01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Thursday, August 29, 2013

kalai.hinduism@gmail.com , ராசிகளின் தன்மைகள் - நெருப்பு ராசிகள்--நீர் ராசிகள்--நிலம் ராசிகள் - காற்று ராசிகள்

மேஷம், சிம்மம் , தனுசு - நெருப்பு ராசிகள் 
ரிஷபம், கன்னி , மகரம் - நிலம் ராசிகள் 
மிதுனம், துலாம் , கும்பம் - காற்று ராசிகள் 
கடகம் , விருச்சிகம் , மீனம் - நீர் ராசிகள்.
மேஷம் , கடகம் , துலாம், மகரம் - சர ராசிகள் 
ரிஷபம், சிம்மம் , விருச்சிகம் , கும்பம் - ஸ்திர ராசிகள் 
மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் - உபய ராசிகள் .


Wednesday, August 28, 2013

அன்னை தெரசா ஜாதகம் - ஜோதிட மாமணி கலையரசன் ; MOTHER TERESA HOROSCOPE - Jothida Mamani Kalaiarasan; Malar Jothida Araichi Maiyamஅன்னை தெரசா அவர்கள் 26-08-1910 ஆண்டு 2:25 Pm நேரத்தில்  Skopje என்ற ஊரில் பிறந்தார்.

அவர் தனுசு லக்னம் மேச ராசியில் பிறந்து இருக்கிறார்.

லக்னாதிபதி குரு பகவான் கர்ம ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் வீட்டில் இருக்கின்றான்.பத்தாம் அதிபதி புதன் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று இருக்கிறான்.

மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பகவான் விருச்சகத்தில் உச்சம் பெற்று மோட்ச ஸ்தானம் என்று சொல்ல படும் பன்னிரெண்டாம் வீட்டில் இருப்பதால் சிறு வயதில் இருந்தே ஆன்மீக வழியில் செல்லுமாறு செய்தது.


மேலும் நவாம்சதிலும் மோட்ச ஸ்தான அதிபதி குரு ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்று மோட்ச காரகன் கேது உடன் கூடி நிற்பதும் ஆன்மீக துறையில் மிக பெரிய பதவி வகிக்கும் அமைப்பு கொடுத்தது.

ராசியில் சந்திரன் சனியுடன் கூடி நிற்பதாலும் நவாம்சத்தில் சந்திரன் சுக்கிரனுடன் கூடி நிற்பதாலும் சந்திரன் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று இருப்பதாலும் மனம் எப்போதும் கவலை உடனும் ஏழைகளை பற்றியும் பராமரிக்கபடாமல் விட பட்ட நோயாளிகள் பற்றியும் சிந்தித்து பொது தொண்டு செய்யுமாறு செய்தது.

முக்கிய நிகழ்வுகள்:

தந்தை மரணம் : சந்திர திசை செவ்வாய் புத்தி : 1919 

சந்திரன் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருக்கிறான். மேலும் செவ்வாய் பன்னிரெண்டாம் அதிபதி ஒன்பதாம் வீட்டிலும் இருக்கிறான் சூரியனுடன் கூடியும் இருக்கிறான். பாவி செவ்வாய் தந்தை ஸ்தானத்தில் இருந்து தந்தைக்கு மரணத்தை கொடுத்து விட்டான்.

 மத வாழ்க்கை : சந்திர திசை கேது புத்தி : 1925 

பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் கேது பகவான் புத்தியில் இவர் மேற்கு வங்காளத்தில் செய்யப்படும் பொது தொண்டு பணியை கண்டு பூரிப்பு கொண்டு தன்னையும் பொது பணியில் ஈடுபடுத்தி கொள்ள முடிவு செய்து கொண்டார்.

தீவிர ஆன்மீகத்தில் ஈடுபாடு :  Aug 1928 : செவ்வாய் திசை ராகு புத்தி : 

செவ்வாய் பன்னிரெண்டாம் வீட்டிற்கு அதிபதி  அவர் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். மேலும் ராகு சூரியன் சரத்தில் இருக்கிறார். இருவருமே ஒன்பதாம் இடத்தில் சம்பந்தம் பெற்று இருந்ததால் தன்னை தீவிரமாக ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி கொண்டார்.

