01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, October 24, 2012

பத்தாவது வீடுபத்தாம் வீடு
-->
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
10ஆம் வீடு: தொடைகள், கால்களின் மேற்பகுதி
-->
தொழில். ஜீவனம். புகழ். கவரவம். சமூக அந்தஸ்த்து. கர்மம். கருமாதி. இறுதிச்சடங்கு. புனித வழிபாடு. கூட்டத் தலைவர். குழந்தையின் நோய். மூத்த சகோதரத்தின் விரயம். தத்துக் குழந்தைகள். தீர்ப்பு,
-->
பத்தாம் வீட்டு அதிபதி மற்ற இடங்களில் சென்று அமர்வதால் ஏற்படும் பொதுப் பலன்கள் பத்தாம் வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் ஜாதகன் தான் ஈடுபடும் தொலில் வெற்றிமேல் வெற்றியைக் காண்பான். பத்தாம் வீட்டு அதிபதி நீசம் பெற்றிருந்தாலோ அல்லது தீய வீடுகளில் (6,8,12ஆம் வீடுகளில்) அமர்ந்திருந்தாலோ
 சிரமப்படுவான். போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். மூன்றடி ஏறினால் நான்கடி சறுக்கும்!
1. Tenth lord placed in the lagna or 1st house லக்கினத்தில் அமர்ந்திருந்தால்: தீவிரமாக தொழில் செய்வான். கடின உழைப்பாளி. தன் முயற்சியால் மேன்மை அடைவான். சுய தொழில் செய்வான். தன்னிச்சையாகச் செய்யக்கூடிய வேலையில் இருப்பான்.தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வான். மற்றவர்களால் போற்றப்படுவான். மெதுவாக, நிதானமாக, தன்முனைப்புடன் முன்னேற்றம் காண்பான். இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். அவனும் அதில் வெற்றி பெற்றுச் சிறப்பான்.

2. Tenth lord placed in the 2nd house இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்: ஜாதகன் அவனுடைய வேலையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானவன். இரண்டாம் வீடு என்பது 10ஆம் வீட்டிற்கு ஐந்தாம் வீடு. தொட்டதெல்லாம் துலங்கும் கை நிறையப் பொருள் ஈட்டுவான். தன்னுடைய குடும்பத் தொழிலையே பெரிய அளவில் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை ஜாதகன் அடைவான். உணவு விடுதி, பெரிய ரெஸ்டாரண்ட் போன்றவற்றை நடத்தும் தொழிலும் சிலர் ஈடுபடுவார்கள். பத்தாம் வீடு கெட்டிருந்து, பத்தாம் அதிபதி மட்டும் இங்கே வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் பெரும் நஷடங்களைச் சந்திப்பதோடு, தனது குடும்பத் தொழிலையும் தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு ஆளாகித் தவிப்பான்.

3. Tenth lord placed in the 3rd house
மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்: ஜாதகனின் பகுதி நேர வாழ்க்கை பயணங்களில் கழியும்.அப்படிப்பட்ட வேலை அமையும். பேச்சாளனாகவோ, எழுத்தாளனாகவோ இருந்தால் அந்தத்துறையில் பிரகாசிப்பார்கள். புகழடைவார்கள். தொழிலில் உடன்பிறப்புக்களின் பங்கும் இருக்கும் அதாவது அவர்களின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். எல்லோராலும் விரும்பப்படும் நிலை கிடைக்கும். அதனால் வேலைபார்க்கும் இடங்களில் கூடுதல் மதிப்பு இருக்கும். 3ஆம் வீடு பத்தாம் வீட்டிலிருந்து ஆறாவது வீடாக அமைவதால் இந்த அமைப்பினருக்கு இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்

