01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Tuesday, April 30, 2013

மே தினம் * உழைப்பால் உயர்ந்தவர் தினம் * திரு ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க குடியரசு தலைவர் ஜாதகம் . Abraham lincoln American president horoscope * MAY DAY - LABOR DAY * - by Jothidar kalaiarasan - மலர் ஜோதிடம்


“கடவுள் நன்னெறிப் பக்கத்தில் தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும் கடவுள் பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் என்பது என் தொடர்ந்த மனப் போராட்டமும் பிரார்த்தனையும் ஆகும்.”

ஆப்ரஹாம் லிங்கன் அவர்கள் ஏழை குடும்பத்தில் பிறந்து உழைப்பால் மட்டும் உயர்ந்து உலக அரசியல் வரலாற்றில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். கருப்பு அமெரிக்கர்கள் அடிமைகளாக இருப்பதை கண்டு வருந்தி அவர்களுகாக போராடி வெள்ளையனும் கருப்பனும் சமமாக உரிமை பெற வேண்டும் என்று போராடி வெற்றியும் கண்டார்.


அவரின் ஜாதகம் எப்படி பட்டது ? 

அவர் கும்ப லக்னத்தில் பிறந்து இருக்கிறார். லக்ன அதிபதி சனி பகவான் செவ்வாய் வீட்டில் அமர்ந்து இருக்கிறான். ஆகையால் இயற்கையிலேயே போராடும் குணம் அமைந்து விட்டது. மேலும் தெய்வீக கிரகம் குரு பகவான் சனியை பார்ப்பதால் நல்ல விசயங்களுக்காக போராடும் படி செய்தது.

லக்னாதிபதி சனியை குரு பகவான் பார்ப்பதால் தெய்வீக உணர்வும் பெற்றார்.

சந்திர திசை சனி புத்தி : 

சந்திரன் தாய்க்கு உரிய  கிரகம் , சனி யோ தாய்க்கு மாரகம் கொடுக்க கூடிய ஏழாம் வீட்டில் இருக்கிறான். இவருக்கு ஒன்பது வயது இருக்கும் போதே இவரின் தாய்க்கு மரணத்தை கொடுத்து விட்டான்.

நாலாம் அதிபதி சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று இருக்கிறான். ஆகையால் நல்ல அன்பான தாய் அமைந்தாள். இருபினும் தாய் இக்கு உரிய கிரகம் சந்திரனை பாவிகள் சனியும் செவ்வாயும் பார்வை செய்கிறார்கள் .ஆகையால் இளமையிலேயே தாயை இழக்கும் நிலை ஏற்பட்டது.

தந்தை கிரகம் சூரிய பகவன் சனி வீட்டில் அமர்ந்து இருக்கிறான் . மேலும் ஒன்பதாம் இடத்தில் செவ்வாயும் ராகுவும் இணைந்து இருகிறார்கள். ஆகையால் தந்தையால் பெரிய உதவி ஒன்றும் கிடைக்க வில்லை.

நாலாம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று இரண்டாம் அதிபதி குருவுடன் சேர்ந்து நிற்பதால் நல்ல கல்வி கொடுத்தது. இருபினும் சனியும் செவ்வாயும் கல்வி ஸ்தானத்தை பார்ப்பதால் சுயமாகவே போராடி படித்து அறிவை பெற்றார்.

பத்தாம் இடத்தில் சனி இருப்பதால் சிறு வயதில் அனேக சிறு சிறு தொழில் செய்து மிகவும் கஷ்டப்பட்டார்.

சந்திரன் சனி வீட்டில் இருப்பதாலும் சனியால் பார்க்கபடுவதாலும் அவர் உணர்ச்சி வசப்படும் மனிதராக இருந்தார்.

ஏழாம் அதிபதிக்கும் ஐந்தாம் அதிபதிக்கும் சம்பந்தம் ஏற்பட்டால் காதல் வயபடுவார்கள் என்கிறது சாஸ்திரம் .அதேபோல இவர் வாழ்க்கையிலும் ஆன் ரூத்லெட்ஜ் என்ற பெண்ணுடன் முதல் காதல் அரும்பியது. ஏழாம் அதிபதியும் எட்டாம் அதிபதி புதனும் இணைந்து இருக்கின்ற காரணத்தால் முதல் காதலி மரணம் அடைந்து விட்டாள்.

