01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Thursday, April 4, 2013

திரு மன்மோகன் சிங் ஜாதகம் - ஒரு பார்வை , Prime minister MANMOHAN SINGH HOROSCOPE ANALYSIS by KATTUMANNARKOIL JOTHIDA MAMANI KALAIARASAN


திரு மன்மோகன் சிங் அவர்கள் தனுசு லக்னம் கடக ராசி யில் பிறந்து இருக்கிறார்.

எப்போதும் நான் சொல்வது போல உயர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் கடக ராசி அல்லது கடக லக்னத்தில் தான் உதிப்பார்கள். இவரும் கடக ராசி தான்.

லக்னாதிபதி குரு ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். ஆகையால் பூர்வ ஜென்மத்தில்  புண்ணியம் செய்தவராக இருப்பார். நல்ல முன்னேற்றம் கொடுக்கும் இந்த அமைப்பு.

மேலும் குருவும் கேதுவும் இணைந்ததால் கோடீஸ்வர யோகம் உண்டாகி இவரை கோடீஸ்வரராக ஆக்கியது.

குரு பகவான் ஒன்பதில் இருந்து கொண்டு தனது சொந்த வீட்டை பார்கிறார். ஆகையால் நல்ல பதவி புகழ் கிடைத்தது.

நாலாம் அதிபதி ( கல்வி ஸ்தான அதிபதி ) குரு ஒன்பதில் இருப்பதாலும் அந்த குரு ஞானகாரன் கேது வுடன் சேர்ந்த இருப்பதாலும் கல்வியில் நல்ல முன்னேற்றம் மற்றும் டாக்டர் பட்டம் பெரும் அமைப்பும் கொடுத்தது.

புதன் என்றாலே வங்கி அதிகாரி என்கிறது சாஸ்திரம். இவருக்கு புதன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றதால் பொருளாதாரம் துறையில்( ECONOMICS) புகழ் சூடினார்.

பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் அவர் வங்கியில் பணி செய்வார் என்கிறது சாஸ்திரம். ஆனால் இவர் ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் புத்தம் உச்சம் பெற்று சூரியனுடன் சேர்ந்து நிற்பதால் இந்தியாவின்    RESERVE BANK OF INDIA வின் தலைவராக பணியாற்றும் அமைப்பு கொடுத்தது.

லக்னதிருக்கு இரண்டில் சனி இருந்தாலும் பத்தாம் வீட்டுடன் சூரியன் சம்பந்தபட்டு இருந்தாலும் அவர்கள் அரசியலில் கொடிகட்டு பறப்பார்கள்.இவர் ஜாதகத்திலும் இதே அமைப்பு தான்.

எட்டாம் இடத்தின் அதிபதி சந்திரன் ஆட்சி பெற்று இருப்பதாலும் ஆயுள் காரகன் சனி ஆட்சி பெற்று இருப்பதாலும் நீண்ட ஆயுள் கொடுக்கும்.

இப்படி பட்ட இவருக்கு ராகு திசை சுக்கிர புத்தியில் பிரதமராகும் யோகம் கிட்டியது. ( ராகுவும் சுக்கிரனும் நண்பர்கள் )

ராகு குருவின் சாரத்தில் இருக்கிறான். சுக்கிரன் புதன் சாரத்தில் இருக்கிறான்.

குரு 1,4 இக்கு உடையவர் அவர் ஒன்பதில் இருப்பதாலும் 

புதன் 7,10 இக்கு உடையவன் அவன் பத்தாம் வீட்டில் அரசியல் கிரகம் சூரியனுடன் இருப்பதாலும் ராகு திசை சுக்கிர புத்தியில் பிரதமரானார்.

தற்போதய நிலவரம் :

சனி நாலாம் வீட்டில் இருந்து கொண்டு அர்தாஷ்டம சனி நடக்கிறது. மேலும் இது வரை லாபத்தில் இருந்த குரு பகவான் 2013 மே மதம் முதல் விரயத்தில் சஞ்சரிப்பார். இது நல்ல அமைப்பு இல்லை.

மனத்தில் இனம் புரியாத கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும் .

பண பற்றாக்குறையால் திக்குமுக்கு ஆட வைக்கும்.

நாலாம் இட சனி உடலை கெடுப்பான்.

இந்த நிலையில் 2014  இல் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. குரு பலமும் இல்லாத நேரம் இது. சனியின் சஞ்சாரமும் உடல்நிலையை கெடுக்கும் நேரம் இது . No comments :

Post a Comment