01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Friday, March 15, 2013

மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை MAGARAM RASI GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , CAPRICON ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 BY ONLINE ASTROLOGER KALAIARASAN


மகரம் ராசி : இது வரை ஆறாம் வீட்டில் இருந்து கொண்டு அனேக நோய் நொடிகள் மருந்து மாத்திரைகள் கடன்கள் மற்றும் சொந்தபந்தமே எதிராக நிற்கும் நிலை கொடுத்த குரு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் முதல் ஏழாம் வீடு சென்று சஞ்சாரம் செய்வார். இந்த காலங்களில்  மிகுந்த சுப பலன் நடைபெறும். சுபகாரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கணவன் மனைவி இடையே இருந்த மனவேற்றுமை விலகும். நல்ல சூழ்நிலை உருவாகும். கடன்கள் விலகும். நோய் நொடி தீரும்.

லாபஷ்தானத்தை பார்க்கும் குரு பகவான் லாபங்களை அணைத்து துறையிலும் கொடுப்பார். முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு. உடல்நிலை தேறும் மற்றும் காரிய வெற்றி உண்டு.

இந்த வருடம் ஜுன் மாதம் கேது பகவானும் மூன்றாம் வீடு என்று சொல்லப்படும் வெற்றி ஸ்தானத்திற்கு செல்ல இருப்பதால் ஜுன் மாதம் முதல் குருவும் கேதுவும் வெற்றிகளை அள்ளி அள்ளி வழங்குவார்கள்.

இந்த வருடம் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் சனி பெயர்ச்சியில் சனி பகவான் உங்களுக்கு பத்தாம் வீட்டில் இருந்து பதினோறாம் வீட்டிற்கு செல்கிறார்.

பத்தாம் வீட்டில் இருந்து கொண்டு தொழில் ரீதியில் அனேக சங்கடங்களை உருவாக்கி கொடுத்த சனி பகவான் லாபஷ்தானம் வருவது மிக சிறப்பு. அணைத்து வகையிலும் சனி பகவான் உங்களுக்கு லாபங்களை கொடுப்பார்.

தொழிலில் இருந்து வந்த சங்கடம் தீரும்.

குரு பகவான் சனி பகவான் கேது பகவான் இப்படி மூன்று வருட கோள்கள் மிகவும் பலம் பெற்றும் சுப வீட்டில் இருப்பதும் உங்களுக்கு இந்த வருடத்தை பொன்னான லாபமான வருடமாக மாற்றி தரும்.

மற்ற ராசி காரர்கள் இங்கே கிளிக் செய்யுங்கள்

No comments :

Post a Comment