01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Thursday, November 29, 2012

யார் சிறந்த ஜோதிடர் ஆக முடியும் ? சாஸ்திரம் என்ன சொல்கிறது ?


1,4,7,10 போன்ற கேந்திர ஸ்தானத்திலோ அல்லது வாக்கு ஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாம் வீட்டிலோ புதன் இருந்து , 

புதன் கெட்டு போகாமல் இருந்து

 குருவின் பார்வையும் கிட்டிவிட்டால் அவன் மிக சிறந்த ஜோதிடனாக உருவெடுப்பான்.

Wednesday, November 21, 2012

நடிகர் ரஜினிகாந்த் -இன் ஜாதகம்


பத்துக்கு அதிபதி சுக்கிரனாக இருந்து அதுவும் நட்பு வீட்டில் ஐந்தாம் வீட்டில் இருந்து 

ரெண்டுக்கும் பதினொன்றுக்கும் அதிபதியான புதனுடன் நட்பு கிரகமாக இருப்பதாலும்

 சுக்கிரன் கலைத்துறைக்கு அதிபதி ஆதலால் மிக பெரிய முன்னேற்றம் கொடுத்தது.

இப்படி இருக்கின்ற சுக்கிரன் தனது ஏழாம் பார்வையால் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் பதினொன்றாம் இடத்தை பார்ப்பதால் மிகுந்த லாபத்தை அடைந்தார்.

மாந்தி என்ற கிரகம் பத்து மற்றும் பதினொன்று இடத்தில நிற்கும் போது மட்டும் தான் நல்ல பலனை கொடுக்கின்றன. இவர் ஜாதகத்தில் பதினொன்றில் மாந்தி. மிக சிறப்பு.


Tuesday, November 20, 2012

Kattumannarkoil jothida Nilayam : யாருக்கு சிறை வாசம் ?யாருடைய ஜாதகத்தில் ஆறாம் இடத்து அதிபதி எட்டாம் இடத்து அதிபதி  மற்றும் பன்னிரெண்டாம் இடத்து அதிபதி பாவராக இருந்து 

சுப கிரகம் பார்க்காமல் இருந்து 

ஜனன ஜாதகத்திலும் ஆறிலும் எட்டிலும் பன்னிரெண்டிலும் பாவர்கள் இருந்து 

 மூன்றாம் இடத்திலும் தீய பார்வை அல்லது சேர்க்கை இருந்து 

இவர்களின் திசை புத்தி நடந்தால் ஜாதகன்  அவமானப்பட்டு சிறைவாசம் அடைவான்.

குழந்தை பாக்கியம் ஏன் தாமதமாகிறது ? ஜோதிட சாஸ்திரப்படி ஒரு ஆய்வு !!!!! ஜோதிட ஆராய்ச்சி நிலையம் காட்டுமன்னார்கோயில்௧. குழந்தை பாக்கியம் தாமதம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் சுத்தமாகவும் சுப தன்மையுடனும் இருக்க வேண்டும்.

௨. மேலும் குடும்ப ஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாம் இடத்திலும் பாவ கிரகம் இருக்க கூடாது.

௩. ஐந்தாம் இடத்தில் சனி, ராகு, செவ்வாய்  இருக்க கூடாது.

௪. ஐந்தாம் இடத்தில் குரு தனித்து இருக்க கூடாது.

௫. ஐந்தாம் இடத்தை சனியோ செவ்வாயோ பார்க்க கூடாது.

மேலும் பாவ கிரகங்கள் சேர்க்கை ஐந்தாம் இடத்தில் இருந்தால் தாமதம் தான்.


கிரகங்கள் அந்தந்த வீட்டில் இருக்கும் போது என்ன நிலை?


