01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, October 24, 2012

ஒன்பதாம் வீடுஒன்பதாவது வீட்டின் பலன் பிதுருக்கள் தகப்பனார் உயர்கல்வி முன்பின் தெரியாதவர்கள், தெய்வதரிசனம் போன ஜென்மத்து அதிர்ஷ்டம்,ஒருவர் செய்யும் தர்மம், நீண்ட தூர பயணம் அதாவது வெளிநாடு ஆகியவற்றை பற்றி தெரிவிப்பது இந்த வீடுதான்.

ஒன்பதாவது வீட்டுக்கிரகம் லக்கினத்தில் இருந்தால் அதாவது முதல் வீட்டில் இருந்தால் பெரியவர்களிடம் பிதா, குரு, தெய்வம் ஆகியவற்றுகளிடம் பிரியத்தை கொண்டவர்களாகவும் தான தர்மங்கள் செய்வர்களாகவும் இருப்பார்கள். பிதுர் சொத்துக்கள் கிடைக்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 2 ம் வீட்டில் இருந்தால் செல்வாக்குடன் முன்னோர்கள் சொத்துக்களை பெற்றவராகவும் இருப்பார்கள். அயல்நாட்டு மூலம் பணவரவு இருக்கும்.


ஒன்பதாவது வீட்டு அதிபதி 3 ம் வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவு இருக்கும். பிதுர் தோஷம் பெற்றவனாக இருப்பான்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 4 ம் வீட்டில் இருந்தால் தாயின் ஆதரவு இருக்கும். வண்டி வாகனம் சொத்துக்கள் கிடைக்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் சகல பாக்கியத்துடன் இருப்பார்கள் அரசாங்கத்தில் பெரியபதவி கிடைக்கும. தெய்வீக வழிபாடுகள் நிறைந்து காணப்படும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 6 ம் வீட்டில் இருந்தால் வெளிநாட்டு பயணம் கிட்டும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும் . முன்னோர்களின் சொத்துக்கள் கடன்களிலால் அழியும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 7 ம் வீட்டில் இருந்தால் நல்ல தெய்வபக்தியுள்ள பெண்கிடைக்கும் அந்நிய பெண் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். தந்தையின் சொத்துக்களால் பயன் பெறுவார்கள்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 8 ம் வீட்டில் இருந்தால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்ககூடும். தந்தையார் இறந்து போக வாய்ப்பு உண்டு. புத்திர தோஷம் ஏற்படும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 9 ம் வீட்டில் இருந்தால் தகப்பனார் நீண்ட ஆயுள் உடன் இருப்பார். தகப்பனாரின் சொத்துகள் கிடைக்கும். தான தர்மங்கள் குடும்பத்தில் நிறைந்து விளங்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 10 ம் வீட்டில் இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பார். தந்தையாரின் சொத்துக்கள் விருத்தி ஆகும். பெரியவர்களிடத்தில் மரியாதையாக இருப்பார்கள்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 11 ம் வீட்டில் இருந்தால் தெய்வகாரியங்கள் வீட்டில் நடைபெறும். தந்தையால் லாபம் இருக்கும் அயல்நாட்டு தொடர்பு மூலம் வருமானம் கிடைக்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் தந்தையாருக்கு கெடுதல் உண்டாகும். வெளிநாட்டு பயணம் கிடைக்கும். தந்தையாரின் சொத்துகள் நிலைக்காது.

ஒன்பதாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் பித்ரு தோஷம் ஏற்படும்.

பரிகாரம்

இராமேஸ்வரத்தில் திலா ஹோமம் செய்ய வேண்டும். மாத அமாவாசை விரதம் இருக்க வேண்டும். அமாவாசை அன்று பசு மாட்டிற்க்கு அகத்திகீரை கொடுக்கவேண்டும். வாழ்வில் ஒருமுறையாவது இராமேஸ்வரம், காசி சென்றுவரவேண்டும்.

-----------------------------------**********************-------------------------


ஒன்பதாம் வீட்டு அதிபன் அமர்ந்த இடங்களுக்கான பலன்கள் (Results of the ninth lord occupying various houses in the horoscope!)

