின் மனைவி மிகவும் அழகாக இருப்பாள். இந்த இடம் ஏழாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் வீடு. அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எல்லா விஷயங்களிலும் அறிவு இருக்கும். If the Moon is in the third, the younger siblings of the native will be happy and prosperous இங்கே வந்தமரும் சந்திரனின் மேல் சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பட்டால் அது ஜாதகனுக்கு நல்லதல்ல! மன அமைதி என்பது இல்லாமல் போய்விடும். அதேபோல இங்கே வந்தமரும் சந்திரன், தேய்பிறைச் சந்திரனாகவோ அல்லது தனது சுயவர்க்கத்தில் பரல்கள் குறைந்த சந்திரனாகவோ இருந்தாலும் நல்லதல்ல! கொடூர சிந்தனைகள் அவ்வப்போது வந்து எட்டிப் பார்க்கும். பல பிரச்சினைகளைக் கொடுக்கும்!

3. மூன்றில் செவ்வாய் இருந்தால். காரகன் பாவ நாசம் என்பார்கள். செவ்வாய் உடன்பிறப்புக்களுக்குக் காரகன். அவன் இங்கே வந்து அமர்ந்தால் அது ஜாதகனின் உடன் பிறப்புக்களுக்கு நல்லதல்ல! This position of Mars is bad for brothers and sisters of the native! If Mars is exalted, it is bad for younger brothers. If afflicted by Saturn the native may suffer with ear trouble பொதுவாக ஜாதகன் துணிச்சல் மிக்கவனாகவும், நல்ல திறமைகள் மிக்கவனாகவும் இருப்பான். சிலருக்குக் குடும்பக் கவலைகள் சூழ்ந்திருக்கும். குடும்பத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை இருக்கும். சிலருக்குப் பயணங்களில் விபத்துக்கள் ஏற்படலாம். (இது பொதுப்பலன் சாமிகளா) இந்த அமைப்பின் மேல் தீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகனுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்து போகும் அல்லது உக்கிரமான அல்லது தீவிரமான மனப்பான்மை மிகுந்திருக்கும். மூன்றாம் வீடு செவ்வாயின் சொந்த வீடாக இருந்து அதாவது மேஷம் அல்லது விருச்சிகம் மூன்றாம் வீடாக இருந்து, அங்கே செவ்வாய் ஆட்சி பலனுடன் இருந்தால் மேற் சொன்னவைகள் எதுவும் இருக்காது. ஜாதகன் மகிச்சியுடன், பிரச்சினைகள் எதுவுமின்றி இருப்பான். மகரத்திற்கும் இதே பலன். ஏனென்றால் அங்கே செவ்வாய் உச்ச பலனுடன் இருப்பார்

4. மூன்றில் புதன் இருந்தால். ஜாதகன் நல்ல செயல்கள் பலவற்றைச் செய்து, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனாக இருப்பான். ஆனால் அவன் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். ஜாதகன் படு கெட்டிக்காரனாக இருப்பான். படிப்பிலும் வாசிப்பிலும் அதிக ஆர்வமுள்ளவனாக இருப்பான். எடுத்த வேலையைச் சிரத்தையோடு முடிப்பான். அதில் என்ன இடர் வந்தாலும் பாதியில் விடாமல் செய்து முடிப்பான். அதற்கு உரிய ஆற்றலும் துணிவும் மேலோங்கி இருக்கும். எதையும் புத்தியால் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருப்பான். இந்த அமைப்பு உள்ளவர்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள் என்பது பொதுப்பலன். சிலர் பொருள் வணிகத்தில் அல்லது பங்குச் சந்தை வணிகத்தில் ஈடுபட்டு அதீத செல்வத்தைச் சேர்ப்பார்கள். இந்த இடம் 11ஆம் இடத்திற்கு ஐந்தாம் இடம் அதை மனதில் கொள்க! இந்த அமைப்பினருக்குச் சராசரியைவிட அதிகமான உடன்பிறப்புக்கள் இருக்கும். உடன்பிறப்புக்களும், நண்பர்களும் ஜாதகனின் மேல் உயிரை வைத்திருப்பார்கள். அதாவது அந்த அளவிற்கு அவனை விரும்புவார்கள். இந்த அமைப்பில் குறையே இல்லையா? உண்டு! இந்த அமைப்பின் மேல் சனி அல்லது ராகு அல்லது கேதுவின் பார்வை பட்டால், ஜாதகனுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டு.

