01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Monday, October 28, 2013

Bill Gates - World richest Man - Millionaire Horoscope - பில் கேட்ஸ் உலக மஹா பணக்காரன் - ஜாதகம் விளக்கம் -ஜோதிட மாமணி கலையரசன்


திரு பில் கேட்ஸ் அவர்கள் அமெரிக்காவில் உள்ள Seattle என்ற ஊரில்  28-10-1955 ம் ஆண்டு பிறந்தார்.

தாய் - தந்தை : 

நாலாம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று கேந்திரத்தில் இருக்கிறான். மேலும் ஏழாம் அதிபதி சனி நாலாம் வீட்டில் உச்சம் பெற்று இருக்கிறான். நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சூரியன் நாலாம் வீட்டில் இருக்கிறான். இப்படிப்பட்ட பலமான அமைப்பு நாலாம் வீடு பெற்று இருப்பதால் தாய் மிகவும் அந்தஸ்துடைய குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தார்.  First Interstate bancsystem- வின் இயக்குனராகவும் இருந்தார்.


ஒன்பதாம் அதிபதி குரு இரண்டாம் வீட்டில் இருக்கிறான். லக்னாதிபதி சந்திரன் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறான்.மேலும் சந்திரனுக்கு ஆறாம் வீட்டில் குரு இருக்கிறார். தந்தையை குறிக்க கூடிய சூரியன் கேந்திரத்தில் நீச்சபங்க ராஜ யோகம் பெற்று பலம் பெற்று இருக்கிறான். மேலும் நவம்சதில் சூரியன்  ஆறாம் வீட்டில் இருக்கிறான்.இருந்து குருவின் சுப பார்வை பெறுகிறான். ஆறாம் வீடு போலிஸ் காவல் மற்றும் நீதித்துறை இவற்றை குறிக்கும். ஒன்பதாம் அதிபதியும் சூரியனும் ஆறாம் வீட்டுடன் அதிக சம்பந்தம் பெற்று சுபகிரகத்தின் பார்வை பெற்றதால் தந்தை சிறந்த புகழ்பெற்ற வழக்கறிஞ்சராக பணியாற்றினார்.

கல்வி -அறிவு -கணணி துறை எப்படி ?

நாலாம் இடம் கல்வியை குறிக்கும் இரண்டாம் இடம் அறிவையும் மூன்றாம் இடம் கல்வி கற்கும் விருப்பத்தையும் குறிக்கும். இவர் ஜாதகத்தில் சுக்கிரன் சனி சூரியன் அனைவரும் பலம் பெற்றும் உச்சம் பெற்றும் நாலாம் வீட்டை பலம் படுத்தி இருகிறார்கள். மேலும் இரண்டாம் வீட்டில் அறிவு காரகன் குரு இருந்து அறிவை விருத்தி செய்தார்.மேலும் கல்வி காரகன் புதன் மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்று உள்ளார்கள்.

இப்படிப்பட்ட பலமான அமைப்பால் நல்ல கல்வி அமைந்தது.மேலும் கணணி துறை குறிக்கும் புதன் உச்சம் பெற்று வெற்றி ஸ்தானத்தில் உள்ளான் மேலும் புதன் மற்றும் ஞானகாரகன் கேது இருவரும் நவம்சதில் புத்தி ஸ்தானத்தில் உள்ளார்கள் இந்த அமைப்பினால் அறிவு கணணி துறையில் விருத்தி கொடுத்தது.

பொதுவாக புதன் உச்சம் பெற்றவர்கள் கணிதம் மற்றும் கம்பூட்டர் துறையில் கொடிகட்டி பறப்பார்கள்.

தொழில் ஏன் கணணி துறையில் அமைந்தது ?

