01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Saturday, November 17, 2012

பிருகு மகரிஷி ஜோதிட தந்தைரிஷிகளுள் நான் பிருகு : கிருஷ்ணரின் பிரகடனம்
 ரிஷிகளுள் நான் பிருகு (மஹரிஷீணாம் ப்ருகுரஹம்-கீதை பத்தாம் அத்தியாயம் சுலோகம் 25) என்று கிருஷ்ணனால் பகவத் கீதையில் சொல்லப்பட்ட சிறந்த மஹரிஷி பிருகு ஆவார். சப்த ரிஷிகளுள் ஒருவர்.ஜோதிடக் கலையைக் கண்ட 18 ரிஷிகளுள் ஒருவர். பிரம்மா படைத்த பிரஜாபதிகளுள் ஒருவர். பிரம்மா மனதில் நினைத்தவுடன் இவர் தோன்றியதால் இவரை பிரம்மாவின் மானஸ புத்திரர் என்று புராணங்கள் புகழ்கின்றன. பாகவதத்தில் இவர் விரிவாகப் பேசப்படுகிறார்.மஹாபாரதத்திலும் வாயு புராணத்திலும் கூட இவரது கதை விரிவாகச் சொல்லப்படுகிறது. தக்ஷனின் மகளான க்யாதியை இவர் மணம் புரிந்தார். அவள் மூலம் தாதா விதாதா என இரு புத்திரர்கள் இவருக்கு உண்டு. சுக்ரனும் சியவனரும்கூட இவரது புத்திரர்களே!


பிருகு சம்ஹிதா உருவான கதை!
 ஜோதிடக் கலையைத் தொகுத்து முதல் முதலில் வழங்கியதால் இவர் ஜோதிடக் கலையின் பிதா என அனைவராலும் அறியப்படுகிறார்.இவர் இயற்றிய பிருகு சம்ஹிதா வேத காலத்தில் எழுதப்பட்ட சிறந்த ஜோதிடக் கலை நூலாகும்.
இந்த நூல் எழுந்த விதத்தைப் பற்றியும் கூட ஒரு சுவையான கதை உண்டு. ஒரு முறை சரஸ்வதி நதிக்கரையில் மஹா யக்ஞம் ஒன்று நடக்கும் போது ரிஷிகளின் சபை கூடியது.அதில் பிரம்மா விஷ்ணு சிவன் மூவரில் யாரை பிரதானமாக யக்ஞத்தில் வைப்பது என்பதை யாராலும் நிர்ணயிக்கமுடியவில்லை.அவர்கள் பிருகுவை நாடினர். பிருகுவோ இதை சோதனை செய்து அறிய விரும்பினார்.
அவர் முதலில் பிரம்மாவைப் பார்க்க பிரம்மலோகம் சென்று அவரை மதிக்காத விதத்தில் நடந்துகொண்டார். அதைப் பார்த்த பிரம்மா அவர் மீது கோபம் கொண்டார்.சரஸ்வதி தடுக்கவே பிரம்மா சாபம் ஏதும் தரவில்லை. ஆனால் பிரம்மாவின் கோபம் கண்டு பிருகு அவருக்கு கலியுகத்தில் இனி கோவிலே இருக்காது என்று சாபம் தந்து நேராக சிவனைப் பார்க்கச் கைலாசம் சென்றார்.அங்கே நந்தி அவரைத் தடுத்து விட்டார். பிருகு தன்னை சிவன் அவமதித்து விட்டார் என்று கருதி சிவனை இனி லிங்க வடிவிலேயே அனைவரும் வழிபடட்டும் என்று சாபம் தந்து விட்டு விஷ்ணு லோகம் சென்றார்.
அங்கே விஷ்ணு நித்திரையில் இருக்க, அவரை எழுந்திருக்குமாறு பிருகு வேண்டினார். ஆனால் அவர் விழிக்காமல் இருக்கவே அவர் மார்பில் தன் காலால் உதைத்தார்! விஷ்ணு எழுந்து நடந்ததைப் புரிந்து கொண்டு. “மஹரிஷி, வலுவான என் மார்பால் தங்கள் காலுக்கு ஒன்றும் ஆகவில்லையே” என பரிவுடன் விசாரித்தார். இதனால் மனம் மிக மகிழ்ந்த பிருகு எந்த நிலையிலும் கோபமே வராத விஷ்ணுவே மூவரில் சிறந்தவர் என மகாயக்ஞ ரிஷிகளிடம் தெரிவித்தார். அவர் விஷ்ணுவை மார்பில் உதைத்த இடமே    ஸ்ரீ வத்ஸம் எனப் பெயர் பெற்றது! தன் பாதத்தால் விஷ்ணுவை சோதித்ததால் இவருக்கு பாத ப்ருகு என்ற பெயரும் உண்டு!
இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மஹாலக்ஷ்மி விஷ்ணுவை பிருகு காலால் உதைத்து அவமானப்படுத்தியதைப் பொறுக்க முடியாமல்  “இனி ஒரு போதும் அந்தணர்களிடம் நான் வசிக்க மாட்டேன்”(அதாவது அவர்கள் ஏழ்மையிலேயே இருக்க வேண்டும்) என்று சாபம் தந்தார். ஆனால் மஹாலக்ஷ்மியிடம் பிருகு மஹரிஷி தான் ஏன் அப்படிச் செய்தேன் என்பதை விளக்கி  மூவரில் விஷ்ணுவே சிறந்தவர் என்பதைக் கண்டதாகச் சொல்லி சாப நிவிர்த்திக்கு விண்ணப்பித்தார்.
உடனே மஹாலக்ஷ்மி ‘எந்த அந்தணர்கள் விஷ்ணுவை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு இந்த சாபம் பொருந்தாது’ என்று சாப நிவிர்த்தி தந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் தான் பிருகு தனது புகழ் பெற்ற நூலான பிருகு  சம்ஹிதாவை இயற்றினார். இதன் மூலம் அந்தணர்கள் அனைவரும் இதைக் கற்றுத் தேர்ந்து அதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.
நாலரை கோடி கிரக சேர்க்கைகளுக்கான பலன்கள்!
 பிருகு சம்ஹிதாவில் சுமார் 50 லட்சம் ஜாதகங்களின் பலாபலன்கள் சொல்லப்படுகின்றன. இதை அவர் விநாயகரின் உதவியுடன் தொகுத்தார்.
இவற்றை உரிய முறையில் அலசி ஆராய்ந்து பார்த்தால் நாலரைக் கோடி ஜாதகர்களின் கிரக சேர்க்கைகளுக்கான பலாபலன்களை நன்கு அறிந்து சொல்ல முடியும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே தான் இது அனைவரது எதிர்காலத்தையும் கூற வழி வகுக்கும் முதல் ஜோதிட நூல் எனக் கருதப்படுகிறது.
இந்த நூலில் அனைவரது ஜாதகங்கள், அந்த ஜாதகங்களுக்கான பலன்கள், ஜாதகர்களின்,முந்தைய பிறப்புகள், பிருகுவின் கேள்விகள், தொலைந்து போன ஜாதகங்கள் பற்றிய விஷயங்கள், பரிகாரங்கள்,பல்வேறு விதிகள், புத்திர பாக்கியம், ராஜ தர்மம் மற்றும் அரசர்கள் வெற்றி பெறுவதற்கான வழிகள்,ஸ்தீரிகளின் இயற்கை ஆகியவை பற்றிய விரிவான விளக்கங்களைக் காணலாம்.பிருகு தனது ஜோதிட சாஸ்திரத்தை தனது மகன் சுக்ரனுக்குக் கற்றுத் தர அது அவர் மூலம் எல்லோரையும் அடைந்தது.
பிருகு சம்ஹிதா சுவடிகள் 

