01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Sunday, March 24, 2013

ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் அடிகடி ஜெயில் வாசம் செய்வது ஏன்? ஜோதிட பார்வை . Hindi actor SANJAY DUTT : why he is frequently getting imprisonment ஜெயில் வாசம் சிறை வாசம் by ஜோதிட நிலையம் காட்டுமன்னார்கோயில்


பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் தற்போதைய காலங்களில் அடிகடி ஜெயில் சென்று வருகிறார். தற்போது கூட அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கக் வேண்டும் என்று மும்பை கோர்ட் தண்டனை விதித்து இருக்கிறது.

இது ஏன் ? இவர் ஜாதகத்தை ஆராய்வோம்......

சஞ்சய் தத் ஜூலை 29 ,1959 இல் மும்பை யில் பிறந்து இருக்கிறார்.

அவர் விருச்சக லக்னம் ரிசப ராசி .

லக்னாதிபதி செவ்வாய் சூரியன் வீட்டில் சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கிறான். ஆகையால் கலை துறையில் மிக பெரிய அளவில் சாதனை செய்தார்.

பத்தாம் வீட்டில் சுக்கிரன் கலைத்துறையில் முன்னேற்றம் கொடுத்தான்.

ஏழாம்  இடத்தில் சந்திரன் இருந்தால் நல்ல அழகு வாய்ந்த மனைவி அமைவாள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதேபோல் இவருக்கும் அழகான மனைவி அமைந்தாள்.

ஏழுக்கு உடைய சுக்கிரன் ஆறுக்கு உடைய செவ்வாய் யுடன் சேர்த்தான். இருவரையும் பிரித்து வைத்தான்.

மேலும் குடும்ப ஸ்தானத்தில் இருக்கின்ற சனி குடும்ப வாழ்கையே இல்லாமல் செய்தான்.

( ஜெயலலிதா விற்கு கூட இரண்டில் சனி --- இவருக்கும் சரியான மணவாழ்வு அமையவில்லை )

நான் அடிகடி பலருக்கும் கூறுவதுண்டு. ஆறாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் சேர்ந்து இருந்தால் கண்டிப்பாக பிரிவு கொடுக்கும்.அந்த தசா புத்தி காலத்தில் மிகவும் கெடுதி கொடுக்கும்.

பதினொன்றில் ராகு தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் கொடுத்தான்.கலை துறையில் சிறந்து விளங்க செய்தான்.

ஒருவர் சிறை செல்ல வேண்டும் என்றால் லக்னாதிபதி இரண்டு மற்றும் பன்னிரெண்டாம் அதிபதியுடன் சேர்ந்து காண பட வேண்டும்.

இவர் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் பன்னிரெண்டாம் அதிபதி சுக்கிரனுடம் இணைந்து பத்தாம் வீட்டில் இருப்பதாலும் 

இரண்டில் சனி மற்றும் பண்ணிறேண்டில் மாந்தி போன்ற பாவிகள் இருப்பதாலும் எவ்வளவு சொத்து சுகம் இருந்தாலும் ஜெயில் வாசம் கொடுகிறது.

லக்னாதிபதியும் ஆறாம் அதிபதியுமாய் செவ்வாய் இருப்பதால் கோர்ட் கேஸ் என்று இவரை அலைய வைக்கிறது.

தற்போது குருதிசை ராகு புத்தி நடைபெறுகிறது. குரு பண்ணிறேன்றில் இருக்கிறார். அவர் இந்த இடத்தின் பலனை தர வேண்டும். ஆகையால் சுக்கிரன் கொடுக்க வேண்டிய ஜெயில் தண்டனையை இவரே கொடுக்கிறார்.

மேலும் இவருக்கு மே மதம் வரை குரு ஜென்மத்தில் இருக்கிறார். இது வன வாசம் போல இருக்கும். 2014 மே மாதம் பிறகு குரு இரண்டாம் இடம் வருவார். இவர் சொல்லுக்கு மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். 

அப்போது இவர் மேல் உள்ள வழக்குகள் இவர் சொல்லும் வார்த்தைகளால் தள்ளுபடி கூட செய்யப்படலாம்.

ஏனெனில் குரு பலனும் உண்டு. சனியும் ஆறாம் வீட்டில் இருந்து அற்புதங்களை நிகழ்த்துவார். 

 ( 2014 டிசம்பர் குள் இவருக்கு அவார்டு கூட கிடக்கும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் சனி ஆறில் அற்புதம் .)

No comments :

Post a Comment