01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Friday, March 29, 2013

இறை தூதர் இயேசு நாதர் ஜாதகம் - JESUS CHRIST HOROSCOPE BY KALAIARASAN KATTUMANNARKOIL
29 - 3-2013 வெள்ளி கிழமை .இன்று கிறிஸ்துவர்களின் புனித வெள்ளி. இந்த நாளில் இறை தூதர் இயேசு நாதர் ஜாதகத்தை பற்றி எழுதுவதை புனிதமாக நினைக்கிறேன்.

இயேசு நாதர் கன்னி லக்னத்தில் பிறந்து இருக்கிறார். 

இயேசு நாதர் பிறக்கும் போதே சந்திரன் உடன் சனி இருக்கிறான். அதாவது ஜென்ம நடை சனி  பெற்ற காரணத்தால் அவர் பிறந்த உடனே அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை அவருக்கும் அவரது தாய்க்கும் அமைந்தது. 

அவரது லக்னத்தை சனி பார்ப்பதால் அவர் பல இன்னல்களை அனுபவிக்கக் செய்தது.

மேலும் சந்திரனுக்கு பத்தாம் இடத்தையும் சனி பார்ப்பதால் அவர் ஒரு சாதாரண உடல் உழைப்பு செய்யும் ஆசாரி ( கார்பென்டர் ) தொழில் செய்யும் நிலை ஏற்பட்டது.


ஒன்பதாம் இடத்தில் கேது இருப்பதால் அவர் ஆத்மா என்று சொல்லபடுகின்ற தன்னை உணர்ந்தார். ஆன்மீகத்தில் திளைத்து இருந்தார்.

நவாம்ச லக்னாதிபதி,  குருவுடனும் கேது வுடனும் இணைந்து இருப்பதால் அவர் ஒரு துறவு வாழ்க்கை வாழுமாறு செய்தது.

Thursday, March 28, 2013

இறை தூதர் முகமது நபி அவர்களின் ஜாதகம் - PROPHET MUHAMMAD HOROSCOPE BY ஜோதிடர் கலையரசன் கலியபெருமாள் காட்டுமன்னார்கோயில்முகமது நபி அவர்கள் கும்ப லக்னத்தில் பிறந்து இருகிறார்கள். சிம்ம ராசி.

லக்னாதிபதி சனி பத்தாம் இடத்தில் ஞானகாரகன் கேது வுடன் சேர்ந்து நிற்கிறான். 

ஆகயால் முகமது நபி அவர்களின் தொழிலே இறை ஞானம் பெறுவதும் அதை மற்றவர்களுக்கு சொல்லுவதே என்று ஆனது.

குரு 2 -ம் வீட்டுக்கு அதிபதி அதாவது பேச்சு ஸ்தான அதிபதி. இந்த குரு ஒன்பதாம் வீட்டில் எந்த வித பாவியின் சேர்க்கையும் இல்லாமல் இருப்பதால் முகமது நபி அவர்களின் பேச்சில் ஒரு தெய்வீகமும் இறை உணர்வும் இருந்தது.

இறைவனை பற்றி பேசவும் செய்தார். ( 9 -ம் இடம் தர்ம ஸ்தானம் அதில் குரு )

சுக்கிர திசை ராகு புத்தி : 

நாலாம் இடத்தில் ராகு நின்றான், தாய் கிரகம் சந்திரனையும்  சனி பார்த்தான் ,முகமது நபி அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது தாய்க்கு மரணத்தை கொடுத்தான் நாலாம் இடத்து ராகு. 

பொதுவாக நாலாம் அதிபதி நாளில் ஆட்சி பெற்றால் அவர்கள் தனது மதத்தின் மீது தீவிர பற்று கொண்டு இருப்பார்கள். இவருக்கும் அதே அமைப்பு தான்.

திருமணம் :

ஏழாம் இடத்தில் சந்திரன் இருந்தான் நல்ல அழகு வாய்ந்த மனைவி அமைத்து கொடுத்தான்.

Tuesday, March 26, 2013

ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகம் ஒரு பார்வை - LORD SRI KRISHNA HOROSCOPE ANALYSIS by ASTROLOGER KALAIARASAN KATTUMANNARKOIL


இன்று இந்த வலைத்தளம் உருவாக்கி ஒரு வருடம் ஆகிறது. இந்த நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி எழுதுவதில் மிக்க மகிழ்ச்சியும் இதை சாத்தியமாக்கிய உங்களுக்கும் என்னுடய நன்றி.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ரிசப ராசி , ரிசப லக்னத்தில் பிறந்து இருக்கிறார். அவர் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறார்.

நான் முன்பே கூறியது போல லக்னாதிபதி 12 ம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் சிறை வாசம் உண்டு.

அதேபோல கிருஷ்ணர் ஜாதகத்திலும் லக்னாதிபதி சுக்கிரன் , 12 - ம் அதிபதி செவ்வாயுடன் இணைந்து மூன்றாம் வீட்டில் இருக்கிறார். மேலும் பாவி ராகுவும் கூடவே நிற்கிறான்.

ஆகவே ஸ்ரீ கிருஷ்ணர் சிறையில் பிறக்கும் அமைப்பு ஏற்பட்டது.

லக்னத்தில் மூன்றாம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறான். மூன்றில் செவ்வாய் இருக்கிறான். ஆகவே கிருஷ்ணர் மிகவும் வீரமானவராகவும் யுத்தத்தை வழிநடத்தும் தைரியமும் அரக்கர்களை வதம் செய்யும் வீரமும் உடையவராகவும் இருந்தார்.. 

மேலும் பாக்கியாதிபதி சனி பகவான் லக்னத்தை பார்ப்பதாலும் லக்னத்தில் சந்திரன் உச்சம் பெற்றதாலும் லக்னாதிபதி சுக்கிரனாக இருப்பதாலும் அழகுக்கு பஞ்சமில்லாமல் தெய்வீக உருவம் பெற்றார்.