Saturday, November 17, 2012

பிருகு மகரிஷி ஜோதிட தந்தைரிஷிகளுள் நான் பிருகு : கிருஷ்ணரின் பிரகடனம்
 ரிஷிகளுள் நான் பிருகு (மஹரிஷீணாம் ப்ருகுரஹம்-கீதை பத்தாம் அத்தியாயம் சுலோகம் 25) என்று கிருஷ்ணனால் பகவத் கீதையில் சொல்லப்பட்ட சிறந்த மஹரிஷி பிருகு ஆவார். சப்த ரிஷிகளுள் ஒருவர்.ஜோதிடக் கலையைக் கண்ட 18 ரிஷிகளுள் ஒருவர். பிரம்மா படைத்த பிரஜாபதிகளுள் ஒருவர். பிரம்மா மனதில் நினைத்தவுடன் இவர் தோன்றியதால் இவரை பிரம்மாவின் மானஸ புத்திரர் என்று புராணங்கள் புகழ்கின்றன. பாகவதத்தில் இவர் விரிவாகப் பேசப்படுகிறார்.மஹாபாரதத்திலும் வாயு புராணத்திலும் கூட இவரது கதை விரிவாகச் சொல்லப்படுகிறது. தக்ஷனின் மகளான க்யாதியை இவர் மணம் புரிந்தார். அவள் மூலம் தாதா விதாதா என இரு புத்திரர்கள் இவருக்கு உண்டு. சுக்ரனும் சியவனரும்கூட இவரது புத்திரர்களே!

நேரம் சரியில்லை என்றால் பரிகாரம் செய்தால் பலிக்குமா?- ஜோதிடர் கலையரசன் காட்டுமன்னார்கோயில்பரிகாரம் பலிக்குமா ? இதை ஜாதகத்தை பார்த்து மிக எளிதில் கூறி விட முடியும்.

இந்த உலகில் மூன்று வகையான கருமங்கள் இருக்கின்றன .

அவை 

1. துருத கருமம் : 

கொலை, கொள்ளை , வயதான தாய் தந்தையை கவனிக்காமல் இருந்தவர்கள் இவர்கள் அடங்குவார்கள். இப்படி பட்ட கருமத்தை செய்தவர்கள் எப்படி பட்ட பரிகாரம் செய்தாலும் அது பலிக்காது.

இவர்கள் ஜாதகத்தை பார்த்தல் லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ அல்லது தற்போது நடக்கும் திசை புத்தி நாதர்களுக்கு குருவின் பார்வை இருக்காது. மேலும் ஒன்பதாம் வீட்டிற்கு உடையவனின் பார்வையும் இருக்காது.

2. துருத - அத்ருத கருமம் :

சிலர் சிறிய சிறிய குற்றங்கள் செய்து இருப்பார்கள் அவர்களுக்கு குருவின் பார்வை இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் பரிகாரம் செய்தால் பலிக்கும்.

3.அத்ருத கருமம் :

சிலர் சிறிய தவறு செய்து இருப்பார்கள் அதனால் யாரும் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள் .

அப்படி பட்டவர்களின் பரிகாரம் எளிதில் நிறைவேறும்.

புதையல் யாருக்கு கிடைக்கும் ? BURIED TREASUREபதினொன்றாம் வீட்டு அதிபதி லக்னத்திலும் லக்னாதிபதி இரண்டாம் வீட்டிலும் , இரண்டாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டிலும் இருந்தால் புதையல் கிடைக்கும் .

Wednesday, November 14, 2012

சுபர்களையும் பாபர்களையும் உங்கள் ஜாதகத்தில் எளிதாக எப்படி கண்டு பிடிப்பது ? Benefic and Malefic planets and houses


நான்கு விதிகள் உள்ளன இவற்றை பின்பற்றினால் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
எடுத்துகாட்டாக இந்த ஜாதகத்தை எடுத்து கொள்வோம்...

இந்த ஜாதகத்தில் யார் சுப கிரகம்? யார் பாப கிரகம்?
முதல் வேலை :
1.       இயற்கை சுபர்கள் : குரு , சுக்கிரன் , சந்திரன், புதன்
2.       இயற்கை பாவர்கள் : சனி,சூரியன், செவ்வாய், ராகு, கேது,
இப்போது உங்கள் ஜாதகத்தில் உள்ள இயற்க்கை சுபர்களை பச்சை நிறம் கொண்டு மார்க் செய்யுங்கள்.
இயற்க்கை பாவர்களை சிவப்பு நிறம் கொண்டு மார்க் செய்யுங்கள் .

Thursday, November 8, 2012

வெளிநாடு யோகம் , வெளிநாடு பயணம் யாருக்கு ? FOREIGN TRIP, ABROAD JOB


ஜாதகத்தில் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டில்வசிப்பது போன்றவற்றை குறிப்பிடுபவை 9,12ம் இடங்கள்தான். இந்த இடங்கள் சர ராசிகளான மேசம், கடகம், துலாம், மகரம் போன்ற ராசிகளில் அமைந்தாலோ ஜல ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் அமைந்தாலோ வெளி நாட்டிற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.