4. Tenth lord placed in the 4th house நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்: ஜாதகர் ஒரு உதாரண மனிதராக இருப்பார். எல்லா விஷயங்களிலும் அறிவுடை யவராக இருப்பார்.(person with knowledge in various subjects) இந்த அறிவாற்றலால் பலராலும் மதிக்கப்படுபவராக இருப்பார். இடம் வாங்கி விற்கும் அல்லது கட்டடங் களைக் கட்டிவிற்கும் தொழிலை மேற்கொண்டால் அதில் முதன்மை நிலைக்கு உயர்வார். அரசியல் அதிகாரமுடையவர்களுடன் தொடர்புடையவராக இருப்பார். தூதுவராக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும். வசதியான வீட்டையும், வாகனங் களையும் உடையவராக இருப்பார். தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாக இந்த அமைப்புக்காரர்கள் விளங்குவதால் இவர்களுக்குப் பல சீடர்களும், உதவியாளர் களும் கிடைப்பார்கள். பொது வாழ்க்கைக்கு இந்த அமைப்பு சக்தி வாய்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

5 Tenth lord in the 5th House ஐந்தாம் வீட்டில் இருந்தால் வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்பை ஆசீர்வதிக்கப்பெற்ற அமைப்பு எனச் சொல்லலாம். தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணும் பொன்னாகும். பங்கு வணிகத்தில் ஈடுபட்டால் பணம் கொழிக்கும். இறைவழிபாடு, தியானம் என்று எளிமையாகவும் இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள பலர் இவர்களுக்கு நண்பர்களாகக் கிடைப்பார்கள்.அதோடு ஐந்தாம் வீடு, பத்தாம் வீட்டிற்கு எட்டாம் வீடாக இருப்பதனால், இவர்களுக்கு மறைமுக எதிரிகளும் இருப்பார்கள். இவர்களுடைய முன்னேற்றத்திற்கு அவர்கள் தடைகள் ஏற்படுத்த முயல்வார்கள்.

6 Tenth lord in the 6th House ஆறாம் வீட்டில் இருந்தால்: நீதித்துறை, மருத்துவத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகள் சார்ந்த வேலையில் இருந்தால், அதில் பிரகாசிப்பார்கள். அடுத்தடுத்துப் பதவி உயர்வு பெற்று மேன்மை அடைவர்கள். பொறுப்பான பதவிகள் வந்து சேரும். நடுநிலையாளர் என்று பெயர் பெறுவதுடன், பலரின் மதிப்பையும் பெறுவார்கள். அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். ஆறாம்வீடு பத்தாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடு ஆகையால், அதிர்ஷ்டம் இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கூடவே வரும்.இவர்கள் வேலையில் உயர்வதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கும்.

7 Tenth lord in the 7th House ஏழாம் வீட்டில் இருந்தால்: பாத்தாம் அதிபதி இந்த இடத்தில் இருந்தால் ஜாதகரின் தொழில் அல்லது வேலை மிகவும் சக்தி வாய்ந்ததாக அமையும். அவர்களுடைய அறிவு சராசரிக்கும் அதிகமானதாக இருக்கும். பலவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்து கொண்டதை அற்புதமாக வெளிப்படுத்தும் திறமையுடன் இருப்பார்கள். தொழிலில் சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பார்.அதுவே அவருடைய வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும். தொழில் நிமித்தமாக அடிக்கடி தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கும். நிர்வாகத்திறமைகள் உடையவராக இருப்பார். தங்களுடன் வேலைப்பார்ப்பவர்களை நம்புவார்கள், அதோடு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அதனால்
 அவர்கள் கையில் எடுத்துச் செய்யும் எல்லாச் செயல்களுமே வெற்றி பெறும். பலனைத்தரும். இந்த இடம் 10ஆம் வீட்டிற்குப் பத்தாம் இடமாகும். அதனால் அவர்களுடைய வெற்றி எல்லைகளைக் கடந்து நிற்கும். கடந்து செல்லும்.