லக்னாதிபதி அம்சத்திலும் அவர் சொந்த வீட்டில் இருப்பதால் அவர் நல்ல பண்புடன் இருந்தார்.

2 - ம் இடத்து அதிபதி புதன் ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்றான். ஆகையால் அறிவுக்கு ஒரு குறையும் இல்லை. அணைத்து வேதமும் அறிந்தவராக இருந்தார்.

Sunday, March 24, 2013

ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் அடிகடி ஜெயில் வாசம் செய்வது ஏன்? ஜோதிட பார்வை . Hindi actor SANJAY DUTT : why he is frequently getting imprisonment ஜெயில் வாசம் சிறை வாசம் by ஜோதிட நிலையம் காட்டுமன்னார்கோயில்


பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் தற்போதைய காலங்களில் அடிகடி ஜெயில் சென்று வருகிறார். தற்போது கூட அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கக் வேண்டும் என்று மும்பை கோர்ட் தண்டனை விதித்து இருக்கிறது.

இது ஏன் ? இவர் ஜாதகத்தை ஆராய்வோம்......

சஞ்சய் தத் ஜூலை 29 ,1959 இல் மும்பை யில் பிறந்து இருக்கிறார்.

அவர் விருச்சக லக்னம் ரிசப ராசி .

லக்னாதிபதி செவ்வாய் சூரியன் வீட்டில் சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கிறான். ஆகையால் கலை துறையில் மிக பெரிய அளவில் சாதனை செய்தார்.

பத்தாம் வீட்டில் சுக்கிரன் கலைத்துறையில் முன்னேற்றம் கொடுத்தான்.

ஏழாம்  இடத்தில் சந்திரன் இருந்தால் நல்ல அழகு வாய்ந்த மனைவி அமைவாள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதேபோல் இவருக்கும் அழகான மனைவி அமைந்தாள்.

ஏழுக்கு உடைய சுக்கிரன் ஆறுக்கு உடைய செவ்வாய் யுடன் சேர்த்தான். இருவரையும் பிரித்து வைத்தான்.

மேலும் குடும்ப ஸ்தானத்தில் இருக்கின்ற சனி குடும்ப வாழ்கையே இல்லாமல் செய்தான்.

( ஜெயலலிதா விற்கு கூட இரண்டில் சனி --- இவருக்கும் சரியான மணவாழ்வு அமையவில்லை )

நான் அடிகடி பலருக்கும் கூறுவதுண்டு. ஆறாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் சேர்ந்து இருந்தால் கண்டிப்பாக பிரிவு கொடுக்கும்.அந்த தசா புத்தி காலத்தில் மிகவும் கெடுதி கொடுக்கும்.

பதினொன்றில் ராகு தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் கொடுத்தான்.கலை துறையில் சிறந்து விளங்க செய்தான்.

ஒருவர் சிறை செல்ல வேண்டும் என்றால் லக்னாதிபதி இரண்டு மற்றும் பன்னிரெண்டாம் அதிபதியுடன் சேர்ந்து காண பட வேண்டும்.

இவர் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் பன்னிரெண்டாம் அதிபதி சுக்கிரனுடம் இணைந்து பத்தாம் வீட்டில் இருப்பதாலும் 

இரண்டில் சனி மற்றும் பண்ணிறேண்டில் மாந்தி போன்ற பாவிகள் இருப்பதாலும் எவ்வளவு சொத்து சுகம் இருந்தாலும் ஜெயில் வாசம் கொடுகிறது.

லக்னாதிபதியும் ஆறாம் அதிபதியுமாய் செவ்வாய் இருப்பதால் கோர்ட் கேஸ் என்று இவரை அலைய வைக்கிறது.

தற்போது குருதிசை ராகு புத்தி நடைபெறுகிறது. குரு பண்ணிறேன்றில் இருக்கிறார். அவர் இந்த இடத்தின் பலனை தர வேண்டும். ஆகையால் சுக்கிரன் கொடுக்க வேண்டிய ஜெயில் தண்டனையை இவரே கொடுக்கிறார்.

மேலும் இவருக்கு மே மதம் வரை குரு ஜென்மத்தில் இருக்கிறார். இது வன வாசம் போல இருக்கும். 2014 மே மாதம் பிறகு குரு இரண்டாம் இடம் வருவார். இவர் சொல்லுக்கு மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். 

அப்போது இவர் மேல் உள்ள வழக்குகள் இவர் சொல்லும் வார்த்தைகளால் தள்ளுபடி கூட செய்யப்படலாம்.

ஏனெனில் குரு பலனும் உண்டு. சனியும் ஆறாம் வீட்டில் இருந்து அற்புதங்களை நிகழ்த்துவார். 

 ( 2014 டிசம்பர் குள் இவருக்கு அவார்டு கூட கிடக்கும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் சனி ஆறில் அற்புதம் .)

Friday, March 15, 2013

மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை MEENAM RASI GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , PISCES ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 BY ASTRO KALAIARASAN jothida nilayam kattumannarkoil - Auspicious Astrologer kalaiarasan


மீனம் ராசி : மீன ராசி நேயர்களே , இதுவரை நாலாம் வீட்டில் அமர்ந்து சுகத்திற்கு குறையையும் மனத்தில் நிம்மதி இல்லாத நிலையையும் கொடுத்த குரு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் உங்களுக்கு ஐந்தாம் வீடான கடகத்தில் உச்சம் பெறுகிறார்.

இப்படி ஐந்தாம் வீட்டில் உச்சம் பெரும் குரு பகவான் உங்களுக்கு அணைத்து துறையிலும் வெற்றி வாகை சூடி தருவார். பண வகையில் நல்ல முன்னேற்றம் கொடுப்பார். வீட்டில் இருந்த குறைகள் நீங்கள். நிலம் வகையில் இருந்த தகராறு சரிசெய்யப்படும்.

