01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Friday, January 25, 2013

மகான் ஸ்ரீ ராமானுஜர் ஜாதகம் --- ஒரு பார்வை TAMIL JOTHIDAM FREE - MALAR JOTHIDA ARAYCHI MAIYAM


இவர் 1137 ஆண்டு வரை வாழ்ந்தார். அதாவது 120 வருடம் வாழ்ந்தார். அணைத்து கிரகங்களின்  மொத்த திசை 120 வருடம் . அணைத்து கிரகத்தின் திசையையும் அனுபவித்து வாழ்ந்தவர்.

மேலும் மகான் என்றால் பொதுவாக ராகு அல்லது கேது நட்சத்திரத்தில் பிறப்பார்கள்.

இவரும் ராகு நட்சத்திரத்தில் பிறந்து உள்ளார்.

மேலும் கடக லக்னம் என்றாலே தலைமை பதவி உண்டு. 

இவரும் கடக லக்னத்தில் உதித்தவர் தான். பல புகழுக்கு உரியவர். இறைவனுக்கு இணையாக நினைப்பவர்களும் உண்டு.

( திரு கருணாநிதியும் கடக லக்கினம் தான் )

இவரின் ஜாதகத்தை அலசுவோம் :

௧. லக்னாதிபதி சந்திரன் பன்னிரண்டில் நட்பு வீட்டில் இருக்கிறார். மேலும் சந்திரன் விரைய ஸ்தானத்தில் இருந்தால் ஆலயபணிகளில் தன் நேரத்தை செலவிடுவார் என்கிறது சாஸ்திரம். 

மேலும் திருக்கோவில் கட்டுவார் என்கிறது சாஸ்திரம். இவர் கடவுள் பெருமாளின் பக்தனாக இருந்து பாகவதத்தை மிகவும் தெளிவாக விளக்கினார்.

௨. மேலும் லக்னாதிபதி பன்னிரண்டில் இருந்தால் இவரின் வாழ்க்கை இவருக்கு பயன்படாது. அதே போல இவரின் வாழ்க்கை முழுவதையும் அவர் பெருமாளின் பக்தனுக்கு அற்பனித்தார்.

இவர் எழுதிய ஆன்மீக விளக்கம் அனைத்தும் பல மக்களுக்கு இன்றும் பயன்படுகிறது.

௩. லக்னாதிபதியுடன் குருவும் சேர்ந்து குரு சந்திர யோகம் உண்டாகி இருப்பதால் அவரின் வாழ்க்கை நல்ல வழியில் சென்றது,

௪. கடக லக்னத்திற்கு யோக காரன் செவ்வாய் இரண்டில் அமர்ந்து அணைத்து பாக்கியத்தையும் பெற்று கொடுத்தான்.

௫. ராகு திசையில் பிறந்த இவர் அடுத்த  ராகு திசை வரை வாழ்ந்து பிறகு இறந்தார்.

௬. ஆயுள் காரகன் சனி அவன் வீட்டுக்கு லாபத்தில் அமர்ந்து குரு பார்வை பெற்று 120 வருடம் வாழ வைத்தான்.

௭. ஐந்தாம் வீட்டில் ( அறிவு ஸ்தானம் )  இருக்கும் கேது  இவருக்கு மெய் ஞானத்தை கொடுத்து கடவுள் பற்றி அறியும் அறிவை கொடுத்தான்.

" ஐந்தாம் வீட்டில் கேது இருந்தால் சாம்ராஜ்யம் அல்லது சந்நியாசம் "

பதினொன்றில் ராகு இவருக்கு புகழை கொடுத்தார்.

இவரின் புத்திசாலி தனத்திற்கும் அறிவு ஜீவியாக இருந்ததிற்கும் காரணம் என்ன?

நாலுக்கு உடைய சுக்கிரன் நட்பு வீட்டில் கல்வி காரகன் புதனுடன் சேர்ந்து உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்ந்து பத்தில் நிற்பதால் இவரின் தொழிலே அறிவாகி,  அறிவாக வெளிப்பட்டு முழு நேரமும் இறைவனை பற்றி கற்பதையே தொழிலாக கொண்டு இறைவனை பற்றி மெய் ஞானம் பெற்றார்.

"ஹரி ஓம் நமோ நாராயணாயா "

No comments :

Post a Comment