பிறகு மேரி டோடு என்ற பெண்ணை மணந்தார்.குழந்தை பாக்கியம் :


ஐந்தாம் வீட்டுக்கு உடைய புதன் லக்னத்தில் நண்பன் சனி வீட்டில் நண்பன் சூரியனுடன் சூப்பராக அமைந்து இருப்பதால் நான்கு ஆன் குழந்தைகளை பெற்றார்.

செவ்வாய் திசை : ராகுவால் பாதிக்க பட்ட செவ்வாய் திசை முழுவதும் வறுமையில் குடும்பத்தை நடத்தி கொண்டு இருந்தார்

செவ்வாயை அடுத்து வந்த ராகு திசையில் இவர் BLACK HAWK WAR இன் கேப்டன் ஆக பணியில் அமர்த்த பட்டார்.

சூரியனுக்கு இரண்டில் சுப கிரகம் இருந்தால் அதற்கு பெயர் சுபவேசி யோகம். இந்த இவருக்கு பலமாக ஆட்சி பெற்ற குருவால் அமைந்துள்ளது.

சுப வேசி யோகம் பெற்ற குரு புத்தி ஆரம்பித்த போது இவர் சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுக்க பட்டார்.

ராகு திசை சுக்கிர புத்தி: சுக்கிரன் உச்சம் பெற்று ஆட்சி பெற்ற குருவுடன் சேர்ந்து வாக்கு ஸ்தானத்தில் இருக்கிறான். சுக்கிர புத்தி ஆரம்பித்த உடனே இவர் அடிமை தனம் இருக்க கூடாது என்று பேசிய மேடை பேச்சி உலக அளவில் பெரிய கவர்ச்சி இவர் மீது ஏற்பட்டது.

மேலும் இவர் அமெரிக்காவின் குடியரசு தலைவராக இருக்க தகுதியானவர் என்று பரவலாக பேசப்பட்டது.  இரண்டாம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று குருவுடன் கூடி நின்ற காரணத்தால் இப்படி ஒரு நிலை கிட்டியது.

குரு திசை சந்திர புத்தி : குரு ஆட்சி பெற்று இருக்கிறார். சந்திரன் சூரியன் சாரத்தில் இருக்கிறார். சூரியனோ அரசு கிரகம் இந்த நேரத்தில் தான் இவர் அமெரிக்காவின் 16  வது குடியரசு தலைவர் ஆனார்.

குரு திசை முடியும் போது மற்றும் ஒரு பெரிய நிகழ்வு நடந்தது. இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுப வேசி யோகம் எப்படி எல்லாம்  வேலை செய்கிறது .

இரண்டாவது முறை குடியரசு தலைவராக பதவி ஏற்று கொஞ்ச நாளிலேயே அவர் அடிமை தனத்தை முற்றிலும் ஒழித்து கட்டினார். கருப்பு அமெர்க்கர்களும் வெள்ளை அமெரிக்கர்களும் சமம் என்று சட்டம் நிறுவினார்.

சனி திசை புதன் புத்தி : 

சனி சந்திரனுக்கு இரண்டாம் வீட்டுக்கு அதிபதி அதாவது மரணத்தை கொடுப்பவன். மேலும் ஜோதிட சாஸ்திர படி ஒருவர் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் சனி இருந்து ஏழாம் வீட்டில் சூரியன் இருந்து நாலாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் அவன் படுகொலை செய்யபடுவான் என்கிறது சாஸ்திரம். 

மேலும் பத்தில் சனி ஆயுதத்தால் மரணம் கொடுப்பான்.

இப்படிப்பட்ட அமைப்பினால் இவர் ஒரு நாள் அமெரிக்கன் கசின் என்ற நாடகம் பார்த்து கொண்டு இருக்கும் போது பிரபல நடிகர் ஒருவர் இவரை கை துப்பாக்கியால் பின் மண்டையில் சுட்டு படுகொலை செய்தார்.


உழைப்பால் உயர்வு மற்றும் சாதனை :


பத்தாம் இடத்தில் சனி இருப்பதாலும் பத்தாம் அதிபதி செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் ராகு வுடன் கூடி இருப்பதாலும் சனி குரு பார்வை பெறுவதாலும் இவர் சிறு வயதில் சின்ன குடிசையில் பிறந்து பிறகு மரவேலை செய்தார். பிறகு படகு ஓட்டும் பணி செய்தார். பிறகு சுயமாக கல்வி கற்று தபால் வேலை செய்தார். பிறகு மேலும் சுயமாக கல்வி கற்று வழக்கறிஞர் பணி செய்தார். பிறகு சட்டசபை தலைவராக தேர்தலில் வெற்றி பெற்றார். பிறகு அமெரிக்காவின் குடியரசு தலைவர் ஆனார்.