பிருகு சம்ஹிதா முழு நூல் வடிவில் நமக்கு இன்று கிடைக்கவில்லை. காரணம் முகலாயப் படை எடுப்பின் போது அரக்கத்தனமாக இந்த நூல் அழிக்கப்பட்டது. அத்தோடு நாலந்தா தீக்கிரையாக்கப்பட்ட போது அதிலிருந்த பிருகு சம்ஹிதா சுவடிகளும் அழிந்து பட்டன.பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பிருகு சம்ஹிதா சுவடிகள் இன்று காணக் கிடைக்கின்றன.(ஹோஷியார்பூரில் மட்டும் பத்துக் குடும்பங்களிடம் பிருகு சம்ஹிதா சுவடிகள் உள்ளனவாம்) என்றாலும் கூட சுவடிகள் வடிவில் இல்லாது சுருக்கமான புத்தக வடிவில் பிருகு சம்ஹிதா பல்வேறு பதிப்பகங்களால் பதிக்கப்பட்டிருப்பதால் இதை அடைவது எளிது. இதை பல நூலகங்களிலும் கூடப் படிக்க முடியும்!
(பலரும் தங்களுக்கு வேண்டிய ஜாதகங்களைக் கிழித்துக் கொண்டு செல்லும் துர்பாக்கிய நிலை இருப்பதால் நூலகர்களின் விசேஷ அனுமதியுடனேயே இதை குறிப்புதவி பகுதியில் பெற்றுப் படிக்க முடியும்) பிருகு ஸ்மிருதி,பிருகு சில்ப சம்ஹிதா, பிருகு சூத்ரங்கள், பிருகு உபநிஷத், பிருகு கீதை ஆகிய நூல்களும் இவர் இயற்றிய நூல்களாகும்.
பிருகு மஹரிஷி தவம் புரிந்த இடமான பலியா 
உத்தரபிரதேசத்தில் பீஹார் எல்லையை ஒட்டி உள்ள பலியா மாவட்டத்தில் பிருகு மஹரிஷியின் ஆசிரமம் உள்ளது.இங்கு தான் அவர் தனது பெரும் தவத்தைச் செய்தார். பலியா கங்கைக் கரையில் அமைந்த அழகிய சிறு நகரம்.காசியிலிருந்து வடகிழக்கில் 120 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது, பிருகு மஹரிஷிக்கு குஜராத்தில் நர்மதை நதிக் கரையில் பரூச்சில் ஒரு கோவிலும் உள்ளது.பரூச்சின் முந்தைய கால பெயர் பிருகு கச்சபம் என்பதாகும்!

No comments :

Post a Comment