மாணவர்களுக்கு பெரிய வெற்றி கொடுக்கும். கல்வியில் நல்ல நிலையை சுலபமாக பெரும் நிலை கொடுக்கும்.

குழந்தை பாக்கியம் பலர் பெறுவார்கள் . குடும்பத்தில் நிம்மதி மற்றும் சுபகாரியம் நடைபெறும்.

தெய்வீக காரியங்கள் நடை பெரும். குல தெய்வ வழிபாடு சென்று வருவீர்கள். ஆன்மீக செய்திகளை  கேட்கும் வாய்ப்பு கொடுக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொடுக்கும்.

இப்படி ஐந்தாம் வீட்டில் நிற்கும் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டை பார்வை செய்கிறார். ஆகையால் தொழில் ரீதியில் முன்னேற்றம் கண்டிப்பாக கொடுப்பார். தந்தைக்கு உடல்நிலை சீராகும். பயணங்கள் கொடுக்கும்.

லாபஸ்தனத்தை பார்வை செய்யும் குரு பகவான் எல்லா துறையிலும் லாபங்களை அள்ளி தருவார். உடல்நிலை நன்றாக இருக்கும்.பொதுவாக இந்த குரு பெயர்ச்சி உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்வார்.

இருபினும் வருட இறுதி வரை சனி பகவான் எட்டாம் வீட்டில் இருந்து கொண்டு அஷ்டம சனியை நடத்துவதாலும் டிசம்பர் மாதம் பெயர்ச்சி ஆகும் சனி பகவான் ஒன்பதாம் வீட்டிற்கு செல்வதாலும் முன்னேற்ற தடையையும் உடல் நிலையில் சீற்குலைவையும் அவ்வபோது ஏற்படுத்துவார். இருபினும் குரு பகவான் நல்ல நிலையில்  இருப்பதால் பெரிய கெடுதி இல்லை.

ராகு பகவான் ஜுன் மாதம் முதல் எட்டாம் வீட்டில் இருந்து ஏழாம் வீடு செல்வதாலும் கேது பகவான் இரண்டாம் வீட்டில் இருந்து ஜென்மத்திற்கு வருவதாலும் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம் மேலும் ஏழாம் வீட்டில் நிற்கும் ராகு மனைவி வகையில் சச்சரவுகளையும் மனைவிக்கு உடல்நிலையில் பாதிப்பையும் ஏற்படுத்துவார்.

மொத்தத்தில் இந்த வருடத்தில் குருவின் சஞ்சாரம் மட்டுமே நன்றாக உள்ளது. சனி , ராகு மற்றும்  கேது போன்றோர்கள் அசுப ஸ்தானத்தில் சஞ்சரிபதால் கேடுபலனையும் கொடுக்க முயல்வார்கள். ஆகவே துர்கை வழிபாடும் ஆஞ்சநேய வழிபாடும் அவசியம்.கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை KUMBAM RASI GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , AQUARIUS ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 BY Auspicious Jothidar KALAIARASAN


கும்பம் ராசி : இதுவரை ஐந்தாம் வீட்டில் அமர்ந்து அனேக வெற்றிகளை கொடுத்த குரு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் முதல் ரோக ஸ்தானம் என்று சொல்லப்படும் ஆறாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் ஜுன் மாதம் வரை கேது பகவானும் மூன்றாம் வீட்டில் இருந்து வெற்றி வாய்ப்புகளை கொடுத்த வண்ணம் இருப்பார்.

ஆனால் குருவும் கேதுவும் ஜுன் மாதம் பெயர்ச்சி ஆகி குரு ஆறாம் வீடு செல்வதாலும் கேது பகவான் இரண்டாம் வீடு செல்வதாலும் ராகு எட்டாம் வீட்டிற்கு செல்வதாலும் சனி பகவான் தற்போது ஒன்பதாம் வீட்டில் இருப்பதாலும் வருட இறுதியில் சனி பகவான் பத்தாம் வீட்டிற்கு செல்வதாலும்

தொழில் ரீதியில் அனேக சங்கடம் வந்த வண்ணம் இருக்கும். கடன்களில் சிக்கி தவிக்கும் நிலை கொடுக்கும். நோய் நொடிகளை அள்ளி வழங்குவார் குரு பகவான். எதிரிகளை அதிகமாக சந்திக்கும் காலமாக இருக்கும்.

மேலும்      "சனி பத்தில் காரிய பங்கமடா " என்ற வாக்கிற்கு இணங்க செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் மிக பெரிய தொல்லை வர ஆரம்பிக்கும். டிசம்பர் மாதம் பிறகு தொழிலில் மிக கவனம் செலுத்துவது அவசியம். நீங்கள் விடுப்பில் இருக்கும் போது ஆடிட்டிங் நடக்கும் . அணைத்து குற்றமும் உங்கள் மீது சுமத்தப்படும். ஆகையால் கவனம் தேவை.

குரு பகவானும் ஆறாம் வீட்டில் மறைந்து பலம் இழந்து கிடப்பதால் உதவ முடியாது.

பத்தாம் வீட்டில் நிற்கும் சனியும் எட்டாம் வீட்டில் நிற்கும் ராகுவும் இரண்டாம் வீட்டில் நிற்கும் கேதுவும் தொழில், உடல்நிலை மற்றும் குடும்பம் இவை அனைத்தையும் பாதிப்பார். அலைச்சலை பெருக்குவார் எட்டாம் வீட்டு ராகு, குடும்பத்தில் பிரச்சனையை  உருவாக்குவர் கேது, பேசும் பேச்சில் கவனம் தேவை. எதையோ பேச நினைத்து அது பெரிய சண்டையில் போய் முடியும். ஆகையால் நாவடக்கம் தேவை.

மொத்தத்தில் மிக மிக கவனமாக கையாளவேண்டிய காலம் இது.