8 Tenth lord in the 8th House எட்டாம் வீட்டில் இருந்தால்: இந்த வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய தொழிலில் அல்லது வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும். திறமைசாலி களாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். தங்கள் வழியில்தான் செல்வார்கள். நீண்ட ஆயுளை உடையவராக இருப்பார்கள். பெருந்தன்மை உடையவர்களாகவும், உயர்ந்த கொள்கைகளை உடையவர்களாகவும் இருப்பார்கள். தங்களுடன் வேலை செய்பவர்களால் பாராட்டப் படுபவர்களாகவும், விரும்பப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இந்த 8ஆம் இடம் பத்தாம் வீட்டிற்குப் 11ஆம் இடம் ஆதலால், நல்ல லாபம் கிடைக்கும் தொழில் அல்லது நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைகள் அமையும்.

9 Tenth lord in the 9th House ஒன்பதாம் வீட்டில் இருந்தால்: துறவு மனப்பான்மை, ஏகாந்த உணர்வு கொண்டவராக ஜாதகர் இருப்பார். பரம்பரைத் தொழிலில் நாட்டம் உடையவராக இருப்பார். போதகர். ஆசிரியர் என்பதுபோன்றவேலைகளை விரும்பிச் செய்வார்.ஆன்மீக வாழ்வில் ஈடுபடுபவர் களுக்கு வழிகாட்டியாக இருப்பார். அதிர்ஷ்டமுடையவராகவும். வசதி உடைய வராகவும் இருப்பார். இவர்களுக்கு இவர்களது தந்தையின் உதவியும் வழிகாட்டு தலும் நிறைந்திருக்கும். தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். மனவள மேம்பாட்டுத்துறையில் (psychological counseling) நுழைந்தால் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்து மேன்மை பெறுவார்கள். தங்களுடைய திறமையால் பலரது போற்றுதலுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள்

10 Tenth lord in the Tenth House பத்தம் வீட்டு அதிபதி 10ல் இருந்தால் தங்கள் தொழிலில் அல்லது வேலையில்
 பிரகாசிப்பார்கள். இந்த அமைப்பு கெட்டிக்காரத்தனத்தை, புத்திசாலித்தனத்தை வெளிபடுத்தும் அமைப்பாகும். தங்களுக்கு மேலாளர்களை மதிக்கும் மனப்பக்குவம் உடையவர்களாக இருப்பார்கள். அதனால் மதிப்பும் பெறுவார்கள்.மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அரசியல் தொடர்பும், அரசுத் தொடர்பும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த வீடு நல்ல கிரகங்களின் சேர்க்கை, பார்வைகளளப் பெற்றிருந்தால் செய்யும் தொழிலில் அதீத மேன்மை பெறுவார்கள்

11 Tenth lord in the 11th House பத்தாம் அதிபதி 11ல் இருந்தால், ஜாதகருக்குப் பணத்துடன், மதிப்பும், மரியாதையும் சேரும். மகிழ்வுடன் இருப்பார்கள். பெரு நோக்குடையவர்களாக இருப்பார்கள். பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு உடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலமும் இவர்களுக்குப் பல தொடர்புகள் உண்டாகும். பலரலும் விரும்பப்படுவார்கள். இந்த வீடு பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடமாகும். இதனால், இவர்களுக்கு செல்வத்துடன், புகழும், மரியாதையும் சேர்ந்து கிடைக்கும். தொழில் மேன்மை உடையவர்களாக இருப்பார்கள்.

12. Tenth lord in the 12th House பத்தாம் அதிபதி 12ல் இருந்தால். வேலையில் அல்லது தொழிலில் பல பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். சிலர் வெளி நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். வருமானவரி, விற்பனை வரி போன்ற செயல்பாடுகளில் முரையற்று நடந்தால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆகவே அந்த விஷயங்களில் இந்த அமைப்பினர் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அரசியலிலோ அல்லது அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்தால் பெரும் நஷ்டத்தை மட்டுமே சந்திக்க நேரிடும். எதிரிகள் பலர் ஏற்படக்கூடும் அவ்ற்றிற்கெல்லாம் அப்போதப்போதைக்கு தீர்வுகளை இவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
பத்தாவது வீடு ஜீவனஸ்தானம் மற்றும் கர்மஸ்தானம் எனப்படும்.

