01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Sunday, December 30, 2012

2015 புத்தாண்டு பலன்கள்( அணைத்து ராசிகளுக்கும் ) 2015 year predictions


மேஷ ராசி : மேஷம் 2015 ஆண்டு பலன்கள் - zodiac Aries yearly prediction 2015  


மேஷ ராசி நண்பர்களே, உங்களுக்கு இந்த ஆண்டு குரு பகவான் நாலாம் வீட்டிலும் சனி பகவான் எட்டாம் வீட்டிலும் ராகு பகவான் ஆறாம் வீட்டிலும் கேது பகவான் பன்னிரெண்டாம் வீட்டிலும் இருக்கும் போது பிறக்கிறது. நாலாம் வீட்டு குரு பகவான் உண்மையில் சுக குறையை கொடுப்பார் என்பதில் சந்தேகம் வேண்டாம். அணைத்து காரியத்தையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். இல்லத்தில் கருத்து வேறுபாடும் உருவாகும்.
இருபினும் குரு பகவான் பார்வை எட்டாம் வீட்டில் இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பத்தாம் வீட்டையும் தன்னுடைய பார்வையில் வைத்து இருப்பதால் தொழில் எப்போதும் போல ஓடிக்கொண்டு இருக்கும். பன்னிரெண்டாம் வீட்டின் மீதும் உள்ள பார்வையால் செலவு மட்டு படும். சுப செலவு கொடுக்கும். புனித யாத்திரை மற்றும் பிராத்தனை நிறைவேறும்.
எட்டாம் வீட்டின் சனி பகவான் அனேக போராட்டங்களை கொடுப்பார். பயணத்தில் நிச்சயம் விபத்து கொடுப்பார். இரவு பயணம் நிச்சயம் விபத்து கொடுப்பார். கவனம் தேவை. ஆயுள் கொடுப்பார். ஆனால் ஆரோக்கியத்தை கெடுக்க முயற்சி செய்வார். அஷ்டம சனி பாடாய் படுத்தி விடும் ஆகையால் ஆஞ்சநேய  வழிபாடு நல்லதை செய்யும். குருவின் பார்வையில் இருப்பதால் மேற்படி பெரிய பாதிப்பு இருக்காது. ஆறாம் வீட்டில் நிற்கும் ராகு பகவான் அடுக்கடுக்காக வெற்றிகளை அள்ளி தர கடமை பட்டு இருக்கிறான். மேலும் ராகு பகவன் தனது நண்பன் புதன் வீட்டில் இருப்பதால் முழு பலனை கொடுக்க கடமை பட்டு இருக்கிறார்.
விரயத்தில் நிற்கும் கேது பகவான் ஆன்மீக பக்தியை மனதில் உருவாக்குவார். நித்திரையை கெடுப்பார். எதிர் பாராத செலவை ஏற்படுத்தி கொடுப்பார். அவ்வபோது கெட்ட வழியில் செல்லவும் வைப்பார். சிக்கலில் மாட்டி விடவும் செய்வார். கவனம் தேவை.
ஜூலை மாதத்தில் குருபகவான் பெயர்ச்சி ஆகி பஞ்சமஷ்தானம்  என்று சொல்லப்படும் ஐந்தாம் வீட்டில் சென்று அமர்வதால் முன்னேற்றம் கொடுப்பார். இதுநாள் வரை இருந்த சுககுறை பட்டென்று மாறும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி வரும். அவர்கள் முன்னேற்றமும் சிறப்பாக இருக்கும்.குழந்தை பாக்கியம் கிடக்கும்.அறிவு மேலோங்கும். ஆன்மீக காரியங்களில் மணம் லயிக்கும்.

மொத்தத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை சுமாராகவும் ஜூலை பிறகு வெற்றிகரமாகவும் இருக்கும்.