5 மூன்றில் குரு இருந்தால்: இது ஒரு நன்மைதரும் அமைப்பு. ஜாதகன் 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்று நினைக்கும் பெருநோக்கோடு இருப்பான். நல்ல உடன்பிறப்புக்கள் கிடைப்பார்கள். Jupiter: The native will be victorious and endowed with high mental strength இங்கே குரு பலவீனமாக இருந்தால், அதாவது தீய பார்வைகளுடன் அல்லது சுயவர்க்கத்தில் குறைவான பரல்களுடன் இருந்தாலும் அல்லது குரு வந்தமரும் வீடு, அவருக்குப் பகை அல்லது நீச வீடாக இருந்தாலும் நன்மைகள் இருக்காது. ஜாதகனின் உடன்பிறப்புக்கள் நன்றிகெட்டவர்களாக இருப்பார்கள். குறைவான நண்பர்களே இருப்பார்கள். நல்ல வாய்ப்புக்கள் கை நழுவிப்போகும்.

6. மூன்றில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகனின் மனப்பாங்கு நல்ல விதமாக இருக்கும். ஆனால் உடல் அரோக்கியம் மட்டும் சுமாராக இருக்கும். ஜாதகன் எப்போதும் உற்சாகம் குன்றி இருப்பான். இசை, நடனம், நுண்கலைகள் போன்றவற்றில் ஜாதகன் ஆர்வமுடையவனாக அல்லது ஈடுபாடு உடையவனாக இருப்பான். கொடுக்கல் வாங்கல் போன்ற பணவிவகாரங்கள் சுமூகமாக இருக்காது. சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும். Venus Is not good in this place. The native could get annoyed very easily. இந்த இடத்துச் சுக்கிரன் பாதிக்கப்பெற்றிருந்தால், ஜாதகன் கருமியாக இருப்பான். ஏழ்மை வாட்டும். அதிகமாக உணர்ச்சி வசப்படுவான். தொட்டாற்சிணுங்கி. சிலர் ஊழல் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு அவதிப்பட நேரிடும். பொதுவாக இந்த அமைப்புக்காரர்களுக்குச் சகோதரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். தன் குழந்தைகளால் ஜாதகனுக்கு மகிழ்ச்சி இராது.

7 மூன்றில் சனி இருந்தால்: ஜாதகன் தையமும், துணிச்சலான செயல்பாடுகளையும் உடையவன். செல்வந்தனாக இருப்பான். சிலர் உடன் பிறப்புக்களை இழக்க நேரிடும். சிலர் கடுமையான ஆசாமிகளாக இருப்பார்கள். விபரீதமான சிந்தனைகளுக்கு ஆட்படுபவர்களாக இருப்பார்கள். உடன் பிறப்புக்க்களால் துன்பம் ஏற்படும். அரசு மரியாதை, கெளரவம் கிடைக்கும். சிலருக்கு அவர்களுடைய ஊரில் உள்ள பொது அமைப்புக்களில் தலைமை ஏற்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஆயுள்காரகன் சனி இங்கே இருப்பது நன்மை பயக்கும். ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் இருக்கும். இந்த இடம் எட்டாம் இடத்திற்கு எட்டாம் இடம் அதோடு சனியும் எட்டாம் பார்வையாக இங்கிருந்து ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பார். அதை மனதில் கொள்க! Saturn is good for longevity if he is placed in this house. Since 3rd house is the eighth house from the eighth பல ஏமாற்றங்களையும், சரிவுகளையும், சங்கடங்களையும் சந்தித்த பிறகே ஜாதகன் வெற்றிகளை அடைவான். அது இந்த அமைப்பிற்குரிய விஷேசத் தன்மையாகும். அவசரம், பரபரப்பு, தவறான அணுகுமுறை எனும் மனப்போக்கு ஏற்படும். வயதாக வயதாக அதெல்லாம் மறைந்து ஒரு சீரான நிலைமை ஏற்படும். இங்கே அமரும் சனி, பலவீனமாக இருந்தால். ஜாதகனுக்கு எப்போதும் மனக்கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கும்

8 மூன்றில் ராகு இருந்தால்: ராகு சனியைப்போலவே பலனைத் தரக்கூடியவன். இங்கே ராகு இருப்பது இதற்கு முதல் பத்தியில் சனிக்குச் சொன்னதுபோலவே சில பலன்கள் இருக்கும் அதில் முக்கியமானது ராகு இங்கே அமையப்பெற்ற ஜாதகன் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வான். தீர்க்காயுள். இந்த அமைப்பு சகோதர உறவுகளுக்கு நல்லதல்ல. ஜாதகன் தோற்றத்தில் மட்டுமே தைரியசாலியாக இருப்பான்.

