01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, November 14, 2012

சுபர்களையும் பாபர்களையும் உங்கள் ஜாதகத்தில் எளிதாக எப்படி கண்டு பிடிப்பது ? Benefic and Malefic planets and houses


நான்கு விதிகள் உள்ளன இவற்றை பின்பற்றினால் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
எடுத்துகாட்டாக இந்த ஜாதகத்தை எடுத்து கொள்வோம்...

இந்த ஜாதகத்தில் யார் சுப கிரகம்? யார் பாப கிரகம்?
முதல் வேலை :
1.       இயற்கை சுபர்கள் : குரு , சுக்கிரன் , சந்திரன், புதன்
2.       இயற்கை பாவர்கள் : சனி,சூரியன், செவ்வாய், ராகு, கேது,
இப்போது உங்கள் ஜாதகத்தில் உள்ள இயற்க்கை சுபர்களை பச்சை நிறம் கொண்டு மார்க் செய்யுங்கள்.
இயற்க்கை பாவர்களை சிவப்பு நிறம் கொண்டு மார்க் செய்யுங்கள் .


இரண்டாவது வேலை :
லக்ன அடிப்படையில் 1,5,9 இக்கு அதிபதிகள் சுபர்கள் மற்றவர்கள் பாவர்கள் .
Aries:  Mars (1), Sun (5), Jupiter (9)
Taurus:  Venus (1), Mercury (5), Saturn (9)
Gemini:  Mercury (1), Venus (5), Saturn (9)
Cancer:  Moon (1), Mars (5), Jupiter (9)
Leo:  Sun (1), Jupiter (5), Mars (9)
Virgo:  Mercury (1), Saturn (5), Venus (9)
Libra:  Venus (1), Saturn (5), Mercury (9)
Scorpio:  Mars (1), Jupiter (5), Moon (9)
Sagittarius:  Jupiter (1), Mars (5), Sun (9)
Capricorn:  Saturn (1), Venus (5), Mercury (9)
Aquarius:  Saturn (1), Mercury (5), Venus (9)
Pisces:  Jupiter (1), Moon (5), Mars (9)

இப்போது இந்த ஜாதகத்தில் மீனம் லக்னமாக உள்ளது ஆகையால் சுபர்கள் :
  குரு , சந்திரன் , செவ்வாய்
இந்த மூன்று கிரகங்களையும் பச்சை நிறத்தால் மார்க் செய்யுங்கள் மற்ற கிரகங்களை சிவப்பால் மார்க் செய்யுங்கள் . ஆனால் ராகு , கேது வை மார்க் செய்யாதீர்கள் ஏனெனில் அவர்களுக்கு எந்த வீடும் இல்லை.மூன்றாவது வேலை :
1,5,9 – திரிகோணங்கள்
1,4,7,10 –கேந்திரங்கள்
திரிகோனதிலும் கேந்திரதிலும் இயற்கை( குரு,சுக்கிரன்,புதன், சந்திரன் ) சுபர்கள் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் ஆகையால் இந்த இடங்களில் இருக்கும் சுபர்களை பச்சை நிறத்தால் மார்க் செய்யுங்கள் .
3,6,10,11- இந்த இடங்களில் (இயற்க்கை பாவிகள் –சனி, செவ்வாய்,ராகு,கேது,சூரியன் )பாவர்கள் இருக்கும் போது நல்ல பலனை தருவார்கள் ஆகையால் இவர்களையும் பச்சை நிறத்தால் மார்க் செய்யுங்கள்.

நான்காவது வேலை :
6,8,12 இல் உள்ள எந்த கிரகமும் பாவியே , ஆகையால் அந்த இடத்தில இருக்கும் கிரகத்தை சிவப்பு நிறத்தால் மார்க் செய்யுங்கள் .
இப்பொது இந்த நான்கு ஜாதக கட்டத்தையும் பாருங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும்  சிவப்பு நிறம் மற்றும் பச்சை நிறம் கிடைத்து இருக்கும்.

அனைத்தையும் எடுத்து ஒன்றாக எழுதி பாருங்கள் .
எந்த கிரகம் சுபர் எந்த கிரகம் பாவர் என்று புரியும்.
ஒரு விதி விளக்கு உள்ளது புதன் பச்சை நிறம் அதிகம் பெற்றாலும் அது பாவர் யுடன் சேர்ந்தால் அதுவும் பாவர் தான்.

இப்போது நாம் பச்சை நிறத்தை G என்று குறிப்பிடுவோம்.
இப்போது நாம் சிவப்பு நிறத்தை R என்று குறிப்பிடுவோம்

சூரியன்-- RR
சந்திரன் --GGG
குரு  ----GGG
ராகு -----G RR 
புதன் ---- GG R
சுக்கிரன்-- GG R
கேது---  G RR
சனி---- G RRR
செவ்வாய் ---GR

சிவப்பு நிறத்தில் இருப்பவை பாவர்கள் பச்சை நிறத்தில் இருப்பவர்கள் சுபர்கள்.


No comments :

Post a Comment