இரண்டாம் அதிபதி குருவும் விரயாதிபதி சனியும் ஒருவருக்கு ஒருவர் கோணத்தில் இருப்பதால் இவர் ஏழையாக பிறந்தாலும் பெரிய பதவி கிடைத்த போதும்  கூட பணம் சேர்த்து பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை இல்லாமல்  இருந்தார்.


மேலும் பல பிரபலங்களின் ஜாதகம் இங்கே                  முகப்பு பக்கம் செல்

Thursday, April 25, 2013

எல்.கே .அத்வானி முன்னாள் துணை பிரதமர் - ஜாதகம் ஒருபார்வை ( விபரீத ராஜயோகம் ) , L.K.ADVANI FORMER DEPUTY PRIME MINISTER HOROSCOPE VIBAREETA RAJA YOGAM- jothidam kalaiarasan


திரு லால் கிருஷ்ணா அத்வானி (L K ADVANI ) பீ ஜே பீ கட்சியின் ஆட்சியின் போது துணை பிரதமராகவும் ஹோம் மினிஸ்டர் ஆகவும் பணி செய்தவர். அவர் இந்த நிலையை அடைய அவரின் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது? பார்க்கலாம்...

திரு அத்வானி அவர்கள் விருச்சிக லக்னம் மேஷ ராசியில் பிறந்து உள்ளார்.

லக்னாதிபதி செவ்வாய் பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கின்ற காரணத்தால் பிறந்தது பாகிஸ்தானாக இருந்தாலும் வாழ்வது இந்தியா என்று ஆனது.


( லக்னாதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் பொதுவாக பிறந்த ஊரில் வாழ விடாது.)

மதத்தின் மீது தீவிர பற்று ஏன்?

பொதுவாக நாலாம் வீடு பலமாக இருந்தால் ஆன்மீக அறிவு மேலோங்கும் .தனது மதத்தின் மீது மிகுந்த பற்று இருக்கும்.

இவர் ஜாதகத்தில் நாலாம் அதிபதி சனி ஞான காரகன் கேதுவுடன் கூடி லக்னத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெறுகிறான். நாலாம் அதிபதியை இரண்டு ஞான கிரகம் பல படுத்துவதால் இவருக்கு மதத்தின் மீது மிகுந்த பற்று இருக்கிறது.

ஒருவர் அரசியலில் முடி சூட வேண்டும் என்றால் அவர் ஜாதகத்தில் சனி நன்றாக அமைந்து குரு பார்வை பெற வேண்டும்.

இவர் ஜாதகத்தில் சனி பகவான் லக்னத்தில் அமர்ந்து குரு வின் ஒன்பதாம் பார்வை பெறுகிறார். இந்த காரணத்தால் அரசியல் வாழ்வு வெற்றி கொடுத்தது.

மேலும் மிகவும் ஸ்திரமாக விபரீத ராஜ யோகம் அமைந்து உள்ளது. அதாவது 

ஆறாம் வீட்டு அதிபதி செவ்வாய் பண்ணிறேண்டில் இருக்கிறான்.

எட்டாம் அதிபதி புதனும் பண்ணிறேண்டில் இருந்கிறான்.

இந்த அமைப்பு ஒரு ஜாதகத்தில் இருந்தால் திடீர் உயர்வு கொடுக்கும். மிக பெரிய உயரதிருக்கு கொண்டு செல்லும். அதே போல திடீர் வீழ்ச்சியும் கொடுக்கும்.

" கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் " என்றும் இதை கூறுவது உண்டு. அதாவது கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் இருந்தால் நல்லது செய்வான்.

ஏழில் ராகு மேலும் சந்திரனுக்கு ஏழாம் அதிபதி சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருக்கிறான். இந்த அமைப்பு மணவாழ்வில் கால தாமதம் கொடுக்கும். 

இந்த அமைப்பினால் இவருக்கு 38 வயது இருக்கும் போது திருமணம் நடந்தது .

ஏழாம் இட ராகு பொதுவாக தாமதம் கொடுப்பான்.