ரிஷபம் ராசி: ரிசபம் 2015  ஆண்டு பலன்கள்  Taurus zodiac yearly prediction 2015ரிஷப ராசி நண்பர்களே,
உங்களுக்கு இந்த ஆண்டு குரு பகவான் மூன்றாம் வீட்டிலும் சனி பகவான் ஏழாம் வீட்டிலும் ராகு பகவான் ஐந்தாம் வீட்டிலும் கேது பகவான் பதினோராம் வீட்டிலும் இருக்கும் போது பிறக்கிறது.
மூன்றாம் வீட்டு குரு பகவான் தைரியத்தை குறைப்பார். வெற்றிகளை அடைய அனேக போராட்டத்தை சந்திக்க வைப்பார். சகோதர வகையில் பிணக்குகளை உருவாக்குவார். இருப்பினும் ஏழாம் வீட்டில் மேல் இருக்கின்ற பார்வையால் குடும்ப வாழ்வு சிறப்பாக இருக்கும். தடைபட்ட காரியம் நிறைவேறும். சுப நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் அமைப்பு கொடுக்கும்.
தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும்.மேல் கல்வி சிறக்கும். லாபங்கள் பெருகும். ஆன்மீக பணிகளில் மணம் நிறையும்.
ஏழாம் வீட்டில் நிற்கும் சனி பகவான் கண்ட சனியை நடத்துகிறார். கண்ட சனி நடக்கும் போதெல்லாம் உடல் நிலை திடீர் திடீர் என்று கெடும். ஒரு நோய் போனால் மறு நோய் வந்து விடும். மருத்துவ செலவு அதிகரித்து கொண்டே போகும். பயணத்தில் எச்சரிக்கை தேவை. மனைவி இடம் விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. ஏழாம் வீட்டு சனி தன்னை கெடுப்பது மட்டும் இன்றி உங்கள் மனைவியின் உடல்நிலையையும் அடிகடி பாதிக்க செய்வார். ஆஞ்சநேய வழிபாடு மிக மிக அவசியம்.
ஐந்தாம் வீட்டில் நிற்கும் ராகு மனதில் ஒரு வித படபடைப்பை எப்போதும் வைத்து இருப்பார். அறிவை மங்க செய்வார். கல்வியில் கவனம் தேவை. குழந்தைகள் மூலம் பிரச்னை எதிர்கொள்ள நேரும்.  கடவுள் நம்பிக்கை இழக்க செய்வார். இருப்பினும் பதினோராம் வீட்டில் இருக்கும் கேது பகவான் லாபங்களை உருவாக்கி கொடுப்பார்.

மொத்தத்தில் ஆண்டு கிரகம் என்று சொல்லபடும் குரு சனி ராகு ஆகிய மூவரும் சரியில்லாத நிலையில் இருகிறார்கள். கேது  பகவான் மட்டுமே நல்ல நிலையில் இருக்கிறார். ஆகையால் வருடம் முழுவதுமே போராட்டம் நிறைந்து இருக்கும். விபத்துக்களை எதிர்நோக்க வேண்டி வரும். குடும்ப வாழ்வில் சலசலப்பு இருந்த வண்ணம் இருக்கும். கவனமாக கையாள வேண்டிய வருடமாக இருக்கும். 
மிதுனம் ராசி:  2015 ஆண்டு பலன்கள் Gemini zodiac yearly prediction 2015மிதுன ராசி நண்பர்களே,
அற்புதமாக இந்த ஆண்டை அனுபவிக்க போகும் ராசி காரர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நினைத்து சந்தோசம் கொள்ளுங்கள். தனஷ்தானத்தில் குரு பகவான் மற்றும் வெற்றி வாகை சூடும் ஸ்தானத்தில் சனி பகவான் நிற்கிறார். நாலாம் வீட்டில் ராகு பகவான் மற்றும் பத்தாம் வீட்டில் கேது பகவான் நிற்கிறார்.
தனஸ்தானத்தில் நிற்கும் குரு பகவானால் தனசேர்க்கை அபரிமிதமாக இருக்கும். மேலும் தொழில் ஸ்தானத்தையும் குரு பகவான் பார்வை செய்வதால் தொழில் ரீதியில் முன்னேற்றம் கொடுப்பார். உங்கள் பேச்சிற்கு மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் குதுகூலம் நிறைந்து இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஆறாம் வீட்டில் சனி பகவான் வரும் போதெல்லாம் அற்புதத்தை நிகழ்த்தி விடுவார். எதிரிகளை வெல்வீர்கள். எடுத்த காரியம் கைகூடும். வெற்றி மேல் வெற்றி கிடைத்திடும்.
நாலாம் வீட்டில் இருக்கும் ராகு கல்வியில் தடையையும் மந்த புத்தியையும் கொடுப்பார். சொத்து ரீதியில் இடையுறு கொடுப்பார். தாயிடம் கூட மனஸ்தாபம் வரும் நிலை கொடுப்பார். பத்தாம் வீட்டில் நிற்கும் கேது பகவான் தொழில் ரீதியில் பல போராட்டம் கொடுப்பார். இருப்பினும் கேது பகவான் உச்சம் பெற்ற குரு பகவான் பார்வையில் இருப்பதால் பெரிய கெடுதி கொடுக்க இயலாது.

