01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, March 13, 2013

மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை , Gemini zodiac Jupiter transit June 2014 to June 2015 - JYOTHIDA MAMANI KALAIARASAN


மிதுன ராசி : இதுவரை ஜென்மத்தில் இருந்து கொண்டு அலைச்சல் டென்சன் புதிய இடம் புது மனிதர்கள் என்று வசதி வாய்ப்புகள் குறைந்த இடத்தில் வாசிக்குமாறு செய்த குரு பகவான் இந்த வருடம் ஜூன் மாதம் தனஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாம் வீட்டிற்கு வருவதால் உங்கள் பேச்சிற்கு பெரிய மரியாதை கிடைக்கும்.

தொழில் ரீதியில் மரியாதையான நிலை கிடைக்கும். பணவரவில் இருந்த தடை விலகும்.

குடும்பத்தில் நிம்மதி நிலைத்து இருக்கும்.

இங்கே இருக்கும் குரு பகவான் பத்தாம் வீட்டை பார்ப்பதால் வருமானம் நன்றாக இருக்கும். தொழிலில் திருப்பதி இருக்கும்.

இந்த வருட இறுதியில் சனி பகவான் பெயர்ச்சி ஆகி ஆறாம் வீடு சென்று விடுவார். ஆறில் சனி அற்புதம் என்ற வாக்கிற்கு இணங்க உங்களுக்கு அனேக அற்புதங்களை நிகழ்த்துவார்.

நினைத்து பார்க்க முடியாத முன்னேற்றங்களை இந்த சனி பகவான் உங்களுக்கு கொடுப்பார்.

பத்தாம் வீட்டில் நிற்கும் கேது அவ்வபோது தொழிலில் இடையுறு கொடுத்தாலும் குரு பகவானின் பார்வை பத்தாம் வீட்டின் மேல் இருப்பதால் தொழிலில் பெரிய கெடுதி உண்டாக வாய்ப்பு இல்லை.

மொத்தத்தில் குருவும் சனியும் நன்றாக இருப்பதால் இந்த காலம் உங்களுக்கு ஒரு பொற்காலம் தான்.

No comments :

Post a Comment