1947 சுக்கிர திசை சனி புத்தி : விபரீத ராஜ யோகம் சம்பந்தம் உள்ள சுக்கிரன் திசையில் குரு பார்வை பெற்ற சனியின் புத்தியில் இவர் அரசியலில் குதித்தார்.

1975 ராகு திசை ராகு புத்தி : ராகு பகவான் செவ்வாய் சாரத்தில் உள்ளார். செவ்வாய் விபரீத ராஜ யோகத்தில் சம்பந்தம் பெற்று உள்ளார். ஆகையால் இந்த சமயத்தில் " பாரதிய ஜனதா சங் " அமைப்பின் தலைவர் பொறுப்பேற்றார்.

1986 ராகு திசை கேது புத்தி : கேது லக்னத்தில் இருக்கிறான் ராகு விபரீத ராஜ யோகம் சம்பந்தம் பெற்று உள்ளான். இந்த தருணத்தில் தான் (BJP PRESIDENT) இவர் பீ ஜே பீ கட்சியின் தலைவர் ஆனார்.

1998 குரு திசை புதன் புத்தி : குரு சனியை பார்கிறார். புதன் 12இல் அமர்ந்து விபரீத ராஜ யோகம் சம்பந்தம் பெற்று இருக்கிறார் . இந்த தருணத்தில் தான் இவர் இந்தியாவின் ஹோம் மினிஸ்டர் ( HOME MINISTER)ஆக இருந்தார் .

2002- 2004 குரு திசை சுக்கிர புத்தி மற்றும் சூரிய புத்தி : குரு ஆட்சி சனியை பார்கிறார். சூரியனும் சுக்கிரனும் விபரீத ராஜ யோகம் சம்பந்தம் பெற்று இருகிறார்கள். இந்த தருணத்தில் தன் இவர் இந்தியாவின் துணை பிரதமர் ( DEPUTY PRESIDENT )ஆனார். 

2004 மே மாதம் "பாதகாதிபதி " சந்திரன் புத்தி : விருச்சிக லக்ன காரர்களுக்கு சந்திரன் பாதகம் கொடுப்பான். ஏன் எனில் இவன் பாதகாதிபதி. அதேபோல குரு திசையில் சந்திர புத்தி வந்தது . இவரின் சரிவும் ஆரம்பம் ஆனது.

எத்தனை மேலே கொண்டு சென்ற விபரீத ராஜ யோகம் பாதாகதிபதி  திசையில் மிக பெரிய சரிவை கொடுத்தது.

தற்போதைய நிலவரம் :

 ஏழாம் இடத்தில் சனி நின்று கொண்டு கண்ட சனியை நடத்துகிறார். ஆகையால் உடல்நிலை மேலும் மேலும் சரிவு கொடுக்கும்.

குரு மூன்றாம் இடம் செல்கிறார். இதனால் மனத்தில் தைரியம் குறையும். 

மேலும் பல முக்கிய தலைவர்களின் ஜாதகம் இங்கே                       

முன் பக்கம் செல்

Wednesday, April 17, 2013

திரு நரேந்திர மோதி குஜராத் முதல்வர் ஜாதகம் ஒரு பார்வை. Mr. Narendra Modi Gujarat Chief Minister Horoscope analysis - ஜோதிட ஆராய்ச்சி மையம் காட்டுமன்னார்கோயில்திரு நரேந்திர மோதி ( குஜராத் முதல்வர் ) அவர்களை பீ ஜே பீ கட்சி தலைமையகம் P J P  கட்சியின் பிரதமர் உறுப்பினராக நியமித்து இருகிறார்கள்.

மேலும் குஜராத் மாநிலத்தை தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்து  கொண்டு இருகிறார்கள். அங்கு உள்ள மக்களின் கருத்து கணிப்பு படி அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நரேந்திர மோதி ஆட்சி வேண்டும் என்பது தான்.

இது எப்படி சாத்தியம் ஆனது. அவர் ஜாதகம் என்ன சொல்கிறது என்று ஆராய்வோம்.

அவர் குஜராத் இல் உள்ள மேசனா என்ற ஊரில் 17-9-1950 இல் பிறந்து இருக்கிறார்.

அவர் விருச்சக லக்னம் விருச்சக ராசியில் பிறந்து இருக்கிறார்.

லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் ஆட்சி பெற்று இருக்கிறான். ஆகையால் மனத்தில் தைரியம் வீரம் எப்போதும் குடி கொண்டு இருக்கும். மேலும் பல ராணுவ வீரர்கள் ஜாதகதிலும் செவ்வாய் இப்படி தான் ஆட்சி பெற்று இருப்பார்.

பாக்கியாதிபதி சந்திரன் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அவன் லக்னத்தில் இருப்பதால் இவருக்கு அணைத்து பாக்கியங்களையும் வழங்குகிறான்.

குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருப்பதால் குரு சந்திரயோகம் உண்டாகி உள்ளது. இந்த அமைப்பு உள்ளவர்கள் மிக பெரிய பதவி மற்றும் பொது வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.

ஒரு மனிதன் அரசியலில் கொடிகட்டி பறக்க வேண்டும் எனில் சனி நன்றாக அமர்ந்து அந்த சனியை குரு பார்க்க வேண்டும்.

இவர் ஜாதகத்தில் சனி தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்துஇருக்கிறான் மேலும்   சுக ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் குருவின் பார்வையை பெறுகிறான். இது மிகவும் நல்ல அமைப்பு. அரசியலில் ஜெயிப்பதற்கு இந்த அமைப்பு மிக முக்கியம்.

இப்படி நல்ல அமைப்பு உள்ள நரேந்திர மோதி இக்கு குடும்பம் இல்லை குழந்தை இல்லை ஏன் ?

ஏழாம் அதிபதி சுக்கிரன் , அவனுடைய பகைவன் சூரியன் வீட்டில் இருக்கிறான். கூடவே மஹாபாவி சனியும் இருக்கிறான். மேலும் சுக்கிரன் , சனி பகவானுக்கும் கேது பகவானுக்கும் இடையில் நின்று பாவ கத்தரி தோஷம் பெற்று இருக்கிறான். மேலும் லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து ஏழாம் வீட்டை பார்க்கிறான்.ஆகையால் மனைவி என்ற பேச்சிக்கே இடம் இல்லாமல் போனது.

புத்திர ஸ்தானம் என்று சொல்லப்படும் ஐந்தாம் இடத்தில் பாவி ராகு நிற்கிறான். ஆகையால் குழந்தை என்ற ஒன்று இல்லாமல் போனது.

இப்படி இருக்கின்ற நிலையில் அவர் அரசியலில் பிரதமர் போன்ற பெரிய பதவி வகிக்க முடியுமா ? ஜாதகம் என்ன சொல்கிறது.

தற்போது அவருக்கு சந்திர திசையில் குரு புத்தி ( 7-2-2013முதல்  9-6-2014 வரை )

சந்திரன் இவருக்கு பாக்கியாதிபதி. அவன் திசை நடைபெறுகிறது. மேலும் குருவோ சுகத்திருக்கு அதிபதி . குரு வின் புத்தி நடை பெறுகிறது. ஆகையால் 

2014 இல் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இவர் மிக பெரிய வித்தியாசத்தில் ஜெயித்து புகழுடன்  இந்தியாவை வளம் வரலாம்.

இதற்கு அடுத்து வரும் புத்தி சனி புத்தி , சனியும்  நாலாம் வீட்டுடன் சம்பந்த பட்டு பத்தாம் வீட்டில் இருந்து கொண்டு குருவின் பார்வையை பெறுகிறார். ஆகையால் 2014 இக்கு பிறகு கூட அவர் புகழின் உச்சிக்கே போக வேண்டிய அமைப்பு உண்டு.

2020 வரை இவருக்கு பாக்கியாதிபதி திசை நடை பெறுகிறது. ஆகையால் 

இவர் ஒரு வேலை பாராளுமன்ற தேர்தலில்  போட்டியிடவில்லை என்றாலும் இந்தியாவில் ஒரு புகழ் பெற்ற அரசியல்வாதி என்ற பெயருடன் பெரிய பதவியில் இருப்பார்.


2014 மே மாதத்தில் குருவும் இவருக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து பல பாக்கியங்களை பெற்று தருவார். 

ஒரே ஒரு சங்கடம் உள்ளது 2014 டிசம்பர் வரை இவருக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெறுகிறது. அதன் பிறகு ஜென்ம சனி . இதனால் அவ்வபோது  உடல்நிலை மற்றும் கூட்டு கட்சி மற்றும் தொழில் ரீதியில் இன்னல்கள் வந்த வண்ணம் இருக்கும். 