கண்டிப்பாக நீங்கள் ராகு கால பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு பிராத்தனை செய்யுங்கள் ராகு மற்றும் கேது பகவானால் உண்டாகும் கெடு பலன் குறைந்து சுப பலன்  கூடும்.

கடகம் ராசி 2015 ஆண்டு பலன்கள் : 2015 Cancer zodiac yearly prediction 2015பல இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கும் கடக ராசி நண்பர்களே, ஜென்மத்தில் குரு  பகவான் பூர்வபுன்னியத்தில் சனி பகவான் மூன்றாம் வீட்டில் ராகு பகவான் பாக்கியத்தில் கேது பகவான். இப்படி ராகு பகவானை தவிர மற்ற  ஆண்டு கிரகங்கள் அணைத்தும் சரியில்லாத   நிலையில் இருப்பதால் ஜூலை மாதம் வரை பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் ஆண்டாக இருக்கும்.
ஜென்மத்தில் குருபகவான் வன வாசம் கொடுக்க கடமை பட்டு இருக்கிறார். அதாவது அலைச்சல் மனதில் ஒருவித பயம் அடுக்கடுக்கான வேலை டென்சன் மண அழுத்தம் தூக்கம் இல்லாமை தன்னை தானே குறைத்து மதிப்பிடும் நிலை இவை அணைத்தும் கொடுக்கும்.
ஐந்தாம் இடத்தில் சனி பகவான் அமர்ந்து நெஞ்சு வலி படபடப்பு கண்டிப்பாக கொடுப்பார். இருதயத்தில் ஒரு பிரச்சனையை கண்டிப்பாக உருவாக்குவர். ஹார்ட் பீட் அதிகமாகும். கவனம் தேவை. சனி பகவான் தனது மஹா பகைவன் செவ்வாய் வீட்டில் இருப்பது பெரிய பிரச்னை தான். மனதை வேதனை படுத்தி பார்ப்பார். பிள்ளைகளை பற்றி கவலையை உருவாக்குவார்.
முன்னேற்ற ஸ்தானத்தில் நிற்கும் கேது பகவான் அடுக்கடுக்காக தடைகளை உருவாக்கி கொடுப்பார். முன்னேற படாதபாடு பட வைப்பார்.
மூன்றாம் வீட்டில் நிற்கும் ராகு பகவான் மட்டுமே ஒரு ஆறுதல். மனதில் தைரியம் மற்றும் ஓரிரு காரியம் கைகூடும் நிலை கொடுப்பார். சகோதர வகையில் அவ்வபோது கருத்து வேறுபாடு மற்றும் மனஸ்தாபம் கொடுக்கவும் செய்வார்.

