01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, January 30, 2013

RASIPALAN : VISWAROOPAM - விஸ்வரூபம் - கமல் ஹாசன் ஏன் பல தடைகளை சந்திக்கிறார். TAMIL JOTHIDAM - MALAR JOTHIDA MAIYAM


லக்னத்தில் 4,11  இக்கு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று அமைந்து இருக்கிறான். சுகங்களும் லாபங்களும் பெருகும்.

இரண்டுக்கு உடைய சனி ஆறுக்கு உடைய புதனுடன் சேர்ந்து நிற்பதால் குடும்ப ஒற்றுமை இருக்காது.

ஏழாம் வீட்டு கிரகம் மூன்றில் இருந்தால் களத்திர தோஷம் . இல்வாழ்கை பல சோதனைகளை கொடுக்கும்.

மேலும் ஏழாம் வீட்டை செவ்வாய் எட்டாம் பார்வையாக பார்க்கிறான்.

சனி பத்தாம் பார்வையாக பார்க்கிறான்.

குரு தனித்து ஏழாம் வீட்டில் நிற்கிறார்.

இவை அனைத்துமே குடும்ப வாழ்கையை கெடுக்கும் அமைப்பு, அதனால் மனைவியுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் அமையவில்லை.

கோனாதிபதியும் கேன்றாதிபதியுமான சுக்கிரன் லாபத்தில் அமைந்து குருவின் பார்வை பெறுகிறான்.

அதனால் சினிமா துறையில் மிக பெரிய புகழ் கொடுத்தது.

இப்படிப்பட்ட ஜாதகர் கமல் ஏன் பல சோதனைகளை " விஸ்வரூபம் " படத்திற்காக அனுபவிக்கிறார்.

ஒரு பார்வை : 

அவருக்கு தற்போது சுக்கிரதிசை புதன் புத்தி நடக்கிறது.

சுக்கிரன் 5,10 இக்கு அதிபதி  11 இல் இருக்கிறார், புதன் ஆறுக்கு உடையவன் பத்தில் இருக்கிறான்.

ஆறாம் வீட்டு அதிபதி திசை அல்லது புத்தி நடை பெரும் போதெல்லாம் கோர்ட் கேஸ் போன்ற தொல்லைகள் வரும் என்கிறது சாஸ்திரம்.

மேலும் ஆறுக்கு உடைய புதன் பத்தில் நிற்பதாலும் சனியுடன் சேர்ந்து நிற்பதாலும் ஜீவனம் அல்லது தொழில் சம்பந்தமாக தானே கோர்ட் கேஸ் போன்ற இன்னல்கள் அடைய செய்கிறது.

மேலும் கோட்சாரம் ரீதியாக குரு மூன்றில் மறைந்து இருக்கிறார். 

சனி எட்டில் இருந்து அஷ்டம சனி நடத்துகிறார்.

ஆகையால் பல இன்னல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.
Tuesday, January 29, 2013

Political Astrology : திரு கலைஞர் கருணாநிதி அவர்களின் ஜாதகம் ஒரு பார்வை TAMIL JOTHIDAM PALANGAL- MALAR JOTHIDA NILAYAM
திரு கலைஞர் கருணாநிதி அவர்களின் ஜாகத்தை அலசுவோம் :

௧. லக்னம் கடகம் ஆக இருப்பதால் உயர்ந்த பதவி அரசியலில் வெற்றி கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

௨. சிம்மத்தில் ராகு தந்தைக்கு உடல் கெடுதி , ஆனால் அரசியல் வாழ்க்கை கொடுக்கும். 

௩. லக்னாதிபதி லாபஸ்தனத்தில் இருக்கிறார். ஆகயால் மிகுந்த லாபம் கிடைக்கும்.

௪. லக்னதிருக்கு நாலில் சனி உச்சம் பெற்று மேலும் கேந்திரத்தில் அமைந்ததால் சுகம் அறிவு விருத்தி வீடு வாசல் வாகனம் என்று அனைத்தும் கொடுத்தது.

௫. ஐந்து என்ற அறிவு ஸ்தானத்தில் குரு இருக்கிறான். ஆகையால் அறிவு விருத்தி எதிர்பாராத பண வரவு நல்ல புத்திரம் சம்பத்து பெண் புதிரிக்கு சிறப்பு கொடுத்தது.

