01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Tuesday, May 21, 2013

ஆறாம் இடமும் ஆரோக்கியமும் MEDICAL ASTROLOGY, நோய் நொடி கடன் எதிரி விபத்து ஆறாம் பாவம் ஆறாம் வீடு 6 th house analysis by cuddalore jothidar kalaiarasan

ஆறாம் இடத்தை வைத்து ஒரு மனிதன் அனுபவிக்கும் நோய் , எதிரி மற்றும் கடன் இவற்றை அறிய முடியும். மேலும் சிறை தண்டனை கூட இந்த இடத்தை வைத்து கூற முடியும்.

ஆறாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் ஒரு மனிதனுக்கு எதிரிகள் குறைவாக இருப்பார்கள். அதுவே சுப கிரகம் அங்கே இருந்தால் அனேக எதிரிகளை எதிர்கொள்ளும் நிலை கொடுக்கும்.

ஆறாம் அதிபதி லக்னத்தில் சூரியனுடன் சேர்ந்து இருந்தால் அவனுக்கு கண்டிப்பாக தலையில் கொப்பளங்கள் வரும் அமைப்பு உண்டு.

ஆறாம் அதிபதி சுக்கிரனுடன் கூடி லக்னத்தில் இருந்தால் கண்ணில் நோய்கள் வந்த வண்ணம் இருக்கும்.

ஆறாம் வீட்டில் சனி ராகு கேது போன்ற பாவிகள் இருந்தால் அடிகடி நோய்வாய் படும் அமைப்பு உண்டு.

செவ்வாய் ஆறாம் வீட்டில் இருந்து ஆறாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால் ஆறாம் வயதிலும் பன்னிரெண்டாம் வயதிலும் கடுமையான ஜுரம் வரும்.

குருவும் சந்திரனும் சேர்ந்து ஆறாம் வீட்டில் இருந்தால் ஒருவன் இருபது வயதில் பெரு வியாதி அல்லது தொழு நோய் பெற்று அவதிபெருவான்.

ஆறாம் வீட்டில் ராகு இருந்து லக்னாதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால் ஒருவன் நீர்சம்பந்தமான நோய்வாய் 26 வயதில் பெறுவான்.

ஆறாம் அதிபதியும் பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஒருவன் தனது முப்பது வயதில் பெருங்குடல் நோய் அல்லது வயிற்றுவலி நோயால் அவதிபடுவான். மேலும் 31 ம் வயதிலும்  40 ம் வயதிலும் பெரிய பண விரயம் கொடுக்கும். 

லக்னாதிபதி எட்டாம் வீட்டில் மறைந்தால் கீல்வாதம் அல்லது RHEUMATIC நோயால் அவதிப்படும் வாய்ப்பு உண்டு.

ஆறாம் வீட்டில் சனியும்  எட்டாம் அதிபதியும்  இருந்து லக்னத்தில் பன்னிரெண்டாம் அதிபதி இருந்தால் காட்டு விலங்குகளால் ஆபத்து ஏற்படுமோ என்ற பயம் மனத்தில் எப்போது இருக்கும்.

சூரியன் ஆறாம் வீட்டிலோ அல்லது எட்டாம் வீட்டிலோ இருந்து சூரியனுக்கு பண்ணிறேண்டில் சந்திரன் இருந்தால் 5 ம் வயதிலோ அல்லது  12 ம் வயதிலோ நீரால் கண்டம் வரும்.

ஆறாம் பதிபதியும் குருவும் ஆறாம் வீட்டில் இருந்து பன்னிரெண்டாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் பெற்ற மகனே எதிரியாக வருவான்.

ஆறாம் வீட்டில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து நின்றால் மஞ்சள்காமாலை வரும் அமைப்பு உண்டு.

லக்னாதிபதி பலம் இழந்து ஆறாம் வீட்டில் சனி அல்லது செவ்வாய் இருந்து ராகு அல்லது சூரியன் பார்த்தால் நெடுநாள் வியாதி வரும்.

ஆறாம் வீட்டில் சனியும் மாந்தியும் இருந்து சூரியன் (அ) ராகு (அ) செவ்வாய் பார்வை பெற்றால் இதயம் அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் வரும்.

