01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Tuesday, April 30, 2013

மே தினம் * உழைப்பால் உயர்ந்தவர் தினம் * திரு ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க குடியரசு தலைவர் ஜாதகம் . Abraham lincoln American president horoscope * MAY DAY - LABOR DAY * - by Jothidar kalaiarasan - மலர் ஜோதிடம்


“கடவுள் நன்னெறிப் பக்கத்தில் தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும் கடவுள் பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் என்பது என் தொடர்ந்த மனப் போராட்டமும் பிரார்த்தனையும் ஆகும்.”

ஆப்ரஹாம் லிங்கன் அவர்கள் ஏழை குடும்பத்தில் பிறந்து உழைப்பால் மட்டும் உயர்ந்து உலக அரசியல் வரலாற்றில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். கருப்பு அமெரிக்கர்கள் அடிமைகளாக இருப்பதை கண்டு வருந்தி அவர்களுகாக போராடி வெள்ளையனும் கருப்பனும் சமமாக உரிமை பெற வேண்டும் என்று போராடி வெற்றியும் கண்டார்.


அவரின் ஜாதகம் எப்படி பட்டது ? 

அவர் கும்ப லக்னத்தில் பிறந்து இருக்கிறார். லக்ன அதிபதி சனி பகவான் செவ்வாய் வீட்டில் அமர்ந்து இருக்கிறான். ஆகையால் இயற்கையிலேயே போராடும் குணம் அமைந்து விட்டது. மேலும் தெய்வீக கிரகம் குரு பகவான் சனியை பார்ப்பதால் நல்ல விசயங்களுக்காக போராடும் படி செய்தது.

லக்னாதிபதி சனியை குரு பகவான் பார்ப்பதால் தெய்வீக உணர்வும் பெற்றார்.

சந்திர திசை சனி புத்தி : 

சந்திரன் தாய்க்கு உரிய  கிரகம் , சனி யோ தாய்க்கு மாரகம் கொடுக்க கூடிய ஏழாம் வீட்டில் இருக்கிறான். இவருக்கு ஒன்பது வயது இருக்கும் போதே இவரின் தாய்க்கு மரணத்தை கொடுத்து விட்டான்.

நாலாம் அதிபதி சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று இருக்கிறான். ஆகையால் நல்ல அன்பான தாய் அமைந்தாள். இருபினும் தாய் இக்கு உரிய கிரகம் சந்திரனை பாவிகள் சனியும் செவ்வாயும் பார்வை செய்கிறார்கள் .ஆகையால் இளமையிலேயே தாயை இழக்கும் நிலை ஏற்பட்டது.

தந்தை கிரகம் சூரிய பகவன் சனி வீட்டில் அமர்ந்து இருக்கிறான் . மேலும் ஒன்பதாம் இடத்தில் செவ்வாயும் ராகுவும் இணைந்து இருகிறார்கள். ஆகையால் தந்தையால் பெரிய உதவி ஒன்றும் கிடைக்க வில்லை.

நாலாம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று இரண்டாம் அதிபதி குருவுடன் சேர்ந்து நிற்பதால் நல்ல கல்வி கொடுத்தது. இருபினும் சனியும் செவ்வாயும் கல்வி ஸ்தானத்தை பார்ப்பதால் சுயமாகவே போராடி படித்து அறிவை பெற்றார்.

பத்தாம் இடத்தில் சனி இருப்பதால் சிறு வயதில் அனேக சிறு சிறு தொழில் செய்து மிகவும் கஷ்டப்பட்டார்.

சந்திரன் சனி வீட்டில் இருப்பதாலும் சனியால் பார்க்கபடுவதாலும் அவர் உணர்ச்சி வசப்படும் மனிதராக இருந்தார்.

ஏழாம் அதிபதிக்கும் ஐந்தாம் அதிபதிக்கும் சம்பந்தம் ஏற்பட்டால் காதல் வயபடுவார்கள் என்கிறது சாஸ்திரம் .அதேபோல இவர் வாழ்க்கையிலும் ஆன் ரூத்லெட்ஜ் என்ற பெண்ணுடன் முதல் காதல் அரும்பியது. ஏழாம் அதிபதியும் எட்டாம் அதிபதி புதனும் இணைந்து இருக்கின்ற காரணத்தால் முதல் காதலி மரணம் அடைந்து விட்டாள்.

பிறகு மேரி டோடு என்ற பெண்ணை மணந்தார்.குழந்தை பாக்கியம் :


ஐந்தாம் வீட்டுக்கு உடைய புதன் லக்னத்தில் நண்பன் சனி வீட்டில் நண்பன் சூரியனுடன் சூப்பராக அமைந்து இருப்பதால் நான்கு ஆன் குழந்தைகளை பெற்றார்.

செவ்வாய் திசை : ராகுவால் பாதிக்க பட்ட செவ்வாய் திசை முழுவதும் வறுமையில் குடும்பத்தை நடத்தி கொண்டு இருந்தார்

செவ்வாயை அடுத்து வந்த ராகு திசையில் இவர் BLACK HAWK WAR இன் கேப்டன் ஆக பணியில் அமர்த்த பட்டார்.