௭. பத்துக்கு உடைய செவ்வாய் ஏழாம் வீட்டில் உச்சம் பெற்று மேலும் மகர வீட்டில் இருப்பதால் தைரியம் கொடுக்கம். நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.. தொழிலில் உயர்வு .

௮. பத்தாம் வீட்டில் புதன் அதனால் அவரை ஆரம்பத்தில் கவிதை எழுத வைத்தது, கலைஞராகவே ஆக்கியது.

௯. பண்ணிறேண்டில் சுக்கிரன் இருப்பதால் அனேக சுப செலவு செய்யவைக்கும்.

௰. லக்னாதிபதி சந்திரன் உச்சம் பெற்று அவன் இரண்டுக்கு உடைய சூரியனுடன் இணைந்து பதினொன்றில் இருப்பதால் மேலும் சூரியன் சந்திரனுக்கு நண்பன் ஆகையால் மிகுந்த லாபம் கிட்டியது.

12-07-2010 இல் ஆரம்பம் ஆகி  2011 மே வரை நடை பெற்ற சுக்கிர திசை  யில் சூரிய புத்தி  .... சுக்கிரன் பண்ணிறேண்டில் மறைந்து இருக்கிறார். 

சுக்கிரன் இவருக்கு பாதகாதி ஆவார். பாதகத்தை கொடுத்துவிட்டார்.

இந்த நேரத்தில் மிகபெரிய தோல்வியை கொடுத்தார். தேர்தல் தோல்வி )

ஏழாம் இடத்தில் செவ்வாய் இருதார யோகம் கொடுத்தார்.

Sunday, January 27, 2013

நடிகர் சிவாஜி கணேசன் -- ஜாதகம் TAMIL JOTHIDAM 2013 - மலர் ஜோதிட ஆராய்ச்சி மையம் காட்டுமன்னார்கோயில் - தமிழ் ஜோதிட தளம்லக்னாதிபதி பத்தில் இருக்கிறான். அதனால் சொந்தமாக முன்னேருவான்.

பத்தில் கேது தொழில் முன்னேற்றம் கொடுக்கும்.

விருச்சகத்தில் கேது சாஸ்திரம் ஆன்மிகம் ஈடுபாடு கொடுக்கும்.

பத்தில் சனி கஷ்டப்பட்டு முன்னேறும் அமைப்பு.

நாலுக்கு உடைய சுக்கிரன் ஒன்பதில் அதாவது பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றது சிறப்பு. அதுவும் சுக்கிரன் பாக்கியாதிபதியாக இருப்பதால் கலை துறையில் பாக்கியம் கிட்டியது.

மேலும் லக்ன கோணத்தில்  சுக்கிரன் இருப்பதால் கலை துறையில் நல்ல முன்னேற்றம் கொடுத்தது.

நாலுக்கு உடையவனும் ஐந்துக்கு உடையவனும் சேர்ந்ததால் எதிர் பாராத பணம் வரவு கிடைத்து இருக்கும். 

ஐந்தில் மாந்தி இருப்பதால் அவரின் மகன்களால் அவர் அளவுக்கு முன்னேற முடியவில்லை.

பண்ணிறேண்டில் சந்திரன் இருந்தால் சுப செலவு மற்றும் கோவில் கட்டும் பணி மற்றும் பிறந்த ஊரை விட்டு வந்து வெளிய முன்னேறும் அமைப்பு ஏற்படும்.

ஆருக்கு உடைய சந்திரன் பன்னிரண்டில் இருப்பதால் விபரித ராஜ யோகம் ஏற்படும் அமைப்பு உண்டு. 

Saturday, January 26, 2013

ராகு கேது நிற்கும் பலன் : TAMIL JOTHIDAM WEBSITE - முற்றிலும் தமிழில் ஜோதிடம்
* மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மீனம் ஆகிய இடங்களில் கரும்பாம்பு எனப்படும் ராகு நின்றிட அதே சமயத்தில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற நான்கு மூலைகளிலும் கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகனுக்கு சிறந்த நன்மைகளும் பொன் பொருள் சேர்ந்து யோகம் அமையும்.

