01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Saturday, February 15, 2014

ராகுல் காந்தி - ஜாதகம் ( ஜோதிட ஆராய்ச்சி கண்ணோட்டம் ) - Rahul Gandhi Horoscope analysis


திரு ராகுல் காந்தி அவர்கள் இந்திய முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி யின் மகன். இவர் தற்போது இந்திய அரசியலில் சிறப்பாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இவரின் ஜாதக அமைப்பை ஆராய்ந்து பார்த்ததில் கண்டது.

லக்னாதிபதி புதன் 12-ம் வீட்டில் மறைந்து இருக்கிறார். நீச்சம் பெற்ற சந்திரன் சாரத்தில் இருக்கிறார். மேலும் சந்திரன் ஆறாம் வீட்டில் இருக்கிறார். ஆறாம் அதிபதி ( எதிரி ஸ்தான அதிபதி ) செவ்வாய் லக்னத்தில் இருக்கிறார். இப்படி லக்னமும் லக்னாதிபதியும் 6,12 ம் வீட்டுடனும் 6,12 ம் வீட்டு அதிபதியுடனும் சம்பந்தம் பெற்று இருப்பதால்,

சிறுவயது முதலே அடிகடி இடமாற்றம் கொடுத்தது. பாதுகாப்பு எண்ணம் கருதி இவரை இவரின் பெற்றோர்கள் பல பள்ளிகளில் சேர்த்து படிக்க செய்தார்கள்.இவரின் பாட்டி ( இந்திரா காந்தி அம்மையார் ) படுகொலைக்கு பின்னர் இவரின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டது.

வீட்டிலேயே கல்வி கற்கும் அமைப்பு கொடுத்தது. இவை அனைத்துமே கல்விகாருகன் புதன் மற்றும் 4 ம் வீட்டின் அதிபதி புதன் 12 ம் வீட்டில் மறைந்ததால் தான்.


கேது திசை : 1974-1981


கேது திசை முழுவதுமே சிறு சிறு பயணங்கள் கல்வியில் கொடுத்தது. பொதுவாக மூன்றாம் வீட்டில் நிற்கும் கிரகம் பல இட மாற்றங்களை கொடுக்கும். இவருக்கு பாதுகாப்பு எண்ணம் கருதி ஒரு பள்ளியில் கூட அதிக நாட்கள் படிக்க வைக்க வில்லை. அடிகடி பள்ளி மாற்றப்பட்டது.

சுக்கிர திசை ஆரம்பம் : 12-4-1981 to 12-4-2001


சுக்கிர திசை சூரிய புத்தி : 11-8-1984 to 12-8-1985 

இந்திரா காந்தி( ராகுல் காந்தியின் பாட்டி ) படுகொலை :

9 ம் இடம் தந்தை ஸ்தானம் என்று அழைக்கபடுகிறது. 9 ம் வீட்டிற்கு 4 ம் வீடு தந்தையின் தாய் ( பாட்டி ) ஸ்தானம் என்று அழைக்கபடுகிறது.

ஆக 12 ம் வீடு பாட்டி ஸ்தானம் ஆகும். 12 ம் ஸ்தான அதிபதி சுக்கிரன் மாந்தி என்ற பாவியுடன் கூடி 2 ம் வீட்டில் ( மாரக ஸ்தானத்தில் ) இருக்கிறான். புத்தியின் காரகன் சூரியன் , சுக்கிரனுக்கு 2 ம் வீட்டின் அதிபதி அவன் சுக்கிரனுக்கு  12 ம் வீட்டில் இருக்கிறான். மேலும் நீச்சம் பெற்ற சனியின் பார்வை பெற்று இருக்கிறான்.

இப்படி சுக்கிரனும் சூரியனும் ஒருவருக்கு ஒருவர் 2,12 ல் இருந்தும் சனியின் பார்வையை பெற்றும் தசைபுத்தியை நடத்தியதால் பாட்டிக்கு அகோர மரணம் கொடுத்தது. செவ்வாய் சனியின் பார்வை கெடிய மரணத்தை கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

தந்தை ( ராஜீவ் காந்தி ) பிரதமமந்திரி ஆனார் :

சுக்கிர திசை  - சூரிய புத்தி :

5 ம் அதிபதி சுக்கிரன் 2 ம் வீட்டில் உள்ளார். மேலும் சூரியன் 3 ம் அதிபதி லக்னத்தில் இருந்து குரு பார்வை பெறுகிறார். லாபதிபதி செவ்வாயுடன் சூரியன் கூடி இருக்கிறார். இப்படி தந்தை காரகன் சூரியன் நன்றாக லக்னத்தில் அமர்ந்து சூரியனின் புத்தி நடைபெறும் போது தான் இவரின் தந்தை பிரதமராக பதவியேற்றார். 