பெருமாள் வழிபாடு துர்கை வழிபாடு ஆஞ்சநேய வழிப்பாடு இவை அனைத்தும் மனதிற்கு ஆறுதலும் சுபபலனும் அவ்வபோது கிடைக்கும்.மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை MAGARAM RASI GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , CAPRICON ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 BY ONLINE ASTROLOGER KALAIARASAN


மகரம் ராசி : இது வரை ஆறாம் வீட்டில் இருந்து கொண்டு அனேக நோய் நொடிகள் மருந்து மாத்திரைகள் கடன்கள் மற்றும் சொந்தபந்தமே எதிராக நிற்கும் நிலை கொடுத்த குரு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் முதல் ஏழாம் வீடு சென்று சஞ்சாரம் செய்வார். இந்த காலங்களில்  மிகுந்த சுப பலன் நடைபெறும். சுபகாரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கணவன் மனைவி இடையே இருந்த மனவேற்றுமை விலகும். நல்ல சூழ்நிலை உருவாகும். கடன்கள் விலகும். நோய் நொடி தீரும்.

லாபஷ்தானத்தை பார்க்கும் குரு பகவான் லாபங்களை அணைத்து துறையிலும் கொடுப்பார். முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு. உடல்நிலை தேறும் மற்றும் காரிய வெற்றி உண்டு.

இந்த வருடம் ஜுன் மாதம் கேது பகவானும் மூன்றாம் வீடு என்று சொல்லப்படும் வெற்றி ஸ்தானத்திற்கு செல்ல இருப்பதால் ஜுன் மாதம் முதல் குருவும் கேதுவும் வெற்றிகளை அள்ளி அள்ளி வழங்குவார்கள்.

இந்த வருடம் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் சனி பெயர்ச்சியில் சனி பகவான் உங்களுக்கு பத்தாம் வீட்டில் இருந்து பதினோறாம் வீட்டிற்கு செல்கிறார்.

பத்தாம் வீட்டில் இருந்து கொண்டு தொழில் ரீதியில் அனேக சங்கடங்களை உருவாக்கி கொடுத்த சனி பகவான் லாபஷ்தானம் வருவது மிக சிறப்பு. அணைத்து வகையிலும் சனி பகவான் உங்களுக்கு லாபங்களை கொடுப்பார்.

தொழிலில் இருந்து வந்த சங்கடம் தீரும்.

குரு பகவான் சனி பகவான் கேது பகவான் இப்படி மூன்று வருட கோள்கள் மிகவும் பலம் பெற்றும் சுப வீட்டில் இருப்பதும் உங்களுக்கு இந்த வருடத்தை பொன்னான லாபமான வருடமாக மாற்றி தரும்.

மற்ற ராசி காரர்கள் இங்கே கிளிக் செய்யுங்கள்

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை DHANUSU RASI GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , SAGITTARIUS ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 BY ONLINE JOTHIDAR KALAIARASAN


தனுசு ராசி : இதுவரை குரு பகவான் ஏழாம் வீட்டில்  இருந்து கொண்டு அனேக வெற்றிகளையும் சுபகாரியங்களையும் நடத்தி கொடுத்தார். அப்படிப்பட்ட குரு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் எட்டாம் வீட்டில் சென்று மறைய இருக்கிறார். அதாவது குரு எட்டில் மறைந்து பலம் இழக்க போகிறார்.

இப்படி எட்டாம் வீட்டில் மறையும் குரு உடல்நிலையில் சோர்வையும் அலைச்சல் டென்சன் போன்றவற்றையும் கொடுப்பார். எந்த ஒரு வேலையையும் அலைந்து திரிந்தே முடிக்க முடியும். சுலபத்தில் ஒரு காரியமும் ஆகாது.

இருபினும் சனி பகவான் வருட இறுதிவரை லாபத்தில் இருப்பதால் பெரிய கெடுதி இல்லாமல் பார்த்து கொள்வார். தொழில் ரீதியில் லாபங்களை இந்த சனி பகவான் கணிசமாக தந்து கொண்டு இருப்பார்.

ராகு பத்திலும் கேது நாலிலும் இருந்து கொண்டு தொழில் ரீதியில் இடையூறுகளை அவ்வபோது கொடுத்த வண்ணம் இருப்பார்கள். மனத்தில் ஒருவித டென்ஷனை கேது கொடுப்பார். நாலாம் வீட்டில் நிற்கும் கேது மனத்தை கெட்ட வழியில் கொண்டு செல்வார். கெட்ட பழக்கவழக்கத்தில் சிக்க வைப்பார். மேலும் குடும்பத்தில் நிலவும் அமைதியை கெடுப்பார்.

குருவின் பார்வை நாலாம் வீட்டில் இருப்பதால் கல்வியில் முன்னேற்றம் உண்டு. மேலும் தனஷ்தானத்தை குரு பார்ப்பதால் தனவரவு ஸ்திரமாக இருக்கும். விரயங்கள் கட்டுக்குள் இருக்கும்.

மொத்தத்தில் குரு , ராகு மற்றும் கேது ஆகிய மூவரும் பலம் இழந்து இருக்கிறார்கள். சனி பகவான் மட்டுமே டிசம்பர் வரை லாபத்தில் இருக்கிறார். அதன் பிறகு சனியும் விரைய ஸ்தானம் என்று சொல்லப்படும் பன்னிரெண்டாம் வீட்டிற்கு சென்று விடுவார். ஆகையால் இந்த வருடம் டிசம்பர் வரை சுமாராக இருக்கும் . அதன் பிறகு

ஏழரை சனியும் எட்டாம் வீட்டு குருவும் பத்தாம் வீட்டு ராகுவும் நாலாம் வீட்டு கேதுவும் பாடாய் படுத்தி எடுத்து விடுவார்கள். தொழில் பாதிப்பு, விரைய செலவு , குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற அசுப பலன்கள் நடந்த வண்ணம் இருக்கும்.