மேலும் ராகு சுக்கிரன் வீட்டில் இருக்கிறார். சுக்கிரன் ராசியிலும் நவாம்சதிலும் எட்டாம் வீட்டில் மறைந்து கிடக்கிறான். மேலும் ஏழாம் அதிபதி புதன் பாதகாதிபதி அவன் பத்தாம் வீட்டில் இருப்பதால் திருமணமே ஆகாத நிலை கொடுத்தது.

மேலும் நவாம்சதிலும் எட்டாம் அதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் இருக்கிறான். ஆகையால் திருமணம் இல்லாத நிலை கொடுத்தது.

இந்தியா வருகை : செவ்வாய் திசை குரு புத்தி : 1929

செவ்வாய் பன்னிரெண்டாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருக்கிறான். மேலும் குரு உச்சம் பெற்று இருக்கிறார். பொதுவாக உச்சம் பெற்ற கிரகத்தின் புத்தி வெளிநாடு பயணத்தை கொடுக்கும்.

நான் கன்னியாகவே இருப்பேன் என்று சபதம் ( Nun ) : செவ்வாய் திசை சனி புத்தி 1931 :

செவ்வாய் மோட்ச ஸ்தான அதிபதி , சனி குடும்பாதிபதி , சந்திரன் எட்டாம் அதிபதி . சனி எட்டாம் அதிபதியுடன் இணைந்ததால் குடும்ப வாழ்வு இல்லை என்று ஆனது.

கன்னியாகவே இருப்பேன் என்று சபதம் எடுக்கும் நிலை ஏற்பட்டது.

ஆசிரியர் பணி :

பத்தாம் வீட்டில் குரு இருக்கிறார்.கூடவே உச்சம் பெற்ற புதனும் இருக்கிறார். குரு போதனை மற்றும் ஆசிரியர் தொழில் கொடுப்பான். மேலும் உச்சம் பெற்ற புதன் இருப்பதால் நல்ல ஆசிரியர் என்ற பெயரும் எடுத்தார்.

தலைமை ஆசிரியர் : ராகு திசை புதன் புத்தி : 1944

ஆறாம் வீட்டில் உள்ள ராகு முன்னேற்றத்தை கொடுப்பான். மேலும் ராகு சூரியன் சாரத்தில் இருக்கிறான். சூரியன் ஆட்சி பெற்று ஒன்பதாம் வீட்டில் இருக்கிறான்.புதன் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று இருக்கிறான். இந்த அமைப்பினால் தலைமை ஆசிரியர் என்ற பதவி கொடுக்கப்பட்டது.

ராகு திசை சூரிய புத்தி : 1949 : ஏழைகளுக்கு சேவை செய்ய முடிவு

ஆறாம் வீட்டில் உள்ள ராகு முன்னேற்றத்தை கொடுக்க வேண்டும். மேலும் சூரியன் பாக்கியாதிபதி ஆட்சி பெற்று இருக்கிறான். மேலும் பன்னிரெண்டாம் அதிபதி செவ்வாயும் கூடி நிற்கிறான். இந்த அமைப்பு அவரை பலமான ஆன்மீக வழியிலும் சேவை செய்யும் மனத்தையும் கொடுத்தது.

சனி திசை ராகு புத்தி : 1983: முதல் மாரடைப்பு :

சனி நீச்சம் பெற்று ஐந்தாம் வீட்டில் இருக்கிறான். மேலும் எட்டாம் அதிபதியுடன் கூடி நிற்கிறான். மேலும் ராகு ஆறாம் வீட்டில் இருக்கிறான். ஐந்தாம் வீடு இதயத்தை குறிக்கும். இங்கே நிற்கும் நீச்சம் பெற்ற சனி இதயத்தை கெடுத்தான். மேலும் ராகுவும் சனிக்கு இரண்டில் இருந்து புத்தி நடைபெறுவதால் நோய் நொடி கொடுத்தான்.

