01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Friday, March 15, 2013

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை DHANUSU RASI GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , SAGITTARIUS ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 BY ONLINE JOTHIDAR KALAIARASAN


தனுசு ராசி : இதுவரை குரு பகவான் ஏழாம் வீட்டில்  இருந்து கொண்டு அனேக வெற்றிகளையும் சுபகாரியங்களையும் நடத்தி கொடுத்தார். அப்படிப்பட்ட குரு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் எட்டாம் வீட்டில் சென்று மறைய இருக்கிறார். அதாவது குரு எட்டில் மறைந்து பலம் இழக்க போகிறார்.

இப்படி எட்டாம் வீட்டில் மறையும் குரு உடல்நிலையில் சோர்வையும் அலைச்சல் டென்சன் போன்றவற்றையும் கொடுப்பார். எந்த ஒரு வேலையையும் அலைந்து திரிந்தே முடிக்க முடியும். சுலபத்தில் ஒரு காரியமும் ஆகாது.

இருபினும் சனி பகவான் வருட இறுதிவரை லாபத்தில் இருப்பதால் பெரிய கெடுதி இல்லாமல் பார்த்து கொள்வார். தொழில் ரீதியில் லாபங்களை இந்த சனி பகவான் கணிசமாக தந்து கொண்டு இருப்பார்.

ராகு பத்திலும் கேது நாலிலும் இருந்து கொண்டு தொழில் ரீதியில் இடையூறுகளை அவ்வபோது கொடுத்த வண்ணம் இருப்பார்கள். மனத்தில் ஒருவித டென்ஷனை கேது கொடுப்பார். நாலாம் வீட்டில் நிற்கும் கேது மனத்தை கெட்ட வழியில் கொண்டு செல்வார். கெட்ட பழக்கவழக்கத்தில் சிக்க வைப்பார். மேலும் குடும்பத்தில் நிலவும் அமைதியை கெடுப்பார்.

குருவின் பார்வை நாலாம் வீட்டில் இருப்பதால் கல்வியில் முன்னேற்றம் உண்டு. மேலும் தனஷ்தானத்தை குரு பார்ப்பதால் தனவரவு ஸ்திரமாக இருக்கும். விரயங்கள் கட்டுக்குள் இருக்கும்.

மொத்தத்தில் குரு , ராகு மற்றும் கேது ஆகிய மூவரும் பலம் இழந்து இருக்கிறார்கள். சனி பகவான் மட்டுமே டிசம்பர் வரை லாபத்தில் இருக்கிறார். அதன் பிறகு சனியும் விரைய ஸ்தானம் என்று சொல்லப்படும் பன்னிரெண்டாம் வீட்டிற்கு சென்று விடுவார். ஆகையால் இந்த வருடம் டிசம்பர் வரை சுமாராக இருக்கும் . அதன் பிறகு

ஏழரை சனியும் எட்டாம் வீட்டு குருவும் பத்தாம் வீட்டு ராகுவும் நாலாம் வீட்டு கேதுவும் பாடாய் படுத்தி எடுத்து விடுவார்கள். தொழில் பாதிப்பு, விரைய செலவு , குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற அசுப பலன்கள் நடந்த வண்ணம் இருக்கும்.

மிக மிக கவனமாக கையாள வேண்டிய காலம் !!! 

No comments :

Post a Comment