மிக மிக கவனமாக கையாள வேண்டிய காலம் !!! 

விருச்சிகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை VIRICHIGAM RASI GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , SCORPIO ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 BY ONLINE JYOTHIDAR KALAIARASAN


விருச்சிகம் ராசி : இதுவரை எட்டாம் வீட்டில் மறைந்து கிடந்த குரு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் முதல் ஒன்பதாம் வீட்டிற்கு சென்று பாக்கியங்களை அள்ளி வழங்க போகிறார். இப்படி ஒன்பதாம் வீட்டில் நிற்கும் குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேலோங்கும். மரியாதை கிடைக்கும். எடுக்கும் காரியம் வெற்றி கொடுக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.

தொழில் ரீதியில் கண்டிப்பாக முன்னேற்றம் உண்டு. பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவற்றை இந்த குரு பகவான் கொடுப்பார்.

மேலும் உங்களுக்கு சனி பகவான் பண்ணிறேண்டில் இருந்து கொண்டு ஏழரை சனியை நடத்துகிறார். இப்படிப்பட்ட சனி பகவான் டிசம்பர் மாதம் ஜென்மதிற்கே வந்து விடுவார். ஜென்மத்தில் நிற்கும் சனி பகவான் உடல் நிலையை கெடுக்க முயல்வார். குருவின் பார்வை ஜென்மத்தில் இருப்பதால் பெரிய கெடுதி வராமல் தடுக்கப்படும்.

ராகு பகவான் ஜுன் மாதம் முதல் லாபத்தில் சஞ்சரிப்பார். இந்த லாபத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களுக்கு அனேக லாபங்களை கொடுப்பர். தொழில் ரீதியில் மேலும் முன்னேற்றங்களை கொடுப்பார்.

குரு பகவானும் ராகு பகவானும் நன்றாக இருப்பதால் அடுத்த வருடம் ஜுன் மாதம் வரை நன்றாக இருக்கும். இருபினும் ஏழரை சனியின் பிடியில் இருப்பதால் முழுமையான பலனை அனுபவிக்க முடியாது. இடையுறு இருக்கத்தான் செய்யும்.

ஆஞ்சநேய வழிப்பாடு மற்றும் துர்க்கை வழிபாடு ஏற்றம் கொடுக்கும்.

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை THULAM RASI GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , LIBRA ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 BY CUDDALORE DISTRICT ASTROLOGER KALAIARASAN


துலாம் ராசி : இது வரை ஒன்பதாம் வீட்டில் இருந்து கொண்டு அணைத்து பாக்கியங்களையும் வழங்கி கொண்டு இருந்து குரு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் முதல் தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் வீட்டிற்கு வந்து சஞ்சாரம் செய்வார்.

" பத்தில் குரு பதவியும் பறிபோகும் " என்ற வாக்கிற்கு இணங்க தொழில் ரீதியில் அனேக இடையூறுகளை நீங்கள் சந்திக்கக் வேண்டி இருக்கும்.

மேலும் சனியும் தற்போது ஜென்மத்தில் இருந்து கொண்டு ஏழரை சனியின் மத்திய பாகத்தை நடத்துகிறார். வருட இறுதியில் சனியும் இரண்டாம் வீடு சென்று பாத சனியை நடத்துவார். ராகுவும் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து கொண்டு நித்திரை இல்லாமல் செய்வார்.

இப்படி குரு பகவான் சனிபகவான் ராகு பகவான் மூவரும் அசுப ஸ்தானத்தில் இருந்து கொண்டு கெடு பலனை கொடுத்த வண்ணம் இருப்பார்கள்.

ஒரே ஒரு ஆறுதல் கேது பகவான் மட்டும் ஆறாம் வீட்டில் இருந்து கொண்டு உடல் ஆரோக்கியம் மற்றும் தொழில் ரீதியில் ஓரளவிற்கு வெற்றி போன்றவற்றை கொடுப்பார்.

அதிக படியான கிரகங்கள் சுபபலனை கொடுக்க இயலாத நிலையில் இருப்பதால் இந்த காலத்தை நீங்கள் கவனமாக கையாள வேண்டும்.

குறிப்பாக செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் மேல்அதிகாரிகள் உங்களை குறை சொல்லும் காலம் இது. வீண் பழியை சுமக்கும் காலம் இது.

உங்களுடைய ஜூனியர் உங்களை ஓவர்டேக் செய்யும் நேரம் இது. சூழ்நிலையை புரிந்து கொண்டு அமைதி காக்க வேண்டும். நேரம் மாறும் போது அணைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும்.

ஆஞ்சநேய வழிபாடும் குரு பகவான் வழிபாடும் துர்கை வழிபாடும் ஏற்றம் கொடுக்கும்.

Thursday, March 14, 2013

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை KANNI RASI GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , VIRGO ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 BY ASTRO KALAIARASAN


கன்னி ராசி : இதுவரை தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்து சொல்ல முடியாத துயரங்களை தொழில் ரீதியில் கொடுத்தும் எந்த ஒரு நிலையான தொழில் அமையாமலும் தொழில் அமைந்தாலும் அதில் பல போராட்டங்கள்  நிறைந்தும் இருந்ததே !!!, அப்படி பட்ட குரு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் லாபஷ்தானம் வருகிறார். இங்கே நிற்கும் ஒரு வருட காலமும் உங்களுக்கு மிகுந்த லாபங்களை உருவாக்கி கொடுப்பார்.

தொழில் ரீதியில் ஸ்திரமான நிலையை கொடுப்பார். வெகு நாளாக வேலை தேடி கொண்டு இருந்தவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும்.

