01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Friday, March 15, 2013

மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை MEENAM RASI GURU PEYARCHI PALANGAL June 2014 TO June 2015 , PISCES ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 BY ASTRO KALAIARASAN jothida nilayam kattumannarkoil - Auspicious Astrologer kalaiarasan


மீனம் ராசி : மீன ராசி நேயர்களே , இதுவரை நாலாம் வீட்டில் அமர்ந்து சுகத்திற்கு குறையையும் மனத்தில் நிம்மதி இல்லாத நிலையையும் கொடுத்த குரு பகவான் இந்த வருடம் ஜுன் மாதம் உங்களுக்கு ஐந்தாம் வீடான கடகத்தில் உச்சம் பெறுகிறார்.

இப்படி ஐந்தாம் வீட்டில் உச்சம் பெரும் குரு பகவான் உங்களுக்கு அணைத்து துறையிலும் வெற்றி வாகை சூடி தருவார். பண வகையில் நல்ல முன்னேற்றம் கொடுப்பார். வீட்டில் இருந்த குறைகள் நீங்கள். நிலம் வகையில் இருந்த தகராறு சரிசெய்யப்படும்.

மாணவர்களுக்கு பெரிய வெற்றி கொடுக்கும். கல்வியில் நல்ல நிலையை சுலபமாக பெரும் நிலை கொடுக்கும்.

குழந்தை பாக்கியம் பலர் பெறுவார்கள் . குடும்பத்தில் நிம்மதி மற்றும் சுபகாரியம் நடைபெறும்.

தெய்வீக காரியங்கள் நடை பெரும். குல தெய்வ வழிபாடு சென்று வருவீர்கள். ஆன்மீக செய்திகளை  கேட்கும் வாய்ப்பு கொடுக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொடுக்கும்.

இப்படி ஐந்தாம் வீட்டில் நிற்கும் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டை பார்வை செய்கிறார். ஆகையால் தொழில் ரீதியில் முன்னேற்றம் கண்டிப்பாக கொடுப்பார். தந்தைக்கு உடல்நிலை சீராகும். பயணங்கள் கொடுக்கும்.

லாபஸ்தனத்தை பார்வை செய்யும் குரு பகவான் எல்லா துறையிலும் லாபங்களை அள்ளி தருவார். உடல்நிலை நன்றாக இருக்கும்.பொதுவாக இந்த குரு பெயர்ச்சி உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்வார்.

இருபினும் வருட இறுதி வரை சனி பகவான் எட்டாம் வீட்டில் இருந்து கொண்டு அஷ்டம சனியை நடத்துவதாலும் டிசம்பர் மாதம் பெயர்ச்சி ஆகும் சனி பகவான் ஒன்பதாம் வீட்டிற்கு செல்வதாலும் முன்னேற்ற தடையையும் உடல் நிலையில் சீற்குலைவையும் அவ்வபோது ஏற்படுத்துவார். இருபினும் குரு பகவான் நல்ல நிலையில்  இருப்பதால் பெரிய கெடுதி இல்லை.

ராகு பகவான் ஜுன் மாதம் முதல் எட்டாம் வீட்டில் இருந்து ஏழாம் வீடு செல்வதாலும் கேது பகவான் இரண்டாம் வீட்டில் இருந்து ஜென்மத்திற்கு வருவதாலும் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம் மேலும் ஏழாம் வீட்டில் நிற்கும் ராகு மனைவி வகையில் சச்சரவுகளையும் மனைவிக்கு உடல்நிலையில் பாதிப்பையும் ஏற்படுத்துவார்.

மொத்தத்தில் இந்த வருடத்தில் குருவின் சஞ்சாரம் மட்டுமே நன்றாக உள்ளது. சனி , ராகு மற்றும்  கேது போன்றோர்கள் அசுப ஸ்தானத்தில் சஞ்சரிபதால் கேடுபலனையும் கொடுக்க முயல்வார்கள். ஆகவே துர்கை வழிபாடும் ஆஞ்சநேய வழிபாடும் அவசியம்.No comments :

Post a Comment