புதன் திசை புதன் புத்தி : 1989 : இரண்டாவது மாரடைப்பு :

புதன் தனுசு லக்ன காரர்களுக்கு மகா பாவி . மேலு  பாவி புதன் கேந்திரத்தில் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று பலம் பெற்று இருக்கிறான். பாவி பலம் பெறுவது நல்லது இல்லை.

பலம் பெற்ற மஹா பாவி புதன் லக்னாதிபதி குருவுடன் கூடி நிற்பதால் உடல்நிலையை பாதிக்க கடமை பட்டு இருக்கிறான்.  ஆகையால் இரண்டாவது மாரடைப்பு கொடுத்து படுத்த படுக்கை ஆக்கி விட்டான்.

புதன் திசை செவ்வாய் புத்தி : 1996 : மேலும் உடல்நிலை மோசம்

பலம் பெற்ற பாவி புதன் திசை பன்னிரெண்டாம் இடத்தின் அதிபதி செவ்வாய் ஒன்பதில் இருந்து முன்னேற்றத்தை குறைத்தான்.

புதன் தசை ராகு புத்தி : 1997 : பதவி விட்டு வெளியேறினார்.

பாவி புதன் திசையில் ராகு புத்தி ராகு சுக்கிரன் வீட்டில் இருக்கிறான். சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருக்கிறான்.

எட்டாம் வீட்டில் இருப்பவன் இறக்கத்தை கொடுப்பான்.


மரணம் : பாவியின் திசையில்  சந்திரனுக்கு இரண்டில் நிற்கும் ராகு மரணம் கொடுக்க கூடிய தகுதி பெற்று இருப்பதால் மரணத்தை கொடுத்து விட்டான்.

கட்டண சேவை                                                  பிரபல ஜாதகங்கள்

Wednesday, August 14, 2013

சுதந்திரதினம் - தேச தந்தை மகாத்மா காந்தி - ஜாதகம் ஜோதிட விளக்கம் - ஜோதிட மாமணி கலையரசன் , INDEPEDANCE DAY FATHER OF INDIA MAHATMA GANDHI HOROSCOPE - JOTHIDA MAMANI KALAIARASAN -Malar Jothida Araichi Maiyam

இந்திய தேசத்தின்  தந்தை மகாத்மா காந்தி அவர்களின் ஜாதகத்தை ஜோதிட ரீதியில் ஆராய்ந்து பார்த்ததில் கண்ட உண்மைகள்....மகாத்மா காந்தி அவர்கள் துலாம் லக்னம் சிம்மராசி யில் பிறந்து இருக்கிறார்.

ஆத்மாவை குறிக்கும் கிரகம் சூரியன் அவன் மோட்சஸ்தானம் என்று சொல்லபடுகின்ற 12 ம் வீட்டில் இருக்கிறான்.மேலும் தெய்வீக கிரகம் குரு வின் பார்வையை சூரியன் பெறுகிறான். 

மேலும் சந்திரனுக்கு பத்தாம் வீட்டில் தெய்வீக கிரகம் குரு இருக்கிறார். ஆகையால் ஆன்மீக சிந்தனை வலிமையாக இருந்தது.


நவாம்சத்தில் குரு பகவான் நீச்சம் பெற்று இருக்கின்ற காரணத்தால் அவ்வபோது இந்து மதத்தில் இருக்கின்ற சில பழக்கவழக்கத்தை மாற்றி தன்னுடைய சிந்தனையை புகுத்தவும் செய்தது.

லக்னத்தில் செவ்வாய் இருக்கின்ற காரணத்தாலும் லக்னத்திற்கு இரண்டு பக்கமும் இயற்கை பாவிகள் சனியும் சூரியனும் இருந்து பாவகத்தரி தோஷம் உண்டாகி இருப்பதாலும் உடலில் எப்போதும் ஒரு சூடு இருக்கும் சூடு சம்பந்தப்பட்ட நோய் இருந்து இருக்கும். மேலும் செவ்வாய் ஒரு ரத்த கிரகம் ஆகையால் ரத்தம் சம்பந்த பட்ட நோய் இருந்து இருக்கும்.

மன போராட்டம் ஏன் ?