மேலும் மஹா பாவிகளான சனியும் ராகுவும் குடும்பஸ்தானம் என்று சொல்லபடும்  இரண்டாம் வீட்டில் இருந்து கொண்டு குடும்பத்தில் சண்டை சச்சரவு போராட்டம் போன்றவற்றை கொடுத்தார்களே !!!,

வாக்கு ஸ்தானத்தில் சனியும் ராகுவும் இருந்து கொண்டு ஏதோ பேசினால் கூட அது பெரிய சண்டையில் முடிந்ததே  !!!!

இந்த நிலை இனி மாறும். ஏன் எனில் ராகு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் இரண்டாம் வீட்டில் இருந்து ஒன்றாம் வீட்டிற்கு வருகிறார். ஜென்மத்தில் வரும் ராகு உடல்நிலையை கொஞ்சம் கெடுக்க தான் செய்வார். இருந்தாலும் குடும்பத்தில் இருந்த பிரச்சனை , பிரிவு போன்றவை விலகும்.

சனி பகவான் வாக்கு ஸ்தானத்தில் இருந்து கொண்டு பேசம் பேச்சிலே சண்டையை உருவாக்கி கொண்டு இருப்பார் டிசம்பர் வரை. அதன் பிறகு வெற்றி ஸ்தானம் செல்லும் சனி பகவான் உங்களுக்கு தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் கொடுப்பார்.

மொத்தத்தில் டிசம்பர் வரை குருவின் சுபபலன் உண்டு அதன் பிறகு சனியும் சேர்ந்து கொண்டு சுபபலனை வாரி வழங்குவார்.

தொழில் ரீதியில் லாபங்களையும் வெற்றிகளையும் குடும்ப வாழ்வில் மகிழ்சியையும் காணும் வருடமாக இருக்கும்.

சிம்மம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை SIMMAM RASI GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , LEO ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 BY ASTRO KALAIARASAN


சிம்மம் ராசி : இதுவரை  பதினோறாம் வீட்டில் இருந்து கொண்டு பல்வேறு லாபங்களை கொடுத்த குரு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் விரைய ஸ்தானம் என்று சொல்லப்படும் பன்னிரெண்டாம் வீட்டிற்கு வருகிறார்.

இப்படி விரைய ஸ்தானத்தில் நிற்கும் குரு உங்களை வீடு வாசல் வகையிலும் மருத்துவ வகையிலும் நிறைய செலவு செய்ய வைப்பார்.

செலவு மட்டும் இல்லாமல் இன்வெஸ்ட்மென்ட் செய்யவும் வைப்பார். அதாவது வீடு வாங்குவது அல்லது கட்டுவது அல்லது நிலம் வாங்குவது போன்ற வகையில் அனேக செலவை ஏற்படுத்துவார். நினைத்து பார்க்காத வகையில் எல்லாம் செலவு வந்து கையிருப்பை கரைக்கும் காலம்  இது.

இந்த வருடம் டிசம்பர் வரை சனி பகவான் வெற்றி ஸ்தானம் என்று சொல்ல படும் மூன்றாம் வீட்டில் இருப்பதால் வெற்றிகள் மேலோங்கும் . எடுக்கும் காரியம் எதுவாக இருந்தாலும் டிசம்பர் வரை அது வெற்றி கொடுக்கும். அதன் பிறகு சனி பகவான் நாலாம் வீடு செல்வதால் சுகத்திற்கு குறை கொடுக்கும்.

அலைச்சல் டென்சன் கொடுக்கும். மண அமைதி கெடும்.

இரண்டாம் வீட்டில் நிற்கும் ராகு பணவரவில் தாமதம் மற்றும் தடைகளை கொடுப்பார். மேலும் எட்டாம் வீட்டில் இருக்கும் கேது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பார்.

இப்படி குரு பண்ணிறேண்டில் மறைந்ததும் கேது எட்டில் நிற்பதும் ராகு இரண்டில் நிற்பதும் வருட இறுதியில் சனி பகவான் நாலாம் வீட்டிற்கு செல்வதும் போராட்டம் மற்றும் சுககுறை விரயம் போன்றவை கொடுக்கும்.

டிசம்பர் வரை சனியினால் நல்ல பலன்கள் உண்டு. அதன் பிறகு வரும் காலம் கொஞ்சம் சிரமமான காலம் தான். பண பற்றாகுறை, வரவிற்கு மிஞ்சிய செலவு உடல்நல குறை போன்றவை நடந்த வண்ணம் இருக்கும்.

டிசம்பர் மாதம் பிறகு கவனமாக இருப்பது நல்லது.

கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , JUPITER TRANSIT june 2014 TO June 2015 BY ASTRO JOTHIDA MAMANI KALAIARASANகடகம் ராசி : இதுவரை விரைய ஸ்தானம் என்று சொல்லப்படும் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து கொண்டு உங்களுக்கு வரவுக்கு மிஞ்சிய செலவு மற்றும் பண பற்றாகுறை மற்றும் கடன் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் போன்றவற்றை  செய்ய வைத்தார். சிலரை நிலம் வாங்கும் படியும் வீடு வாங்கும் படியும் வீடு கட்டும் படியும் செய்தார்.

இப்படி பட்ட குருபகவான் இந்த வருடம் ஜுன் மாதம் முதல் ஜென்மதிற்கே வருகிறார்.

" ஜென்ம குரு வன வாசம் "  என்ற கூற்றிற்கு இணங்க நீங்கள் இடம் வீட்டு இடம் மாற கூடும் . தொழில் ரீதியில் மாற்றங்களை சந்திக்க வைக்கும். புத்திய மனிதர்களை புதிய இடங்களை சந்திக்க வைக்கும்.

மேலும் ஜென்ம குரு அலைச்சல் டெண்சனும் கொடுப்பார். இருபினும் குருவின் பார்வை ஐந்தாம் வீட்டிலும் ஏழாம் வீட்டிலும் ஒன்பதாம் வீட்டிலும் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைத்து இருக்கும் . தொழிலில் முன்னேற்றம்  உண்டு.