இவற்றுள் கடக ராசிக்கு வெளிநாட்டு யோகத்தைக் கொடுப்பதற்கான பலம் அதிகம் இருக்கிறது. காரணம் இது, சர ராசியாகவும், ஜல ராசியாகவும் இரட்டிப்புத் தகுதி பெறுகிறது.

12 லக்னங்களில் ரிஷப, சிம்ம, விருச்சிக, கும்ப லக்னக்காரர்களுக்கு மற்ற லக்னத்தில் பிறந்தவர்களை விட வெளிநாடு செல்லும் யோகம்/வாய்ப்பு அதிகம் ஏற்படும். காரணம் இந்த லக்னங்களுக்கு 9 மற்றும் 12 இடம் ஆகிய 2 இடங்களும் சர ராசியாகவோ அல்லது ஜல ராசியாகவோ வரும்.

நல்ல நேரம் எப்போ

நடப்பது எந்தக் கிரகத்தின் திசை, எந்தக் கிரகத்தின் புத்தி என்பதை முதலில் குறித்துக் கொள்ளுங்கள். ஜாதகத்தில் அந்த தசா நாதனும், அந்த புத்திநாதனும் ஒருவருக்கொருவர் 6/8 பொஸிசனில் இருக்கக்கூடாது. அல்லது 1/12 பொஸிசனிலும் இருக்கக்கூடாது. இருந்தால் அந்த திசையில் அந்த புத்தி நன்மையைச் செய்யாது. இதுதான் குறுக்குவழி ஃபார்முலா! இதை வைத்து அதாவது இந்த ஃபார்முலாவை வைத்து, அடுத்தடுத்து வரப்போகும் புத்திகளுக்கும் குறித்துக் கொண்டே வாருங்கள், உங்களுக்கு நல்ல நேரமும், கெட்ட நேரமும் பிடிபட்டு விடும். தசாபுத்திப் பலன்களைக் கொடுத்துள்ளேன். பார்க்க.1ம் வீடு, 5ம் வீடு, 9ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடு, 10ஆம் வீடு ஆகிய வீட்டு அதிபதிகளின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும், அவர்கள் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். எல்லாவற்றையும் விட, 11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் உச்சமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். நீசமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றால் நல்ல பலன்கள் கிடைக்காது. தசாபுக்திதான் முக்கியம். அதற்கடுத்தபடிதான் கோச்சாரப் பலன்கள். கோச்சாரத்தில் (in transit) குரு பகவானின் சஞ்சாரம் முக்கியமானது. குருவானவர் சந்திர ராசிக்கு 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம், 11ஆம் இடம் ஆகிய இடங்களில் வாசம் செய்யும் காலங்களில் நல்ல பலன்களைத் தருவார். 1ஆம் இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம், 10ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் குரு பகவான் நன்மை செய்ய மாட்டார். மூன்றாம் இடச் சஞ்சாரத்தில் குரு பகவான் தீமையான பலன்களைத்தான் நல்குவார். குருவின் 3ஆம் இட சஞ்சாரத்தின் தன்மையை விளக்கும் பாடல் "கேளப்பா குருபதியும் மூன்றிலேறக் கெடுதிமெத்த செய்வானடா வேந்தன்தானும் ஆளப்பா அகத்திலே களவுபோகும் அப்பனே அரிட்டமடா சிசுவுக்குத் தான் கூளப்பா குவலயங்க ளெல்லாம் ஆண்ட குற்றமிலாகாந்தாரி மகனும் தானும் வீளப்பா வீமன் கை கதையினாலே விழுந்தானே மலைபோல சாய்ந்தான் சொல்லே!" - புலிப்பாணி பாடல்

திருமணம் எப்போது ?


 
குரு பகவான் லக்னதையோ அதற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ ராசியையோ ராசிக்கு இரண்டாம் இடத்தையோ கோட்சார ரீதியாக சுற்றி வரும் போது 5,7,9 ம் பார்வையாக பார்த்தால் திருமணம் கூடி வரும்.
 
மேலும்
 
ஜனன குருவை கோட்சார குரு பார்க்கும் போதும் திருமணம் கூடி வரும்.
 
சுக்கிரனின் தசா புத்தி நடைபெறும் போதும் திருமணம் நடைபெறும்.
 
