01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, November 20, 2013

OSAMA BIN LADEN HOROSCOPE - ஒசாமா பின் லாடின் தீவிர பக்திமான் - புரச்சியாளன் ஜாதகம் - விளக்கம் ஜோதிட மாமணி கலையரசன் காட்டுமன்னார்கோயில்


12 ம் அதிபதி லக்னத்தில் இருந்தான், பிறந்த ஊரை விட்டு வெளியேற வைத்தான். சௌதியில் பிறந்தார் சூடானில் குடியேறினார். அமெரிக்காவின் நெருக்கடியால் ஆப்கானில் இருதியாக குடியேறினார்.

4 - ம் அதிபதி சூரியன் பத்தாம் வீட்டில் பலம் பெற்றான் தீர்க்கமான  அறிவு கொடுத்தான்.சூரியனும் புதனும் இணைந்தான் அறிவு திறனை தெளிவாக கொடுத்தான். உலகமே தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாதபடி தன்னை எப்படி மறைத்து கொள்வது என்ற அளவுக்கு அறிவு தெளிவாக இருந்தது.

6 - ம் அதிபதி சுக்கிரன் 10 ம் வீட்டில் பலம் பெற்றான் . பல விரோதிகளை தொழில் ரீதியில் கண்டார் .இருபினும் ஆறாம் வீட்டில் இருக்கும் பாவி ராகு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க செய்தான்.

பத்தாம் அதிபதி சனி ஏழாம் வீட்டில் நின்றான் தொழில் ரீதியில் பல நண்பர்களை பெற்றார். உலக அளவில் பல காரியங்கள் செய்ய பல நம்பிக்கையான நண்பர்களை / கூட்டாளிகளை பெற்றார்.

ஒன்பதாம் அதிபதி சனி ஏழாம் வீட்டில் கேந்திரத்தில் பலம் பெற்றதாலும்  . 12 - ம் வீட்டில் கேது நின்றதாலும் தீவிர பக்தி மதத்தின் மீதும் கடவுள் மீதும் ஏற்பட்டது.

லக்னத்தில் பாவி செவ்வாய் இருக்கிறான் . ஏழாம் வீட்டில் மஹா பாவி சனி இருந்கிறான். இப்படி பாவிகள் சூழ்ந்து ஏழாம் வீட்டை கெடுத்து விட்டதால் ஆறு மனைவிகள் வரை மணந்து அனைவரையும் பிரியும் நிலை கொடுத்தது.

7 ம் அதிபதி செவ்வாய் 7 ம் வீட்டை பார்த்தான் .மணம் முடித்து வைத்தான். அதே செவ்வாய் 12 ம் வீட்டிற்கும் அதிபதி ஏழாம் வீட்டை பார்த்தான் . அணைத்து மனைவியையும் பிரித்தும் வைத்தான்.

தெய்வீக கிரகம் குரு ஐந்தாம் வீட்டில் பலம் , தெய்வீக கிரகம் சனி ஏழில் பலம் மற்றும் கேது மோட்ச ஸ்தானத்தில் உள்ளான். இப்படி தெய்வீகத்தை குறிக்கும் அணைத்து கிரகமும் பலம் பெற்று இருப்பதால் இவர் இறைவன் மீது மிகுந்த பற்று கொண்டார்.

இருபினும் இவரின் செயல்கள் பல அரசிற்கு எதிராக இருந்தது ஏன் ?

பத்தாம் வீட்டில் ஆறாம் வீட்டின் அதிபதி சம்பந்தம் இருந்து சுப கிரகத்தின் பார்வை இல்லாததால் செய்யும் செயல்கள் அனைத்தும் அரசிற்கு விரோதமாக இருந்தது.

பாக்கியாதிபதி சனி லக்னத்தை பார்த்தான் அணைத்து பாக்கியங்களுடனும் ராஜா வீட்டில் பிறந்தார் பாக்கியங்களுடன் வாழ்ந்தார்.