* செம்பாம்பு எனப்படும் கேது 1,5,9 ஆகிய கோண ஸ்தானங்களிலும் லாப ஸ்தானத்திலும் நிற்க அந்த ஜாதகன் சொந்த இடத்திலும் பிற தேசங்களிலும் வாசம் செய்து சம்பாதிப்பான். பொன் ஆபரணம் மற்றும் பூமியும் சேர்ந்து இந்திரனுக்கு ஒப்பாக வாழ்வான். இல்லறத்தில் மகிழ்ச்சி அடைவான். ஜோதிடத்திலும் வல்லமை பெற்று விளங்குவான்.

* லக்னாதிபதியும் சந்திரனும் மூன்றாம் அதிபதியும் சனியும் ஒரே இடத்தில் கூட ராகுவுடன் பாவக்கிரகம் சேர இவர்களில் தசா புக்தி காலத்தில் ஜாதகனுக்கு உயிர் ஆபத்து உண்டாகும். தற்கொலை போன்ற எண்ணமும் வரும்.

* ராகுவுடன் வேறு கிரகம் சேர்ந்து அவர்களுக்கு இரு புறமும் மற்ற கிரகங்கள் நிற்க அந்த ஜாதகன் மிகப் பெரிய வீரனாகத் திகழ்வான். யானை, குதிரைகள் பெற்று வீரத்துடன் சண்டையிட்டு வெற்றி அடைவான்.

* ராகு, கேதுக்கள் 6,8,12ல் நிற்க அந்த ஜாதகனுக்கு நோய் உண்டாகும். மனைவியால் பிரச்சினைகள் ஏற்படும். இவர்கள் தாசா புக்தியில் பலவித துன்பங்களைக் கொடுப்பார்கள்.

* பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் ராகு நிற்க அந்த ஜாதகனுக்கு புத்திர தோஷம் ஏற்படும். இந்த தோஷம் நீங்க பரிகாரம் என்னவென்றால் ஜாதகனின் மனைவி அரச மரத்தை சுற்றி வந்து கன்னியர்களுக்கு ஸ்நானம் செய்வித்து அவர்களை வணங்க புத்திர உற்பத்தி உண்டு. மேலும் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ராகு பிரதிஷ்டையும் செய்யலாம்.

* ராகு கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் தோன்ற அந்த வீட்டிற்குடையோன் சுபருடன் கூடினாலோ அல்லது சுபர் பார்வை பெற்றாலோ அந்த ஜாதகனுக்கு சிறப்பான யோக பலன்கள் உண்டாகும். ராகுவுடன் லக்னாதிபதியும் சேர மேலும் யோக விருத்தி ஏற்படும்.

* 5ம் இடத்திற்குரியோன் பாவனாக ராகு, கேதுக்களுடன் கூடி 3ல் நிற்க அந்த ஜாதகனின் மனைவியால் தொந்தரவு ஏற்படும். கணவனுடன் எப்போதும் சண்டை போடுவாள். கொடிய குணம் கொண்டவளாயிருப்பாள்.

* லக்னத்திற்கு 3க்குடையோன் பாவனாகி ராகு, கேதுக்களுடன் கூட மனைவி கணவனை மதியாமல் அவன் சொல்வதை கேட்கமாட்டாள். மனைவி கணவனை விட வயது அதிகம் இருப்பாள். இவர்கள் இருக்கும் ஊருக்கு அருகில் கடல் உண்டு.

* ராகு 5ல் நின்று அவனை சூரியன் பார்த்தால் அந்த ஜாதகன் வெளிநாட்டில் சென்று வேலை செய்வான். பொன், பொருள், நிலம் இவை சேரும். எனினும் இவன் தந்தைக்கு உபகாரமாக இருக்கமாட்டான்.


Friday, January 25, 2013

மகான் ஸ்ரீ ராமானுஜர் ஜாதகம் --- ஒரு பார்வை TAMIL JOTHIDAM FREE - MALAR JOTHIDA ARAYCHI MAIYAM


இவர் 1137 ஆண்டு வரை வாழ்ந்தார். அதாவது 120 வருடம் வாழ்ந்தார். அணைத்து கிரகங்களின்  மொத்த திசை 120 வருடம் . அணைத்து கிரகத்தின் திசையையும் அனுபவித்து வாழ்ந்தவர்.