சிலருக்கு குழந்தை பாக்கியமும் கூடி வரும். தெய்வீக காரியங்கள் செய்ய வைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் கொடுக்கும்.

டிசம்பர் மாதம் வரை நாலாம் வீட்டில் நிற்கும் சனி பகவான் மனத்தில் டெண்சன் கொடுப்பார். கல்வியில் கூட மந்த நிலை தொடரும். அதன் பிறகு ஐந்தாம் வீடு செல்லும் சனி பகவான் புத்திர வகையில் சங்கடம் கொடுப்பார்.

மூன்றாம் வீட்டில் நிற்கும் ராகு எடுக்கும் காரியத்தில் வெற்றி கொடுப்பார்.

மொத்தத்தில் குரு சனி கேது ஆகிய மூவரும் நல்ல நிலையில் இல்லை . ராகு பகவான் மட்டுமே நல்ல நிலையில் இருக்கிறார்.

கவனமாக கையாள வேண்டும். இருப்பினும் ஜென்ம குரு பெரிய கெடுதியை கொடுக்க வாய்ப்பு இல்லை .

ஆகையால் இந்த வருடம் சுமாரான வருடமாக இருக்கும்.


Wednesday, March 13, 2013

மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை , Gemini zodiac Jupiter transit June 2014 to June 2015 - JYOTHIDA MAMANI KALAIARASAN


மிதுன ராசி : இதுவரை ஜென்மத்தில் இருந்து கொண்டு அலைச்சல் டென்சன் புதிய இடம் புது மனிதர்கள் என்று வசதி வாய்ப்புகள் குறைந்த இடத்தில் வாசிக்குமாறு செய்த குரு பகவான் இந்த வருடம் ஜூன் மாதம் தனஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாம் வீட்டிற்கு வருவதால் உங்கள் பேச்சிற்கு பெரிய மரியாதை கிடைக்கும்.

தொழில் ரீதியில் மரியாதையான நிலை கிடைக்கும். பணவரவில் இருந்த தடை விலகும்.

குடும்பத்தில் நிம்மதி நிலைத்து இருக்கும்.

இங்கே இருக்கும் குரு பகவான் பத்தாம் வீட்டை பார்ப்பதால் வருமானம் நன்றாக இருக்கும். தொழிலில் திருப்பதி இருக்கும்.

இந்த வருட இறுதியில் சனி பகவான் பெயர்ச்சி ஆகி ஆறாம் வீடு சென்று விடுவார். ஆறில் சனி அற்புதம் என்ற வாக்கிற்கு இணங்க உங்களுக்கு அனேக அற்புதங்களை நிகழ்த்துவார்.

நினைத்து பார்க்க முடியாத முன்னேற்றங்களை இந்த சனி பகவான் உங்களுக்கு கொடுப்பார்.

பத்தாம் வீட்டில் நிற்கும் கேது அவ்வபோது தொழிலில் இடையுறு கொடுத்தாலும் குரு பகவானின் பார்வை பத்தாம் வீட்டின் மேல் இருப்பதால் தொழிலில் பெரிய கெடுதி உண்டாக வாய்ப்பு இல்லை.

மொத்தத்தில் குருவும் சனியும் நன்றாக இருப்பதால் இந்த காலம் உங்களுக்கு ஒரு பொற்காலம் தான்.

Tuesday, March 12, 2013

ரிசப ராசி குரு பெயர்ச்சி பலன் ஜுன் 2014 முதல் ஜுன் 2015, TAURUS ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 - JYOTHISHA MAMANI KALAIARASANரிசப ராசி :இதுவரை இரண்டாம் வீட்டில் இருந்து கொண்டு அனேக பணவரவுகளையும் குடும்பத்தில் குதுகுலதையும் கொடுத்த குரு பகவான் இந்த வருடம் ஜூன் மாதம் முதல் மூன்றாம் வீட்டில் சென்று அமர்வார். மூன்றாம் வீட்டில் இருக்கும் குரு பகவான் எடுக்கும் காரியத்தில் தடைகளையும் இன்னல்களையும் ஏற்படுத்துவார். சமுதாயத்தில் முன்பு இருந்த நல்ல பெயரை கூட காப்பாற்ற கஷ்டப்பட வேண்டிய நிலை கொடுக்கும்.
இருபினும் ஏழாம் வீடு ஒன்பதாம் வீடு பதினொன்றாம் வீடு ஆகியவற்றை பார்வை செய்வதால் குடும்பத்தில் அமைதி ஒற்றுமை நிலைத்து இருக்கும். முன்னேற்றம் உண்டு. தந்தைக்கு உடல் நலம் தேறும். தொழில் ரீதியில் சிரமம் இருந்தாலும் லாபம் உண்டு.

இந்த வருடம் டிசம்பர் வரை ஆறாம் வீட்டில் நிற்கும் சனி பகவான் அற்புதங்களை நிகழ்த்துவார். தொழில் ரீதியில் முன்னேற்றம் கொடுப்பார். திடீர் திருப்பம் உண்டு.

லாப வீட்டில் நிற்கும் கேதுவும் தொழில் ரீதியில் லாபங்களை பெற்று தருவார்.

மொத்தத்தில் சனி பகவான் டிசம்பர் வரை ஆறாம் வீட்டில் இருப்பதாலும் கேது பதினொன்றில் இருப்பதாலும் இந்த வருட இறுதி வரை பெரிய பாதிப்பு தொழில் ரீதியில் இருக்க வாய்ப்பு இல்லை.

ஆனால் டிசம்பர் பிறகு சனி பகவான் ஏழாம் வீட்டிற்கு சென்று கண்ட சனியை நடத்துவதாலும் குரு பலம் இழந்து நிற்பதாலும் 2015ஜனவரி முதல்  2015 மே மாதம் வரை உள்ள காலத்தை கவனமாக கையாள வேண்டும். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆஞ்சநேய வழிபாடு ஏற்றம் கொடுக்கும்.