மொத்தத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை படுத்தி எடுக்கும் மேலும் ஜூலை பிறகு செல்வாக்கு கூடும் சம்பள உயர்வு தனசேர்க்கை குடும்பத்தில் குதுகூலம் போன்றவை உண்டு.

சிம்மம் ராசி 2015 ஆண்டு பலன்கள்: 2015 Leo zodiac yearly prediction 2015அளவுக்கு அதிகமான செலவு மற்றும் விரயம் செய்து கொண்டும் உடலில் நோயை சுமந்து கொண்டும் மருத்துவ செலவு செய்து கொண்டும் பேசும் வார்த்தைகள் எல்லாம் வில்லங்கத்தில் போய் முடிகிறதே என்று வருந்தி கொண்டும் இருக்கும் சிம்ம ராசி நண்பர்களே,
விரயத்தை கொடுக்க  குரு பகவான் பன்னிரெண்டாம் வீட்டிலும்  சுககுறையை கொடுக்க நாலாம் வீட்டில் சனி பகவானும் ஆரோக்கியத்தை கெடுக்க எட்டாம் வீட்டில் கேது பகவானும் செல்வாக்கை குறைக்க இரண்டாம் வீட்டில் ராகு பகவானும் தயாராக இருப்பதால் எதிர்பாராத செலவு நிச்சயம் உண்டு. ஆரோக்கிய குறை கண்டிப்பாக உண்டு. சண்டை சச்சரவு குடும்பத்தில் கொடிகட்டி பறக்கும். மருத்துவமனைக்கு போவதும் வருவதுமாக இருக்க செய்யும்.
பணவிஷயத்தில் கவனமாக கையாள வேண்டும்.
நாவடக்கம் மிக மிக மிக முக்கியம். பேச்சில் கவனம் தேவை.
மருந்து மாத்திரை சரியாக சாப்பிட வேண்டும்.
சரியான உணவு சாப்பிட வேண்டும். எட்டாம் வீட்டில் கேது இருக்கும் நாம் உண்ணும் உணவே விஷமாக மாறி நோயை உருவாக்கி கொடுக்கும். ஆகையால் உணவு விஷயத்தில் கவனம் தேவை.
ஜூலை மாதம் பிறகு குரு பகவான் பெயர்ச்சி ஆகி ஜென்மதிற்கே வந்து விடுவதால் கெட்டு போன செல்வாக்கு மேலும் கெட்டு போகும். கொஞ்சம் நஞ்சம் கிடைத்த உதவியும் மறுக்கப்படும். வனவாசம் உருதியாக்கபடும். அதாவது பிரச்னை மேல் பிரச்சனை என்பது உறுதி.

ஆஞ்சநேய வழிபாடு துர்க்கை அம்மன் வழிப்பாடு வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி வழிபடு அவசியம்.
மேலும் பல தலைவர்கள் ஜாதகம் இங்கே

