01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Sunday, August 11, 2013

GEORGE W BUSH - 43 AMERICAN PRESIDENT HOROSCOPE ANALYSIS - JOTHIDA MAMANI KALAIARASAN - Malar Jothida maiyamதிரு ஜார்ஜ் W புஷ் அவர்கள் அமெரிக்காவின் 43 வது குடியரசு தலைவராக பதவி ஏற்றார். இவரின் ஜாதகத்தை பார்த்ததில் பாக்கியாதிபதியின் முக்கியத்துவம் தெரிகிறது.

6 ஜூலை 1946 இவர் அமெரிக்காவில் நியூ ஹவேன் என்ற ஊரில் காலை 7: 26  மணிக்கு பிறந்து இருக்கிறார் .

இவர் ஜாதகத்தை பார்த்த உடனேயே தெரிவது லக்னாதிபதி சந்திரன் பாக்கியாதிபதி குருவுடன் கூடி வெற்றி ஸ்தானம் என்று சொல்லப்படும் மூன்றாம் வீட்டில் இருந்ததால் இவர் பல வெற்றிகளை கண்டார் .


மேலும் குரு பகவான் இவருக்கு பாக்கியத்தை மட்டும் கொடுக்க வில்லை . குரு பகவான் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாக இருப்பதால் பெரிய கடினமான எதிரிகளை சந்திக்கவும்  செய்தார். இந்த அமைப்பினால் பல யுத்தங்களை சந்தித்தார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் யுத்தம் மூண்டது.

ஆரம்ப கல்வி : நாலாம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில்  உள்ளான். லக்னத்தில் புதன் இருக்கிறான் .இந்த காரணத்தினால் இவருக்கு கல்வி அறிவு தடை இல்லாமல் கிடைத்தது.

இருபினும் இரண்டாம் அதிபதி சூரியன் பண்ணிறேண்டில் மறைந்ததால் இவரை  ஒரு சராசரி மாணவனாக இருக்குமாறு செய்தது.

ஒன்பதாம் அதிபதி குரு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு ஒன்தாம் வீட்டை பார்வை செய்கிறார். இந்த அமைப்பினால் இவர் MBA பட்டப்படிப்பையும் படித்து முடித்தார்.

அமெரிக்கா குடியரசு தலைவர்களில் இவர் ஒருவர் மட்டுமே MBA படித்தவர் என்பது குறிப்பிட தக்கது. பாக்கியாதிபதி குரு ஒன்பதாம் வீட்டை பார்ப்பதால் இந்த நிலை ஏற்பட்டது 

1977 குரு திசை புதன் புத்தி : திருமணம் : 

ஒன்பதாம் வீட்டு அதிபதி குரு மூன்றில் அமர்ந்து ஏழாம் வீட்டை பார்கிறார் , புதன் லக்னத்தில் அமர்ந்து ஏழாம் வீட்டை பார்க்கிறான் . இந்த அமைப்பின் போது தான் இவருக்கு திருமணம் நடந்தது.

ஏழாம் அதிபதி சனி லக்னத்தில் இருப்பதால் தனக்கு தெரிந்த பழகிய பெண்ணையே மணந்து கொள்ளும் அமைப்பு கொடுத்தது.


ஐந்தாம் வீட்டில் கேது இருந்தால் ஒன்று சாம்ராஜ்யம் கொடுப்பான் அல்லது சன்னியாசம் கொடுப்பான். இங்கே கேது உச்சம் பெற்று அமைந்து உள்ளான். இவர் சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார்.

ஐந்தாம் அதிபதி செவ்வாய் ஐந்தாம் வீட்டை பார்த்தான் நல்ல பிள்ளைகளை பெற்று எடுத்தார்.