1. ஒன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the lagna) நன்றாக இருந்தால்(If well placed) நட்பு வீடாக இருந்து நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை கிடைத்தால்: நல்ல தந்தை அமைந்திருப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் தான தருமங்கள் செய்வான். சாஸ்திரங்கள், புராணங்களில் ஈடுபாடு இருக்கும். சமூகத்தில் பெரிய பதவி அல்லது அந்தஸ்து கிடைக்கும்! தெய்வபக்தி உள்ளவனாக இருப்பான். இறைவனின் அருள் முழுமையாக இருக்கும் (பக்தி இருந்தால், அருள் இருக்காதா என்ன?) தன் தந்தை, பெரியவர்கள், குரு (வாத்தியார்) ஆகியோரின் மேல் விசுவாசமுள்ளவனாக இருப்பான். கடந்து வந்த பாதையை ஒரு நாளும் மறக்க மாட்டான். மொத்தத்தில் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருப்பான். உதாரண மனிதனாக இருப்பான். பெண்ணாக இருந்தால் உதாரண மனுஷியாக இருப்பாள். தங்கள் வேலைகளைத் தாங்களே முடிக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். ஒன்பதாம் வீட்டுக்காரனும், லக்கினாதிபதியும் கூட்டணி போட்டு, லக்கினத்திலோ அல்லது வேறு நல்ல இடங்களிலோ (except in 6th, 8th & 12th places) அமர்ந்திருந்தால் ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ளவனாக இருப்பான். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed) மேலே சொன்னவற்றிற்கு எதிரான பலன்கள் நடைபெறும் அல்லது கிடைக்கும் ---

2. இரண்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in second house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகனின் தந்தை செல்வந்தராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பார். தந்தையின் சொத்துக்கள் அப்படியே ஜாதகனுக்குக் கிடைக்கும். அவனும் தன் தந்தையைப்போலவே வசதிகள் உடையவனாகவும் சமுதாயத்தில் செல்வாக்கு உடையவனாகவும் இருப்பான். அவர்கள் குடும்பம் உயர்வான நிலமையில் இருக்கும். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed) பூர்வீகச் சொத்துக்களை இழக்க நேரிடும். அல்லது அழிக்க நேரிடும். அவனுடைய குடும்பம் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.

3. மூன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the third house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): நன்றாக எழுதக்கூடியவன். நன்றாக மேடைகளில் பேசக்கூடியவன். எழுத்தால் பெரும் பொருளை ஈட்டக்கூடியவன். பேசப்படுபவானக உயர்வான். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது. அவனே நிறைய சம்பாதிப்பான். சகோதரன், சகோதரிகளின் அன்பும், ஆதரவும் உள்ளவனாக இருப்பான். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed) அப்போதும் எழுதுவான். ஆனால் வேண்டாததை எழுதுபவனாக இருப்பான். வேண்டாதது என்பது என்னவென்று நீங்களே ஊகம் செய்து கொள்ளுங்கள். பேசியும், எழுதியும் சிக்கல்களில் மாட்டிக்கொள்வான். ஜாதகத்தில் கிரகங்கள் எந்த அளவிற்குக் கெட்டிருக்கிறதோ அந்த அளவிற்குச் சிக்கல்கள் ஏற்படும். வம்பு, வழக்கு, நீதிமன்ற விசாரணைகள் என்று அலைந்து சொத்துக்களை விற்றுக் கடைசியில் ஒன்றும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவான்.

4. நான்காம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the fourth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): பெற்றோர்களின் முழு அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான். நிலம், வீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள் என்று அரச வாழ்க்கை வாழ்வான். உறவினர்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும்.(அதில் என்ன ஆச்சரியம்?) நிலம், பூமி ஆகியவை பிறப்பில் இல்லாவிட்டாலும், ஜாதகன் தன் முயற்சியால் அதாவது ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து, அவற்றை ஈட்டுவான் அல்லது தேடிப் பிடித்துவிடுவான். மகிழ்ச்சியாக இருப்பான். வாழ்வான். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed) வீட்டு வாழ்க்கை நன்றாக இருக்காது. பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும். இறுகிய மனம் படைத்த அல்லது அன்பில்லாத தந்தையால் சிறு வயதில் பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பான். அல்லது கருத்து வேற்றுமை மிக்க பெற்றோர்களால் சிறு வயது வாழ்க்கை அவலமாக இருந்திருக்கும். ஒன்பதாம் வீட்டுக்காரன், நான்காம் அதிபதி ஆகியோருடன் ராகுவும் வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், அல்லது அவர்கள் இருவரும் ராகுவின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனின் தாய் கணவனைப் பிரிந்து வாழ்பவளாக இருப்பாள் அல்லது விவாகரத்து பெற்றவளாக இருப்பாள்.