சந்திரன் மனத்தை குறிக்கின்ற கிரகம் அவன் பாவ கிரகம் சனியினால் பார்க்கபடுகின்றான் மேலும் சந்திரனுக்கு இரண்டு பக்கமும் பாவிகள் ராகுவும் சூரியனும் இருந்து பாவ கத்தரி தோஷத்தை உண்டாக்கி இருக்கின்ற காரணத்தால் மனம் எப்போதும் ஒரு போராட்டத்தில் இருந்ததை உணர முடிகிறது.

ஆன்மீக சிந்தனைக்கு காரணம் என்ன?

ஆத்மா வை சுமந்து வருபவன் சூரியன் அவன் மோட்சஷ்தானத்தில் இருந்து தெய்வீக கிரகம் குரு வின் பார்வையை பெறுவதாலும் சந்திரனுக்கு பத்தில் குரு இருப்பதாலும் பலமான ஆன்மீக சிந்தனை கொடுத்தது.

Sunday, August 11, 2013

GEORGE W BUSH - 43 AMERICAN PRESIDENT HOROSCOPE ANALYSIS - JOTHIDA MAMANI KALAIARASAN - Malar Jothida maiyamதிரு ஜார்ஜ் W புஷ் அவர்கள் அமெரிக்காவின் 43 வது குடியரசு தலைவராக பதவி ஏற்றார். இவரின் ஜாதகத்தை பார்த்ததில் பாக்கியாதிபதியின் முக்கியத்துவம் தெரிகிறது.

6 ஜூலை 1946 இவர் அமெரிக்காவில் நியூ ஹவேன் என்ற ஊரில் காலை 7: 26  மணிக்கு பிறந்து இருக்கிறார் .

இவர் ஜாதகத்தை பார்த்த உடனேயே தெரிவது லக்னாதிபதி சந்திரன் பாக்கியாதிபதி குருவுடன் கூடி வெற்றி ஸ்தானம் என்று சொல்லப்படும் மூன்றாம் வீட்டில் இருந்ததால் இவர் பல வெற்றிகளை கண்டார் .


மேலும் குரு பகவான் இவருக்கு பாக்கியத்தை மட்டும் கொடுக்க வில்லை . குரு பகவான் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாக இருப்பதால் பெரிய கடினமான எதிரிகளை சந்திக்கவும்  செய்தார். இந்த அமைப்பினால் பல யுத்தங்களை சந்தித்தார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் யுத்தம் மூண்டது.

ஆரம்ப கல்வி : நாலாம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில்  உள்ளான். லக்னத்தில் புதன் இருக்கிறான் .இந்த காரணத்தினால் இவருக்கு கல்வி அறிவு தடை இல்லாமல் கிடைத்தது.

இருபினும் இரண்டாம் அதிபதி சூரியன் பண்ணிறேண்டில் மறைந்ததால் இவரை  ஒரு சராசரி மாணவனாக இருக்குமாறு செய்தது.

ஒன்பதாம் அதிபதி குரு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு ஒன்தாம் வீட்டை பார்வை செய்கிறார். இந்த அமைப்பினால் இவர் MBA பட்டப்படிப்பையும் படித்து முடித்தார்.

அமெரிக்கா குடியரசு தலைவர்களில் இவர் ஒருவர் மட்டுமே MBA படித்தவர் என்பது குறிப்பிட தக்கது. பாக்கியாதிபதி குரு ஒன்பதாம் வீட்டை பார்ப்பதால் இந்த நிலை ஏற்பட்டது 

1977 குரு திசை புதன் புத்தி : திருமணம் : 

ஒன்பதாம் வீட்டு அதிபதி குரு மூன்றில் அமர்ந்து ஏழாம் வீட்டை பார்கிறார் , புதன் லக்னத்தில் அமர்ந்து ஏழாம் வீட்டை பார்க்கிறான் . இந்த அமைப்பின் போது தான் இவருக்கு திருமணம் நடந்தது.

ஏழாம் அதிபதி சனி லக்னத்தில் இருப்பதால் தனக்கு தெரிந்த பழகிய பெண்ணையே மணந்து கொள்ளும் அமைப்பு கொடுத்தது.