ஒருவருக்கு எப்படி பட்ட தொழில் அமையும் என்று பார்ப்பதற்க்கு இந்த வீட்டை வைத்துதான் முடிவு செய்யபடவேண்டும். சோதிடம் எழுதப்பட்ட காலத்தில் குறைந்த தொழில்கள்தான் இருந்தன அதனால் தொழில்களை சிறிய முயற்சியில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இன்று நிறைய தொழில்கள் வந்துவிட்டன. அதனால் கண்
டுபிடிப்பது கடினம்

பத்தாவது வீட்டு ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

பத்தாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால் அதாவது 1 ம் வீட்டில் இருந்தால் சுயமுயற்சியால் முன்னேற்றம் காண்பார். செல்வம் சொத்துக்கள் கல்வி தான தருமங்களுடன் அரசாங்கத்தில் உயர்பதவிகளில் இருப்பார். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.


பத்தாவது வீட்டு அதிபதி 2 ம் வீட்டில் இருந்தால் நல்ல அழகுடனும் வாக்குவன்மை திறம்பட பேசும் சக்தி செல்வ செழிப்புடனும் இருப்பார்கள். சொத்துகள் கிடைக்கும் நல்ல நண்பர்கள் அமைவார்கள்.

பத்தாவது வீட்டு அதிபதி 3 ம் வீட்டில் இருந்தால் சகோதர தோஷம் ஏற்படும். சகோதரர்கள் இருந்தாலும் செல்வாக்குடன் இருக்கமாட்டார்கள்.

பத்தாவது வீட்டு அதிபதி 4 ம் வீட்டில் இருந்தால் அழகான வீடு, செல்வ செழிப்பான வாழ்க்கை தாய் வழி ஆதரவு முதலியன உண்டாகும். வண்டி வாகனம் அமையும். பூமியிலிருந்து புதையில் போன்றவை கிடைக்கும்.

பத்தாவது வீட்டு அதிபதி 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் அமையும் சந்தோஷ செல்வாக்குடன் கூடின வாழ்க்கை அமையும். பெரியமனிதர்களின் நட்பை பெறுவார்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பார்கள்.

பத்தாவது வீட்டு அதிபதி 6 ம் வீட்டில் இருந்தால் பிறர் பொருளை அபகரிக்கும் குணம் இருக்கும். உடம்பு மெலிந்தாக இருக்கும்.

பத்தாவது வீட்டு அதிபதி 7 ம் வீட்டில் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும் மனைவி ஒற்றுமையுடன் இருக்கமாட்டாள். மனைவி மூலம் பொருள் சேரும்.

பத்தாவது வீட்டு அதிபதி 8 ம் வீட்டில் இருந்தால் நல்ல ஆயுள் உண்டு. புத்திர தோஷம் ஏற்படும். மனைவியுடன் திருப்தியான சந்தோஷங்களில் ஈடுபட முடியாது.

பத்தாவது வீட்டு அதிபதி 9 ம் வீட்டில் இருந்தால் தகப்பனாரின் சொத்துக்கள் விரயம் ஆகும். புத்திரவிருத்தி இருக்காது. சிரம வாழ்க்கைகளை அனுபவிக்கும்படி இருக்கும். தானதருமங்களிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

பத்தாவது வீட்டு அதிபதி 10 ம் வீட்டில் இருந்தால் பெரிய மனிதர்களின் ஆதரவு இருக்கும். உறவினர்களின் ஆதரவு இருக்கும். உலக விசயங்களில் நல்ல அறிவு இருக்கும்.

பத்தாவது வீட்டு அதிபதி 11 ம் வீட்டில் இருந்தால் செய்யும் காரியங்களில் ஒவ்வொன்றிலும் லாபத்தை பெறுவார்கள். மூத்த சகோதர சகோதரிகள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

பத்தாவது வீட்டு அதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்படும். புத்திரர்களால் கஷ்டங்கள் ஏற்படும். அனாவசியமான செலவுகள் இருக்கும். சொத்துக்கள் அழியும்.

No comments :

Post a Comment