01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Thursday, March 28, 2013

இறை தூதர் முகமது நபி அவர்களின் ஜாதகம் - PROPHET MUHAMMAD HOROSCOPE BY ஜோதிடர் கலையரசன் கலியபெருமாள் காட்டுமன்னார்கோயில்முகமது நபி அவர்கள் கும்ப லக்னத்தில் பிறந்து இருகிறார்கள். சிம்ம ராசி.

லக்னாதிபதி சனி பத்தாம் இடத்தில் ஞானகாரகன் கேது வுடன் சேர்ந்து நிற்கிறான். 

ஆகயால் முகமது நபி அவர்களின் தொழிலே இறை ஞானம் பெறுவதும் அதை மற்றவர்களுக்கு சொல்லுவதே என்று ஆனது.

குரு 2 -ம் வீட்டுக்கு அதிபதி அதாவது பேச்சு ஸ்தான அதிபதி. இந்த குரு ஒன்பதாம் வீட்டில் எந்த வித பாவியின் சேர்க்கையும் இல்லாமல் இருப்பதால் முகமது நபி அவர்களின் பேச்சில் ஒரு தெய்வீகமும் இறை உணர்வும் இருந்தது.

இறைவனை பற்றி பேசவும் செய்தார். ( 9 -ம் இடம் தர்ம ஸ்தானம் அதில் குரு )

சுக்கிர திசை ராகு புத்தி : 

நாலாம் இடத்தில் ராகு நின்றான், தாய் கிரகம் சந்திரனையும்  சனி பார்த்தான் ,முகமது நபி அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது தாய்க்கு மரணத்தை கொடுத்தான் நாலாம் இடத்து ராகு. 

பொதுவாக நாலாம் அதிபதி நாளில் ஆட்சி பெற்றால் அவர்கள் தனது மதத்தின் மீது தீவிர பற்று கொண்டு இருப்பார்கள். இவருக்கும் அதே அமைப்பு தான்.

திருமணம் :

ஏழாம் இடத்தில் சந்திரன் இருந்தான் நல்ல அழகு வாய்ந்த மனைவி அமைத்து கொடுத்தான்.


களத்திர காரகன் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்தான் . பதினோறு மனைவியை கொடுத்தான். 

மேலும் சுக்கிரன் ராகு சேர்க்கை வயது முதிர்ந்த  பெண்ணுடன் தொடர்பு கொடுக்கும். 

இவருக்கு 25  வயது இருக்கும் போது இவரை விட 15 வயது பெரிய விதவையான கஜிதா என்ற பெண்ணை மணந்தார்.

மேலும் குரு கேது சனி போன்ற கிரகங்கள் 9,10இடங்களில் இருப்பதால் இவர் மதத்தை பரப்புவதில் தீவிரம் கொண்டார். 

மேலும் சனி செவ்வாய் வீட்டில் இருப்பதால் மதத்தை பரப்பும் போது பலர் ரத்தம் சிந்தும் அமைப்பும் கொடுத்தது.

கேது மோட்சம் கொடுப்பவன் அவன் செவ்வாய் வீட்டில் இருப்பதால் இவரால் அமைதியான முறையில் மதத்தை பரப்ப முடியவில்லை.

கொஞ்சம் தீவிர சூழ்நிலையை செவ்வாய் உருவாக்கி கொடுத்தான்.

முன் பக்கம் செல்                                                    குரு பெயர்ச்சி பலன் 2013    

No comments :

Post a Comment