01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Tuesday, May 21, 2013

ஆறாம் இடமும் ஆரோக்கியமும் MEDICAL ASTROLOGY, நோய் நொடி கடன் எதிரி விபத்து ஆறாம் பாவம் ஆறாம் வீடு 6 th house analysis by cuddalore jothidar kalaiarasan

ஆறாம் இடத்தை வைத்து ஒரு மனிதன் அனுபவிக்கும் நோய் , எதிரி மற்றும் கடன் இவற்றை அறிய முடியும். மேலும் சிறை தண்டனை கூட இந்த இடத்தை வைத்து கூற முடியும்.

ஆறாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் ஒரு மனிதனுக்கு எதிரிகள் குறைவாக இருப்பார்கள். அதுவே சுப கிரகம் அங்கே இருந்தால் அனேக எதிரிகளை எதிர்கொள்ளும் நிலை கொடுக்கும்.

ஆறாம் அதிபதி லக்னத்தில் சூரியனுடன் சேர்ந்து இருந்தால் அவனுக்கு கண்டிப்பாக தலையில் கொப்பளங்கள் வரும் அமைப்பு உண்டு.

ஆறாம் அதிபதி சுக்கிரனுடன் கூடி லக்னத்தில் இருந்தால் கண்ணில் நோய்கள் வந்த வண்ணம் இருக்கும்.

ஆறாம் வீட்டில் சனி ராகு கேது போன்ற பாவிகள் இருந்தால் அடிகடி நோய்வாய் படும் அமைப்பு உண்டு.

செவ்வாய் ஆறாம் வீட்டில் இருந்து ஆறாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால் ஆறாம் வயதிலும் பன்னிரெண்டாம் வயதிலும் கடுமையான ஜுரம் வரும்.

குருவும் சந்திரனும் சேர்ந்து ஆறாம் வீட்டில் இருந்தால் ஒருவன் இருபது வயதில் பெரு வியாதி அல்லது தொழு நோய் பெற்று அவதிபெருவான்.

ஆறாம் வீட்டில் ராகு இருந்து லக்னாதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால் ஒருவன் நீர்சம்பந்தமான நோய்வாய் 26 வயதில் பெறுவான்.

ஆறாம் அதிபதியும் பன்னிரெண்டாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஒருவன் தனது முப்பது வயதில் பெருங்குடல் நோய் அல்லது வயிற்றுவலி நோயால் அவதிபடுவான். மேலும் 31 ம் வயதிலும்  40 ம் வயதிலும் பெரிய பண விரயம் கொடுக்கும். 

லக்னாதிபதி எட்டாம் வீட்டில் மறைந்தால் கீல்வாதம் அல்லது RHEUMATIC நோயால் அவதிப்படும் வாய்ப்பு உண்டு.

ஆறாம் வீட்டில் சனியும்  எட்டாம் அதிபதியும்  இருந்து லக்னத்தில் பன்னிரெண்டாம் அதிபதி இருந்தால் காட்டு விலங்குகளால் ஆபத்து ஏற்படுமோ என்ற பயம் மனத்தில் எப்போது இருக்கும்.

சூரியன் ஆறாம் வீட்டிலோ அல்லது எட்டாம் வீட்டிலோ இருந்து சூரியனுக்கு பண்ணிறேண்டில் சந்திரன் இருந்தால் 5 ம் வயதிலோ அல்லது  12 ம் வயதிலோ நீரால் கண்டம் வரும்.

ஆறாம் பதிபதியும் குருவும் ஆறாம் வீட்டில் இருந்து பன்னிரெண்டாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் பெற்ற மகனே எதிரியாக வருவான்.

ஆறாம் வீட்டில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து நின்றால் மஞ்சள்காமாலை வரும் அமைப்பு உண்டு.

லக்னாதிபதி பலம் இழந்து ஆறாம் வீட்டில் சனி அல்லது செவ்வாய் இருந்து ராகு அல்லது சூரியன் பார்த்தால் நெடுநாள் வியாதி வரும்.

ஆறாம் வீட்டில் சனியும் மாந்தியும் இருந்து சூரியன் (அ) ராகு (அ) செவ்வாய் பார்வை பெற்றால் இதயம் அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் வரும்.

ஆறாம் வீட்டில் சூரியன் இருந்து சனியின் பார்வை பெற்றால் இதயம் பாதிக்கும்.

ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் சிறு வயதில் பல நோய் கொடுக்கும். மேலும் செவ்வாய் (அ) சனி இவர்கள் பார்வை பெற்றால் தீராத நோய் கொடுக்கும். வயற்று சம்பந்த நோய்கள் கொடுக்கும்.

ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் விபத்து கொடுக்கும். சனி பார்வை பெற்றால் சிகிக்கை செய்யும் போது மரணம் சம்பவிக்கும். அல்லது விலங்குகளால் மரணம் சம்பவிக்கும். ராகுவும் செவ்வாயும் சேர்ந்து ஆறாம் வீட்டு சம்பந்தம் பெற்றால் தற்கொலை எண்ணம் இருக்கும். கேது வும் செவ்வாயும் ஆறாம் வீட்டு சம்பந்தம் பெற்றால் விஷ உணவால் மரணம் சம்பவிக்கும்.

ஆறாம் வீட்டில் புதன் இருந்து பாவி சேர்க்கை பெற்றால் நரம்பு மற்றும் மூலை சம்பந்த உள்ள நோய் வரும். 

ஆறாம் வீட்டில் குரு இருந்தால் பாவிகள் சேர்க்கை பெற்றால் அதிக ஈடுபாட்டின் காரணமாக நோய்கள் வரும்.

சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்தால் காம சம்பந்த பட்ட நோய்கள் வரும்

சனி ஆறாம் வீட்டில் இருந்து செவ்வாய் பார்வை பெற்றால் ஆபத்தான நோய்கள் வரும். ராகுவும் சனியும் சேர்ந்தால் மன நோய் வரும்.

ஆறாம் வீட்டில் ராகு இருந்து சனி அல்லது சந்திரன் சேர்க்கை பெற்றால் மன நோய் வரும் அமைப்பு உண்டு.

6 comments :

 1. Sir, what If sixth house is not occupied by any Planet.. ?

  ReplyDelete
  Replies
  1. ஆறாம் வீட்டில் ஒரு கிரகமும் இல்லை எனில் ஆறாம் வீட்டு அதிபதியும் ஆறாம் வீட்டை பார்க்கும் பாவியும் அதற்கு தகுந்த நோயை கொடுப்பார்கள்.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. Hello Sir... u said..
  சூரியன் ஆறாம் வீட்டிலோ அல்லது எட்டாம் வீட்டிலோ இருந்து சூரியனுக்கு பண்ணிறேண்டில் சந்திரன் இருந்தால் 5 ம் வயதிலோ அல்லது 12 ம் வயதிலோ நீரால் கண்டம் வரும்.
  but i met fire accident at the age of 12..

  ReplyDelete
 4. லக்கினம் மேஷம். இலக்கின அதிபதி செவ்வாய் 6ல் ..கண்ணியில்.சித்திரை 1ம் பாதம்.24.20.1 அஷ்டவர்க்கம் மேஷம் பரல்: 27.கன்னி பரல் 33 .aayusu parri sollungkal.

  ReplyDelete
 5. கடக லக்னம் ஆறில் குரு ராகு சேர்க்கை இதன் பலன் யென்ன?

  ReplyDelete