5. ஐந்தாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the fifth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகனின் குழந்தைகள் அம்சமாக இருப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால் சூப்பராக இருப்பார்கள். திறமைசாலிகளாகவும், நுண்ணறிவுடையவர்களாகவும் இருந்து ஜாதகனுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுப்பார்கள். ஜாதகன் அரசுப் பணிகளில் இருந்தால், பல உயர்வுகளைப் பெற்றுப் பிரபலமாக வலம் வருவான். எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். குடும்பம் சிறந்து விளங்கும். ஜாதகனின் தந்தையும் புகழ் பெற்றவராக, செல்வாக்கு உடையவராக இருப்பார். மொத்தத்தில் ஜாதகன் அதிர்ஷ்டகரமான, வெற்றிகளை உடைய, மதிப்புடைய வாழ்க்கை வாழ்வான். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed) முன் பத்திகளில் கூறியவற்றிற்கு எதிரான வாழ்க்கை அமையும்.

6 ஆறாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the sixth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகன் போராடி, வழக்குத் தொடுத்துதான் தன் தந்தையாரின் சொத்துக்களை அடையமுடியும். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): தந்தாயின் சொத்துக்களை அடையமுடியாது. அல்லது கிடைக்காது. மேற்கொண்டு தந்தையார் நிலுவையில் வைத்துவிட்டுப்போன கடன்களைத் தன் கைக்காசைக் கொண்டு தீர்க்க வேண்டியதாயிருக்கும். பொதுவாக இந்த இடம் ஒன்பதாம் வீட்டு அதிபதி அமர்வதற்கு ஏற்ற இடமல்ல! எது எப்படி இருந்தாலும் பொது அமைப்பில் ஜாதகனுடைய தந்தை நோய்களை உடையவாரகவும், பிரச்சினைகளை உடையவராகவும் இருப்பார். அப்படியே சொத்துக்கள் கிடைத்தாலும், பல வழிகளிலும் அவற்றை இழக்க நேரிடும். ஜாதகனுக்கு வயதான காலத்தில் உடல் உபாதைகள் ஏற்படும்!

7. ஏழாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the seventh house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): அடக்கம், அமைதி, அழகு என்று எல்லாம் அமைந்த மனைவி ஜாதகனுக்குக் கிடைப்பாள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தந்தையின் சொத்துக்களாலும், பிற்காலத்தில் தன் பிள்ளைகளின் சம்பாத்தியத்தாலும் ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சி உள்ளதாக இருக்கும். (The native will get a good and fortunate wife!) ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும் பொருள் ஈட்டுவான். சிலர் அங்கேயே செட்டிலாகி செளகரியமாக வாழ்வார்கள். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): ஜாதகனுக்கு வெளி நாட்டு வேலையும், அங்கேயே தங்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஆனால் மனதில் மகிழ்ச்சி இருக்காது.

8. எட்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the eighth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகன் தன் தந்தையைச் சிறு வயதிலேயே இழந்திருப்பான். தந்தையின் சொத்துக்களை மற்றவர்கள் அபகரித்திருப்பார்கள். விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் போரட்டத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): ஜாதகன் வறுமையில் உழல்வான். அன்றாடம் காய்ச்சியாக வாழ நேரிடும். (Poverty also will live with him). வாழ்க்கையின் நடைமுறைகளைக் காற்றில் பறக்க விட்டுவிடுவான். தன் முன்னோர்கள் சேர்த்துவைத்திருந்த நாணயம், நம்பிக்கை, நல்ல பெயர்கள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டிவிடுவான். தந்தையின் உடல் நிலை கெட்டிருக்கும். இவனுக்கும் புத்திர தோஷம் உண்டாகும்.