சூரியனுக்கு இரண்டில் சுப கிரகம் இருந்தால் அதற்கு பெயர் சுபவேசி யோகம். இந்த இவருக்கு பலமாக ஆட்சி பெற்ற குருவால் அமைந்துள்ளது.

சுப வேசி யோகம் பெற்ற குரு புத்தி ஆரம்பித்த போது இவர் சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுக்க பட்டார்.

ராகு திசை சுக்கிர புத்தி: சுக்கிரன் உச்சம் பெற்று ஆட்சி பெற்ற குருவுடன் சேர்ந்து வாக்கு ஸ்தானத்தில் இருக்கிறான். சுக்கிர புத்தி ஆரம்பித்த உடனே இவர் அடிமை தனம் இருக்க கூடாது என்று பேசிய மேடை பேச்சி உலக அளவில் பெரிய கவர்ச்சி இவர் மீது ஏற்பட்டது.

மேலும் இவர் அமெரிக்காவின் குடியரசு தலைவராக இருக்க தகுதியானவர் என்று பரவலாக பேசப்பட்டது.  இரண்டாம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று குருவுடன் கூடி நின்ற காரணத்தால் இப்படி ஒரு நிலை கிட்டியது.

குரு திசை சந்திர புத்தி : குரு ஆட்சி பெற்று இருக்கிறார். சந்திரன் சூரியன் சாரத்தில் இருக்கிறார். சூரியனோ அரசு கிரகம் இந்த நேரத்தில் தான் இவர் அமெரிக்காவின் 16  வது குடியரசு தலைவர் ஆனார்.

குரு திசை முடியும் போது மற்றும் ஒரு பெரிய நிகழ்வு நடந்தது. இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுப வேசி யோகம் எப்படி எல்லாம்  வேலை செய்கிறது .

இரண்டாவது முறை குடியரசு தலைவராக பதவி ஏற்று கொஞ்ச நாளிலேயே அவர் அடிமை தனத்தை முற்றிலும் ஒழித்து கட்டினார். கருப்பு அமெர்க்கர்களும் வெள்ளை அமெரிக்கர்களும் சமம் என்று சட்டம் நிறுவினார்.

சனி திசை புதன் புத்தி : 

சனி சந்திரனுக்கு இரண்டாம் வீட்டுக்கு அதிபதி அதாவது மரணத்தை கொடுப்பவன். மேலும் ஜோதிட சாஸ்திர படி ஒருவர் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் சனி இருந்து ஏழாம் வீட்டில் சூரியன் இருந்து நாலாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் அவன் படுகொலை செய்யபடுவான் என்கிறது சாஸ்திரம். 

மேலும் பத்தில் சனி ஆயுதத்தால் மரணம் கொடுப்பான்.

இப்படிப்பட்ட அமைப்பினால் இவர் ஒரு நாள் அமெரிக்கன் கசின் என்ற நாடகம் பார்த்து கொண்டு இருக்கும் போது பிரபல நடிகர் ஒருவர் இவரை கை துப்பாக்கியால் பின் மண்டையில் சுட்டு படுகொலை செய்தார்.


உழைப்பால் உயர்வு மற்றும் சாதனை :


பத்தாம் இடத்தில் சனி இருப்பதாலும் பத்தாம் அதிபதி செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் ராகு வுடன் கூடி இருப்பதாலும் சனி குரு பார்வை பெறுவதாலும் இவர் சிறு வயதில் சின்ன குடிசையில் பிறந்து பிறகு மரவேலை செய்தார். பிறகு படகு ஓட்டும் பணி செய்தார். பிறகு சுயமாக கல்வி கற்று தபால் வேலை செய்தார். பிறகு மேலும் சுயமாக கல்வி கற்று வழக்கறிஞர் பணி செய்தார். பிறகு சட்டசபை தலைவராக தேர்தலில் வெற்றி பெற்றார். பிறகு அமெரிக்காவின் குடியரசு தலைவர் ஆனார்.


இரண்டாம் அதிபதி குருவும் விரயாதிபதி சனியும் ஒருவருக்கு ஒருவர் கோணத்தில் இருப்பதால் இவர் ஏழையாக பிறந்தாலும் பெரிய பதவி கிடைத்த போதும்  கூட பணம் சேர்த்து பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை இல்லாமல்  இருந்தார்.


மேலும் பல பிரபலங்களின் ஜாதகம் இங்கே                  முகப்பு பக்கம் செல்

1 comment :

  1. வணக்கம். பிரபலங்கள் ஜாதகத்தில் பலருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது..... அதை ஏன் தாங்கள் கூறவில்லை ????????? அதுவும் அவர்கள் வெற்றிக்கு முக்கிய காரணம்.....பிற்பாதியில் அது யோகமாக மாறும்..... நன்றி

    ReplyDelete