மேலும் மகான் என்றால் பொதுவாக ராகு அல்லது கேது நட்சத்திரத்தில் பிறப்பார்கள்.

இவரும் ராகு நட்சத்திரத்தில் பிறந்து உள்ளார்.

மேலும் கடக லக்னம் என்றாலே தலைமை பதவி உண்டு. 

இவரும் கடக லக்னத்தில் உதித்தவர் தான். பல புகழுக்கு உரியவர். இறைவனுக்கு இணையாக நினைப்பவர்களும் உண்டு.

( திரு கருணாநிதியும் கடக லக்கினம் தான் )

இவரின் ஜாதகத்தை அலசுவோம் :

௧. லக்னாதிபதி சந்திரன் பன்னிரண்டில் நட்பு வீட்டில் இருக்கிறார். மேலும் சந்திரன் விரைய ஸ்தானத்தில் இருந்தால் ஆலயபணிகளில் தன் நேரத்தை செலவிடுவார் என்கிறது சாஸ்திரம். 

மேலும் திருக்கோவில் கட்டுவார் என்கிறது சாஸ்திரம். இவர் கடவுள் பெருமாளின் பக்தனாக இருந்து பாகவதத்தை மிகவும் தெளிவாக விளக்கினார்.

௨. மேலும் லக்னாதிபதி பன்னிரண்டில் இருந்தால் இவரின் வாழ்க்கை இவருக்கு பயன்படாது. அதே போல இவரின் வாழ்க்கை முழுவதையும் அவர் பெருமாளின் பக்தனுக்கு அற்பனித்தார்.

இவர் எழுதிய ஆன்மீக விளக்கம் அனைத்தும் பல மக்களுக்கு இன்றும் பயன்படுகிறது.

௩. லக்னாதிபதியுடன் குருவும் சேர்ந்து குரு சந்திர யோகம் உண்டாகி இருப்பதால் அவரின் வாழ்க்கை நல்ல வழியில் சென்றது,

௪. கடக லக்னத்திற்கு யோக காரன் செவ்வாய் இரண்டில் அமர்ந்து அணைத்து பாக்கியத்தையும் பெற்று கொடுத்தான்.

௫. ராகு திசையில் பிறந்த இவர் அடுத்த  ராகு திசை வரை வாழ்ந்து பிறகு இறந்தார்.

௬. ஆயுள் காரகன் சனி அவன் வீட்டுக்கு லாபத்தில் அமர்ந்து குரு பார்வை பெற்று 120 வருடம் வாழ வைத்தான்.

௭. ஐந்தாம் வீட்டில் ( அறிவு ஸ்தானம் )  இருக்கும் கேது  இவருக்கு மெய் ஞானத்தை கொடுத்து கடவுள் பற்றி அறியும் அறிவை கொடுத்தான்.

" ஐந்தாம் வீட்டில் கேது இருந்தால் சாம்ராஜ்யம் அல்லது சந்நியாசம் "

பதினொன்றில் ராகு இவருக்கு புகழை கொடுத்தார்.

இவரின் புத்திசாலி தனத்திற்கும் அறிவு ஜீவியாக இருந்ததிற்கும் காரணம் என்ன?

நாலுக்கு உடைய சுக்கிரன் நட்பு வீட்டில் கல்வி காரகன் புதனுடன் சேர்ந்து உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்ந்து பத்தில் நிற்பதால் இவரின் தொழிலே அறிவாகி,  அறிவாக வெளிப்பட்டு முழு நேரமும் இறைவனை பற்றி கற்பதையே தொழிலாக கொண்டு இறைவனை பற்றி மெய் ஞானம் பெற்றார்.

"ஹரி ஓம் நமோ நாராயணாயா "

Wednesday, January 23, 2013

யார் விகாரமாக காட்சி அளிப்பார் ? JOTHIDAM TAMIL


ஒருவர் ஜாதகத்தில் சனி ஏழாம் வீட்டில் இருந்து 

அந்த ஏழாம் வீடு மகரமாகவோ அல்லது கும்பமாகவோ அல்லது துலாமாகவோ இல்லாமல் இருந்து

ஏழாம் வீட்டுக்கு சுப கிரகத்தின் பார்வை இல்லாமல் இருந்தால் 

அந்த மனிதன் விகாரமாக தோற்றம் அளிப்பான்.