9. ஒன்பதாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the ninth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஒன்பதாம் வீட்டு அதிபதி தன் சொந்த வீட்டில் அதாவது ஒன்பதிலேயே, ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகனின் தந்தை தீர்க்க ஆயுள் உடையவராக இருப்பார். தான, தர்மங்கள் நிறைந்த குடும்பம் அமையும். தந்தையின் சொத்துக்கள் தானாக வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்று உன்னத நிலையில் வாழ்வான். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பான். அடிக்கடி வெளி நாடுகளுக்குச் செல்வான். பெரும்பொருள் ஈட்டுவான். பலர் அங்கேயே சென்று தங்கி விடுவார்கள். பெரும் பொருள் ஈட்டி உன்னத நிலையில் வாழ்வார்கள். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): ஒன்பதாம் அதிபதி கெட்டிருந்தால் அல்லது 6, 8, 12 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகன் தன்னுடைய சின்ன வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும்.

10. பத்தாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the tenth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகன் பெரும் புகழையும், வலிமைகளையும் பெற்றுத் திகழ்வான்.(The native will become famous and powerful!) அதீதமான பொருள் ஈட்டுவான். வசதியான ராஜ வாழ்க்கை வாழ்வான். தர்ம சிந்தனைகளையுடைய வாழ்க்கை அமையும்.சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாகத் திகழ்வான். செல்வாக்கு உள்ள குடும்பமாக இருக்கும். ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் கூட்டணி போட்டு நல்ல கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அரசில் உயர் பதவிகள் கிடைக்கும். சிலர் அமைச்சராகக்கூட ஆவதுண்டு! தந்தையின் சொத்துக்கள் விருத்தியடையும். தான தர்மம், தெய்வ வழிபாடு மிகுந்தவர்களாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள், பெரிய மனிதர்களின் தொடர்பு என்று ஜாதகன் சிற்ப்பான வாழ்க்கை வாழ்வான். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): மேற்கூறிய பலன்கள் இருக்காது!

11. பதினொன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the eleventh house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகன் அதீத செல்வமுடையவனாக இருப்பான். செல்வாக்கும், அதிகாரமுமுள்ள பல நண்பர்களை உடையவனாக இருப்பான். அவனுடைய தந்தையும் அப்படியே இருப்பார் நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): நன்றி, விசுவாசமில்லாத நட்புக்களாலும், உறவினர்களாலும், சொத்து சுகங்களை இழக்க நேரிடும். மோசடிகளையும், துரோகங்களையும் சந்திக்க நேரிடும். அதனாலும் சொத்துக்களை இழக்க நேறிடும். ஜாதகனுடைய தந்தையார் ஆரம்ப காலங்களில் செல்வாக்கு உடையவராக இருந்தாலும், பின்னாட்களில் தாழ்வான நிலையை அடைவார். அவருடைய சொத்துக்களும் நில்லாது போய்விடும்

12. பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the twelfth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): பூர்வீகச் சொத்துக்கள் நிலைக்காது. வம்பு வழக்குகளில் அனைத்தையும் இழக்க நேறிடும். சிற்றின்ப வேட்டைகளில் ஈடுபட்டு, அதன் மூலமும் சொத்துக்களை இழக்க நேரிடும். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): ஏழ்மையான சூழல் நிலவும். வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். கடினமாக உழைக்க வேண்டும். பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். சில அமைப்பு உள்ளவர்களுக்குத் தந்தை சிறுவயதிலேயே இறந்திருப்பார். ஜாதகனுக்கு ஒரு பைசாக் கூட பணம் இல்லாத நிலைக்கு ஆளாக்கிவிட்டுச் சென்றிருப்பார். எது எப்படியோ இந்த ஒன்பதாம் அதிபதி என்று மட்டுமில்லை - எந்த வீட்டு அதிபதியும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்வது உசிதமல்ல! பிரச்சினைதான். அது அங்கே வந்து அமரும் கிரகத்திற்கு உரிய வீட்டை முற்றிலும் பாதிக்கும்.

இந்தப் பதிவில் சொல்லப்பட்டுள்லது அனைத்துமே பொதுவிதிகள்தான். காரகனின் நிலைமை இது அனைத்தையும் மாற்றிவிடும். புரட்டிப்போட்டுவிடும். அதையும் கணக்கிட்டுத்தான் முடிவிற்கு வரவேண்டும்.

ஓன்பதாம் வீட்டில் குரு இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அரசியல் வாழ்க்கைக்கு அது மிகவும் நன்மையளிக்கும்

No comments :

Post a Comment