01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, July 24, 2013

ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா ஜாதகம் - ஜோதிட மாமணி கலையரசன் , SRI ADI SANKARACHARYA HOROSCOPE - JOTHIDA MAMANI KALAIARASAN - Malar Jothida Nilayam

இந்து மத வரலாற்றில் மிக பெரிய சமாப்தமாக விளங்கிய ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் கண்ட உண்மைகள் ...லக்னம் ராசியிலும் நவாம்சதிலும் பாதிக்கப்படாமல் இருப்பதால் திடமான உடல்நிலை கொடுத்தது.

லக்னாதிபதி சந்திரன் பண்ணிறேண்டில் மறைந்து இருந்தாலும் குருவின் பார்வையையும் சனியின் பார்வையையும் பெறுவதால் திடமான மன நிலை பெற்றார்.

அற்பாயுள் ஏன் ?

ஆயுள் காரகன் சனி ஆறாம் வீட்டில் மறைந்ததாலும் சந்திரன் 12  ல் மறைந்ததாலும் அற்பாயுள் கொடுத்தது. அதாவது 32 வயது வரை வாழுமாறு செய்தது.


அளவுக்கு மிஞ்சிய ஆன்மீக அறிவு சிறு வயதிலேயே எப்படி ?

மன காரகன் சந்திரன் அறிவுக்கு உரிய கிரகம் புதன் வீட்டில் இருக்கிறான்.மேலும் புதன் கர்மஷ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் வீட்டில் இருக்கிறான்.

கல்வி குரிய வீடு நாலாம் வீடு , இந்த நாலாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் பத்தாம் வீட்டில் புதனுடன் கூடி நிற்கிறான்.

பேச்சு ஸ்தான அதிபதி சூரியன் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று உள்ளான்.

இப்படிப்பட்ட அமைப்பினால் தன்னுடைய தொழிலே கற்பதும் போதிப்பதும் என்று ஆனது. 

மேலும் பத்தாம் வீட்டில் கவிதை நாயகன் சுக்கிரன் மற்றும் புத்தி காரகன் புதன் மற்றும் பேச்சு காரகன் சூரியன் ஆகியோர் உள்ளதால் ஆன்மீக சம்பந்தப்பட்ட வழக்கு மேடைகளில் அறிவு பூர்வமாகவும் கவிதை நயத்துடனும் உரத்த குரலிலும் சொல்லும் அமைப்பு ஏற்பட்டது.

வாக்கு ஸ்தானத்தை குரு பகவான் பார்த்தால் ஆயிரம் ஆயிரம் எதிர்ப்பாளர்களுக்கு ஆக்க பூர்வமான பதில் கொடுக்கும் அமைப்பு கொடுத்தது 


கல்வி : சுக்கிர புத்தி ராகு திசா 

நாலாம் இடத்து அதிபதி சுக்கிரன் பத்தாம் வீட்டில் உள்ளார் . மேலும் தனது நண்பன் மற்றும் அறிவுக்கு அதிபதி புதனுடன் கூடியும் வாக்கு ஸ்தான அதிபதி சூரியனுடன் கூடியும் நிற்கிறான்.

மேலும் பத்தாம் வீட்டில் இருந்து தனது சொந்த வீட்டை பார்கிறார். மேலும் சூரியன் , புதன் , குரு ஆகிய கிரகங்களும் கல்வி ஸ்தானத்தை பார்ப்பதால் மிக சிறு வயதிலேயே அணைத்து வேதம் மற்றும் வேதாந்த சம்பந்த நூட்களை கற்று தேர்ந்தார்.

சிறு வயதில் தந்தை மரணம் ஏன் ? ராகு திசா புதன் புத்தி 

ஒன்பதாம் அதிபதி குரு எட்டில் மறைந்ததும் தந்தை காரகன் சூரியன் இரண்டு பாவிகள் மத்தியில் இருந்து பாவ கத்தரி தோஷம் பெற்று இருப்பதும் பாவி செவ்வாய் ஒன்பதில் இருப்பதும் இவரின் தந்தை சங்கராச்சார்யா வின் ஆறு வயதிலேயே காலம் ஆகிவிட்டார்.