9. மூன்றில் கேது இருந்தால்: இங்கே இருக்கும் கேது செவ்வாயைப் போல பலன்களைத் தரக்கூடியவர். ஜாதகன் வலிமையானவனாகவும், துணிச்சலான சாதனைகளைச் செய்யக்கூடியவனாகவும் இருப்பான். If ketu is placed in this house, the native will be courageous, religious and wealthy The 3rd house signifies courage, hence hands, shoulders and chest The Ear, Nose and throat problems are also signified by this house. Younger siblings of a person come under his house. This house is also connected with printing, publishing, short journeys and transport business. இந்த மூன்றாம் வீட்டிற்கான பலன்கள் அதன் அதிபதியின் தசா புத்திகளிலும், அதோடு அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் தசா புத்திகளிலும் கிடைக்கும்

மூன்றாம் வீட்டதிபதி இருக்கும் இடங்களை வைத்துப் பலா பலன்கள்

1 மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) லக்கினத்தில் இருந்தால்: இந்த அமைப்பு 3ஆம் வீட்டிற்கு அதன் இடத்தில் இருந்து 11ஆம் இடமாகும். ஆகவே 3ஆம் அதிபதி இங்கே வந்து அமரும் போது பல நன்மைகளைச் செய்வார். ஜாதகன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பான். யோகங்கள் நிறைந்து இருப்பான். சகோதரன், சகோதரிகளின் அதரவைப் பெற்றவனாக இருப்பான். செல்வம் செல்வாக்கு ஆகியவைகளைப் பெற்றவனாகவும் இருப்பான். ஜாதகன் தன் முனைப்பும், தன் நிறைவும் பெற்றவனாக இருப்பான். ஜாதகனின் அறிவும், புத்திசாலித்தனமும் பாராட்டும் வகையில் இருக்கும். அவனுடைய அறிவு கல்வித் தகுதியைச் சார்ந்ததாக இல்லாமல் சிறப்பாக இருக்கும். சட்டென்று கோபம் வரக்கூடியவனாக இருப்பான். அதை அடக்கும் திறமையை ஜாதகன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்தக் கோப உணர்வே அவனுடைய முதல் எதிரியாக மாறிவிடும். சிலர் தோற்றத்தில் கெச்சலாக இருப்பார்கள். ஆனால் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் தங்களுடைய சக்தியையும், வீரத்தையும் பயன்படுத்தி வெற்றி பெறுவார்கள். இந்த அமைப்புடையவர்கள், நடிப்பு, இசை, நடனம் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் நாடகம், திரைப்படம் என்று நடிக்கச் சென்று அதில் புகழ்பெறுவார்கள். இந்த அமைப்பிற்குச் ஜாதகத்தில் சுக்கிரனும் வலுவாக இருக்க வேண்டும்.

2 மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) இரண்டாம் வீட்டில் இருந்தால்: இந்த இடம் மூன்றாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடாகும். அதாவது மூன்றாம் இடத்திற்கு அதனிடத்திலிருந்து மறைவிடம். ஜாதகன் தைரியம் இல்லாதவனாக இருப்பான். லொக்' லொக்குப் பார்ட்டி. அதாவது ஆரோக்கியம் குறைந்தவன். சிலர் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளிலேயே உயிர்வாழ நேரிடும். சகோதரன், சகோதரிகளின் ஆதரவினால் காலம் தள்ள நேறிடும். இந்த வீட்டு அதிபதி சுபக்கிரகமாக இருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை இல்லாமலும் இருந்தால், சகோதரன் அல்லது சகோதரியின் சொத்துக்கள் ஜாதகனுக்குக் கிடைக்கும் அல்லது வந்து சேரும். சொத்துக்களை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? கடன் வந்து சேர்ந்தால் மட்டுமே மனிதன் வேண்டாம் என்று சொல்வான் இந்த வீட்டு அதிபதி 2ல் இருக்கும் நிலைமையோடு, இந்த வீட்டின் மேல் தீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகன் மிகவும் சிரமமான தாழ்மையான வாழ்க்கை வாழ்வான். அப்படி இல்லையென்றால், செல்வமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வான். சிலர் தங்கள் இள்வல்களை இழக்க நேரிடும். இழப்பது என்பது என்னவென்று சொல்லவும் வேண்டுமா? If the 3rd lord is in the 2nd, The native may be lazy or lethargic He/she do not take his/her undertakings seriously. Their image may be spoiled by their headstrong behavior They may not keep punctuality and they may not also keep up the decencies of debate. They may not have good relations with the younger co-borns. They may have hostile neighbors.

3. மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) மூன்றாம் வீட்டிலேயே (in his own house) இருந்தால்: அப்படி இருக்கும் கிரகம், ஆட்சி அல்லது உட்ச பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல சகோதரன் சகோதரிகள் இருப்பார்கள். அவர்கள் பெயர் சொல்லும்படி செல்வத்துடனும், புகழுடனும் இருப்பார்கள். அவர்களால் ஜாதகனுக்கு சகலவிதமான ஆதரவுகளும் கிடைக்கும். இந்த சகலவிதம் எனும் சொல்லில் எல்லாம் அடங்கி விட்டது. ஜாதகனும் அவனளவிற்கு அந்தஸ்து அதிகாரம் என்று கெளரவமாக இருப்பான். பலசாலியாகவும், போக பாக்கியங்களைப் பெற்றவனாகவும் இருப்பான். போக பாக்கியங்கள் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? தெரியாதவர்கள் தனி மின்னஞ்சலில் கேளுங்கள். சிலர் ஆன்மிகம், தெய்வ வழிபாடு, பக்தி என்று ஒரு மார்க்கமாக இருப்பார்கள். பொதுவாக ஜாதகன் தைரியம் உடையவனாக இருப்பான். மூன்றாம் அதிபதி 3ஆம் வீடு 6ஆம் வீடு அல்லது 11ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு நிறைய சகோதரன், சகோதரிகள் இருப்பார்கள். மூன்றாம் அதிபதி செவ்வாயாக இருந்து 3ஆம் வீட்டிலேயே இருந்தால் ஜாதகன் தன் சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும். சனியாலும் அதே பலன்தான் கிடைக்கும் If the 3rd lord is in the 3rd, the native will have the company of brothers & sisters. They view everything philosophically. They are confident that everything happens for the good. They are not the type who cry over the things lost. They do not bother about the past which is gone

4 மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) நான்காம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுடைய குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். ஜாதகனுடைய உடன்பிறப்புக்கள் நீண்ட ஆயுளையும், நிறைய குழந்தைகளைப் பெற்று கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவார்கள். இந்த இடம் மூன்றாம் வீட்டிற்கு இரண்டாம் இடம் அதை மனதில் கொள்க! குடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும். The life of the native will be happy on the whole மூன்றாம் அதிபதி பலமின்றி இருந்தால் மேற்சொன்ன பலன்கள் குறைவாக இருக்கும் அல்லது இல்லாமல் போய்விடும்

5. மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஐந்தாம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான். ஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும். ஆனால் அவனுடைய குழந்தைகளால் அவனுக்கு மகிழ்ச்சி இருக்காது. அதோடு குடும்ப வாழ்வில் உரசல்களும் விரிசல்களும் இருக்கும். ஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும். சிலருக்கு ஏராளமான விளைநிலங்கள் இருக்கும் அல்லது கிடைக்கும். சிலருக்கு சுவீகாரம் செல்லும் பாக்கியமும் அதனால் பெரும் சொத்துக்களூம் கிடைக்கும். சிலருக்குப் பெரும் பதவிகள் கிடைக்கும். Since the 3rd lord is in the 5th, the native will be virtuous Their brothers will definitely help them in their hour of need. They are best suited to agriculture as they know when to sow and when to reap. They may not have much happiness from their children.

6. மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஆறாம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களே எதிரிகளாக இருப்பார்கள் அல்லது எதிரிகளாக மாறிவிடுவார்கள். ஜாதகனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகும். வியாதிகள் வந்து கேள்விகள் கேட்டுவிட்டுப் போகும். வைத்தியச் செலவில் பணம் கரையும். சிலருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள். அவர்களால் வேண்டிய அளவிற்குத் தொல்லைகள் இருக்கும். மனதில் நிம்மதி இருக்காது. ஆறில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு நன்மையான பலன்கள் உண்டு. எதிரிகளை ஒரு கை பார்துவிடுவான். மேற்சொன்ன தீய பலன்கள் குறைந்துவிடும். மொத்தத்தில் ஜாதகன் உடன் பிறப்புக்களை வெறுப்பவனாக இருப்பான். அவர்களால் இவனுக்குத் தொல்லைகள் மட்டுமே பரிசாகக் கிடைக்கும் Since the 3rd lord is in the 6th, it will be difficult for the native to maintain good relationships with brothers and sisters Their honesty and sincerity in financial dealings have got drawbacks. Their mind will be troubled by enemies.

மூன்றாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் பெண் பித்தனாக இருப்பான். யாருக்குத்தான் பெண் பித்து இல்லையென்கிறீர்களா? சரி, வைத்துக் கொள்ளுங்கள். இந்த அமைப்பு உள்ளவன் அதிகமான அளவு பெண் பித்து உள்ளவனாக இருப்பான். தேவையான சுகங்களைத் தேடிப்பிடித்து அனுபவிப்பவனாக இருப்பான். அதற்கான துணிச்சல் இருக்கும். சிலருக்கு ஜொள்ளுப் பார்ட்டி எனும் விருது கிடைக்கும். பெண்களிடமிருந்து சொத்துக்களும் கிடைக்கும். இலை விருந்து, பெண் விருந்து என்று ஆசாமி எப்போதும் சாப்பாட்டு ராமனாக இருப்பான். சிலர் சட்டச் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். சிலர் எந்தவிதமான வேலையும் இன்றி சுகஜீவனத்துடன் இருப்பார்கள். If the 3rd lord is in the 7th, the native will be an employee than a businessman. He will excel as subordinate than as a commanding officer. He will forget a duty or debt when it falls due.

மூன்றாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால்: சகோதர உறவுகள் சிலாக்கியமாக இருக்காது. தேக ஆரோக்கியம் முழுமையாக இருக்காது. சிலர் உடற் குறைபாடுகள் உள்ளவர்களாக இருப்பார்கள். வாக்கு வன்மை இருக்காது. குடும்ப நிர்வாகத்திற்கு வேண்டிய பணவரவு இன்றி, குடும்ப வாழ்க்கை தள்ளாடும். சிலர் கடன், அவமானம் என்று அவதிப்பட நேரிடும். இந்த அமைப்பு சுப பலத்துடன் இருந்தால், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் கஷ்ட நிவாரணமும் கிடைக்கும் சிலருக்குத் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்காது. அதுபோல சிலருக்குச் செய்யும் தொழிலும் சிலாக்கியமாக இருக்காது. அதாவது பிடிதமாக இருக்காது துரதிர்ஷ்டம் அவ்வப்போது ஓடிவந்து ஜாதகனின் தோள்கள் மீது ஏறிக்கொள்ளும். If the 3rd lord is in the 8th, the native will be driven by the desire to take possession of things and take charge of situations without any authority whatsoever. The native will have the tendency to die for his/her love. He will miss the company of his brother or sister.

மூன்றாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் துணிவும், வீரப் பிரதாபங்களையும் உடையவன். வசதி படைத்தவனாக இருப்பான். தெய்வ பக்தி மிகுந்து இருக்கும். மற்றவர்களிடம் விசுவாசமாக இருப்பான். இந்த அமைப்பு தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றால் மேற்சொன்ன பலன்கள் இருக்காது பெற்றோர்வழிச் சொத்துக்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும். போராடிப் பெறவேண்டியதிருக்கும். உணர்ச்சி மிகுந்தவர்கள். அந்த உணர்ச்சியால் அடிக்கடி சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். சிலருக்குப் புரிதல் இன்மையால் தந்தையுடன் கூடிய உறவு பாதிக்கப்படும் சிலருக்குத் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திடீர் மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்ததாக வாழ்க்கை இருக்கும்.

