01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, June 26, 2013

ஏழில் கேது திருமண தடையா ? ஜோதிட ரீதியான விளக்கம் JYOTHISHA MAMANI KALAIARASAN -ஜோதிட மலர்சில ஜோதிடர்கள் கேது வை ஏழாம் வீட்டில் பார்த்ததுமே திருமணம் நடக்காது என்று கூறுவதை கண்டு இருக்கிறேன். ஆனால் உண்மையில் பல ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் ஏழாம் வீட்டில் கேது இருந்தும் திருமணம் நடந்து நன்றாக வாழ்வதை காண முடிகிறது.

பொதுவாக கேதுவை துறவி கிரகம் என்று கூறுவதுண்டு. ஆகையால் ஏழாம் வீட்டில் கேது இருந்தால் மண வாழ்வு அமையாது என்று நினைகிறார்கள்.

உண்மையில் ஏழாம் வீட்டில் கேது இருப்பது மிக கடுமையான தோஷம் இல்லை.

ஏழாம் வீட்டில் கேது இருந்து அந்த கேதுவை குரு பகவான் பார்த்து விட்டால் அவன் மண முடிந்து நல்ல பிள்ளைகளையும் பெற்று எடுப்பான்.

மேலும் சுக்கிரன் பலமாக இருந்தால் ஏழாம் வீட்டில் கேது இருந்தாலும் திருமணத்தை முடித்து கொடுப்பான்.

ஏழாம் வீட்டில் கேது இருந்து அவனுடன் சூரியனும் சேர்ந்து இருந்தால் மண வாழ்க்கை உண்டு. இருபினும் கொஞ்சம் மனவருத்தம் கணவன் மனைவி இடையே தோன்றும்.

ஏழாம் வீட்டில் செவ்வாய் கேது இருந்தாலும் மண கசப்பு மற்றும் தகராறு கொடுக்குமே தவிர மண வாழ்க்கை இல்லாமல் போகாது.

எது எப்படி இருபினும் குரு பார்வை கிடைத்து விட்டால் மண வாழ்க்கை நன்றாக அமையும்.

கேது ஏழாம் வீட்டில் இருந்து கொண்டு மண முடிக்க கால தாமதம் கொடுப்பான் இதை மறுக்க முடியாது. இருபினும் 31 வயதை தாண்டி விட்டால் பெரிய கெடுதி இல்லை.

கட்டன சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

Sunday, June 2, 2013

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ஜாதகம் - தர்மகர்மாதிபதி யோகம் -மோட்சம் - Ramana maharshi ஜோதிட விளக்கம் ஜோசியர் கலையரசன் , கடலூர் ஜோதிடர் கலையரசன்


பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷி 1879 இல் பிறந்தார். இவரின் ஜாதகத்தில் லக்னம் வர்கோத்தமம் பெற்றும் குரு பார்வை பெற்றும் இருப்பதால் ஜாதகம் பலமாக இருப்பதை உணர முடிகிறது.

லக்னாதிபதி சுக்கிரன் புதனுடன் சேர்ந்தான் மிதமான உயரம் கொடுத்தான்.

சூரியனும் சந்திரனும் சுப கிரகத்தின் வீட்டில் அமர்ந்து தெய்வீக கிரகமான ராகு உடனும் கேது உடனும் சேர்ந்ததால் அவரின் கண்ணில் ஒரு தெய்வீக ஒளி இருந்தது.

( சந்திரனும் சூரியனும் கண்களை குறிக்கும் கிரகம் )

லக்னத்திற்கு நாலாம் அதிபதி சனி ஆறாம் வீட்டில் மறைந்தான் . சந்திரனுக்கு நாலாம் வீட்டை சனி பார்த்தான் . செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் கல்விகாருகன் புதனை பார்க்கிறான். கல்வியில் சாதாரணமான மந்தமான மாணவனாக இருக்குமாறு செய்தான்.

மூன்றாம் வீட்டில் பாவிகள் இருந்தாலும் சந்திரனுக்கு மூன்றாம் வீட்டில் குரு பார்வை இருப்பதால் சகோதரர்களுடன் பிறக்கும் அமைப்பு ஏற்பட்டது.

சந்திரன் வர்கோத்தமம் பெற்று சுப கிரகத்தின் வீட்டில் இருப்பதாலும் குரு பார்வை இருப்பதாலும் தாய் நீண்ட ஆயுளுடன் இருந்தார்.

யோககாரன் சனி ஆறாம் வீட்டில் மறைந்ததால் ஒரு முனிவன் தன்னை உணர எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமோ அத்தனை கஷ்டத்தையும் அடைந்தார்.

அணைத்து காம உணர்ச்சிகளையும் தெய்வீக பக்கம் திருப்ப ஒவ்வொரு முனிவனும் படும் கஷ்டத்தை இவரும் அடைந்தார்.

ஏழாம் வீட்டில் இருக்கும் செவ்வாய் கேது என்ற தெய்வீக கிரகத்தின் சாரத்தில் இருப்பதாலும் காம காரகன் சுக்கிரன் ஒன்பதாம் அதிபதி ( தர்மாதிபதி ) உடன் சேர்ந்ததால் தனது ஆசா பாசம் அனைத்தையும் இறைவன் பக்கம் திருப்புமாறு செய்தது.

தர்மஸ்தானம் என்று சொல்லபடுகின்ற ஒன்பதாம் வீட்டில் இருக்கும் குரு சந்திர லக்னத்தை பார்ப்பதால் காம சுகத்தில் ஈடுபாடு இல்லாமல் போனது. மனம் முழுவதும் தெய்வீக பக்கம் திரும்பியது.