கன்னி ராசி 2015 ஆண்டு பலன்கள்: Virgo 2015 zodiac yearly prediction 2015எடுக்கும் காரியத்தில் வெற்றி மற்றும் தொழிலில் லாபம் குழந்தை வழியில் பூரிப்பு விசேஷம் சுபகாரிய நிகழ்ச்சி மனதில் திடம் போன்றவற்றை அனுபவித்து கொண்டு இந்த ஆண்டை வரவேற்கும் கன்னி ராசி நண்பர்களே,
லாபஷ்தானத்தில் குரு பகவான் இருந்து கொண்டு தொழில் ஏற்படுத்தி கொடுப்பதும் செய்யும் தொழிலில் லாபம் மேல் லாபம் கொடுப்பதும், மனைவி வழியில் சந்தோசம் கொடுப்பதும் புத்திர ரீதியில் திருப்தி  கொடுப்பதும் புத்திர சம்பத்து ஏற்படுத்தி கொடுப்பதும் ஆகிய பலன்கள் உறுதி.
வெற்றி வாகை மேலும் மேலும் சூட மூன்றாம் வீட்டு சனி பகவான் வாய்ப்புகளை உறுதி செய்வார். மனதில் திடமான சிந்தனை கொடுப்பார். ஜென்மத்தில் நிற்கும் ராகு பகவான் உடல்நிலையை அவ்வபோது கெடுப்பார்.புரியாத நோயை கூட உருவாக்குவார். ஏழாம் வீட்டின் கேது மனைவி இடத்தில் கருத்து வேறுபாடு மற்றும் சண்டை குணம் கொடுப்பார். இருப்பினும் குரு பகவான் பார்வை கேது பகவான் மீது  இருப்பதால் பெரிய கெடுதி இல்லை.
ஜூலை மாதம் பிறகு சனி பகவானை தவிர அணைத்து ஆண்டு கிரகங்களும் சரி இல்லாத இடத்திற்கு வருவதால் தவிர்க்கமுடியாதபடி செலவு வரும் கையில் இருக்கும் பணம் மொத்தம் கரையும் கடன் வாங்கி செலவு செய்யும் நிலையும் கொடுக்கும். கவனம் தேவை.
மொத்தத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை லாபத்துடனும் ஜூலை மாதம் பிறகு கையில் இருக்கும் பணம் கரையும் நிலையும் மேலும் குடும்பத்தில் சச்சரவு போன்ற சூழ்நிலையும் கொடுக்கும். கவனம் தேவை.

ராகு கால பூஜை மற்றும் குரு பகவான் வழிப்பாடு சிறப்பு.

இறை தூதர் முகமது நபிகள் ஜாதகம்      மேலும் பல தலைவர்கள் ஜாதகம் இங்கே

துலாம் ராசி 2015 ஆண்டு பலன்கள் : Libra 2015 zodiac yearly prediction 2015

தொழில் ரீதியில் அடுக்கடுக்கான பிரச்னை மற்றும் குடும்ப வாழ்வில் சலசலப்பு ஒற்றுமை குறைவு குடும்பத்தை விட்டு பிரிவு தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளில் வாடிக்கொண்டு இருக்கும் துலா ராசி நண்பர்களே, பத்தில் குரு பகவான் வந்தால் பதவியும் பறி போகும் என்ற காரணத்தால் தொழில் ரீதியில் அடிகடி பிரச்சனைவந்த வண்ணம் இருக்கும். எப்போதோ செய்த தவறு இப்போது கண்டுபிடிக்கப்பட்டு குற்றம் சுமத்தபடுவீர்கள். கவனம் தேவை .
ஏழரை சனியின் பிடியில் சிக்கி குடும்ப வாழ்க்கை போர்களமாக இருக்கும். எதை பேசினாலும் அது சண்டையில் போய் முடியும். நாவடக்கம் மிக அவசியம்.

ஆறாம் வீட்டு கேது அவ்வபோது காரியங்களை நிகழ்த்தி வைப்பார். ஆனால் விரைய ராகு கையிருப்பை கரைத்து பார்ப்பார். மேலும் தூக்கம் கூட முழுமையாக இல்லாமல் செய்வார். நேரம் சரியில்லை என்பதை புரிந்து கொண்டு நாவடக்கதுடனும் தொழிலில் கவனமுடனும் இருந்தால் ஜூலை வரை சமாளிக்கலாம். ஜூலை மாதம் பிறகு குரு பகவான் லாபஸ்தானம் வந்து விடுவார். உங்கள் தொழிலில் இருந்த சுமை கண்டிப்பாக குறைந்து நல்ல பெயருடன் வலம் வருவீர்கள் என்பது உறுதி. பண சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு உண்டு.