மேலும் அருவருக்க தக்க காரியம் செய்வான்.

அந்த மனிதனுக்கு திருமணமே ஆகாது , ஆனாலும் தாமதமாக தான் ஆகும்.

சிலருக்கு வயோதிக பெண்ணுடன் தொடர்பு ஏற்படும்.

Sunday, January 20, 2013

ஏக நட்சத்திரமாக இருந்தால் கல்யாணம் செய்யலாமா ? JOTHIDAM IN TAMIL LANGUAGEஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் திருமணம் செய்யலாமா என்ற கேள்வி பலருக்கு உண்டு .

" காலப்ரகாசிகை " என்ற நூலில் உள்ளபடி :

ரோகினி ,திருவாதிரை , மகம் , ஹஸ்தம், விசாகம், திருவோணம், உத்தரட்டாதி , ரேவதி  ஆகிய நட்சத்திரம் கணவனுக்கும் மனைவிக்கும் ஒன்றாக வந்தால் திருமணம் செய்யலாம். நல்ல பலன் உண்டாகும். திசா சந்திப்பு தோஷம் உண்டாக முடியாது.

அசுவினி , கிருத்திகை, மிருகசீரிஷம் , புனர்பூசம், பூசம், பூரம், உத்தரம் , சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் இவைகள் கணவனுக்கும் மனைவிக்கும் ஒன்றாக வந்தால் திருமணம் செய்யலாம். 

மத்திம பலன் தான் . பாதகம் இல்லை.
மற்றவை சரி இல்லை.

மேலும் ஒரே நட்சத்திரமாக இருக்கும் போது ஆணுக்கு முதல் பாதமும் பெண்ணுக்கு 2,3,4 இம் பாதமும் இருந்தால் நல்லது.


Tuesday, January 15, 2013

யார் சிறை செல்வார் ? JOTHIDAM 2013


ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி 2,12 அதிபதியுடன் இணைந்து காணப்பட்டால் அவர் சிறை செல்லும் அமைப்பு உண்டாகிறது.

அசுபர்கள் 2,12 இல் ஆகிய வீடுகளில் அமைய பெற்று அவர்களின் திசை புத்தி நடை பெரும் காலங்களில் சிறை செல்லும் அமைப்பு ஏற்படுகிறது .

குற்றமே செய்யாமல் இருந்தால் கூட விதி விளையாடுகிறது 

Monday, January 14, 2013

பாம்பை அடிக்காதீர்கள் !!!! JATHAGAM ONLINE


பாம்பை அடிப்பதனால் உண்டாகும் தோஷம் சர்ப்ப தோஷம் என்று அழைக்கபடுகிறது.

இந்த தோஷம் பரம்பரை பரம்பரையாக வந்துகொண்டே இருக்கும்.

ஒரு பாம்பு அதன் துணையுடன் இணைந்து இருக்கும் பொது அதை அடித்தாலோ கொன்றாலோ ஏழில் ராகு அமைகிறது.

இதனால் திருமண தாமதம் மற்றும் திருமணம் ஆனாலும் மனைவியுடன் பிரிவு உண்டாகும் நிலை ஏற்படும்.

ஒரு பாம்பு அதன் குஞ்சுகளுடன் சேர்ந்து இருக்கும் போது அதை கொன்றால் ராகு ஐந்தில் இருக்கும் . 

ஆகையால் புத்திர தோஷம் ஏற்படும்.

அதனால் புத்திர தாமதம் மற்றும் புத்திர வகையில் சங்கடம் வந்த வண்ணம் இருக்கும்.

ஆகையால் பாம்பை அடிக்காமல் இருப்பது நல்லது. தோசத்தில் இருந்து தப்பிக்கலாம்.

Friday, January 11, 2013

குருடாகவே பிறக்கும் ஜாதகம் JATHAGAM TAMIL


ஒருவருடைய ஜாதகத்தில் 2, 12 இக்கு அதிபதிகள் சுக்கிரனுடன் சேர்ந்து 6,8,12 இல் மறைந்தால் பிறக்கும் போதே குருடாக பிறக்கும் நிலை உண்டாகும்.