பத்தாம் இடம் தொழில் ஸ்தானம் என்று அழைக்கபடுகிறது. இந்த பத்தாம் இடத்தின் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்ற புதனுடன் கூடி வெற்றி ஸ்தானத்தில் உள்ளார். மேலும் செவ்வாய் புதன் வீட்டில் நவாம்சத்தில் உள்ளார். இப்படி கம்பூட்டர் துறையை குறிக்க கூடிய புதன் உடன் கூடி தொழில் ஸ்தான அதிபதி பலம் பெற்று இருப்பதால் மிக பெரிய வெற்றி கம்பூட்டர் துறையில் கொடுத்தது.

உலக மகா பணக்காரன் :

ஒருவன் மிகபெரிய பணக்காரனாக ஆக வேண்டும் என்றால் 2,10,11 ம் இடத்தின் அதிபதிகள் மற்றும் அவர்கள் நவாம்சத்தில் இருக்கும் இடம் இவைகள் நன்றாக இருக்க வேண்டும். 

இவர் ஜாதகத்தை பார்க்கும் போது , இரண்டாம் இடத்தின் அதிபதி சூரியன் நீச்சபங்க ராஜயோகம் பெற்று உள்ளான். பத்தாம் அதிபதி செவ்வாய் மூன்றாம் இடம் என்று சொல்லப்படும் வெற்றி ஸ்தானத்தில் உள்ளான். செவ்வாய் இருக்க மிகவும் தகுதியான இடம் இது தான். மேலும் பதினோறாம் அதிபதி சுக்கிரன் கேந்திரத்தில் அமர்ந்து ஆட்சி பெற்று உச்சம் பெற்ற சனியுடன் கூடி நிற்கிறான். 

இப்படி லாபத்தை கொடுக்க கூடிய எந்த கிரகமும் மறையாமலும் நீச்சம் பெறாமலும் இருப்பது மிக பெரிய விஷயம்.

உலக மஹா பணக்காரனாக அறிவிக்கப்பட்ட வருடம் ?

1995 to 2009 வரை இவர் தான் உலகத்தின் மகா பண காரன் என்று அறிவிக்கப்பட்டது. சுக்கிர திசை சனி புத்தி நடை பெற்றது. சுக்கிரன் லாபத்தின் அதிபதி அவர் கேந்திரத்தில் இருந்து மேலும் பலம் பெற்று உள்ளார். மேலும் உச்சம் பெற்ற சனி உடன் கூடி இருக்கிறார். இந்த பலம் பெற்ற சனியும் சுக்கிரனும் இவரை உலகத்தின் முதல் பணக்காரன் என்ற அந்தஸ்தை கொடுத்தார்கள். சனியும் சுக்கிரனும் நெருங்கிய நண்பன் இவர்கள் யோகம் பெற்று இருப்பதால் பெரிய அளவில் இவரை கொண்டு சேர்த்தார்கள்.

கேது திசை குரு புத்தி : 1980 ம் ஆண்டு : 86-DOS அறிமுகபடுத்தினார்:

கேது ஞானகாரகன் அவன் லாபஷ்தானத்தில் இருக்கிறான். இது மிகவும் நல்ல அமைப்பு. மேலும் புத்தி காரகன் குரு புத்தி ஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். இப்படி குரு கேதுவும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் இருந்து மேலும் பலம் பெற்று திசை புத்தியை நடத்திய போது தான் இவர் அறிவு பூர்வமாக தீவீர முயற்சியில் ஈடுபட்டு முதல் நிலை மென்பொருளை இந்த உலகிற்கு அறிமுகபடுதினார்.

சுக்கிர திசை சூரிய புத்தி : 1985 ம் ஆண்டு  Microsoft first Version launched :

சுக்கிரன் கேந்திராதிபதி இவர் கேந்திரத்தில் இருந்து உச்சம் பெற்ற சனியுடன் கூடியும் நிற்கிறார்.சூரியன் இரண்டாம் அதிபதி நாலாம் வீட்டில் பலம் பெற்று நீச்ச பங்கம் பெற்றும் இருக்கிறார். இந்த பலமான அமைப்பினால் மிக பெரிய சாதனையை செய்ய வைத்தது.