ஆறாம் வீட்டில் சூரியன் இருந்து சனியின் பார்வை பெற்றால் இதயம் பாதிக்கும்.

ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் சிறு வயதில் பல நோய் கொடுக்கும். மேலும் செவ்வாய் (அ) சனி இவர்கள் பார்வை பெற்றால் தீராத நோய் கொடுக்கும். வயற்று சம்பந்த நோய்கள் கொடுக்கும்.

ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் விபத்து கொடுக்கும். சனி பார்வை பெற்றால் சிகிக்கை செய்யும் போது மரணம் சம்பவிக்கும். அல்லது விலங்குகளால் மரணம் சம்பவிக்கும். ராகுவும் செவ்வாயும் சேர்ந்து ஆறாம் வீட்டு சம்பந்தம் பெற்றால் தற்கொலை எண்ணம் இருக்கும். கேது வும் செவ்வாயும் ஆறாம் வீட்டு சம்பந்தம் பெற்றால் விஷ உணவால் மரணம் சம்பவிக்கும்.

ஆறாம் வீட்டில் புதன் இருந்து பாவி சேர்க்கை பெற்றால் நரம்பு மற்றும் மூலை சம்பந்த உள்ள நோய் வரும். 

ஆறாம் வீட்டில் குரு இருந்தால் பாவிகள் சேர்க்கை பெற்றால் அதிக ஈடுபாட்டின் காரணமாக நோய்கள் வரும்.

சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்தால் காம சம்பந்த பட்ட நோய்கள் வரும்

சனி ஆறாம் வீட்டில் இருந்து செவ்வாய் பார்வை பெற்றால் ஆபத்தான நோய்கள் வரும். ராகுவும் சனியும் சேர்ந்தால் மன நோய் வரும்.

ஆறாம் வீட்டில் ராகு இருந்து சனி அல்லது சந்திரன் சேர்க்கை பெற்றால் மன நோய் வரும் அமைப்பு உண்டு.

Wednesday, May 8, 2013

மரணம் எப்போது வரும் - ஜோதிட ரீதியான விளக்கம் .WHEN DEATH OCCURS ? ASTROLOGICAL EXPLANATION BY ASTROLOGER jyothisha mamani KALAIARASAN, KATTUMANNARKOIL JOTHIDA NILAYAM


" மரணம் என்பது தோல்வியோ அல்லது துக்கமான சம்பவமோ இல்லை.தனது கர்மங்கள் அனைத்தையும் செய்து முடித்த ஒருவனுக்கு அது மோட்சம் என்றும் கர்மங்களை முழுவதும் செய்து முடிக்காமல் இறந்தவனுக்கு அது மருபிறவிக்கான ஆரம்பம் என்றும் அழைக்கபடுகிறது."

                                                                ---- கலையரசன் காட்டுமன்னார்கோயில்
                                                                      ( கீதையை படித்ததில் உணர்ந்தது )


மேலே ஒரே குடும்பத்தை சார்த்த தந்தை தாய் மகன் ஆகிய மூவரின்  ஜாதகங்களை எடுத்துக்கொண்டு  எவ்வாறு மரணம் சம்பவித்தது என்று ஆராய்ச்சி செய்ததில் ஜோதிட விதிகள் எந்த அளவுக்கு துல்லியமானவை என்பதை அறிய முடிகிறது.

முதலில் தந்தை ஜாதகம் ( CHART -1 ) :

தந்தை ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி இருக்கிறான். ஆகையால் மனைவிக்கு கண்டம் கொடுக்க வேண்டும். 

மேலும் ஏழாம் வீட்டை பாவி செவ்வாய் பார்க்கிறான். இந்த செவ்வாயும் மனைவிக்கு கண்டம் கொடுக்க வேண்டும்.

ஏழாம் அதிபதி குரு 12 ம் வீட்டில் மறைந்து விட்டார். 

மனைவிக்கு அதிபதியான கிரகம் சுக்கிரன் நீச்சம் பெற்று லக்னத்தில் இருக்கிறான். மேலும் நீச்சம் பெற்ற சுக்கிரனை சனி பார்க்கிறான்.

இப்படி மனைவிக்கு பல கண்டம் இவரின் ஜாதகத்தில் உள்ளது.

