01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, October 24, 2012

ஆறாம் வீடு


ஆறாம் வீடு
இப்பொழுது நாம் ஆறாம் வீட்டை பற்றி பார்க்கலாம். ஆறாம் வீடு சத்ருஸ்தானம் ரோக ஸ்தானம் ஆகும். கடன், வியாதி பகைவர்களின் தொல்லை, சிறைபடுதல், விரோதங்கள், விஷபீடைகள், திருட்டுப்போதல் ஆகியவற்றைப் பற்றி ஆறாம் வீட்டின் மூலம் நாம் அறியலாம்.

இப்பொழுது ஆறாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

ஆறாம் வீட்டு அதிபதி 1 ஆம் வீட்டில் இருந்தால் சதா வியாதிகளும் நோய் நொடிகளும் இருக்கும் தைரியமில்லாதவராகவும் எதிரிகளால் தொல்லை இருந்துகொண்டே இருக்கும்.


ஆறாம் வீட்டு அதிபதி 2 ஆம் வீட்டில் இருந்தால் வாக்குவன்மை இருக்காது நல்ல பேச்சு இருக்காது. அதிகமாக கடன்களை வாங்கி செலவு செய்வார்கள். கல்வி வராது. கண் கோளாறு இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபதி 3 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் விரோதிகளாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.

ஆறாம் வீட்டு அதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் தாயாருடைய உடல் நலம் பாதிக்கப்படும் நிலம் வீடுகள் இருந்தாலும் வருமானம் இருக்காது. கடன்களால் அந்த சொத்துக்களை விற்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபதி 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். கடன் தொல்லைகள் அதிகமாகும் எல்லோரும் சண்டை செய்பவராகவும் இருப்பார்கள் சிறைவாசம் வறுமை ஆகியவற்றை அனுபவகிக்க வேண்டும். பிறரை ஏமாற்றி பிழைப்பை நடத்துவார்கள்.

ஆறாம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் கடன் தொல்லை படுத்தி எடுத்துவிடும். சுபகிரகங்கள் பார்வை ஏற்படின் எதிரி மூலம் சம்பாத்தியம் இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் இல்லற வாழ்க்கை கசக்கும். இருவருக்கும் விவாகரத்துவரை கொண்டுவிடும். மனம் அமைதி இருக்காது.

ஆறாம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் எட்டாம் வீட்டில் வறுமைகள் நிறைந்து காணப்படும். குடும்பத்தில் உள்ள பொருட்களை விற்று குடும்பம் நடத்தவேண்டி வரும்.

ஆறாம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் தந்தை வழி சொத்து நாசமாகும். பிறர் ஏமாற்றி விடுவார்கள். பாபகாரியங்கள் செய்ய அஞ்சமாட்டார்கள். பெரியவர்களுடன் சண்டை ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் அவன் சம்பாதிக்கும் வழி திருட்டுதனமாக இருக்கும். பிறர் பொருளையே நம்பி இருப்பான். ஊர் சுற்றி திரிவான். மக்கள் மனதில் அயோக்கியன் என்று பெயர் எடுப்பான். சுபகிரகம் பார்வை ஏற்படின் அனைத்திலும் வெற்றி பெருவான்.

ஆறாம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர்கள் வியாதியுடன் இருப்பார்கள் கடன் இருக்கும். சிலபேருக்கு விரோதிகள் மூலம் லாபம் இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளால் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும. அனாவசியமான செலவு இருக்கும. குறியில் நோய் ஏற்படும்.
 