மூன்றாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால்: இந்த அமைப்பு சுபக்கிரகங்களின் பார்வையின்றி இருந்தால், உடன்பிறப்புக்களால் ஜாதகனுக்குப் பயன் இருக்காது. அவர்களும் அந்தஸ்து இல்லாமல் இருப்பார்கள். ஆதரவான சூழ்நிலை இருக்காது. சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் மேற்சொன்ன பலன்களுக்கு எதிர்மாறான பலன்கள் இருக்கும். அதாவது நன்மையான பலன்கள் இருக்கும் ஜாதகன் நற்பெயரோடும், ஓரளவு செல்வாக்கோடும் இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். உத்தியோக வளர்ச்சியினல் மட்டுமே அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி உடையதாக இருக்கும் If the 3rd lord is in the 10th, the native will be selfsufficient! He will have pleasing personality and sincere approach His profession may be connected by travelling He will attain to a professional reputation

மூன்றாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால்: நன்மைதரும் அமைப்பு அல்ல! ஜாதகன் தன் முயற்சியால் மட்டுமே வளர்ச்சியைக் காண முடியும். இங்கே வந்தமரும் மூன்றாம் வீட்டதிபன் சுபக்கிரகமாக இருந்தால் உடன் பிறப்புக்களால் ஜாதகனுக்கு நன்மைகள், லாபங்கள் கிடைக்கும். உடன்பிறப்புக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று மகிழ்வுடன் இருப்பான் The native will get help from their sisters and brothers He will have gains of a high order. His desires will be fulfilled in time by his own efforts

மூன்றாம் வீட்டு அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களால் தொல்லைகள் ஏற்படும். சண்டை சச்சரவுகள் மிகுந்து இருக்கும். சொத்துக்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். வாழ்க்கை அலைச்சலாகவும், மன அமைதியின்றியும் இருக்கும். கஷ்டங்கள் அதிகமாக இருக்கும். சிலர் சயன சுகமற்றவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததாக இருக்கும்

1 மூன்றாம் அதிபதி சூரியனுடன் சேர்ந்திருந்தால்: ஜாதகன் மன உறுதி படைத்தவன். பிடிவாதக்காரன். தன் வழியில் துணிச்சலாகச் செல்லக்கூடியவன் கோபக்காரன்.

2 மூன்றாம் அதிபதி சந்திரனுடன் சேர்ந்திருந்தால்: ஜாதகன் தைரியம் மிக்கவன். மனதில் எந்தவிதமான பயமும் இல்லாதவன் வாங்கடா ஒருகை பார்க்கிறேன் என்று துடிப்போடு இருப்பவன்

3. மூன்றாம் அதிபதி செவ்வாயுடன் சேர்ந்திருந்தால்: ஜாதகன் வலிமை மிக்கவன். துணிச்சலானவன்

4. மூன்றாம் அதிபதி புதனுடன் சேர்ந்திருந்தால்: எச்சரிக்கை உணர்வு மிக்கவன் தைரிய உணர்வு மிக்கவன் விவேகம் உள்ளவன். எதை எங்கு செய்ய வேண்டுமோ அதை அங்கு செய்வான்

5 மூன்றாம் அதிபதி குருவுடன் சேர்ந்திருந்தால்: Characterized by keen awareness, sharp intelligence, and often a sense of the practical. துணிவு விவேகம் மிக்கதாக இருக்கும் சமமான நபர்களிடம் மட்டுமே தன்னுடைய துணிவைக் காட்டுவான்.

6. மூன்றாம் அதிபதி சுக்கிரனுடன் சேர்ந்திருந்தால்: ஜாதகன் உணர்ச்சிவசப்பட்டவன். அந்த உணர்ச்சி அவனுக்குப் பெண்கள் மேல் அதிகமாக இருக்கும் பெண்களிடம் தன்னுடைய உணர்வை இழக்கக்கூடியவன்

7 மூன்றாம் அதிபதி சனியுடன் சேர்ந்திருந்தால்: மந்தமானவன். முட்டாள்தனம் நிறைந்தவன்

8 மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தால்: ஜாதகன் பார்ப்பதற்குத் தைரியசாலி போல தோற்றமளிப்பான். ஆனால் உண்மையில் பயந்தவன். கோழை. தன்னம்பிக்கையில்லாதவன். மனதைரியம் இல்லாதவன் timid heart & weak mind Lacking self-confidence; shy. Fearful and hesitant: நகைச்சுவை நடிகர் வடிவேலு படத்தில் வீராப்பாகப் பேசிவிட்டுக் கடைசியில் அடி வாங்குவாரே, அதுபோல இந்த அமைப்புள்ள ஜாதகனும் நடந்து கொள்வான்

மூன்றாம் இடத்தில் ராகுவோடு சந்திரன். இது அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மையை ஏற்படுத்தும்

No comments :

Post a Comment