இருபினும் இந்த சனி மூன்றாவது சுற்று ஏழரை சனி  என்பதால் யோகம் கொடுக்கும். 

மேலும் பல சுவாரஷ்யமான ஜோதிட ஆய்வுகள்       

முன் பக்கம் செல்லு

Thursday, April 11, 2013

ஆயில்யம் நட்சத்திரம் ஆபத்தா ? மாமியாருக்கு ஆகாதா? .... IS AYILYAM STAR / ASHLESHA NAKSHATRA BAD ? - Jothida Mamani kalaiarasan , JOTHIDA ARAICHI MAIYAM KATTUMANNARKOIL
பொதுவாக ஒரு பெண்ணுக்கு ஆயில்யம் நட்சத்திரம் இருந்தால் எல்லோரும் நினைப்பது என்னவென்றால் ... அவளால் மாமியார் இக்கு கண்டம் வரும் .

இதை பற்றி பல ஆயில்யம் நட்சத்திர பெண்களின் ஜாதகத்தை சேகரித்து பார்த்த போது ஆயில்யம் நட்சத்திரம் உள்ள பெண்ணின் மாமியார் நன்றாக இருப்பதை பார்க்க முடிந்தது.

இதனால் மேலும் கூர்ந்து கவனித்த போது தெரிய வந்தது ...

ஒரு பெண்ணுக்கு ஆயில்யம் நட்சத்திரம் இருந்து 10 ம் வீடு என்று சொல்லப்படும் மாமியார் வீட்டில் புதன் + ராகு + செவ்வாய் இருந்தாலும்

அல்லது 4 ல் செவ்வாய் ராகு இருந்தால் அந்த பெண்ணால் மாமியாருக்கு கெடுதல் உண்டாகும்.

இருபினும் மாமியாரின் ஜாதகத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் எட்டாம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் குரு உச்சம் பெற்று இருந்தாலும் மாமியாருக்கு ஒரு கெடுதியும் வராது.


ஆகவே நட்சத்திரத்தை மட்டும் பார்த்து முடிவு செய்வது சரி இல்லை.


மூலம் நட்சத்திரம் ஆபத்தா ? கிளிக் செய்து படியுங்கள்

மேலும் பல சுவாரஷ்யமான ஜோதிட ஆய்வுகள்


Monday, April 8, 2013

மூலம் நட்சத்திரம் என்றால் ஆபத்தா ? மாமனாருக்கு ஆகாதா? TAMIL ASTROLOGY- by ASTROLOGY RESEARCH CENTRE KATTUMANNARKOIL- malar jothidamமூலம் நட்சத்திரத்தில் ஒரு பெண் பிறந்தால் அனைவரும் கூறுவது

  " மாமியாரை மூலையில் உட்காற வைப்பாள்"

அதாவது மாமனார் உயிருக்கு ஆபத்து கொடுப்பாள் என்று அர்த்தம் வருவது போல சொல்வதுண்டு.

இது உண்மையா என்று ஆராய்ந்து பார்க்கும் போது , பல பெண்களின் ஜாதகத்தை நான் பார்த்து இருக்கிறேன். மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் மாமனாரும் நன்றாக இருப்பதை கண்டேன்.

இதற்காக ஆராயும் போது தெரிந்து கொண்ட உண்மை என்ன என்றால்....


பெண்ணின் ஜாதகத்தில் மூன்றாம் வீடு மாமனாரை குறிக்கும் வீடு ஆகும்.

ஒரு பெண் மூலம் நட்சத்திரத்தில் பிறந்து இருந்து அவளின் ஜாதகத்தில் 3, 9 இடத்தில் கேது இருந்தால் அந்த பெண்ணால் அவளின் மாமனாருக்கு கெடுதி வருகிறது.

இருபினும் மாமனாரின் ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றோ, ஆயுள்காரகன் சனி நல்ல இடத்தில் இருந்தாலோ , 8 ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ இருந்தால் இந்த பெண்ணால் மாமனாருக்கு ஒரு கெடுதியும் வராது.

ஆகவே மூலம் நட்சத்திரம் என்று கேட்ட உடனே  ஒரு பெண்ணின் ஜாதகத்தை திருமணம் செய்ய தகுதி இல்லை என்று ஒதுக்குவது சரி இல்லை.

