01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Tuesday, March 12, 2013

ரிசப ராசி குரு பெயர்ச்சி பலன் ஜுன் 2014 முதல் ஜுன் 2015, TAURUS ZODIAC JUPITER TRANSIT June 2014 TO June 2015 - JYOTHISHA MAMANI KALAIARASANரிசப ராசி :இதுவரை இரண்டாம் வீட்டில் இருந்து கொண்டு அனேக பணவரவுகளையும் குடும்பத்தில் குதுகுலதையும் கொடுத்த குரு பகவான் இந்த வருடம் ஜூன் மாதம் முதல் மூன்றாம் வீட்டில் சென்று அமர்வார். மூன்றாம் வீட்டில் இருக்கும் குரு பகவான் எடுக்கும் காரியத்தில் தடைகளையும் இன்னல்களையும் ஏற்படுத்துவார். சமுதாயத்தில் முன்பு இருந்த நல்ல பெயரை கூட காப்பாற்ற கஷ்டப்பட வேண்டிய நிலை கொடுக்கும்.
இருபினும் ஏழாம் வீடு ஒன்பதாம் வீடு பதினொன்றாம் வீடு ஆகியவற்றை பார்வை செய்வதால் குடும்பத்தில் அமைதி ஒற்றுமை நிலைத்து இருக்கும். முன்னேற்றம் உண்டு. தந்தைக்கு உடல் நலம் தேறும். தொழில் ரீதியில் சிரமம் இருந்தாலும் லாபம் உண்டு.

இந்த வருடம் டிசம்பர் வரை ஆறாம் வீட்டில் நிற்கும் சனி பகவான் அற்புதங்களை நிகழ்த்துவார். தொழில் ரீதியில் முன்னேற்றம் கொடுப்பார். திடீர் திருப்பம் உண்டு.

லாப வீட்டில் நிற்கும் கேதுவும் தொழில் ரீதியில் லாபங்களை பெற்று தருவார்.

மொத்தத்தில் சனி பகவான் டிசம்பர் வரை ஆறாம் வீட்டில் இருப்பதாலும் கேது பதினொன்றில் இருப்பதாலும் இந்த வருட இறுதி வரை பெரிய பாதிப்பு தொழில் ரீதியில் இருக்க வாய்ப்பு இல்லை.

ஆனால் டிசம்பர் பிறகு சனி பகவான் ஏழாம் வீட்டிற்கு சென்று கண்ட சனியை நடத்துவதாலும் குரு பலம் இழந்து நிற்பதாலும் 2015ஜனவரி முதல்  2015 மே மாதம் வரை உள்ள காலத்தை கவனமாக கையாள வேண்டும். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆஞ்சநேய வழிபாடு ஏற்றம் கொடுக்கும்.


No comments :

Post a Comment