01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, July 17, 2013

ரமலான் புனித மாதம் - பேரரசர் அக்பர் ஜாதகம் - ஜோதிட மாமணி கலையரசன் , AKBAR THE GREAT - HOROSCOPE ANALYSIS - JOTHIDA MAMANI KALAIARASAN - Malar Jothida Araichi Nilayam

இந்த ரமலான் புனித மாதத்தில் இந்தியா வை  வெகு சிறப்பாக பல ஆண்டுகள் ஆட்சி செய்த பேரரசர் அக்பரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து வரலாற்றில் இடம் பெற அவர் ஜாதகம் எப்படி இருந்து இருக்கிறது  என்பதை பார்ப்போம்.பேரரசர் அக்பர் அவர்கள் துலாம் லக்னம் மிதுன ராசியில் பிறந்து உள்ளார்.

லக்னத்தில் அழகுக்கு அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்றும் யோககாரன் சனி உச்சம் பெற்றும் குருவும் கூடி நிற்கிறார்கள் . ஆகையால் அக்பர் அழகாகவும் உயரமாகவும் வலிமையான ஆண் மகனாக காட்சி அளித்தார்.

இவர் ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் என்று சொல்லப்படும் தந்தை ஸ்தானத்திற்கு ஒன்பதில் ராகு நிற்கின்ற காரணத்தால் இவரின் தந்தை அரசாட்சியில் இருந்து துரத்தப்பட்டு காட்டு வழியில் செல்லும் போது ஹிமயுனுக்கு அக்பர் பிறந்தார்.


மனதிற்கு காரணம் வகிக்கும் சந்திரன் எந்த பாவ கிரகத்தாலும் பாதிக்கப்படாமல் இருப்பதாலும் சுப கிரகம் புதனாலும் குருவாலும் பார்க்க படுவதால் இவரின் மனம் வலிமை படைத்தாக இருந்தது.

சந்திரன் பாதிக்கப்படாமல் இருப்பதால் இவர் கர்வம் இல்லாமலும் சதி செய்யும் எண்ணம் இல்லாமலும் நேர்மையாக இருக்குமாறு செய்தது.

ஆத்மா காரகன் சூரியன் எந்த பாவகிரகத்தின் பாதிப்பிற்கும்  உள்ளாகாமல் தனது நண்பன் செவ்வாய் வீட்டில் இருப்பதால் இவர் கருணை உள்ளம் மற்றும் அன்பு படைத்தவராக இருக்குமாறு செய்தது.

யோககாரன் சனி லக்னாதிபதியுடன் கூடி இருப்பது ராஜயோகம் மேலும் பத்தாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து குரு பார்வை பெறுவதால் ராஜயோகம் .

செவ்வாய் பூமிகாரகன் அவன் நாலாம் வீட்டில் உச்சம் பெற்று உள்ளான். மேலும் செவ்வாய் ஏழாம் வீட்டின் அதிபதி அவன் நாலாம் வீட்டில் உச்சம் பெற்று 10,11 ம் வீட்டை பார்ப்பதால் மிக பெரிய ராஜ்யத்தை உருவாக முடிந்தது. 

ராஜ்புத் மகளை திருமணம் செய்து கொண்டு தனது ராஜ்யத்தை மேலும் விரிவாக்கினார். இதற்கு காரணம் ஏழாம் அதிபதி செவ்வாய் நாலாம் வீட்டில் உச்சம் பெற்றது தான். ஏழாம் அதிபதி நாலாம் வீட்டில் உச்சம் பெற்றால் வீடு வாகனம் சொத்து போன்றவை மனைவி மூலம் சேரும்.

விரோதிகளை குறிக்கின்ற ஆறாம் அதிபதி குரு பகவான் தனது பகைவன் சுக்கிரன் வீட்டில் இருப்பதாலும் லக்னாதிபதி சுக்கிரன் பலம் பெற்று இருப்பதாலும் செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதாலும் எதிரிகளை வெற்றி கண்டார். 

அக்பருக்கு மிக பெரிய சாம்ராஜ்யம் இருந்ததற்கான குறிப்புகள் கானபடுகிறது. அதற்கான காரணம் லாபாதிபதி சூரியன் இரண்டாம் வீட்டில் நிற்கிறான் மேலும் இரண்டாம் அதிபதி செவ்வாய் நாலாம் வீட்டில் உச்சம் பெற்று நிற்கிறான்.

ராகு தசா : 

பாவி ராகு பகவான் ஒன்பதுக்கு ஒன்பதில் இருப்பதால் தந்தை ஹுமாயுனுக்கு மரணம் சம்பவித்தது.

மேலும் ராகு சனியின் வீட்டில் இருப்பதால் சனியின் பலனை ராகு  கொடுக்க வேண்டும் . சனியோ யோககாரன் ஆகையால் தந்தை மரணத்திற்கு பிறகு அக்பருக்கு ராஜா பதவி கிடைத்தது.

குரு தசா :

குரு பகவான் ஆறாம் வீட்டுக்கு அதிபதி. லக்னாதிபதி ஆட்சி பெற்று பலம் பெற்று இருப்பதால் அணைத்து எதிரிகளையும் குரு தசாவில் அடக்கி வெற்றி கொண்டார் அக்பர்.

இந்த குரு திசாவில் தான் வட இந்தியாவின் பெரும் பகுதியை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தார்.

குழந்தை பாக்கியம் :

குரு தசாவின் செவ்வாய் மற்றும் ராகு புத்தியில் அவருக்கு சலீம் மற்றும் முராடு என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். புத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற ராகு அவர்க்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்தார்.

சனி திசை 1591 வரை :

சனி பகவான் துலாம் ராசி கார்களுக்கு யோககாரன் இந்த நேரத்தில் இவர் அரசாட்சியை வலிமை படுத்தி நிர்வாகத்தை பலபடுத்தி தனது பெயரை வரலாறு சொல்லும் அளவுக்கு யோககாரன் சனி புகழின் உச்சிக்கே கொண்டு சென்றான்.

கவனிக்க வேண்டியது :

பாவிகள் ராகு வும் செவ்வாயும் ராகு வும் சனியும் செவ்வாயும் சனியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. மேலும் குருவும் சுக்கிரனும் மற்றும் புதனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள்.

ஆகையால் மத ரீதியில் ஒரு இன கலவரம் கூட இவர் ஆட்சியின் போது உருவாக வில்லை. மதத்தில் தீவிரம் செலுத்தாமல் இருந்தார்.

அணைத்து மதத்திற்கும் சம உரிமை கொடுத்தார். மேலும் மதங்களுக்கு இடையே திருமணம் நடப்பதை ஆதரித்தார்.

ஒன்பதாம் அதிபதி புதன் மூன்றாம் வீட்டில் இருந்து இரண்டு பாவிகள் மத்தியில் இருப்பதால் அவர் மதத்தின் மீது பெரிதாக கவனம் செலுத்த வில்லை.

13-10-1605 அக்பரின் மரணம் : புதன் திசை சனி புத்தி :

புதன் சந்திரனுக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறான். ஏழாம் வீடு மரணத்தை கொடுக்கும். சனி எட்டாம் வீட்டிற்கு அதிபதி அவர் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குருவுடன் கூடி நிற்பதால் மரணத்தை கொடுத்து விட்டான்.நன்றி , என்றும் அன்புடன் ......

ஜோதிஷ மாமணி கலையரசன் 

காட்டுமன்னார்கோயில்

No comments :

Post a Comment