----------------------------------------
 
6ஆம் வீடு: Small Intestine ரோகஸ்தானம் ஆறாம் வீடு
, கடன். நோய். வழக்கு. ஜீரணம். ஊழியர். ஊழியம். வேலைக்காரர்கள். சிறுதொழில். சிறிய வருமானத்தை தரக்கூடிய தொழில்கள். வெற்றிக்குத் தடை. தாய் மாமன். கஞ்சத்தனம். பேராசை. திருட்டு. ஜெயில். மூத்த சகோதரத்தில் பிரச்சினை. வளர்ப்புப் பிராணிகள். வீட்டு மிருகங்கள்,
ஆறாம் வீட்டில் சென்று அமரும் கிரகங்களுக்கான பலன்கள்!
1 சூரியன். ஜாதகன் சிறந்த அரசியல்வாதியாக இருப்பான். வெற்றியாளனாக இருப்பான். எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பான். ஆனால் அடிக்கடி உடல்நலக் குறைவுகள் ஏற்படும். சூரியனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து கூட்டாக இருந்தால் நீண்ட, தீர்க்க முடியாத வியாதிகள் உண்டாகும். சூரியனுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்திருந்தால் அல்லது பார்த்தால், ஜாதகன் நிர்வாகத் திறமை உள்ளவனாக இருப்பான். செல்வந்தனாக இருப்பான். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவனாக இருப்பான். இதே இடத்துச் சூரியன் சனியின் பார்வை பெற்றால், இதய நோய்கள் உடையவனாக இருப்பான். அல்லது பின்னாட்களில் இதய நோய்கள் உண்டாகும்!
2. சந்திரன் குழந்தைப் பருவத்தில் அடிக்கடி நோயுற்ற சேயாக இருந்திருப்பான். அதே இடத்தில் சந்திரன், செவ்வாய் அல்லது சனியின் சேர்க்கை/பார்வை பெற்றிருந்தால் தீராத நோய்கள் இருக்கும். மாறாத எதிரிகள் இருப்பார்கள். அதே இடத்துச் சந்திரன் நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால், ஜாதகன் திறமைசாலியாக இருப்பான். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்கக் கூடியவனாக இருப்பான்.
3. செவ்வாய் மிகுந்த பந்த பாச உணர்வுகள் உள்ளவராக ஜாதகர் இருப்பார். வெற்றியாளர். அரசுக் கட்டிலில் அமர்ந்தால் சிறந்த நிர்வாகி அல்லது ஆட்சியாளராக இருப்பார். அதே செவ்வாய், சேர்க்கை அல்லது பார்வையால் தீய கிரகங்களின் கூட்டணியில் விழ நேர்ந்தால், விபத்துக்கள், விரையங்கள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் ஏற்படும். செவ்வாயுடன் சனி அல்லது ராகு அல்லது கேதுவின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் ஜாதகன் அசாதரணமான மரணத்தைச் சந்திக்க நேரிடும்.
4. புதன் எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்பவர். கல்வியில் தடைகள் ஏற்படும். புதன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பாதிக்கப் பட்டிருந்தால் மன நோய்கள், நரம்புத் தளர்ச்சி நோய்கள் உண்டாகும். சோம்பல் உண்டாகும். பேச்சில் கடுமை உண்டாகும். எதிரிகளுக்குப் பயப்பட மாட்டார். எதிரிகள் இவரைக் கண்டால் பயந்து ஓடுவார்கள்
5. குரு. சுறுசுறுப்பு இல்லாமை ஏற்படும். மெத்தனமாக இருப்பார். அவமானம், அவமரியாதை களைச் சந்திக்க நேரிடும். துரதிர்ஷ்டமானவர். அதே குருவிற்கு ஏற்படும் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் உடல் உபாதைகள் உண்டாகும்.
6. சுக்கிரன் விரோதிகளே இருக்கமாட்டார்கள். பெண்களால் ஏமாற்றப்படுவார்கள். பெண் ஜாதகராக இருந்தால் ஆண்களால் ஏமாற்றப்படுவார்கள். அதே சுக்கிரனுக்கு ஏற்படும் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால், ஜாதகர் அதீதமான பாலியல் உறவுகளில் ஈடுபாடு உடையவராக இருப்பார். அதனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகு பவராகவும் இருப்பார்.
7. சனி. வாதம் செய்பவர். பெருந்தீனிக்காரர். துணிச்சல்மிக்கவர். எதிரிகள் இல்லாதவர். அங்கிருக்கும் சனி, பார்வை அல்லது சேர்க்கையால் கெட்டிருந்தால், நோய்கள் உண்டாகும், நண்பர்களால் சீரழிவு உண்டாகும். சனியுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் அல்லது சனி செவ்வாயின் பார்வை பெற்றால், அபாயகரமான நோய்கள் உண்டாகும். அடிக்கடி அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட நேரிடும். ராகு சேர்ந்தால் அல்லது பார்த்தால் (அதாவது ஆறில் இருக்கும் சனியை) ஜாதகருக்குக் ஹிஸ்டீரியா நோய் உண்டாகும். சனி நல்ல நிலமையில் அங்கிருந்தால் ஜாதகர் பெரிய காண்ட்ராக்டராகப் பணி செய்வார். பெரும் பொருள் ஈட்டுவார்.
8. ராகு. நீண்ட ஆயுள் உடையவர்.ஆரோக்கியமானவர். ஆனால் அவ்வப்போது எதிரிகளின் தொல்லைகளும் இருக்கும். ராகு கெட்டிருந்தால் புதிரான நோய்கள் உண்டாகும். இங்கே ராகு சந்திரனுடன் இருந்தால் அல்லது சந்திரனின் பார்வை பெற்றால் மனப் பிறழ்வு உண்டாகும்.(mental retartation) இதே இடத்தில் ராகுவுடன் சந்திரனும், சனியும் சேர்ந்திருந்தால், ஆசாமி ஊழல் பேர்வழியாக இருப்பார்.
9. கேது. கேதுவிற்கு மிகவும் உகந்த இடம் இதுதான். ஜாதகனுக்குப் புகழும், அதிகாரமும், செல்வாக்கும் இருக்கும் அல்லது தேடிவரும்! ஆனால் ஜாதகனின் நடத்தை சரியாக இருக்காது. சாமர்த்தியமாக அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார். புதன், சனி போன்ற நட்புக்கிரகங்களின் கூட்டணி அமைந்தால், ஜாதகன், மந்திர, தந்திர ஜால வேலைகளில் கெட்டிக்காரராக இருப்பார்.
பொதுவாக ஆறாம் வீட்டு அதிபதியால் பெரும்பாலும் தீமையான பலன்களே கிடைக்கும் அல்லது நடைபெறும். நம் ஜாதகத்தின் வில்லன் அவன்தான். அவன் தன்னுடைய தசா, புக்திகளில் அதை நடத்திக் காட்டித் தன் இருப்பை வெளிப் படுத்துவான். வேண்டா வெறுப்பாக அவற்றை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆறாம் வீடு என்பது லக்கினத்திலிருந்து, லக்கினத்தை முதலாகக் கொண்டு எண்ணப்படும்போது ஆறாவதாக வருவது. ஆறாம் வீடு என்பது ஒரு ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய நோய், கடன், எதிரி மற்றும் துரதிர்ஷ்டங்களைப் (Diseases, Debts, Enemies and Misfortunes) பற்றிச் சொல்லும் வீடு நோய்கள் இரண்டு வகைப்படும். தீர்க்கக்கூடிய நோய். தீர்க்க முடியாத நோய்! தீராத நோய்களைப் பிணி என்பார்கள். உதாரணம்; ஆஸ்த்மா! ஆனால் கடன் ஒரு வகைக்குள் அடங்கிவிடும். கடன் தீர்க்கக்கூடியதுதான். ஆசைகளையும், தேவைகளையும் அடக்கிக் கொண்டால், கடனே ஏற்படாமல்பார்த்துக்கொள்ளலாம். அல்லது ஏற்பட்ட கடனைத் தீர்த்துவிடலாம். கடன் இல்லாமல் இருப்பது சிரமம். ஆனால் கடன் இல்லாமல் இருந்து விட்டால் அது சுகம்! .

