01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Thursday, April 25, 2013

எல்.கே .அத்வானி முன்னாள் துணை பிரதமர் - ஜாதகம் ஒருபார்வை ( விபரீத ராஜயோகம் ) , L.K.ADVANI FORMER DEPUTY PRIME MINISTER HOROSCOPE VIBAREETA RAJA YOGAM- jothidam kalaiarasan


திரு லால் கிருஷ்ணா அத்வானி (L K ADVANI ) பீ ஜே பீ கட்சியின் ஆட்சியின் போது துணை பிரதமராகவும் ஹோம் மினிஸ்டர் ஆகவும் பணி செய்தவர். அவர் இந்த நிலையை அடைய அவரின் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது? பார்க்கலாம்...

திரு அத்வானி அவர்கள் விருச்சிக லக்னம் மேஷ ராசியில் பிறந்து உள்ளார்.

லக்னாதிபதி செவ்வாய் பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கின்ற காரணத்தால் பிறந்தது பாகிஸ்தானாக இருந்தாலும் வாழ்வது இந்தியா என்று ஆனது.


( லக்னாதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் பொதுவாக பிறந்த ஊரில் வாழ விடாது.)

மதத்தின் மீது தீவிர பற்று ஏன்?

பொதுவாக நாலாம் வீடு பலமாக இருந்தால் ஆன்மீக அறிவு மேலோங்கும் .தனது மதத்தின் மீது மிகுந்த பற்று இருக்கும்.

இவர் ஜாதகத்தில் நாலாம் அதிபதி சனி ஞான காரகன் கேதுவுடன் கூடி லக்னத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெறுகிறான். நாலாம் அதிபதியை இரண்டு ஞான கிரகம் பல படுத்துவதால் இவருக்கு மதத்தின் மீது மிகுந்த பற்று இருக்கிறது.

ஒருவர் அரசியலில் முடி சூட வேண்டும் என்றால் அவர் ஜாதகத்தில் சனி நன்றாக அமைந்து குரு பார்வை பெற வேண்டும்.

இவர் ஜாதகத்தில் சனி பகவான் லக்னத்தில் அமர்ந்து குரு வின் ஒன்பதாம் பார்வை பெறுகிறார். இந்த காரணத்தால் அரசியல் வாழ்வு வெற்றி கொடுத்தது.

மேலும் மிகவும் ஸ்திரமாக விபரீத ராஜ யோகம் அமைந்து உள்ளது. அதாவது 

ஆறாம் வீட்டு அதிபதி செவ்வாய் பண்ணிறேண்டில் இருக்கிறான்.

எட்டாம் அதிபதி புதனும் பண்ணிறேண்டில் இருந்கிறான்.

இந்த அமைப்பு ஒரு ஜாதகத்தில் இருந்தால் திடீர் உயர்வு கொடுக்கும். மிக பெரிய உயரதிருக்கு கொண்டு செல்லும். அதே போல திடீர் வீழ்ச்சியும் கொடுக்கும்.

" கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் " என்றும் இதை கூறுவது உண்டு. அதாவது கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் இருந்தால் நல்லது செய்வான்.

ஏழில் ராகு மேலும் சந்திரனுக்கு ஏழாம் அதிபதி சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருக்கிறான். இந்த அமைப்பு மணவாழ்வில் கால தாமதம் கொடுக்கும். 

இந்த அமைப்பினால் இவருக்கு 38 வயது இருக்கும் போது திருமணம் நடந்தது .

ஏழாம் இட ராகு பொதுவாக தாமதம் கொடுப்பான்.

1947 சுக்கிர திசை சனி புத்தி : விபரீத ராஜ யோகம் சம்பந்தம் உள்ள சுக்கிரன் திசையில் குரு பார்வை பெற்ற சனியின் புத்தியில் இவர் அரசியலில் குதித்தார்.

1975 ராகு திசை ராகு புத்தி : ராகு பகவான் செவ்வாய் சாரத்தில் உள்ளார். செவ்வாய் விபரீத ராஜ யோகத்தில் சம்பந்தம் பெற்று உள்ளார். ஆகையால் இந்த சமயத்தில் " பாரதிய ஜனதா சங் " அமைப்பின் தலைவர் பொறுப்பேற்றார்.

1986 ராகு திசை கேது புத்தி : கேது லக்னத்தில் இருக்கிறான் ராகு விபரீத ராஜ யோகம் சம்பந்தம் பெற்று உள்ளான். இந்த தருணத்தில் தான் (BJP PRESIDENT) இவர் பீ ஜே பீ கட்சியின் தலைவர் ஆனார்.

1998 குரு திசை புதன் புத்தி : குரு சனியை பார்கிறார். புதன் 12இல் அமர்ந்து விபரீத ராஜ யோகம் சம்பந்தம் பெற்று இருக்கிறார் . இந்த தருணத்தில் தான் இவர் இந்தியாவின் ஹோம் மினிஸ்டர் ( HOME MINISTER)ஆக இருந்தார் .

2002- 2004 குரு திசை சுக்கிர புத்தி மற்றும் சூரிய புத்தி : குரு ஆட்சி சனியை பார்கிறார். சூரியனும் சுக்கிரனும் விபரீத ராஜ யோகம் சம்பந்தம் பெற்று இருகிறார்கள். இந்த தருணத்தில் தன் இவர் இந்தியாவின் துணை பிரதமர் ( DEPUTY PRESIDENT )ஆனார். 

2004 மே மாதம் "பாதகாதிபதி " சந்திரன் புத்தி : விருச்சிக லக்ன காரர்களுக்கு சந்திரன் பாதகம் கொடுப்பான். ஏன் எனில் இவன் பாதகாதிபதி. அதேபோல குரு திசையில் சந்திர புத்தி வந்தது . இவரின் சரிவும் ஆரம்பம் ஆனது.

எத்தனை மேலே கொண்டு சென்ற விபரீத ராஜ யோகம் பாதாகதிபதி  திசையில் மிக பெரிய சரிவை கொடுத்தது.

தற்போதைய நிலவரம் :

 ஏழாம் இடத்தில் சனி நின்று கொண்டு கண்ட சனியை நடத்துகிறார். ஆகையால் உடல்நிலை மேலும் மேலும் சரிவு கொடுக்கும்.

குரு மூன்றாம் இடம் செல்கிறார். இதனால் மனத்தில் தைரியம் குறையும். 

மேலும் பல முக்கிய தலைவர்களின் ஜாதகம் இங்கே                       

முன் பக்கம் செல்

No comments :

Post a Comment