லக்னாதிபதி சுக்கிரன் 9,12 என்று சொல்லபடுகின்ற தர்மஸ்தானம், மோட்ச ஸ்தானம் அதிபதி புதனுடன் சேர்ந்து நிற்பதால் மோட்சம் பெரும் வழியில் மனமும் உடலும் சென்றது.

லக்னாதிபதி எட்டாம் வீட்டை பார்பதாலும் ஆயுள்காரகன் சனி சுப கிரகத்தின் வீட்டில் இருப்பதாலும் நீண்ட ஆயுள் கொடுத்தது.

தந்தை கிரகம் ராகு வுடன் கூடி மூன்றாம் வீட்டில் மறைந்ததாலும் செவ்வாய் மற்றும் சனி போன்ற பாவிகள் பார்வை பெறுவதாலும் சிறு வயதிலேயே தந்தையை இழக்கும் நிலை உண்டானது.

சூரியனும் சந்திரனும் ஆத்மாவையும் மனதையும் குறிக்கும். இவைகள் சுபகிரகத்தின் வீட்டில் இருப்பதால் ஆத்ம வித்தையையும் திடமான மனதையும் பெற்றார்.

ஆத்மா காரகன் சூரியனுடன் ராகு சேர்ந்தாலும் ஆவல் மற்றும் இச்சை இவற்றை குறிக்கும் கிரகம் செவ்வாய் ஏழாம் வீட்டில் இருப்பதாலும் இறை உணர்வை அடையும் பாதையில் பல போராட்டத்தை சந்திக்க செய்தது .
( மனதளவில்)

தந்தை மரணம் : 1892 சுக்கிர புத்தி சனி திசா :

சனி , தந்தை ஸ்தானம் என்று சொல்லப்படும் ஒன்பதாம் வீட்டிற்கு 2இல் உள்ளான். இரண்டாம் வீடு மாரகஸ்தானம் . மேலும் சுக்கிரன் 9 ம் அதிபதி புதனுடன் கூடி மாரகஸ்தானம் என்று சொல்லப்படும் 2ம் வீட்டில் உள்ளான். மரணத்தை தந்தைக்கு கொடுத்து விட்டான்.

வீட்டை விட்டு வெளியேறி அருணாச்சலேஸ்வரர் ஆலயம் அடைந்த நாள் :

29 ஆகஸ்ட்  1896 . சனி திசா செவ்வாய் புத்தி :

சனியோ யோககாரன்  , செவ்வாய் யோ லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று ருச்சக யோகம் பெற்று இருக்கிறான்.

சனியும் குருவும் அதாவது 9 ம் அதிபதியும் 10 ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்று தர்மகர்மாதிபதி யோகம் பெற்று உள்ளனர்.

தெய்வீக கிரகங்கள் யோகத்தில் ஈடுபட்டதால் சிறு வயதிலேயே ஆன்மா தேடி தன்னில் உணர்ந்தார்.

அண்ணன் மரணம் : சனி திசா ராகு புத்தி :

3  ம் வீட்டில் சூரியனும் ராகுவும் இருக்கிறான் . 3 ம்  இடம் சனி பார்வை பெறுகிறது. மூன்றாம் இடமோ சகோதர ஸ்தானம். இந்த ஸ்தானத்தை சனியும் ராகுவும் கெடுப்பதால் சகோதரனுக்கு மரணத்தை கொடுத்து விட்டான்.

அம்மாவின் மரணம் : கேது திசை சந்திர புத்தி : 

கேது சந்திரனுடன் கூடி இருக்கிறான். கேது வால் பாதிக்க பட்ட சந்திரன் , கேது திசா சந்திர புத்தியில் தாய்க்கு மரணத்தை கொடுத்து விட்டான்.

மகரிஷியின் மரணம் : சூரிய தசா சனி புத்தி :

7 ம் வீட்டில் இருப்பவன் மரணத்தை கொடுப்பான். சந்திரனுக்கு 7 ம் வீட்டில் இருக்கும் சூரிய தசாவில் சந்திரனுக்கு 7 ம் வீட்டில் இருக்கும் சனி ( நவாம்சத்தில் ) மரணத்தை கொடுத்து விட்டான்.

மோட்சம் :

10 ம் அதிபதி ஆத்மா காரகன் என்று அழைக்கபடுகிறான். 10 ம் அதிபதி நவாம்சத்தில் எங்கு இருக்கிறானோ அது காரகாம்சம் என்று அழைக்கபடுகிறது.

காரகாம்சம் இக்கு 12இல் கேது இருந்தால் அவன் கண்டிப்பாக மோட்சம் அடைவான் என்று ஜைமினி சாஸ்திரம் கூறுகிறது.

இவருக்கும் இதே அமைப்பு தான். சந்திரனுக்கு 12 இல் கேது நவாம்சத்தில் இருக்கிறான். ஆகையால் மோட்சம் கிட்டியது.

தர்ம கர்மாதிபதி யோகம் , கும்பம் மற்றும் மீனம் போன்ற தெய்வீக வீட்டில் உருவானதால் ஆத்ம வித்தையை முற்றிலும் அறிய வைத்தது.

9 ம் அதிபதி புதன் இரண்டாம் வீட்டில் விருச்சகத்தில் இருப்பதால் தன்னை தானே கேள்விகள் கேட்டும் தன் உள்ளே உள்நோக்கி பயணம் செய்தும் நான் யார் என்பதை உணர்ந்தார்.

இறுதியாக நான் ஆத்மா என்பதை உணர்ந்தார்.