மேலும் இவருக்கு சந்திர திசை சுக்கிர புத்தி நடைபெறுகிறது.

சந்திரனும் நீச்சம் சுக்கிரனும் நீச்சம் சுக்கிரன் குரு வுக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறான். 

ஜோதிட சாஸ்திரப்படி 2,7  வீட்டிற்கு அதிபதியும் 2,7 வீட்டில் இருப்பவர்களும் மரணத்தை கொடுப்பார்கள்.

இங்கே மனைவி இக்கு உரிய கிரகம் குரு அவருக்கு இரண்டாம் வீட்டில் நிற்கின்ற நீச்சம் பெற்ற சுக்கிரன் புத்தியில் மனைவி இறந்து விட்டாள்.

மனைவி யின் ஜாதகம் ( CHART -2 ): 

இந்த பெண்ணின் ஜாதகத்தை பார்த்த உடனேயே தெரிகிறது. 

இவள் அற்ப ஆயுள் உள்ள பெண் என்று.

பாருங்கள் லக்னாதிபதி சுக்கிரன் நீச்சம் பெற்று மறைவு ஸ்தானமாக 12 ம் வீட்டில் மறைந்து விட்டான்.

மேலும் பாவிகள் கேது மற்றும் சூரியனுடன் சேர்ந்து மறைந்து விட்டான்.

ஆயுள் கொடுக்ககூடிய சனி மேஷத்தில் நீசம் பெற்று விட்டான்.

ஆயுளை பலபடுதும் எட்டாம் அதிபதி சுக்கிரன் நீச்சம் பெற்றும் 12 ம் வீட்டில் மறைந்தும் கிடக்கிறான்.

இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த பெண்ணுக்கு 

செவ்வாய் திசை சனி புத்தி வந்தது.

செவ்வாயோ 2 ,7 ம் வீட்டின் அதிபதி . நான் முன்பே சொன்னது போல 2,7  ம் வீட்டின் அதிபதிகள் மரணத்தை கொடுப்பார்கள் .

புதன் மறைவு ஸ்தானமான 12 ம் வீட்டிற்கு அதிபதி . இந்த புதன் புத்தியும் மரணத்தை கொடுக்க வேண்டும்.

செவ்வாயும் புதனும் சேர்ந்து மரணத்தை கொடுத்து விட்டார்கள்.

பாருங்கள் ... கணவன் ஜாதகத்தில் மனைவி கிரகம் குரு விற்கு இரண்டாம் வீட்டின் சுக்கிரன் புத்தியும் நடந்து எப்படி மரணத்தை கொடுத்து விட்டது.

மகன் ஜாதகம் ( CHART -3 ) :

மூன்றாவது ஜாதகத்தை பாருங்கள் 

தாய் வீடு என்று சொல்லப்படும் நாலாம் வீட்டில் ராகு நிற்கிறான்.

நாலாம் வீட்டிற்கு உரிய சூரியன் 12 ம் வீட்டில் உச்சம் பெற்று மறைந்து கிடக்கிறான். மேலும் 

பகைவன் சனியுடன் கூடியும் பாவி செவ்வாய் யுடன் கூடியும் நிற்கிறான்.

தாய் குரிய கிரகம் சந்திரன் செவ்வாயால் பார்க்கபடுகிறான். 

இந்த அமைப்பினால் நல்ல தாய் கிடைத்தாலும் அவள் ஆயுள் தீர்க்கமாக இல்லாமல் போனது. 

இந்த பையன் ஜாதக படி சனி திசை செவ்வாய் புத்தி நடைபெறும் போது தாய் இறந்தாள்...

சனி,  தாய் வீட்டிற்கு 7 ம் வீட்டின் அதிபதி . மேலும் செவ்வாய் தாய் கிரகம் சந்திரனை மறைவு ஸ்தானம் என்று சொல்லப்படும் 12 ம் வீட்டில் இருந்து பார்க்கிறான்.

பாருங்கள் ஏழாம் வீடு ஒருவனுக்கு மனைவி கூட்டு தொழில் பயணம் இவற்றை கொடுத்தாலும் நேரம் வரும் போது மரணத்தை கொடுப்பவனும் இந்த ஏழாம் வீட்டுக்காரன் தான்.