01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Friday, March 29, 2013

இறை தூதர் இயேசு நாதர் ஜாதகம் - JESUS CHRIST HOROSCOPE BY KALAIARASAN KATTUMANNARKOIL
29 - 3-2013 வெள்ளி கிழமை .இன்று கிறிஸ்துவர்களின் புனித வெள்ளி. இந்த நாளில் இறை தூதர் இயேசு நாதர் ஜாதகத்தை பற்றி எழுதுவதை புனிதமாக நினைக்கிறேன்.

இயேசு நாதர் கன்னி லக்னத்தில் பிறந்து இருக்கிறார். 

இயேசு நாதர் பிறக்கும் போதே சந்திரன் உடன் சனி இருக்கிறான். அதாவது ஜென்ம நடை சனி  பெற்ற காரணத்தால் அவர் பிறந்த உடனே அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை அவருக்கும் அவரது தாய்க்கும் அமைந்தது. 

அவரது லக்னத்தை சனி பார்ப்பதால் அவர் பல இன்னல்களை அனுபவிக்கக் செய்தது.

மேலும் சந்திரனுக்கு பத்தாம் இடத்தையும் சனி பார்ப்பதால் அவர் ஒரு சாதாரண உடல் உழைப்பு செய்யும் ஆசாரி ( கார்பென்டர் ) தொழில் செய்யும் நிலை ஏற்பட்டது.


ஒன்பதாம் இடத்தில் கேது இருப்பதால் அவர் ஆத்மா என்று சொல்லபடுகின்ற தன்னை உணர்ந்தார். ஆன்மீகத்தில் திளைத்து இருந்தார்.

நவாம்ச லக்னாதிபதி,  குருவுடனும் கேது வுடனும் இணைந்து இருப்பதால் அவர் ஒரு துறவு வாழ்க்கை வாழுமாறு செய்தது.


ஒன்பதாம் இடத்தில் கேது இருந்தால் துறவு மண பான்மை கொடுக்கும். இவருக்கும் இந்த அமைப்பு தான்.

ஆத்மா காரகன் குரு ஹம்ச யோகம் பெற்று இருக்கிறார். கஜகேசரி யோகம் பெற்று இருக்கிறார்.ஆகையால் மிகுந்த ஆத்ம சக்தி வாய்ந்தவராக இருந்தார்.

சிறு வயதில் அவருக்கு சனி திசை நடந்தது. வறுமையும் எளிமையும் ஆன வாழ்க்கை அமைந்தது.

12 வயதில் ஜோசப் மற்றும் மேரி இயேசுவை அழைத்து கொண்டு ஜெருசலம் வந்த போது அங்கே இயேசு நாதர் காணாமல் போனார். பிறகு சனி திசை குரு புத்தியில் அவர் மேரி இக்கு மீண்டும் கிடைத்தார்.

அடுத்து வந்தது  புதன் திசை. புதன் என்றாலே அறிவு புத்தி . இந்த திசையில் தான் ஆத்மா என்று சொல்ல படுகின்ற தன்னை பற்றி தீவிர அறிவு பெற்றார். உள்நோக்கி பயணம் செய்து நான் யார் என்பதை தெரிந்து கொண்டார்.

குருவும் சனியும் சேர்ந்தால் அவரை பெரிய ஆசிரியராக ஆக்கும். இவருக்கும் இந்த அமைப்பு உண்டு .

( புத்த மதத்தை தோற்றுவித்த புத்தர் ஜாதகத்திலும் குருவும் சனியும் சேர்ந்து தான் இருகிறார்கள் )

அடுத்தது கேது திசை வந்தது . கேது ஞானம் கொடுப்பான் அவன் ஒன்பது என்ற கர்ம ஸ்தானத்தில் இருப்பதால் இவருக்கு மிக உயர்ந்த ஞானம் கிடைத்தது.

மேலும் கேது திசை நடக்கும் போது தான் இவர் குன்றின் மேலே நின்று கொண்டு தனது சீடர்களுக்கு இறை பக்தியையும் உபதேசமும் கொடுத்தார்.

இத்தனை நல்லது நடந்தாலும் அவருக்கு ஏன் கொடூரமான மரணம் :

லக்னத்தை பாவி சனியும் செவ்வாயும் பார்ப்பதால் ரத்தம் சிந்தி சித்திரவதை பட்டு சாகும் நிலை ஏற்பட்டது.

மரணத்தை  கொடுக்க கூடிய சுக்கிரன் வீட்டில் இருக்கின்ற அதே கேது தான் இவருக்கு மரணத்தையும் கொடுத்தான்.

மேலும் 9 -4 - 30 AD அன்று குரு பகவான் ஏழாம் வீட்டில் இருந்து பெயர்ச்சி ஆகும் போது இயேசு நாதர் மீண்டும் உயிர்த்தெழுந்தார். 

இதுவும் கேது திசையில் தான் நடந்தது. ஒரு மனிதன் தன்னை உணர்ந்து ஞானம் அடைய வேண்டும் என்றால் அவனுக்கு கேது முக்கிய பங்கு வகிக்கிறார். 
  


இயேசு நாதர் பிறந்த தேதி மற்றும் ஜாதக விபரத்தை நான் Mr.Cyril Fagan , 1937- ம் ஆண்டு எழுதிய WINTER ISSUE OF AMERICAN JOURNAL OF ASTROLOGY என்ற புத்தகத்தில் இருந்து எடுத்து கொண்டேன். அவருக்கு எனது நன்றி.

மேலும் பல புனித ஜாதகங்கள் இங்கே  

No comments :

Post a Comment