அதுபோல எதிரிகளும் அப்படித்தான். நாம் நட்பு பாராட்டும் தன்மையை ஏற்படுத்திக் கொண்டால் எதிரிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். .
சரி, இந்த மூன்றுமே - அதாவது நோய், கடன், எதிரி ஆகிய மூன்றுமே உங்களைக் கேட்டுத்தான் ஏற்படுமா? இல்லை! ஜாதகத்தில் கோளாறு என்றால், எந்தக் கொம்பனாலும் அவற்றைத் தவிர்க்க முடியாது. கதவைத் தட்டிக் கொண்டு அல்ல, கதவை உடைத்துக் கொண்டு அவைகள் உள்ளே நுழைந்து விடும். .
வந்துவிட்டுப் போகட்டும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கோ அல்லது அவற்றைத் தாங்கிக்கொள்வதற்கோ வழி இருக்கிறதா? .
ஏன் இல்லை? இருக்கிறது! அதுதான் இறைவழிபாடு. இறைவன் கருணை மிக்கவன். உங்கள் கர்ம வினைகளால் ஏற்படும் இவற்றை எல்லாம் கடக்க அவன் உதவுவான். .
அதனால்தான் நான் அடிக்கடி சொல்லுவேன். ஜோதிடமும், இறை வழிபாடும் ஒன்றிற்கொன்று பின்னிப் பிணைந்தது. .
வள்ளுவப் பெருந்தகை அசத்தலாக இப்படிச் சொன்னார்: .
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்!" .
அவர் மொத்தமாக மனிதப் பிறப்பையே பிணி என்று சொல்லிவிட்டார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு நோய்கள் இருக்கும் ; ஆனால் கடன் இருக்காது. கையில் நிறையப் பணம் வைத்திருப்பார். இன்னொருவர் மிகுந்த உடல் நலத்துடன் இருப்பார். ஆனால் கடன் தொல்லைகள் அவருக்கு இருக்கும்.
அவதிப்படுவதில் கணக்கிட்டால் இருவர் நிலையும் ஒன்றுதான். வில்லன்கள் வேறுபடலாம். ஆனால் கதாநாயகி அல்லது நாயகனின் துயரம் ஒன்றுதான் அதுபோல ஒருவர் நல்லவராக, திறமைசாலியாக இருக்கலாம். அவர்மேல் பொறாமையும், எரிச்சலும் கொண்ட எதிரிகள் அவருக்குத் தெரியாமலேயே இருக்கலாம்.
இந்த நிலைகளை உள்ளடக்கியதுதான் ஆறாம் வீடு. அதனால்தான் ஆறாம் வீட்டை வைத்துப் பலன் சொல்வது மிகவும் சிரமமான காரியம். பலத்த ஆராய்ச்சி செய்துதான் பலன் சொல்ல வேண்டும். மேலோட்டமாகச் சொன்னால் ஜோதிடர் பொய்யாகிப் போய்விடுவார்.(ஜோதிடம் பொய்யில்லை)