சனியும் செவ்வாயும் இணைந்து 2 அல்லது 12 இல் அமைய பெற்றால் அந்த ஜாதகம் குருடாக காட்சி அளிக்கும் நிலை ஏற்படும்.

அசுபர்கள் 4,5 இல் அமைய பெற்றால் அந்த ஜாதகர் குருடு நிலையிலே காலம் கழிக்கும் அபாயம் உண்டாகிறது.

சந்திரன் சுக்கிரன் சேர்ந்து அசுபரும் உடன் அமைய பெற்று 2,12 போன்ற இடங்களில் இருந்தாலும் குருடு நிலை ஏற்படுகிறது.

சூரியன் சந்திரன் சேர்ந்து 12 இல் அமைய பெற்றாலும் அந்த ஜாதகர் குருடாகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வருகிறார்.


Thursday, January 10, 2013

வீடு வாகன யோகம் யாருக்கு ? JATHAGAM PALAN - மலர் ஜோதிட ஆராய்ச்சி மையம் காட்டுமன்னார்கோயில்


நாலாம் வீட்டு அதிபதி நாலில் ஆட்சி பெற்றால் நல்ல வீடு வாகனம் அமைய பெறுகிறது.

நாலாம் அதிபதி லக்னாதிபதி மற்றும் குரு சேர்க்கை பெற்றால் எப்போதும் வீடு வாகனம் வசதி பெறுவார்.

வாகன காரகன் சுக்கிரன் குரு வுடன் சேர்ந்து பாக்கியாதிபதியுடன் சேர்க்கை பெற்றால் வாகனம் வசதி அதிகமாக ஏற்படுகிறது.

நாலாம் அதிபதி ஏழாம் அதிபதிவுடன் சேர்ந்தால் நல்ல வீடு வாகனம் அமையும்.

நாலாம் அதிபதி இரண்டாம் அதிபதிவுடன் சேர்ந்தால் அபரிமிதமான செல்வ சேர்க்கை  மற்றும் வீடு அமையும்.

நாலாம் அதிபதி 1,4,7,10 போன்ற கேந்திரங்களில் இருந்தாலோ அல்லது 1,5,9 போன்ற திரிகோணங்களிலோ இருந்தால் வீடு வாகன வசதி உண்டு.

பூமி காரகன் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் வீடு வசதி உண்டு.


Wednesday, January 9, 2013

மாதிரி ஜாதகம் , sample prediction report

இளம் வயதில் புத்திரபாக்கியம் யாருக்கு ? JATHAGAM PORUTHAM ONLINE FREEபுத்திர ஸ்தானாதிபதி லாபம் பெற்றாலும் புதிரஸ்தானதிபதி தன் சொந்த வீட்டை பார்வை செய்தாலும் புத்திர வழியில் சந்தோசமும் பூரிப்பும் உண்டாகும். 

அதோடு இளம் வயதிலேயே புத்திர பலன் உண்டாகி, எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்படும்.

Sunday, January 6, 2013

கட்டில் சுகம் குறைவு யாருக்கு ? JATHAGAM PORUTHAM


ஒரு பெண்ணுக்கு 12 ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் கெடுதி ஏற்படுத்துகிறது.

இந்த 12 ம் இடத்தை வைத்து கட்டில் சுகம் சுக வாழ்வு போன்ற நற்பலன்களை அறிகிறோம்.

இந்த இடத்தில் செவ்வாய் அமரும் போது பெண்களுக்கு சுக வாழ்வு முறையாக கிடைப்பதில்லை.

கணவனால் வெறுக்கப்படும் நிலை ஏற்படும். கணவனை விட்டு பிரிந்து வாழுதல் , கணவனுக்கு திடீர் மாரகம் உண்டாகும் நிலை உண்டாகிறது.

ஆகவே செவ்வாய் தோஷம் உள்ள பெண் ஜாகிரதையாக இருக்க வேண்டும் திருமணத்தின் போது.

செவ்வாய் தோஷம் செவ்வாய் தோசம் என்றால் என்ன ? JATHAGAM PALANஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2,4,7,8,12 போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தால், அந்த பெண்ணிற்கு கெடுபலன்கள் உண்டாகவே செய்கின்றன.