ஏழாம் வீட்டு அதிபரின் தசா புத்தி நடைபெறும் போதும் திருமணம் நடைபெறும்.
 
 
------------------
 
 
ஏழாம் வீடு எப்படி இருக்கிறது , சுப கிரகம் இருக்கிறதா? சுப கிரகத்தின் பார்வை இருக்கிறதா? ஏழாம் வீட்டு அதிபதி எங்கே இருக்கிறார், அவரது நிலைமை என்ன அதாவது ஆட்சி உச்சம் நீச்சம் , அவருடன் சேர்ந்து இருக்கும் கிரகத்தின் நிலைமை என்ன, அவரை பார்க்கும் கிரகங்கள் எப்படி
 
இதே போல சுக்கிரனுக்கும் பார்க்க வேண்டும்.
 
இரண்டாம் வீடு , இரண்டாம் வீட்டு அதிபர் எப்படி ?
 
மேலும் எட்டாம் இடம் எப்படி என்று பெண்களுக்கு மாங்கல்ய நிலையையும் காண வேண்டும்.


Friday, November 2, 2012

மரணம் எப்படி வரும் ஒரு பார்வை ?முதல் நிலை மாரக ஸ்தான அதிபதியின் வீடான ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகங்களும், அதைப் பார்க்கும் கிரகங்களும், ஜாதகனுக்கு வித்தியாசமான முறையில் மரணத்தை ஏற்படுத்துவதில் வல்லமை பெற்றவை.

எச்சரிக்கை: கொடுக்கப் பெற்றுள்ளவை அனைத்துமே பொதுப்பலன்கள். அதை மனதில் கொள்க!

1. சந்திரன் எட்டில் இருப்பதுடன், சனியின் நேரடிப் பார்வையையும் பெற்றால், ஜாதகன் அறுவை சிகிச்சையின்போது உயிரைவிட நேரிடும்.

2. தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், அல்லது சனி, அல்லது ராகுவுடன் கைகோர்த்துக்கொண்டு எட்டில் இருந்தால், ஜாதகன் நீரில் மூழ்கி இறப்பான். அல்லது நெருப்பில் சிக்கி இறப்பான். அல்லது ஆயுதங்களால் தாக்குண்டு இறப்பான்.

ஜாதகத்தில் 5ஆம் இடத்திற்கான முக்கியத்துவம் என்ன


ஜோதிடத்தைப் பொறுத்தவரை 5ஆம் இடம் மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இதுதான் பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். அதனை பிரதானமாக வைத்துதான் கஷ்ட நஷ்டங்களை சந்திப்பது, வாழ்க்கையில் முன்னேறுவது, மேன்மையடைவது உள்ளிட்டவற்றை கணிக்கிறோம். 
தாய்மாமன் உறவு வகையைக் குறிப்பதும் இந்த 5ஆம் இடம்தான். 5ல் ராகு, செவ்வாய், சனி உள்ளிட்ட கிரகங்கள் இடம் பெற்றிருந்தால் ஆழமான சிந்தனைகளை அவர்களால் தேக்கி வைக்க முடியாது. படித்த கருத்துகளை சீக்கிரமே மறந்து விடுவர். நினைவாற்றல் குறைவாக இருக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் 5ஆம் இடம் பாவகிரகங்களால் பார்க்கப்படாமல் நன்றாக இருந்து, ஐந்துக்கு உரியவனும் நன்றாக இருந்தால் அந்த ஜாதகரின் வாழ்வு சிறப்பாக இருக்கும். 
செவ்வாய் 5இல் இருநதால் பழிவாங்கும் குணம் மேலோங்கும். யாரால் நமக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் காத்திருந்து பழிவாங்கும் நிகழ்வுகளும் 5இல் உள்ள செவ்வாய் காரணமாக நிகழும். 5இல் சூரியன் இருந்தால் அரசு அதிகாரிகளைப் பகைத்துக் கொள்வார்.