விருச்சிகம் ராசி 2015 ஆண்டு பலன்கள் : Scorpio 2015 zodiac yearly prediction 2015
தொழில் ரீதியில் முன்னேற்றம் மற்றும் லாபம் திடமான மணம் புத்திர சம்பத்து ஆகியவற்றுடனும் ஜென்ம சனியையும் அனுபவித்து கொண்டு இருக்கும் விருசிக ராசி நண்பர்களே,
பாக்கியத்தில் உள்ள குருபகவான் பல முன்னேற்றகளை உங்கள் வாழ்வில் ஜூலை மாதம் வரை வாரி வழங்குவார் என்பது உறுதி . வெற்றி பயணங்கள் கூட கொடுப்பார். குடும்ப வாழ்வு ஒரே சீராக செல்லும். ராகு பகவான் லாபத்தில் நின்று பல்வேறு லாபங்களை கொடுப்பார். புத்திர ரீதியில் கொஞ்சம் பிரச்னை உண்டு. உடல்நிலை கெடும் அமைப்பு கொடுக்கும். குழந்தைளை கவனமாக பார்த்துகொள்ளவும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட வைக்கும். ஏழரை சனியின் ஜென்ம சனியின் பிடியில் இருப்பதால் ஆரோக்கிய குறை அடிக்கடி வரும். உடல்நிலையில் கவனம் செலுத்தவும்.

ஜூலை மாதம் பிறகு கண்டிப்பாக தொழிலில் ஒரு மாற்றம் கொடுக்கும் அந்த மாற்றம் அதிக வேலை பளு மற்றும் டென்சன் நிறைந்த பணி சிக்கலான பணி போராட்டமான தொழில் போன்றவை உண்டு. கவனம் தேவை. திசை புத்தி சரியில்லாத பட்சத்தில் வேலை இழக்கும் நிலை கூட கொடுக்கும். கவனம் தேவை.
தனுசு ராசி 2015 ஆண்டு பலன்கள்: Sagittarius 2015 zodiac yearly prediction 2015தொழில் ரீதியில் போராட்டம் தாயுடன் மனஸ்தாபம் ஆரோக்கிய குறை மனநிம்மதி இல்லாமை பண விரயம் போன்றவற்றை அனுபவித்து கொண்டு இருக்கும் தனுசு ராசி நண்பர்களே,
அணைத்து வருட கோள்களும் சரியில்லாத இடத்தில் இருப்பதால் ஜூலை மாதம் வரை கவனம் மிக மிக அவசியம். தொழிலில் போராட்டம் அடுக்கடுக்கான செலவு சேமிக்க முடியாத நிலை, சொத்தில் பிரச்னை கல்வியில் மந்த தன்மை உடல் நலமின்மை இவை மட்டுமே நீங்கள் பார்ப்பீர்கள்.
தாயுடன் கூட அவ்வபோது மனஸ்தாபம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஜூலை மாதம் பிறகு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்.
மொத்தத்தில் இந்த வருடம் ஜூலை வரை கடுமையான போராட்டம் நிறைந்தும் ஜூலை மாதம் பிறகு முன்னேற்றமும் ஆறுதலும் நிறைந்து இருக்கும்.

துர்க்கை வழிபாடும் ஆஞ்சநேய வழிபாடும் மிக அவசியம்.

      மேலும் பல தலைவர்கள் ஜாதகம் இங்கே

மகரம் ராசி 2015 ஆண்டு பலன்கள் : Corpicorn 2015 zodiac yearly prediction 2015

லாபங்களையும் வராது இருந்த பணத்தை பெறுவதும் மனதில் ஒரு தைரியமும் சுபகாரியம் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவற்றை அனுபவித்து கொண்டு இருக்கும் மகர ராசி நண்பர்களே,
இந்த ஆண்டு, வருட கோள்களில் ராகு பகவானை தவிர அணைத்து கிரகமும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் பல்வேறு தனசேர்க்கை மற்றும் லாபம் போன்றவற்றை அடைவீர்கள். குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் மீது இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் மேலோங்கும். மணம் திடமாக இருக்கும். லாபஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை வழங்குவார்.
ஒன்பதாம் வீட்டில் நிற்கும் ராகு முன்னேற்ற தடையை கொடுக்கவும் செய்வார். தந்தைக்கு நோய் நொடி கொடுப்பார்.
ஏழாம் வீட்டு குருபகவான் பலருக்கு மண வாழ்கை ஏற்படுத்தி கொடுப்பார். சொத்து சேர்க்கை உண்டு. குடும்பத்தில் நிம்மதியான போக்கு உண்டு.
ஜூலை மாதம் பிறகு குரு பகவான் எட்டாம் வீட்டிக்கு சென்று மறைந்து விடுவதால் ஆரோக்கிய குறை மீண்டும் தலை தூக்கும். அலைந்து திரிந்து காரியத்தை முடிக்க வேண்டி வரும். செல்வாக்கு குறையும்.