தீர ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் இங்கே


Thursday, April 4, 2013

திரு மன்மோகன் சிங் ஜாதகம் - ஒரு பார்வை , Prime minister MANMOHAN SINGH HOROSCOPE ANALYSIS by KATTUMANNARKOIL JOTHIDA MAMANI KALAIARASAN


திரு மன்மோகன் சிங் அவர்கள் தனுசு லக்னம் கடக ராசி யில் பிறந்து இருக்கிறார்.

எப்போதும் நான் சொல்வது போல உயர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் கடக ராசி அல்லது கடக லக்னத்தில் தான் உதிப்பார்கள். இவரும் கடக ராசி தான்.

லக்னாதிபதி குரு ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். ஆகையால் பூர்வ ஜென்மத்தில்  புண்ணியம் செய்தவராக இருப்பார். நல்ல முன்னேற்றம் கொடுக்கும் இந்த அமைப்பு.

மேலும் குருவும் கேதுவும் இணைந்ததால் கோடீஸ்வர யோகம் உண்டாகி இவரை கோடீஸ்வரராக ஆக்கியது.

குரு பகவான் ஒன்பதில் இருந்து கொண்டு தனது சொந்த வீட்டை பார்கிறார். ஆகையால் நல்ல பதவி புகழ் கிடைத்தது.

நாலாம் அதிபதி ( கல்வி ஸ்தான அதிபதி ) குரு ஒன்பதில் இருப்பதாலும் அந்த குரு ஞானகாரன் கேது வுடன் சேர்ந்த இருப்பதாலும் கல்வியில் நல்ல முன்னேற்றம் மற்றும் டாக்டர் பட்டம் பெரும் அமைப்பும் கொடுத்தது.

புதன் என்றாலே வங்கி அதிகாரி என்கிறது சாஸ்திரம். இவருக்கு புதன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றதால் பொருளாதாரம் துறையில்( ECONOMICS) புகழ் சூடினார்.

பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் அவர் வங்கியில் பணி செய்வார் என்கிறது சாஸ்திரம். ஆனால் இவர் ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் புத்தம் உச்சம் பெற்று சூரியனுடன் சேர்ந்து நிற்பதால் இந்தியாவின்    RESERVE BANK OF INDIA வின் தலைவராக பணியாற்றும் அமைப்பு கொடுத்தது.

லக்னதிருக்கு இரண்டில் சனி இருந்தாலும் பத்தாம் வீட்டுடன் சூரியன் சம்பந்தபட்டு இருந்தாலும் அவர்கள் அரசியலில் கொடிகட்டு பறப்பார்கள்.இவர் ஜாதகத்திலும் இதே அமைப்பு தான்.

எட்டாம் இடத்தின் அதிபதி சந்திரன் ஆட்சி பெற்று இருப்பதாலும் ஆயுள் காரகன் சனி ஆட்சி பெற்று இருப்பதாலும் நீண்ட ஆயுள் கொடுக்கும்.

இப்படி பட்ட இவருக்கு ராகு திசை சுக்கிர புத்தியில் பிரதமராகும் யோகம் கிட்டியது. ( ராகுவும் சுக்கிரனும் நண்பர்கள் )

ராகு குருவின் சாரத்தில் இருக்கிறான். சுக்கிரன் புதன் சாரத்தில் இருக்கிறான்.

குரு 1,4 இக்கு உடையவர் அவர் ஒன்பதில் இருப்பதாலும் 

புதன் 7,10 இக்கு உடையவன் அவன் பத்தாம் வீட்டில் அரசியல் கிரகம் சூரியனுடன் இருப்பதாலும் ராகு திசை சுக்கிர புத்தியில் பிரதமரானார்.

தற்போதய நிலவரம் :

சனி நாலாம் வீட்டில் இருந்து கொண்டு அர்தாஷ்டம சனி நடக்கிறது. மேலும் இது வரை லாபத்தில் இருந்த குரு பகவான் 2013 மே மதம் முதல் விரயத்தில் சஞ்சரிப்பார். இது நல்ல அமைப்பு இல்லை.

மனத்தில் இனம் புரியாத கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும் .

பண பற்றாக்குறையால் திக்குமுக்கு ஆட வைக்கும்.

நாலாம் இட சனி உடலை கெடுப்பான்.

இந்த நிலையில் 2014  இல் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. குரு பலமும் இல்லாத நேரம் இது. சனியின் சஞ்சாரமும் உடல்நிலையை கெடுக்கும் நேரம் இது .