ராகு பகவான் , சூரியனுக்கு இரண்டில் இருக்கிறான்.  புதன் , ஒன்பதாம் வீட்டிற்கு இரண்டில் இருக்கிறான் மேலும் தந்தை ஸ்தானத்திற்கு ஏழு என்கிற மாரக ஸ்தானத்தில் இருக்கின்றான் . ஆகயால் தந்தைக்கு மரணத்தை கொடுத்து விட்டான் .


அம்மாவிடம் மிகுந்த பாசம் ஏன் ?

தாயை குறிக்க கூடிய கிரகம் சந்திரன், அவன் சுப கிரகத்தின் வீட்டில் இருப்பதாலும் நாலாம் அதிபதி சுக்கிரன் பத்தில் இருப்பதாலும் நாலாம் இடத்திற்கு குருவின் பார்வை இருப்பதாலும் தாயின் மீது மிகுந்த பாசமும் தாய்க்கு நீண்ட ஆயுளும் கொடுத்தது.

சங்கராச்சார்யா அவர்கள் சன்யாசி ஆன பிறகு கூட தன் தாயின் இறுதி சடங்குகளை தன் கைகளால் செய்தார். உலகுக்கே  இவர் சிறந்த சன்யாசியாக இருந்தாலும் இவர் பிறந்த ஊரில் இவருக்கு மதிப்பு இல்லை.

சன்னியாசம் வர காரணம் என்ன ? ராகு திசா கேது புத்தி 

ஆத்மா காரகன் சூரியன் மோட்ச ஸ்தான அதிபதி புதன் உடன் கூடி கர்ம ஸ்தானத்தில் இருக்கின்றான். மேலும் தெய்வீக கிரகம் குரு மோட்ச ஸ்தானத்தை  பார்வை செய்வதால் சன்னியாசம் நிச்சயம் ஆனது.

மேலும் ஏழாம் அதிபதி சனி ஆறில் இருப்பதாலும் சுக்கிரன் இரண்டு பாவிகள் மத்தியில் இருந்து பாவ கத்தரி தோசத்தில் இருப்பதால் திருமண பாக்கியம் உண்டாக வில்லை.

குரு பகவான் எட்டாம் வீட்டில் இருப்பதும் சுக்கிரன் மோட்சம் கொடுக்க கூடிய கேது சாரத்தில் இருப்பதும் சன்னியாசம் அடையும் அமைப்பு . மேலும் நல்ல கேரக்டர் கொடுக்கும் அமைப்பு.

எதிர்ப்பு , எதிரி  ஏன் ?

ஆறாம் அதிபதி குரு எட்டாம் வீட்டில் இருப்பதும் எட்டாம் அதிபதி சனி ஆறாம் வீட்டில் இருப்பதும் ராஜயோகம் இப்படி ஆறாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் யோகத்தில் ஈடுபட்டு லக்னாதிபதியை பார்ப்பதால் மிக கடுமையான எதிரியை சந்திக்க வேண்டும் என்று தெரிகிறது.

இந்த அமைப்பினால் அந்த நாட்களில் இந்து மதத்தை பற்றி அவதூறு பேசியவர்களுக்கு ஆக்கபூர்வமான பதில் அமைதியான முறையில் கொடுத்து உண்மையை நிலை நாட்டினார்.

ஆறாம் அதிபதி பலம் பெற்றால் பொதுவாக அனேக எதிரிகளை சந்திக்க வைக்கும்.

தாயின் மரணம் குரு திசா செவ்வாய் புத்தி :

செவ்வாய் , தாய் காரகன் சந்திரனையும் பார்க்கிறான் மேலும் நாலாம் இடத்தையும் பார்க்கிறான்.

குருவும் செவ்வாய் சாரத்தில் நிற்கிறான். ஆகையால் தாய்க்கு மரணத்தை கொடுத்து விட்டான்.

சங்கராச்சார்யா வின் மரணம் : சனி திசை சனி புத்தி :

சனி பகவான் லக்னத்திற்கு ஏழாம் அதிபதி அவர் சந்திரனுக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார்.ஆகையால் இவர் மரணத்தை கொடுக்க கடமை பட்டு இருக்கிறார்.

ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா தனது 32 வயதில் மரணம் அடைந்தார்.நன்றி , என்றும் அன்புடன் ......

ஜோதிட மாமணி கலையரசன் 

காட்டுமன்னார்கோயில்

No comments :

Post a Comment