ராகு, கேது அல்லது சனி தசை
சனி, ராகு, கேது மூன்று கிரகங்களும் முந்தைய கர்மாக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் கிரகங்களாகும். அதாவது நாம் முந்தைய பிறவியில் செய்த பாவ, புண்ணியத்திற்கேற்ப இந்த கிரக காலங்கள் அமையும். பூர்வ புண்ணிய ஸ்தானம் சிறப்பாக அமைந்தால் இந்த காலங்களில் நாம் சிறப்பாக இருப்போம். நாம் முந்தைய காலத்தில் நல்லவற்றை நிறையச் செய்திருந்தால் இந்த காலத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்து வந்த ஆலையையே வாங்கும் நிலை கூட ஏற்படும். 
ராகு தசையில் சாதாரண அக்கவுண்ட்டன்ட்டாக சேர்ந்து, அந்த நிலையில் முதலாளி இறக்க, அவரது உயிலில் எனக்கு நம்பிக்கையானவர் இவர்தான் என்று அக்கவுண்ட்டன்ட் பெயரை எழுதி வைக்க அவர் முதலாளியானதையும் நான் பார்த்துள்ளேன்.
பூர்வ புண்ணியஸ்தானம் மோசமாக இருந்தால் நாம் அதல பாதாளத்தில் போய் விழுவோம். போன பிறவியில் நாம் யார் யாரையெல்லாம் ஏமாற்றினோமோ அவர்கள் எல்லாம் இ‌ந்த ஜெ‌ன்ம‌த்‌தி‌ல் நம்மைத் தேடி வந்து ஏமாற்றி விட்டு அல்லது நம்மை அவமானப்படுத்தி, நமக்கு எதிராக வழக்குத் தொடர்வது போன்றவற்றைச் செய்யு‌ம் கால‌ம் தா‌ன் இவைக‌ள்.

இரண்டாவது திருமணம் பற்றி ?
சுக்கிர நாடி என்ற நூலில் இதுபற்றி அதிகம் கூறப்பட்டிருக்கிறது. திருமண சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் சுக்கிரநாடிதான் அடிப்படை நூலாகும்.
அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் 7ஆம் இடம் வாழ்க்கைத் துணைக்கான இடம். 8ஆம் இடத்தையும் பார்க்க வேண்டும். ஏழிற்குரிய கிரகம் பலமாக இருக்க வேண்டும். ஏழிற்குரிய கிரகம் எத்தனை கிரகங்களுடன் சேர்ந்திருக்குமோ அத்தனை தாரம் அவனுக்கு என்று சொல்லப்படுகிறது.
மேலும், இருவருக்குமே ஜாதகப் பொருத்தம் பார்த்து ஒரே தாரம்தான் என்று கணித்திருந்தாலும், திருமண வைபவம் நடக்கக்கூடிய நாள் மோசமான நாள் அல்லது மோசமான யோகம் கூடிய நாளில் தாலிக்கட்டினால் இரண்டாவது தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஒரு சில ஜாதகத்தில் இரண்டாம் திருமணம் இல்லவே இல்லை என்று சொல்லப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு இரண்டாம் தாரம் ஏற்படும். அதற்குக் காரணம் அவர் முதல் தாலி கட்டிய நாள் அப்படி அமைந்திருக்கும்.மோசமான தசையில், அதாவது ஏழாம் இடத்தில் கேது அமர்ந்து கேது தசை நடந்தால் மனைவி திடீர் விபத்தில் மரணமடைதல், கருத்து வேறுபாட்டால் பிரிதல் போன்றவை நிகழும்.
பாவ கிரகங்கள் கோச்சார ரீதியாக வந்து போகும். பாவ கிரகங்கள் இரண்டாம் தாரத்தை ஏற்படுத்திவிட்டுப் போகும்.
ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இரண்டாம் தாரம் சாதாரணமாகிவிட்டது. ஏனெனனில் இப்போதெல்லாம் செவ்வாய் தோஷம், களத்ர தோஷத்துடன்தான் நிறைய பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
அதாவது ஜோதிடத்தில் பார்க்கும்போது 4 ஆம் இடம் நடத்தையைத் தீர்மானிக்கும். 4 ஆம் இடத்தில் பாவ கிரகம் இருக்கும். அதை வைத்து அவர் ஒழுங்கீனமானவர் என்று தீர்மானிக்க இயலாது. 4 ஆம் அந்த வீட்டிற்குரிய கிரகம் நன்றாக இருந்தால் அவரை ஒழுக்கமானவர் என்று தீர்மானிக்கலாம்