ஐந்தாம் அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால் ஆன்மீக அறிவு மேலோங்கும் மேலும் திருப்பணி செய்வார். அதாவது கோவில் கட்டுவார் என்கிறது சாஸ்திரம். இவரும் கல்லூரில் படிக்கும் போதே மதத்தில் அதிக ஈடுபாடு செலுத்தியவர். இஸ்லாமியத்தை ஜிகாத் உடன் ஒப்பிட்டு பார்த்தார்.

மேலும் தனது குடும்ப சொத்தை பிரித்து முப்பது மில்லியன் டாலர் இவருக்கு சொத்தாக கிடைத்த பணத்தை முழுவதும் மதத்திற்கும் இஸ்லாமியத்தை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி ஆரம்பித்த இயக்க செலவிற்கும் செலவு செய்தார் என்பது குறிப்பிட தக்கது.

மிக பெரிய பாவிகள் செவ்வாய் மற்றும் சனி . இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டால் மனத்தில் நிம்மதி இருக்காது புரச்சியாலனை போல உருவாக்கும். அதே போல இவர் ஜாதகத்திலும் பலம் பெற்ற சனியும் செவ்வாயும் பார்த்து கொண்ட காரணத்தால் இவர் இஸ்லாமிய மதத்திற்கு ஒரு குறிப்பிட்ட மக்கள் தீங்கு இழைக்கிறார்கள் என்று எண்ணி தன்னை ஒரு புரட்சியாளனாக மாற்றி கொண்டார். இந்த எண்ணம்  செவ்வாய் - சனி பார்வையால் ஏற்பட்டது. மேலும் நவாம்சதிலும் செவ்வாய் மற்றும் சனி சேர்ந்து பலம் பெற்று உள்ளார்கள்.

மோட்ச ஸ்தான அதிபதி செவ்வாய் நவாம்சத்தில் உச்சம் பெற்று இருக்கின்ற காரணத்தால் தனது முழு சொத்தையும் மத ரீதியில் செலவிட்டார்.

மரணம் : புதன் திசை புதன் புத்தி : 2 மே  2011

எட்டாம் வீட்டில் பாவிகள் இல்லை (ராசியில் ) , நவாம்சத்தில் எட்டில் குரு இருக்கிறார்.. லக்னத்தில் இருக்கின்ற செவ்வாய் எட்டாம் வீட்டை பார்வை செய்கிறார். சுப கிரகம் குரு நொடி பொழுதில் மரணத்தை கொடுக்க வேண்டும் . செவ்வாய் பார்வை விபத்தில் மரணத்தை கொடுக்க வேண்டும்.

லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி புதன் ( ராசியில் ), லக்னத்திற்கு 12 ம் அதிபதி புதன் (நவாம்சதில் ), சந்திரனுக்கு ஏழாம் அதிபதி புதன்( நவாம்சத்தில் ).

இப்படி ஏழாம் வீட்டுடனும் இரண்டாம் வீட்டுடனும் அதிக சம்பந்தம் உள்ள புதன் மரணத்தை கொடுக்க கடமைபட்டுள்ளார்.( 2, 7 ம் வீட்டின் அதிபதிகள் மாரகாதிபதிகள் )

இப்படி மரணம் கொடுக்க கடமைப்பட்டுள்ள புதன் திசை புதன் புத்தியில் மரணம் சம்பவித்தது , நவாம்சத்தில் எட்டாம் வீட்டில் உள்ள குருவால்  மரணம் நொடி பொழுதிலும் , எட்டாம் வீட்டை செவ்வாய் பார்வை செய்ததால் விபத்தின் மூலமும் உண்டானது. ( அமெரிக்காவின் தேடுதல் வேட்டையில் ராணுவத்தால் நடு இரவில் சுடப்பட்டு கொல்லப்பட்டார் )

முதல் பக்கம் செல்            மேலும் பல பிரபல ஜாதகம் இங்கே

courtesy: Mr. Osama Bin Laden Date of birth and time birth taken from AStro theme -- thanks to Astrotheme

No comments :

Post a Comment