எழிலும் எட்டிலும் இருந்தால் மிக கடுமையான தோஷம்,

நாலாம் இடம் கடுமையான தோஷம் ,

பன்னிரெண்டாம் இடம் தோஷம் ,

இரண்டாம் இடம் தோஷம் குறைவு.

ஒரு பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் இருந்தால் ஆணுக்கும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும்.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லாத வரனை திருமணம் செய்தால் அவருடைய வாழ்வு மிகவும் சோதனையை உண்டாக்குகிறது.

செவ்வாய் தோஷம் சரி பார்க்காமல் அல்லது பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தால் , திருமணமான சில வருடங்களில் கணவன் மனைவி பிரிவு, கணவனை இழக்கும் நிலை, விதவை வாழ்வு போன்றவை உண்டாகிறது.

   ஒரு பெண்ணிற்கு 2,4,7,8,12 இல் செவ்வாய் அமைய பெற்று செவ்வாய் திசை நடை பெறுவது நற்பலன் என்று சொல்ல முடியாது.

அப்படி செவ்வாய் திசை நடைபெற்றால் கணவருக்கு கெடுதி குறிப்பாக சொல்லபோனால் மாரகம் போன்ற கெடுபலன்கள் உண்டாகிறது.

பெண்ணிற்கு 8 இல்  செவ்வாய் அமைய பெற்று செவ்வாய் திசை நடைபெரும் போது மாங்கல்யம் இழக்கும் அபாயம் உண்டாகிறது.

Saturday, January 5, 2013

புத்திரனால் / குழந்தையால் யாருக்கு சொத்து இழப்பு வரும் ?புத்திர ஸ்தானாதி பதி 6,8,12 போன்ற இடங்களில் அமைய பெற்றிருந்தாலும் அசுபர் பார்வை பெற்றாலும் அவருடைய பிள்ளைகள் கெட்ட புத்தி உள்ளவர்களாகவும் சுருங்க சொன்னால் திருடர்களாக இருப்பார்கள்.

அது போல ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி பலவீனம் அடைந்து விரயாதிபதி என்று சொல்லப்படும் 12 ம் வீட்டு அதிபதியோடு கூடினாலும் புதிரனால் பண விரயம் சொத்து இழப்பு ஏற்படும்.

புத்திர ஸ்தானாதி பதி பாவ கிரகத்தின் நவாம்சம் அடைந்தாலும் புதிரனால் சொத்து இழப்பு உண்டாகும்.

Friday, January 4, 2013

பூராடம் நட்சத்திரம் என்றால் என்ன நடக்கும் ?பூராடம் நட்சத்திரத்தில் ஒரு பெண் பிறந்தால் "அவள் கழுத்தில் நூல் ஆடாது " ( தாலி கயிறு நிலைக்காது ) என்று பலரும் வழக்கத்தில் கூறுவதை நான் கண்டு இருக்கிறேன் .

உண்மையில் நான் ஆராய்ந்து பார்த்ததில் பலரின் வாழ்க்கை மிகவும் ஏற்றமாக இருப்பதை கண்டேன். சுகமாக வாழ்வதை கண்டேன்.

பூராடம் ஒன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தையால் தந்தைக்கும் 

பூராடம் இரண்டாம் பாதத்தில் பிறந்த குழந்தையினால் தாய்க்கும் 

பூராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தையினால் குழந்தைக்கும்

பூராடம் நாலாம் பாதத்தில் பிறந்த குழந்தையினால் தாய் மாமனுக்கும் 

தோஷம் ஏற்படுகிறது.

ஒரு பெண்ணுக்கு பூராடம் நட்சத்திரம் இருந்தால் அந்த பெண்ணை மணப்பதற்கு தயங்குகிறார்கள். இந்த காரணத்தினாலேயே அவளின் திருமணம் தள்ளி போகிறது. அதனால் தாமத திருமணம் நடக்கிறது.

இருந்தாலும் அவளின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

உண்மைக்கு புறன்பான விசயத்தை  நாம் தவிப்போம்.

எந்த ஜோதிட நூலிலும் பூராடம் ஓர் கெட்ட நட்சத்திரம் என்று குறிப்பிடவில்லை.