ராகுகால பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு.

43 வது ஜார்ஜ் W புஷ் அமெரிக்க குடியரசு தலைவர்            மேலும் பல தலைவர்கள் ஜாதகம் இங்கே

கும்பம் ராசி 2015 ஆண்டு பலன்கள்: Aquarius 2015 zodiac yearly prediction 2015
தொழில் ரீதியில் பிரச்னையும் பண பற்றாக்குறையும் எதிர்ப்புகளும் ஆரோக்கிய குறையையும் கொண்டு இருக்கும் கும்ப ராசி நண்பர்களே,
குரு பகவான் ஆறாம் வீட்டில் மறைந்து கிடக்கிறார். எதிர்ப்புகள் தலை தூக்கும். கடன் படவும் சிலருக்கு நேரும்.
பத்தாம் வீட்டு சனி பகவான் ஜீவனம் வகையில் தொல்லை ஏற்படுத்துவார். அதாவது பணபற்றாகுறை மற்றும் தொழிலில் சங்கடம் போன்ற நிலையை கொடுப்பார். எட்டாம் வீட்டில் நிற்கும் ராகு பகவான் விபத்துக்களையும் ஆரோக்கிய குறையையும் புரியாத நோயையும் ஏற்படுத்துவார்.

ஜூலை மாதம் பிறகு குரு பகவான் ஏழாம் இடம் பெயர்ந்து விடுவார். அதன் பிறகு குடும்பத்தில் குதுகூலம் நிறைந்து இருக்கும். ஆரோக்கியம் சிறக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பிறக்கும். சுப காரிய நிகழ்ச்சி நடந்தேறும். சொத்து சேர்க்கை உண்டு.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகம்      மேலும் பல தலைவர்கள் ஜாதகம் இங்கே

மீனம் ராசி 2015 ஆண்டு பலன்கள் : Pisces 2015 zodiac yearly prediction 2015
குரு பகவானின் சஞ்சாரம் நன்றாக இருப்பதால் முன்னேற்றம் லாபம் மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும் நிலை கொடுக்கும். புத்திர ரீதியில் சந்தோசமும் முன்னேற்றமும்  தந்தைக்கு முன்னேற்றமும் கொடுக்கும்.
ஒன்பதாம் வீட்டு சனி பகவான் அவ்வபோது ஆரோக்கிய குறை மற்றும் தந்தையுடன் மண கசப்பு மற்றும் தந்தைக்கு அலைச்சல் மற்றும் நோய் நொடி கொடுப்பார்.
ராகு கேதுவின் சஞ்சாரத்தினால் கணவன் மனைவி உறவில் அவ்வபோது சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். தவிர்க்க இயலாது. துர்க்கை வழிப்பாடு பலன் தரும்.
ஜூலை மாதம் பிறகு குரு பகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் ஆரோக்யத்தில் அக்கறை தேவை.
மண் மோகன் சிங் இந்திய பிரதமர்      மேலும் பல தலைவர்கள் ஜாதகம் இங்கே

**********************************

குறிப்பு : வருட கோள்களின் சஞ்சார அடிப்படையில் எழுதப்பட்ட பலன்களே மேலே சொல்லப்பட்டவை. திசை புக்திக்கு  ஏற்ப பலன்கள் மாறுபடும். 

No comments :

Post a Comment