Monday, March 11, 2013

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை ,GURU PEYARCHI PALAN June 2014 TO June 2015 : ARIES ZODIAC JUPITER TRANSIT - JOTHISHA MAMANI KALAIARASANமேஷம் : இதுவரை மூன்றாம் வீட்டில் இருந்து இடையூறுகளை கொடுத்த குரு பகவான் இந்த வருடம் ஜூன் மாதம் முதல் நான்காம் வீடு செல்ல இருக்கிறார். அங்கே ஒரு வருடம் சஞ்சாரம் செய்வார். நாலாம் வீட்டில் நிற்கும் குருவும் பெரிய சுப பலனை கொடுக்க வாய்ப்பு இல்லை. இருபினும் குருவின் பார்வை பதியும் இடத்தில் சுப பலன் நல்கும். அந்த வகையில் குரு பகவான் எட்டாம் வீட்டை பார்வை செய்வதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெரிய கெடுதி கொடுக்க மாட்டார். பத்தாம் வீட்டையும் தன்னுடய பார்வையில் வைத்து இருப்பதால் தொழில் ரீதியில் உண்டாகும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றல் கொடுக்கும். விரயங்களும் கட்டுக்குள் இருக்கும்.

இருபினும் ஏழாம் வீட்டில் இருந்து கொண்டு சனி பகவான் கண்ட சனியை நடத்துவதால் பயணங்களில் எச்சரிக்கை தேவை. உடல் நிலை இடை இடையே கெடும் அமைப்பு உண்டு. இந்த வருடம் டிசம்பர் மாதம் சனி பகவான் பெயர்ச்சி ஆகி எட்டாம் இடம் என்று சொல்லப்படும் அஷ்டம ஸ்தானம் சென்று அஷ்டம சனியை நடத்துவார். இந்த அஷ்டம சனி அனேக போராட்டங்களை கொடுக்கும். உடல்நிலை பாதிக்கும். மனதில் திடமில்லாத நிலை கொடுக்கும்.

ராகு பகவான் ஆறாம் வீட்டில் இருந்து கொண்டு எந்த வித பெரிய பாதிப்பையும் உடல்நிலையில் வராமல் பார்த்து கொள்வார்.

மொத்தத்தில் இந்த காலம் குரு பலன் இல்லாமல் இருப்பதாலும் சனி பகவான் கண்ட சனி மற்றும் அஷ்டம சனியை நடத்துவதாலும் கேது பன்னிரெண்டில் இருப்பதாலும் போராட்டங்களும் உடல்நிலை சீர்கேடும் தவிர்க்க முடியாத ஒன்று. ராகு பகவான் ஆறாம் வீட்டில் நிற்பது மட்டுமே மனதிற்கு ஆறுதலை அவ்வபோது தரும்.

ஆஞ்சநேய வழிப்படும் குரு பகவான்  வழிபாடும் துர்க்கை வழிப்படும் ஏற்றம் தரும்.

Saturday, March 9, 2013

குரு பகவான் பரிகாரம் - Remedy for Jupiter / guru at inauspicious house - JOTHISHA MAMANI KALAIARASANகுரு பகவான் சஞ்சாரம் சரி இல்லாதவர்கள் கீழ்கண்ட பரிகாரம் செய்தால் கெடுபலன் குறைந்து சுப பலன் நடக்கும்.

1.வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்குவிரதம் இருங்கள்.
2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 
3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.
4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.
5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.
6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.
7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.
8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.
9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.
10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

Sunday, March 3, 2013

கேது : சாஸ்திரம் புராணம் பக்தி கொடுப்பார் :ketu prediction- ஜோதிட மாமணி கலையரசன், காட்டுமன்னார்கோயில்கேது பகவான் விருசிகத்தில் உச்சம் பெற்று இருந்தால் கட்டாயம் ஜோதிடம் சாஸ்திரம் மற்றும் புராணத்தில் ஈடுபாடு கொடுக்கும். ஜோதிடம் சாஸ்திரத்தில் ஆராய்ச்சி செய்பவர் ஜாதகத்தில் கூட விருசிகத்தில் கேது இருப்பார்.

மேலும் மீனத்தில் கேது இருந்தால் அவர் தெய்வ பக்தி மிகுந்தும் அவர் ஜோதிடம் மற்றும் சாஸ்திரத்தில் ஈடுபாடும் கொண்டு இருப்பார்.

ஆனால் கேது பண்ணிறேண்டில் இருந்தால் அந்த மனிதன் ஏதாவது ஒரு வயதில் தன்னை உணர்ந்து  இறைவழியில் செல்ல முயற்சி செய்வார். பக்தி வழியில் செல்வார்.


Friday, March 1, 2013

ராசிபலன் : குழந்தை பாக்கியம் -- தத்து புத்திர யோகம் -- வாரிசு யோகம் -- புத்திர சந்தானம் KUZHANTHAI BAKKIYAM - ONLINE TAMIL HOROSCOPEஐந்தாம் வீடு புத்திர ஸ்தானம் என்று அழைக்கபடுகிறது.மேலும் ஐந்துக்கு ஐந்தாம் வீடான ஒன்பதாம் இடத்தையும் பார்க்க வேண்டும்.

பொதுவாக பாவிகள் என்று சொல்லபடுகின்ற சனி செவ்வாய் ராகு கேது போன்ற கிரகங்கள் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம் கொடுகிறது.

அதிலும் சனி ஐந்தாம் வீட்டில் இருந்தால் அதை சாஸ்திர ரீதியாக

 " தத்து புத்திர யோகம் " என்று சொல்ல படுகிறது. 

மேலும் ஒன்பதில் ராகு பெண் ஜாதகத்தில் இருந்தால் அந்த பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் அனேக தடை உண்டாகிறது.