01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்
ONLINE-பணம் சம்பாதிக்க

Friday, March 15, 2013

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் மே 2013 முதல் மே 2014 வரை THULAM RASI GURU PEYARCHI PALANGAL MAY 2013 TO MAY 2014 , LIBRA ZODIAC JUPITER TRANSIT MAY 2013 TO MAY 2014 BY CUDDALORE DISTRICT ASTROLOGER KALAIARASAN


துலாம் ராசி : இதுவரை எட்டில் இருந்து பல துன்பங்களையும் இடையூறுகளையும் தோல்விகளையும் ஆரோக்கிய குறையையும்  கொடுத்த குரு பகவான் 2013 மே மாதம் உங்களுக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு வருகிறார்.

இது நல்ல அமைப்பு . சுகங்கள் கூடும். நல்ல தொழில் முன்னேற்றம் கொடுக்கும். குடும்பத்தில் சந்தோசம் நிலைக்கும். மகான்களின் சந்திப்பு மற்றும் புனித பயணம் போன்றவை கொடுக்கும்.

தெய்வீக ஈடுபாடு கொடுக்கும். மேலும் வெளிநாடு பயணம் கொடுக்கும். கல்வியில் வெற்றி மேல்படிப்பு கொடுக்கும். 

தந்தையின் உடல்நிலை தேறும். மேலும் உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சகோதர ஒற்றுமை கொடுக்கும் . மனத்தில் தைரியம் கொடுக்கும். அண்டை வீட்டினரிடம் இருந்த சண்டை சச்சரவு தீரும்.


புத்திரபாக்கியம் கொடுக்கும். லாட்டரி ரேஸ் மூலம் எதிர்பாராமல் பணம் வரும். ஷேர் மார்கெட் முன்னேற்றம் கொடுக்கும். தெய்வீக சத்சங்கம் சென்று வருதல் தெய்வீக காரியங்களில் ஈடுபடுதல் போன்ற அமைப்பு கொடுக்கும்.

இருபினும் சனி உங்களுக்கு ஜென்மத்தில் இருந்து ஏழரை சனியை நடத்துகிறார். ஆகையால் எவ்வளவு நல்ல பலனை குரு கொடுத்தாலும் முழுமையாக அனுபவிக்கக் விட மாட்டான் இந்த ஜென்ம சனி. 

ஜென்ம சனி உடல்நிலையை அவ்வபோது கெடுப்பான். கெடுத்தாலும் குரு சரி செய்வார்.

மனதில் ஒருவித பயத்தை சனி கொடுப்பான். குரு தைரிய ஸ்தானத்தை பார்ப்பதால் பெரிய பாதிப்பு இல்லை.

சனி தொழிலில் சரிவும் மனைவியிடன் ஒற்றுமை குறைவும் கொடுப்பான். இருபினும் குரு சரி செய்வார்.

பத்தாம் இடத்தை சனி பார்ப்பதால் ஜீவன வகையில் சனி கொஞ்சம் இடைஞ்சல் கொடுக்கத்தான் செய்வான் . இது தவிர்க்க முடியாது. 

சனி ஜென்மத்தில் இருப்பதால் ஆஞ்சநேய வழிபாடு செய்யுங்கள்.

மற்ற ராசி காரர்கள் இங்கே கிளிக் செய்யுங்கள்

No comments:

Post a Comment