புதன் தசையின் பலன்கள் என்ன?ஜோதிடத்தைப் பொறுத்தவரை புதனை வித்யாகாரகன் என்று அழைப்பர். கல்வி, வித்தைக்கு உரியவர் புதன். ஒரு மனிதனின் நரம்பு மண்டலங்களை இயக்குவது புதன். கற்றலில் ஆர்வம் இருப்பதற்கும் புதனே காரணம். 
புதன் நன்றாக அமையப் பெற்றவர்கள் சுயமாக முன்னேறுவார்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். புதனின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். சபையில் பேசும் போது கூட முதலில் பேசத் தயங்குவார்கள். அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்ட பின்னரே இவர்கள் பேசுவார்கள். ஆனால் தேர்வின் போது சரியான பதிலை எழுதுவதற்கு இவர்கள் தயங்க மாட்டார்கள்.
புதன் நன்றாக இருந்தால் சொந்தத்தில் (மாமன் மகள், அத்தை மகள்) திருமணம் நடக்கும். விடாமுயற்சி உடையவர்களும் புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களே. வணிகத்திற்கு உரியவரும் புதன்தான். பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெறுபவர்கள் ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கும். ஆனால் புதன் வலுவிழந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் பங்குச்சந்தையும் எவ்வளவு முதலீடு செய்தாலும் லாபம் பார்ப்பது கடினம். தூதுக்கோள் என்றும் புதன் அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் மன்னர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு போர் மூளும் சூழல் நிலவும் தருணத்தில், புதன் ஆதிக்கம் (ஆயில்யம், கேட்டை, ரேவதி அல்லது மிதுனம்/கன்னி ராசி) பெற்ற தகுதியான நபர் தூது சென்றால் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விடுவார் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. 
புதனின் ஆதிக்கம் பெற்றவர்களிடம் எதிரிகள் கூட பகைத்துக் கொள்ளமாட்டார்கள். இதற்கு மனிதாபிமானமும் ஒரு காரணம். 
எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் புதன் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு மற்றவர்களின் பாராட்டு கிடைக்காது. உதாரணமாக அலுவலகத்திலேயே சிறந்த பணியாளர் எனப் பெயர் பெற்றிருந்தாலும் பதவி உயர்வு கிடைக்காது. புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இதுபோன்ற துரதிருஷ்டமும் ஏற்படும். 
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிறு துயரமும் இவர்களை பெரியளவில் பாதிக்கும். புதன் தசை மொத்தம் 17 ஆண்டுகள் நடக்கும். சிறுவயதில் புதன் தசை வந்தால் சிறப்பான கல்வி கிடைக்கும். நடு வயதில் புதன் தசை வந்தால் வியாபாரத்தில் செல்வம் கொழிப்பார்கள். முதிய வயதில் புதன் தசை நடந்தால் புத்தகங்கள் எழுதிக் குவிப்பார்கள். 
கணிதத்திற்கு உரியவரும் புதன். ஒருவர் ஜாதகத்தில் புதன் நல்ல ஆதிபத்தியம் பெற்று, நல்ல கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் அவர்கள் ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியராக இருப்பார்கள்.
யாராவது கண்ணீர் விட்டால் இவர்களுக்கு மனம் இளகி விடும். கையில் இருப்பதையெல்லாம் கொடுத்து விடுவார்கள். மனித நேயம் மிக்கவர்களாகத் திகழும் புதன் ஆதிக்கம் பெற்றவர்கள் அதனாலேயே ஏமாற்றப்படுவார்கள். 
புதன் நன்றாக இருந்தால் அவர்கள் ஆய்வுப் படிப்புகள் மேற்கொள்வார்கள். கல்விக் கூடம் நடத்துவதற்கும் புதனின் தயவு தேவை. வில் வித்தைக்கு மட்டுமின்றி அனைத்து உள்ளரங்க விளையாட்டுகளுக்கும் உரியவர் புதன். திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள் என்பதால் சதுரங்க விளையாட்டில் நல்ல திறமை பெற்றிருப்பார்கள்.

