01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Thursday, October 17, 2013

Atal Bihari Vajpayee - Indian Prime Minister Horoscope analysis- Jothida mamani Kalaiarasan ; அடல் பிஹாரி வாஜ்பாய் இந்திய பிரதமர் ஜாதகம் - ஜோதிட மாமணி கலையரசன்


திரு அடல் பிஹாரி  வாஜ்பாய் அவர்கள் விருச்சிக லக்னம் விருச்சிக ராசியில் பிறந்து உள்ளார்கள்.

லக்னாதிபதி செவ்வாய் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து உள்ளார்கள் . ஆயுள் காரகன் சனி பகவான் உச்சம் பெற்று உள்ளார். எட்டாம் அதிபதி புதன் இரண்டாம் வீட்டில் அமர்ந்து ஆயுள் காரகன் சனியின் பார்வையை பெறுகிறார்.எட்டாம் வீட்டில் பாவிகள் இல்லை. இந்த அமைப்பால் தீர்க்காயுள்  கொடுக்கும்.


நாலாம் அதிபதி சனி பகாவான் உச்சம் பெற்றும் கல்வி காரகன் புதன் சூரியனுடன் கூடி புதாத்ய யோகம் உண்டாகி இருப்பதாலும் அறிவு ஸ்தான அதிபதி குரு இரண்டாம் வீட்டில் இருப்பதாலும் நல்ல கல்வி அறிவு கொடுத்தது. அதாவது ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் சமஸ்க்ருததிலும் இவர் முதன்மை வகுப்பில்  ( DISTINCTION ) தேர்ச்சி பெற்றார்.  

அரசியல் வாழ்க்கை :

அரசியல் தொழிலை குறிக்கும் கிரகம் சூரியன் , இவரின் ஜாதகத்தில் பத்தாம் இடத்தின் அதிபதி சூரியனாகி அவர் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்ற குருவுடன் கூடி உச்சம் பெற்ற நாலாம் அதிபதி சனியின் பார்வையை பெற்று இருக்கிறான். குருவும் சனியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டால் கண்டிப்பாக அவர் அரசியலில் ஒரு அங்கம் வகிப்பார். இவரின் ஜாதகத்திலும் நாலாம் வீட்டின் அதிபதி சனி பகவான் உச்சம் பெற்று பத்தாம் அதிபதி சூரியனையும் குருவையும் பார்வை செய்கிறார். இப்படி பட்ட அமைப்பால் இவர் அரசியலில் தனது செல்வாக்கை புகுத்தினார்.

B J P - பா ஜ க  - இல் புகுந்தார் :

1951 ம் ஆண்டு சுக்கிர திசை குரு புத்தி : சுக்கிரன் ஏழாம் அதிபதி லக்னத்தில் பாக்கியாதிபதியுடன் கூடி நிற்கிறான். குரு பகவான் அரசியல் காரகன் சூரியனுடன் கூடி இரண்டாம் வீட்டில் நின்று உச்சம் பெற்ற சனி பகவான் பார்வையை பெற்று நிற்கிறார்.

இந்த நேரத்தில் தான்  , சுக்கிரனும் சூரியனுடன் கூடி நிற்கும் குருவும் இவரை தீவிர அரசியலில் புகுத்தினார்கள் .

1975-1977 : அவசர சட்டம் : கைது  : செவ்வாய் திசை 

செவ்வாய் ஆறாம் வீட்டின் அதிபதி அவன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறான். இந்த அமைப்பு ஒருவரை சிறைசாலைக்கு எடுத்து செல்லும். அது போலவே செவ்வாய் திசை ஆரம்பம் ஆன உடனேயே இந்திரா காந்தியின் அவசர சட்டம் காரணமாக வாஜ்பாய் அவர்கள் கைது செய்ய பட்டார்கள்.

1977 ம் ஆண்டு - செவ்வாய்  திசை குரு  புத்தி : வெளியுறவு துறை அமைச்சர் :

இந்த செவ்வாய்  திசை குரு  புத்தி இவரை புனிதமான அரசியல்வாதி என்பதை வெளி காட்டியது. செவ்வாய் திரி கோணத்தில் இருக்கிறான், குரு இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று சனியின் பார்வையை பெறுகிறார்.. இந்த அமைப்பினால் இவர் தேர்தலில் வெற்றி பெற்று வெளியுறவு துறை அமைச்சர் ஆனார். மேலும் புதன் கல்வி மற்றும் அறிவு காரகன் இவன் சூரியனுடன் கூடி புதாத்ய யோகம் பெற்று இருப்பதால் இவர் பல சாதனைகளையும் செய்தார்.

ஐக்கிய யூனியனில் முதல் முறையாக ஹிந்தியில் உரையாற்றியவர் என்ற பெருமையை இந்தியாவிற்கு சேர்த்தார். மேலும் இவர் பேசுவதை பார்த்த நேரு , இவர் ஒரு ஒரு நாள் இந்தியாவை ஆள்வார் என்றும் பாராளுமன்றத்தில் கூறி வாஜ்பாய் இன் பெருமையை உலகிற்கு காட்டினார்.

ராகு திசை சுக்கிர புத்தி : 1996 : முதல் முறை பிரதமர் ஆனார் :

ராகு பாக்கியஸ்தானத்தில் இருக்கிறான். சுக்கிரன் ராசியிலும் நவாம்சதிலும் நல்ல நிலையில் இருக்கிறார். இந்த நேரத்தில் இவர் முதல் முறை பிரதமர் ஆனார். இருபினும் சுக்கிரன் பன்னிரெண்டாம் வீட்டிற்கும் அதிபதி ஆகையால்  முழுமையாக இருக்க முடியாமல் போனது.

ராகு திசை சந்திர புத்தி : 1998 -1999 : இரண்டாவது முறை பிரதமர் ஆனார் :

ராகு பாக்கியஸ்தானத்தில் இருப்பதாலும் சந்திரன் பாக்கியாதிபதியாக இருப்பதாலும் இவரை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு சென்றது.

குரு திசை : 1999 - 2004 : மூன்றாவது முறை பிரதமர் ஆனார் :

குரு ஐந்தாம் அதிபதி இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று உச்சம் பெற்ற சனியின் பார்வையை பெற்று இருக்கிறார்.இந்த குரு பகவான் இவரை ஐந்து ஆண்டு காலம் முழுமையாக ஆட்சி செய்யுமாறு செய்தார்.

குரு திசை ராகு புத்தி : (29 -06-2014 to 21-11-2016) :

குரு இரண்டாம் வீட்டில் இருப்பதாலும் ராகு இரண்டாம் வீட்டில் நிற்கும் புதனின் சாரத்தில் இருப்பதாலும் இவர்கள் திசை புத்தி மாரகதிக்கு ஒப்பான கண்டம் கொடுக்க கடமை பட்டு இருகிறார்கள். ஆகையால் உடல்நிலையில் மிகவும் கவனம் தேவை.

No comments :

Post a Comment