சுக்கிர திசை சந்திர புத்தி : பணக்கார வரிசையில் இடம் பெற்றார்: 1987 ம் ஆண்டு:

சுக்கிரன் லாபத்திற்கு அதிபதி அவர் கேந்திரத்தில் பலம் பெற்று இருக்கிறார். சந்திரன் லக்னாதிபதி இவர் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லப்படும் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் மிக பெரிய நிலையை எட்ட வைத்தது. அதாவது Forbes Magazine வெளியிட்ட இதழில் 400 உலக பணக்கார வரிசையில் இவர் பெயரையும் வெளியிட்டார்கள்.

1-1-1994 சுக்கிர தசை குரு புத்தி : திருமணம் :

பொதுவாக ஏழாம் வீட்டுடன் சம்பந்தம் பெற்றவரும் குடும்ப ஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாம் வீட்டில் இருப்பவரும் மண வாழ்க்கை ஏற்படுத்துவார்கள்.

ஏழாம் அதிபதி சனி பகவான் ராகு செவ்வாய் போன்ற கடுமையான பாவிகளுக்கு மத்தியில் இருந்து பாவ கத்தரி தோஷம் பெற்று இருப்பதாலும் நவாம்சத்தில் லக்னத்தில் கேது மற்றும் ஏழாம் வீட்டில் ராகு நின்ற காரணத்தால் திருமணம் தாமதம் கொடுத்தது.

 ஏழாம் அதிபதி சனியுடன் கூடி நிற்கும் சுக்கிரன் திசையில் குடும்பஷ்தானத்தில் நிற்கும் குரு பகவான் புத்தி திருமணத்தை நடத்தி வைத்தார்.

குழந்தை பாக்கியம் : 1996 : சுக்கிர திசை சனி புத்தி :

சுக்கிரன் ஆட்சி , சனி உச்சம் . உச்சம் பெற்ற சனி பகவான் சந்திரனுக்கு ஐந்தாம் வீட்டை ராசியிலும் நவாம்சத்தில் வலிமையாக பார்வை செய்கிறார். பலமான கிரகம் ஐந்தாம் வீட்டை பார்வை செய்யும் போது அந்த கிரகத்தின் திசை புத்தியில் குழந்தை பாக்கியத்தை கொடுக்கும். அது போலவே அமைந்தது.

சுக்கிர தசை புதன் புத்தி : கருணை இல்லம் உருவாக்கம் : 2000 Charity - William H gates Foundation :

சுக்கிரன் ஆட்சி கேந்திரத்தில் இருந்து திசையை நடத்தும் போது பன்னிரெண்டாம் அதிபதி புதன் மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்று புத்தியை நடத்தும் போது இவரை தருமம் செய்ய வைத்தது.

பொதுவாக பன்னிரெண்டாம் இடம் வலிமையாகவும் நன்றாக அமைந்த பலர் தனது பெரும் பகுதி சொத்தை ஏழைகளுக்கு தானம் செய்வார்கள். இவர் வாழ்விலும் இந்த அமைப்பு கானபடுகிறது. பன்னிரெண்டாம் அதிபதி புதன் உச்சம்.

சந்திர திசை சனி புத்தி :

தற்போது இவருக்கு சந்திர தசை சனி புத்தி நடைபெறுகிறது. சனியும் சந்திரனும் வலிமை யுடன் உள்ளார்கள். இந்த திசை புத்தியிலும் இவர் நன்றாக பல லாபங்களை அனுபவிப்பார்.

ஆனால் கோச்சார ரீதியாக குரு நாலாம் வீட்டிலும் சனி எட்டாம் வீட்டிலும் இருந்து அஷ்டம சனியை நடத்துவதால் வாழ்க்கை கொஞ்சம் போராட்டமாகவும் அலைச்சல் மற்றும் சுக குறைவும் கொடுக்கும். உடல் நிலை கூட அவ்வபோது கெடும் அமைப்பு உண்டு.

மேலும் பல பிரபல ஜாதகம் இங்கே                            முதல் பக்கம் செல்

ஒசாமா பின் லாதின் ஜாதகம்

No comments :

Post a Comment