01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, January 30, 2013

RASIPALAN : VISWAROOPAM - விஸ்வரூபம் - கமல் ஹாசன் ஏன் பல தடைகளை சந்திக்கிறார். TAMIL JOTHIDAM - MALAR JOTHIDA MAIYAM


லக்னத்தில் 4,11  இக்கு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று அமைந்து இருக்கிறான். சுகங்களும் லாபங்களும் பெருகும்.

இரண்டுக்கு உடைய சனி ஆறுக்கு உடைய புதனுடன் சேர்ந்து நிற்பதால் குடும்ப ஒற்றுமை இருக்காது.

ஏழாம் வீட்டு கிரகம் மூன்றில் இருந்தால் களத்திர தோஷம் . இல்வாழ்கை பல சோதனைகளை கொடுக்கும்.

மேலும் ஏழாம் வீட்டை செவ்வாய் எட்டாம் பார்வையாக பார்க்கிறான்.

சனி பத்தாம் பார்வையாக பார்க்கிறான்.

குரு தனித்து ஏழாம் வீட்டில் நிற்கிறார்.

இவை அனைத்துமே குடும்ப வாழ்கையை கெடுக்கும் அமைப்பு, அதனால் மனைவியுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் அமையவில்லை.

கோனாதிபதியும் கேன்றாதிபதியுமான சுக்கிரன் லாபத்தில் அமைந்து குருவின் பார்வை பெறுகிறான்.

அதனால் சினிமா துறையில் மிக பெரிய புகழ் கொடுத்தது.

இப்படிப்பட்ட ஜாதகர் கமல் ஏன் பல சோதனைகளை " விஸ்வரூபம் " படத்திற்காக அனுபவிக்கிறார்.

ஒரு பார்வை : 

அவருக்கு தற்போது சுக்கிரதிசை புதன் புத்தி நடக்கிறது.

சுக்கிரன் 5,10 இக்கு அதிபதி  11 இல் இருக்கிறார், புதன் ஆறுக்கு உடையவன் பத்தில் இருக்கிறான்.

ஆறாம் வீட்டு அதிபதி திசை அல்லது புத்தி நடை பெரும் போதெல்லாம் கோர்ட் கேஸ் போன்ற தொல்லைகள் வரும் என்கிறது சாஸ்திரம்.

மேலும் ஆறுக்கு உடைய புதன் பத்தில் நிற்பதாலும் சனியுடன் சேர்ந்து நிற்பதாலும் ஜீவனம் அல்லது தொழில் சம்பந்தமாக தானே கோர்ட் கேஸ் போன்ற இன்னல்கள் அடைய செய்கிறது.

மேலும் கோட்சாரம் ரீதியாக குரு மூன்றில் மறைந்து இருக்கிறார். 

சனி எட்டில் இருந்து அஷ்டம சனி நடத்துகிறார்.

ஆகையால் பல இன்னல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.
No comments :

Post a Comment