6 ம் அதிபதி குரு திசை  - 12 ம் அதிபதி புதன் புத்தி : 1976 வருடம் :

பன்னிரெண்டாம் அதிபதி லக்னத்தில் உள்ளன் , லக்னாதிபதி ஆறாம் அதிபதி உடன் கூடி சனியால் பார்க்கபடுகிறான் . இந்த அமைப்பு ஒருவனை சிறைக்கு எடுத்து செல்லும். இவர் முன்னாள் குடியரசு தலைவர் மகனாக இருந்த போதும் இவர் குடித்துவிட்டு கார் ஒட்டிய குற்றத்திற்காக போலிஸ் இவரை கைது செய்தது. இரண்டு வருடம் இவரின் ஓட்டுனர் உரிமம் பறிக்க பட்டது.

ஆறாம் அதிபதியும் பன்னிரெண்டாம் அதிபதியும்          காவல்               மற்றும் சிறைசாலை  போன்றவற்றை குறிப்பார்கள் .ஆகையால் இந்த நிலை ஏற்பட்டது.

ஆறாம் அதிபதியாக குரு இருந்து கைது செய்யப்படும் நிலையை கொடுத்தாலும் பாக்கியாதிபதியாகவும் இருப்பதால் இவர் கவர்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

சனி திசை ராகு புத்தி : 2001 

சனி லக்னத்தில் உள்ளார் இவர் சந்திரனுக்கு  ஐந்துக்கு அதிபதி  . மேலும் ராகு லாப ஸ்தானத்தில் உள்ளான்.இங்கே இருக்கின்ற ராகு வும் யோகத்தை கொடுக்க கடமை பட்டு இருக்கிறான்.

ஆகையால் சனி திசை ராகு புத்தியில் இவர் அமெரிக்காவின் 43 வது குடியரசு தலைவராக வெற்றி பெற்றார்.

ஆறாம் அதிபதி குரு ராகுவை பார்க்கிறான் மேலும் சனி குருவை பார்க்கிறான் இந்த அமைப்பினால் இவர் ஆட்சிக்கு வந்த உடனேயே தீவிரவாதிகள் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து இவருக்கு கொஞ்சம் நெருக்கடியும் கொடுத்தது.

சனி திசை குரு புத்தி : 2004 : மீண்டும் குடியரசு தலைவர் :

 குரு பாக்கியாதிபதி மற்றும் குரு சந்திர யோகம் உண்டாகி உள்ளது .சனி லக்னத்தில் இருக்கிறான் குரு லக்னாதிபதியுடன் இருக்கிறான். இந்த தருணத்தில் மீண்டும் இவர் அமெரிக்காவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதன் திசை சூரிய புத்தி : 2009 தோல்வி : வெள்ளை மாளிகை விட்டு வெளியேற்றம் :

புதன் 12 ம் அதிபதி இவர் லக்னத்தில் உள்ளார். 12 ம் அதிபதி என்றாலே தோல்வி , ஏமாற்றம் ;

சூரியன் 2 ம் அதிபதி 12 ம் வீட்டில் இருக்கிறான் . அதாவது ஏமாற்றம் தோல்வி என்று சொல்லப்படும் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் தோல்வியை கொடுத்து விட்டான்.

மேலும் எட்டாம் அதிபதி சனி லக்னத்தில் இருப்பதாலும் ஆறாம் அதிபதி குரு சந்திரனுடன் கூடி இருப்பதாலும் இவர் ஆட்சியில் பொருளாதார சரிவு தலை விரித்து ஆடியது. பொருளாதாரத்தை சீர்செய்ய முடியாமல் போனது. 

8 ம் வீட்டு கிரகம் எப்போதும் பொருளாதார முன்னேற்றத்தை சீர்குளைப்பன்.

மாரகதிற்கு ஒத்த அல்லது பெரிய கண்டம் கேது திசை சுக்கிர புத்தியிலும் ( 11-7-2023 to 9-9-2024 ) கேது திசை செவ்வாய் புத்தியிலும் (16-08-2025 to 12-01-2026 ) கொடுக்கும்.  இந்த தசா புத்திகளில் உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்துவது சிறந்தது.


நன்றி , என்றும் அன்புடன் ......

ஜோதிட மாமணி கலையரசன் 

காட்டுமன்னார்கோயில்

No comments :

Post a Comment