01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்
ONLINE-பணம் சம்பாதிக்க

Monday, March 11, 2013

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன் மே 2013 முதல் மே 2014 வரை ,GURU PEYARCHI PALAN MAY 2013 TO MAY 2014 : ARIES ZODIAC JUPITER TRANSIT - JOTHISHA MAMANI KALAIARASANமேஷம் : இதுவரை இரண்டில் இருந்து சொன்ன சொல்லுக்கு மரியாதை வாங்கி கொடுத்த குரு இப்போது மூன்றாம் இடத்தில் சென்று மறைய போகிறார். குருவின் பலன் இல்லை.அதாவது கல்வியில் தோல்வி. படிக்கும் ஆசை குறையும் நிலை. மனத்தில் தைரியம் இல்லாத நிலை. சகோதர ஒற்றுமை இன்மை. போன்ற சூழ்நிலை கொடுக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் வெறுப்புக்கு ஆளாக கூடும். அமைதியாக இருக்க பாருங்கள்.

ஏழாம் இடத்தை பார்ப்பதால் மனைவியின் உடல் நிலை சரியாகும். தொழில் ரீதியில் லாபம் கொடுக்கும். ஒன்பதாம் இடத்தையும் பார்ப்பதால் தந்தைக்கு கெடுதி கொடுக்காது. லாபஸ்தனதையும் பார்ப்பதால் பெரிய நஷ்டம் ஒன்றும் வராது. இருந்தாலும் குரு மூன்றில் மறைந்து இருப்பதால் அவரால் பெரிய நன்மை கொடுக்க முடியாது.

மேலும் ஏழில் சனி இருந்துகொண்டு கண்ட சனியை நடத்துகிறார். ஆகயால் இந்த மே மாதம் முதல் நீங்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு மேலோங்கும். தொழில் ரீதியில் பல சரிவு கொடுக்கும்.

இந்த சனி தந்தை உடலுக்கு கெடுதி கொடுக்கும். உங்கள் உடல்நிலையும் அடிகடி பாதிக்கும். விபத்து கூட கொடுக்கும். நாலாம் இடத்தையும் பார்ப்பதால் கல்வி தடை அசையா சொத்தில் பிரச்சனை கொடுக்கும் தாய்க்கு தோசம் கொடுக்கும்.

மொத்தத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இந்த வருடத்தை ஓட்ட வேண்டும்.

மற்ற ராசி காரர்கள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பிரபல ஜாதகம் இங்கே          முன் பக்கம் செல்

No comments:

Post a Comment