01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, April 17, 2013

திரு நரேந்திர மோதி குஜராத் முதல்வர் ஜாதகம் ஒரு பார்வை. Mr. Narendra Modi Gujarat Chief Minister Horoscope analysis - ஜோதிட ஆராய்ச்சி மையம் காட்டுமன்னார்கோயில்திரு நரேந்திர மோதி ( குஜராத் முதல்வர் ) அவர்களை பீ ஜே பீ கட்சி தலைமையகம் P J P  கட்சியின் பிரதமர் உறுப்பினராக நியமித்து இருகிறார்கள்.

மேலும் குஜராத் மாநிலத்தை தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்து  கொண்டு இருகிறார்கள். அங்கு உள்ள மக்களின் கருத்து கணிப்பு படி அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நரேந்திர மோதி ஆட்சி வேண்டும் என்பது தான்.

இது எப்படி சாத்தியம் ஆனது. அவர் ஜாதகம் என்ன சொல்கிறது என்று ஆராய்வோம்.

அவர் குஜராத் இல் உள்ள மேசனா என்ற ஊரில் 17-9-1950 இல் பிறந்து இருக்கிறார்.

அவர் விருச்சக லக்னம் விருச்சக ராசியில் பிறந்து இருக்கிறார்.

லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் ஆட்சி பெற்று இருக்கிறான். ஆகையால் மனத்தில் தைரியம் வீரம் எப்போதும் குடி கொண்டு இருக்கும். மேலும் பல ராணுவ வீரர்கள் ஜாதகதிலும் செவ்வாய் இப்படி தான் ஆட்சி பெற்று இருப்பார்.

பாக்கியாதிபதி சந்திரன் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அவன் லக்னத்தில் இருப்பதால் இவருக்கு அணைத்து பாக்கியங்களையும் வழங்குகிறான்.

குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருப்பதால் குரு சந்திரயோகம் உண்டாகி உள்ளது. இந்த அமைப்பு உள்ளவர்கள் மிக பெரிய பதவி மற்றும் பொது வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.

ஒரு மனிதன் அரசியலில் கொடிகட்டி பறக்க வேண்டும் எனில் சனி நன்றாக அமர்ந்து அந்த சனியை குரு பார்க்க வேண்டும்.

இவர் ஜாதகத்தில் சனி தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்துஇருக்கிறான் மேலும்   சுக ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் குருவின் பார்வையை பெறுகிறான். இது மிகவும் நல்ல அமைப்பு. அரசியலில் ஜெயிப்பதற்கு இந்த அமைப்பு மிக முக்கியம்.

இப்படி நல்ல அமைப்பு உள்ள நரேந்திர மோதி இக்கு குடும்பம் இல்லை குழந்தை இல்லை ஏன் ?

ஏழாம் அதிபதி சுக்கிரன் , அவனுடைய பகைவன் சூரியன் வீட்டில் இருக்கிறான். கூடவே மஹாபாவி சனியும் இருக்கிறான். மேலும் சுக்கிரன் , சனி பகவானுக்கும் கேது பகவானுக்கும் இடையில் நின்று பாவ கத்தரி தோஷம் பெற்று இருக்கிறான். மேலும் லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து ஏழாம் வீட்டை பார்க்கிறான்.ஆகையால் மனைவி என்ற பேச்சிக்கே இடம் இல்லாமல் போனது.

புத்திர ஸ்தானம் என்று சொல்லப்படும் ஐந்தாம் இடத்தில் பாவி ராகு நிற்கிறான். ஆகையால் குழந்தை என்ற ஒன்று இல்லாமல் போனது.

இப்படி இருக்கின்ற நிலையில் அவர் அரசியலில் பிரதமர் போன்ற பெரிய பதவி வகிக்க முடியுமா ? ஜாதகம் என்ன சொல்கிறது.

தற்போது அவருக்கு சந்திர திசையில் குரு புத்தி ( 7-2-2013முதல்  9-6-2014 வரை )

சந்திரன் இவருக்கு பாக்கியாதிபதி. அவன் திசை நடைபெறுகிறது. மேலும் குருவோ சுகத்திருக்கு அதிபதி . குரு வின் புத்தி நடை பெறுகிறது. ஆகையால் 

2014 இல் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இவர் மிக பெரிய வித்தியாசத்தில் ஜெயித்து புகழுடன்  இந்தியாவை வளம் வரலாம்.

இதற்கு அடுத்து வரும் புத்தி சனி புத்தி , சனியும்  நாலாம் வீட்டுடன் சம்பந்த பட்டு பத்தாம் வீட்டில் இருந்து கொண்டு குருவின் பார்வையை பெறுகிறார். ஆகையால் 2014 இக்கு பிறகு கூட அவர் புகழின் உச்சிக்கே போக வேண்டிய அமைப்பு உண்டு.

2020 வரை இவருக்கு பாக்கியாதிபதி திசை நடை பெறுகிறது. ஆகையால் 

இவர் ஒரு வேலை பாராளுமன்ற தேர்தலில்  போட்டியிடவில்லை என்றாலும் இந்தியாவில் ஒரு புகழ் பெற்ற அரசியல்வாதி என்ற பெயருடன் பெரிய பதவியில் இருப்பார்.


2014 மே மாதத்தில் குருவும் இவருக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து பல பாக்கியங்களை பெற்று தருவார். 

ஒரே ஒரு சங்கடம் உள்ளது 2014 டிசம்பர் வரை இவருக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெறுகிறது. அதன் பிறகு ஜென்ம சனி . இதனால் அவ்வபோது  உடல்நிலை மற்றும் கூட்டு கட்சி மற்றும் தொழில் ரீதியில் இன்னல்கள் வந்த வண்ணம் இருக்கும். 

இருபினும் இந்த சனி மூன்றாவது சுற்று ஏழரை சனி  என்பதால் யோகம் கொடுக்கும். 

மேலும் பல சுவாரஷ்யமான ஜோதிட ஆய்வுகள்       

முன் பக்கம் செல்லு

No comments :

Post a Comment