4வது இடத்தில் பாவக் கிரகங்கள் இருந்தால்?நான்காவது இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலே அவர்கள் கெட்டவர்கள் என்று கொள்ளக் கூடாது. உதாரணமாக 4இல் கேது இருந்தால் அந்த ஜாதகர் மக்கள் போற்றும் மருத்துவராக திகழ்வார் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அது ஹோமியோபதி, நாட்டு வைத்தியம், அலோபதி ஆக இருக்கலாம். ஏனென்றால் கேது மருத்துவத்திற்கும், வேதத்திற்கும், ஞானத்திற்கும் உரிய கிரகம். 
அதனால் 4இல் கேது இருந்தாலே அந்த ஜாதகர் கெட்டவர் என்று கூறி விடக் கூடாது. நான்கில் ராகு, கேது, சனி அமர்ந்து 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும் 6, 8, 12இல் மறைந்திருந்தாலோ அல்லது கெட்ட கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ அந்த ஜாதகர் ஒழுக்கம் தவறியவராக இருப்பார்.
இதேபோல் 4இல் கேது, ராகு, சனி அமர்ந்து, நான்காம் வீட்டிற்கு உரிய கிரகமும் பாவ கிரகங்களுடன் கெட்டுப் போயிருந்தாலும் சிலர் இளமையில் ஒழுக்கம் கெடாமல் இருந்து, அந்த தசை வரும் போது கெட்டுப் போனவர்களையும் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.

