01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, October 31, 2012

குடி பழக்கம், போதை பழக்கம், சாராயம் கல் ஏன் ?



ஒருவருக்கு குறிப்பிட்ட கிரக அமைப்பு இருந்தால் அவருக்கு சிறு வயது முதலே தீய பழக்க வழக்கங்கள் இருக்கும். சனி+கேது அல்லது சனி+ராகு அல்லது சனி+சுக்கிரன்+ராகு அல்லது செவ்வாய்+சுக்கிரன்+ராகு ஆகிய கிரக சேர்க்கை காணப்பட்டால் அந்த ஜாதகருக்கு ஏதாவது ஒரு தீய பழக்கம் (போதை தொடர்பான) இருக்கும். 

சனி போதைக்கு உரிய கிரகம். எனவே, சனி+செவ்வாய் சேர்க்கை அல்லது சனி+செவ்வாய் பார்வை இருந்து, அதோடு சந்திரன் அல்லது சுக்கிரன் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் குடிகாரர்களாக இருப்பார்கள். அறிவுரை கூறி திட்டினால் 4 நாட்களுக்கு குடிக்காமல் இருப்பார்கள். 5வது நாள் மீண்டும் குடிக்கத் துவங்கி விடுவார்கள்.

எது எப்படி இருந்தாலும் லக்னாதிபதி நன்றாக இருந்தால் அவர்களுக்கு போதைப் பழக்கம் ஏற்படாது. உதாரணமாக ஒருவர் சிம்ம லக்னத்தில் பிறக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவரது லக்னாதிபதியான சூரியன், பாவ கிரங்களின் சேர்க்கை/பார்வை இல்லாமல், லக்னத்தை பாவ கிரகங்கள் பார்க்காமல் இருந்தால் அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்.

சனி/ராகு தசையில் ஏழரைச் சனி அல்லது ஆறாம், 8ஆம் அதிபதியின் தசையில் ஏழரை சனி/அஷ்டமத்து சனி வரும் போது போதை வஸ்துகள் மீது நாட்டம் வரும் அல்லது போதைப் பழக்கம் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.

No comments :

Post a Comment