ஆறாம் வீட்டை வைத்து ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், வலிகள்(pains) ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.
உதாரணத்திற்கு ஆறாம் வீட்டு அதிபன் இரண்டாம் வீட்டில் அமர்ந்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். அதனால் மட்டுமே அவ்வாறு அமைப்புள்ள அனைவருக்குமே ஒரே மாதிரித் துன்பம் வரும் என்று நினைக்க வேண்டாம்.

அந்தக் கிரகம், அமர்வினால் பெறும் உச்ச நீசம், நட்பு, பகை, அதோடு மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை என்று ஏற்படும் வெவ்வேறு நிலைகளால் பலன்களும் மாறுபடும்.
அவதிப்படுவது என்றாகிவிட்ட பிறகு எப்படி அவதிப்பட்டாலும் அது ஒன்றுதான் அவதி அவதிதான். ஒருவர் நோயால் அவதிப்படலாம், ஒருவர் கடன்களால் அவதிப்படலாம், ஒருவர் எதிரிகளால் அவதிப்படலாம். ஒருவர் துரதிர்ஷ்டங் களினால் அவதிப்படலாம். ஆனால் அவதி அவதிதான்.
இங்கே துரதிர்ஷ்டம் என்பது சூழ்நிலைகளால் (unfortunate situations) ஏற்படுவதைக் குறிக்கும்.


No comments :

Post a Comment