01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Tuesday, March 26, 2013

ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகம் ஒரு பார்வை - LORD SRI KRISHNA HOROSCOPE ANALYSIS by ASTROLOGER KALAIARASAN KATTUMANNARKOIL


இன்று இந்த வலைத்தளம் உருவாக்கி ஒரு வருடம் ஆகிறது. இந்த நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி எழுதுவதில் மிக்க மகிழ்ச்சியும் இதை சாத்தியமாக்கிய உங்களுக்கும் என்னுடய நன்றி.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ரிசப ராசி , ரிசப லக்னத்தில் பிறந்து இருக்கிறார். அவர் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறார்.

நான் முன்பே கூறியது போல லக்னாதிபதி 12 ம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் சிறை வாசம் உண்டு.

அதேபோல கிருஷ்ணர் ஜாதகத்திலும் லக்னாதிபதி சுக்கிரன் , 12 - ம் அதிபதி செவ்வாயுடன் இணைந்து மூன்றாம் வீட்டில் இருக்கிறார். மேலும் பாவி ராகுவும் கூடவே நிற்கிறான்.

ஆகவே ஸ்ரீ கிருஷ்ணர் சிறையில் பிறக்கும் அமைப்பு ஏற்பட்டது.

லக்னத்தில் மூன்றாம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறான். மூன்றில் செவ்வாய் இருக்கிறான். ஆகவே கிருஷ்ணர் மிகவும் வீரமானவராகவும் யுத்தத்தை வழிநடத்தும் தைரியமும் அரக்கர்களை வதம் செய்யும் வீரமும் உடையவராகவும் இருந்தார்.. 

மேலும் பாக்கியாதிபதி சனி பகவான் லக்னத்தை பார்ப்பதாலும் லக்னத்தில் சந்திரன் உச்சம் பெற்றதாலும் லக்னாதிபதி சுக்கிரனாக இருப்பதாலும் அழகுக்கு பஞ்சமில்லாமல் தெய்வீக உருவம் பெற்றார்.

லக்னாதிபதி அம்சத்திலும் அவர் சொந்த வீட்டில் இருப்பதால் அவர் நல்ல பண்புடன் இருந்தார்.

2 - ம் இடத்து அதிபதி புதன் ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்றான். ஆகையால் அறிவுக்கு ஒரு குறையும் இல்லை. அணைத்து வேதமும் அறிந்தவராக இருந்தார்.


மேலும் நாலாம் வீட்டில் குரு ஆட்சி பெற்ற சூரியனுடன் இருப்பதால் கல்வியில்  மிக சிறப்பாக இருந்தார். 64  கலைகளையும் அறிந்தவர் என்று பெயர் எடுத்தார்.

இரண்டாம் அதிபதி அறிவு ஸ்தானத்தில் உச்சம் பெற்றதால் அவர் பேச்சில் மிக உன்னத தத்துவம் அடங்கி இருந்தது. உயர்ந்த உண்மையான கீதையையும்  கூறினார்.

சுக ஸ்தானமான நாலாம் வீட்டில் குரு இருப்பதால் கிருஷ்ணருக்கு ஒரு குறையும் இல்லாமல் அணைத்து சுகத்தையும் அடைந்தார்.

சனி ஏழாம் வீட்டில் இருந்து லக்னத்தை பார்பதாலும் எட்டாம் அதிபதி குரு நாலாம் வீட்டில் இருப்பதாலும் ஸ்ரீ கிருஷ்ணர் 125 வயது வரை வாழ்ந்தார்.

பத்தாம் இடத்தை தர்ம காரகன் குருவும் ஆத்ம காரகன் சூரியனும் பார்ப்பதால் எப்போதும் தர்மத்தை காப்பதையே தொழிலாகவும் கடமையாகவும் செய்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகத்தில் சந்திரன் ( தாய் கிரகம் ) உச்சம் பெற்று இருப்பதாலும் சூரியன் ( தந்தைக்குரிய கிரகம் ) ஆட்சி பெற்று இருப்பதாலும் 
அவரின் தாய் தந்தை நீண்ட நாள் வாழ்ந்தார்கள்.

களத்திரதோஷம் ஸ்ரீ கிருஷ்ணரையும் விட்டு வைக்க வில்லை.

ஏழாம் இடத்தில் சனி , ஏழுக்கு உடைய செவ்வாய் ஆறுக்கு உடைய சுக்கிரனுடன் சேர்ந்து மேலும் பாவி ராகுவுடனும் கூடி மூன்றாம் வீட்டில் நிற்பதால் அவருக்கு பல மனைவி அமைந்தார்கள்.

பல பெண்களுக்கு புருஷனாக வாழும் அமைப்பு கொடுத்தது.

ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தை பருவத்தில் சந்திர திசையும் செவ்வாய் திசையும் நடந்தது. செவ்வாய் ஏழாம் வீட்டுக்கு அதிபதி அதாவது 7 -ம் வீட்டு அதிபதி மாரகன் அதாவது மரணத்தை கொடுப்பவன் ஆகும்.

ஆகையால் சிறு வயதில் கம்சனால் பல இன்னல்களுக்கு ஆளானார் கிருஷ்ணர். 

வீர தீர கிரகம் செவ்வாய் திசை முடியும் போது தனது தாய் மாமன் கம்சனை கொன்றார்.

மேலும் கேது இவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். இது பாக்கிய ஸ்தானம். மேலும் கேது ஞான காரகன் . இந்த கேது திசை முடியும் போது தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தார்.

கேது திசை முடிந்தது மகாபாரத யுத்தமும் முடிந்தது.

மீதமுள்ள சுக்கிர திசை, சூரிய திசை , சந்திர திசை இதை அனைத்தையுமே அமைதியாக துவாரக்காவில் கழித்தார்.

மீண்டும் செவ்வாய் திசை ஆரம்பம் ஆனது . இந்த செவ்வாய் 7 -ம் அதிபதி மரணத்தை தரவேண்டுமே. ஆகையால் செவ்வாய் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மரணத்தை கொடுத்து விட்டார். 

அவர் இந்த மண்ணுலகை விட்டு வைகுண்டம் அடைந்தார். இங்கே கலியுகமும் ஆரம்பித்து விட்டது.

கொலை கொள்ளைகள் மீண்டும் பெருக ஆரம்பித்து விட்டன. 

பகவத் கீதை : அர்ஜுனா!!, எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் . தர்மத்தை நிலைநாட்டுவேன் ..... 


No comments :

Post a Comment