அலிகள், அரவாணர்க‌ள் ‌பிற‌ப்பை க‌ணி‌க்க இயலுமா?பிறப்பிற்கான இடம் 5ம் இடம். ஒரு பெண்ணின் 5வது இடத்தைப் பார்க்க வேண்டும். அதுதான் பூர்வ புண்ணிய ஸ்தானம். 5ம் இடமும் 7ம் இடமும் முக்கியமானது. புதனையும் சனியையும் அலி கிரகம் என்று சொல்லலாம். ஆனால் அது எங்கு இருந்தாலும் அலி கிரகம் என்று சொல்லக் கூடாது.
சூரியனுக்கு மிகக் குறுகிய பாதையில் இருந்தால் அலித் தன்மை அதிகரிக்கும். சூரியனை விட்டு விலகி சுப நட்சத்திரத்தில் உட்கார்ந்திருந்தால் அலித் தன்மை விட்டு சுபத்தன்மை அளிக்கலாம்.
வரன் ஜாதகத்திலும் 5அம் இடத்தில் அலி கிரகம். பெண்ணின் ஜாதகத்திலும் 5க்கு உரிய கிரகம் வலுவிழந்து அலி கிரகத்துடன் சேர்ந்து காணப்ப‌ட்டா‌ல் அவ‌ர்களு‌க்கு குழந்தை பிறக்காது. அப்படி குழந்தை பிறந்தால் அ‌க்குழ‌ந்தை அலித்தன்மை உடையதாக இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போன்று ஒரு மணமக்களுக்கு ஜாதகத்தைப் பார்த்து அலிப் பிள்ளைகள்தான் பிறக்கும் என்று கணி‌த்து கூ‌றினே‌‌ன். அதையும் மீறி அவர்கள் திருமணம் நடந்தது. அவர்களுக்குப் பிறந்த 3 பிள்ளைகளுமே அலித்தன்மை உடையதாக இரு‌ந்தது. அவர்களை 2004ல் நான் சந்தித்தேன். அவர்கள் மிகவும் வரு‌த்த‌த்துட‌ன் எ‌ன்‌னிட‌ம் பே‌சினா‌ர்க‌ள். 
விந்தணுக்கள் குழந்தை பாக்கியத்தை அளிக்கும். பொதுவாக விந்தணுக்கள் வெள்ளை நிறம். ஆனால் விந்தணுக்கள் நிறம் மாறுபடும். பெரிய ‌நிற மாற்றமல்ல மெல்லிய மாற்றம்தான். நீர்த்த தன்மை உள்ள விந்தணுக்களும் உள்ளன, அவை அரவாணிப் பிள்ளைகளைப் பெற்றுத்தரும்
அதனை‌த்தா‌ன் த‌ற்போது, குரோமோசோன்களின் எண்ணிக்கை மாறுபட்டால் பாலினத்தன்மை மாறுபடுகிறது என்று தற்போது அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதாவது குரேமோசோம்களின் எண்ணிக்கை 60, 40 விழுக்காடுதான் இருக்கிறது என்று தற்போது ஆராய்ந்து கூறுகிறார்கள். இது ஜீன்களின் குறைபாடு, அதை எதுவும் செய்ய முடியாது எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கை‌விடு‌கிறா‌ர்க‌ள். இதுபோ‌ன்று நீர்ப்பு தன்மை கொண்ட ஜாதகங்களை வேண்டாம் என்று சொல்கிறோம்.பொருத்தங்கள் பார்க்கும்போது சமூக அந்தஸ்து, ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை பாக்கியம், அன்யோன்யம், பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து திருமணம் நிச்சயிக்க வேண்டும்.
ச‌ரியான முறை‌யி‌ல் ஜாதக‌ம் பா‌ர்‌த்து ‌திருமண‌ம் செ‌ய்தா‌ல் அ‌லி, அரவா‌ணிக‌ளி‌ன் ‌பிற‌ப்பை‌த் தவிர்க்க முடியும்.
சுவஷ்வ நாடியில் த‌ம்ப‌திக‌ள் கூடினா‌ல் இது போன்ற பிள்ளைகள் பிறக்கும் என்று கூறப்படுகிறதே?
இதுபற்றி திருமூலர் தனது நூல்களில் கூறியுள்ளார். எப்படி புனர வேண்டும், எந்த நாளில் புணர வேண்டும் என்பதை கூறியுள்ளார். அவர் சித்தர் என்றாலும் புணர்வது குறித்து விரிவாக அளித்துள்ளார். அதேப்போல பல சித்தர்கள், ரிஷ‌ி தத்துவம், முனி தத்துவம் என பெண்களை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து இந்த தத்துவப் பெண்கள் இந்த தத்துவ ஆணுடன் சேர வேண்டும் என்று அன்றைய காலத்திலேயே பிரித்து வைத்திருக்கிறார்கள்.காற்றோட்டம் சூரியக் கலை, சந்திரக்கலை, பின் கலை, மு‌ன்கலை எ‌ன்பது நமது மூ‌ச்சு‌த் த‌ன்மையாகு‌ம். நம்மை ஆளும் கிரகத்தின் தன்மையைப் பொறுத்துத்தான் நாம் மூச்சு விடும்தன்மை அமையும். நமது லக்னத்தில் செவ்வாய் இருந்தால் அது ஒரு நெருப்பு கிரகம். லக்னத்தில் சூரியன் அமர்ந்திருந்தால் அப்போது சூரியக் கலை ஓங்கி இருக்கும், சூரிய நாடி அதிகரிக்கும். ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு மாதிரி, அதுவும் கிரகத்தின் அடிப்படையில் அமையு‌ம். பித்த நாடி, பித்த சாரீரம், உஷ்ண நாடி என அனைத்துமே கிரகங்களின் அடிப்படையில்தான் அமைகின்றன.
6 ஆம் இடம் ரோக ஸ்தானம், அந்த இடத்தில் கிரகம் வலுவாக இருந்தால் அதற்கேற்ற நோய் வரும். எல்லாமே கிரகங்களின் அடிப்படையாக வைத்தே அமையு‌ம். அலி கிரகம் வலுவாக இருக்கும்போது அவர்களது மூச்சுக்காற்று அப்படித்தான் இருக்கும். மேலும் மற்ற நேரங்களில் அவர்களது மூச்சுக்காற்றில் சூரிய கலை, தென்கலை என இருந்தாலும், அவர்கள் புணர்ந்து உயிரணு வெளியேறும்போது அவர்களது மூச்சுக்கலையில் ஒரு பின்னம் ஏற்படும். அது ஒரு சக்தி வெளிப்பபாடு. விந்தணு வெளிப்பாடு நிறைவுக்கான காரியம். அப்போது அவர்களது உடல்நிலை நாடி நடுநிலை வகிக்கும். ஒரு ப‌க்கமு‌ம் இ‌ல்லாம‌ல் இர‌ண்டு நாடியு‌ம் இணை‌ந்த ஒரு பின்னல் ஏற்படும். அதனா‌ல் அ‌லி‌க் குழ‌ந்தைக‌ள் ‌‌பிற‌க்க வா‌ய்‌ப்பு அமை‌கிறது. அலி கிரகங்களின் வலிமை அதிகரிக்கும்போது தான் ஹோமோசெக்ஸ் அதிகரிக்கும். மாற்று இனத்தாரை திருப்திப்படுத்த முடியாது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதனால் ஓரின சேர்க்கையின் மீது ஆர்வம் போகும்.அதுபோன்ற ஜாதகங்களும் நிறைய இருக்கின்றன. ஒருவரைப் பார்த்தால் ஆண்மகனுக்கான அனைத்து அம்சங்களும் இருக்கும். ஆனால் அவர் தாம்பத்தியத்தில் பலவீனமாக இருப்பார். அல்லது அவருக்கு அலி குழந்தை பிறக்கும். அது அவரது ஜாதகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்.