01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Saturday, October 27, 2012

ராகு இருக்கும் இடத்தின் பலன் ஜாதகத்தில்

ஒன்றாம் இடம் : பிடிவாதம் , சொந்த பந்தம் எல்லாம் ஒதுங்கி செல்லும்.

இரண்டாம் இடம் : சுட்டு பொசுக்கும் பேச்சி, பேச்சி பலிக்கும், தொட்ட காரியம் இழுத்து கொண்டே போகும், நிறைய கடன் இருக்கும், நிறைய சம்பாதிக்கும் அமைப்பும் உண்டு. ஏழாம் அதிபதி பலம் இல்லை என்றால் வேறு பெண்ணிடம் தொடர்பு ஏற்படும்.

மூன்றாம் இடம் : நிறைய சம்பாதிக்கலாம். தைரியம் இருக்கும்.

நான்காம் இடம் : சுகத்துக்கு கேடு, பாட்டன் சொத்துக்கு கேடு, தாய்க்கு கேடு, கல்வி கேடு, சமூக விரோத செயலில் ஈடுபாடு, பெண்ணாக இருந்தால் காமத்தில் அதிக ஈடுபாடு, உடல் நல கேடு.

ஐந்தாம் இடம் : எடுத்த காரியம் இழுபறியாக இருக்கும். மந்திரவாதி, பிசாசு விரட்டுதல் போன்ற காரியத்தில் ஈடுபட வைக்கும்.

ஆறாம் இடம் : காரிய சித்தி, குறி தப்பாது,எதிரியை வீழ்த்தும் வலிமை, ஆதாயம் கிடைக்கும். வருமானம் பெருகும்.குரு கேந்திரத்தில் அமைந்தால் லச்சாதிபதி ஆவார்கள் .பலான விஷயத்தில் எச்சரிக்கை தேவை.ஏழாம் இடம் : குடும்பத்துக்கு தலைகுனிவு ஏற்படும்.நிம்மதி இல்லாத நிலை ஏற்படும்.குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது.

எட்டாம் இடம் : பொருளாதார ஏற்ற தாழ்வு, போதிய வருமான மின்மை, மறுத்து பேசும் மனைவி, உறவினர் நண்பர்கள் உறவு கேடும்,

ஒன்பதாம் இடம் : மத நன்பிக்கை இல்லாதவர், தந்தை சொல் கேளாதவர், இறை நன்பிக்கை அற்றவர், முதலாளி ஆகமுடியாது.பிள்ளை பிறக்க தாமதிக்கும், ஐந்தாம் இடம் , ஒன்பதாம் இடம் கெட்டு இருந்தால் பிள்ளை பிறக்காது.

பத்தாம் இடம் : பல தொழில் செய்யும் நிலை ஏற்படும்.ராகு திசை வந்தால் செல்வந்தார் தான்.சினிமா கலை துறையில் சம்பதிப்பார்,ரியல் எஸ்டேட் , கமிசன் துறையில் நல்ல லாபம்,தர்ம சிந்தனை மேலோங்கும், அன்ன தானம் செய்வார்,,பேர் சொல்லும் படி வாழ்வார்.

பதினோராம் இடம் : எல்லா துறையிலும் சிறந்து விளங்குவார்கள், உதவி ஓடி வந்து செய்வார்கள் , விவசாயத்தில் வெற்றி , பல வழிகளில் பணம் சேரும் .

பன்னிரெண்டாம் இடம் : சாப கேடு, சேமித்த பணம் எல்லாம் திசை புத்தி வரும் போது கரைந்து விடும்,வாழ்வின் பெரும் பகுதி நஷ்டம் தான் , போதை பொருள் பயன் படுத்துவான், இப்படி ஒரு குழந்தை பிறந்தால் பிறந்த உடனே சொத்துக்கள் கரையும்.வாழ்வே பாலைவனம் .

No comments :

Post a Comment