ராஜீவ் காந்தி ( தந்தை ) படுகொலை :

சுக்கிர திசை - ராகு புத்தி : ( 12-6-1988 to 12-6-1991 )

சுக்கிர திசையில் குரு பகவான் பார்வை பெற்ற  சூரிய புத்தி தகப்பனை பிரதமராக்கி பார்த்தார். ஆனால் 

தந்தை ஸ்தானம் என்று சொல்லப்படும் 9 ம் வீட்டில் நிற்கும் ராகு தனது சொந்த சாரத்தில் இருப்பதால் மிகவும் பலம் பெற்று உள்ளார். ஆகையால் 9 ம் இடத்தை பாழ் படுத்திவிட்டார்.

மேலும் சூரியன் , பாவி செவ்வாயுடன் கூடி ராசியில் நிற்பதும் நவாம்சத்தில் பாவி சனியுடன் கூடி12  ம் வீட்டில் மறைந்ததும் தந்தைக்கு கொடிய தோஷம் கொடுக்கும் அமைப்பு தான்.

தாய் விதவை :

4 ம் இடம் தாய் ஸ்தானம் , 4 ம் வீட்டில் அதிபதி புதன் 12 ல் மறைந்து பலம் இழந்து விட்டான். நவம்சதிலும் புதன் 6 ம் வீட்டில் ( துஷ்தானத்தில் ) உள்ளான். மேலும் தாய் காரகன் சந்திரன் ராசியில் நீச்சம் பெற்று உள்ளான். நவாம்சத்தில்  பாவி செவ்வாயுடன் கூடி நிற்கிறான்.

இப்படி 4 ம் அதிபதியும் 4 ம் இடமும் சந்திரனும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதால் தாயின் பாக்கியம் பறிபோனது.

இருபினும் 4 ம் அதிபதி புதன் வர்கோதமம் பெற்று உள்ளதால் தாய் நன்றாக இருப்பார்.

       அரசியல் வருகை மற்றும் அமிதிதொகுதியில் அபார வெற்றி 

சூரிய திசை சனி புத்தி : ( 17-2-2004 to 29-01-2005 )

சூரியன் 3 ம் வீட்டின் அதிபதி லக்னத்தில் இருந்து குரு பார்வை பெற்றான் . 3 ம் வீடு பல இட மாற்றங்களை கொடுக்கும். இந்த நேரத்தில் தான் பல இடங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். மேலும் சனி பகவான் 9 ம் வீட்டின் அதிபதி ( பாக்கியாதிபதி ) அவர் லாப ஸ்தானத்தில் இருந்து நீச்ச பங்க ராஜ யோகம் பெற்று உள்ளதால் ஒரு ( 100,000) லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி காணுமாறு செய்தது.

சந்திர திசை – சந்திர புத்தி : ( 12-4-2007 to 11-2-2008 )

2 ம்  அதிபதி சந்திரன் 6 ம் வீட்டில் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்று இருந்து தனது புத்தியை நடத்தும் போது தான் இவர் GENERAL SECRETARY OF CONGRESS PARTY  என அறிவிக்கப்பட்டார். நீச்ச பங்க ராஜ யோகம் செய்யும் வேலை இது.

சந்திர திசை ராகு புத்தி : 2009 பாராளுமன்ற தேர்தல்

சந்திரன் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்று உள்ளான். ராகு 9 ம் வீட்டில் உள்ளார். சனி பகவான் வீட்டில் உள்ளார். சனி பகவான் லாப ஸ்தானத்தில் உள்ளார். சனியும் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்று உள்ளார். குரு பார்வையும் பெற்று உள்ளார். இப்படி இரண்டு நீச்ச பங்க ராஜயோகம் மற்றும் குரு பார்வை இருக்கின்ற இந்த நேரத்தில் தான் இவர் 350,000 வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையும் வெற்றி பெரும் சூழ்நிலை உருவானது.

சந்திர திசை – குரு புத்தி : 2011

சந்திரன் 6 ம் வீட்டில் நிற்கிறார். குரு 5 ம் வீட்டில் நிற்கிறார். குரு பகவான்  செவ்வாயின் சாரத்தில் இருக்கிறார். செவ்வாய் 6 ம் வீட்டில் அதிபதி . மேலும் சந்திரனும் குருவும் ஒருவருக்கு ஒருவர் 2,12 ல் இருந்து தசையை நடத்துவதாலும் 6 ம் வீட்டின் சம்பந்தம் மற்றும் சாரம் பெற்று இருப்பதாலும் நிலம் கையகபடுத்திய வழக்கில் இவர் கைது செய்யபட்டார்.
பொதுவாக ஆறாம் வீட்டின் அதிபதி லக்னத்தில் இருந்து ஒரு பாவியால் பார்க்கபட்டால் அது "சிறை யோகம்" ஆகும்.  இவருக்கும் ஆறாம் வீட்டின் அதிபதி செவ்வாய் லக்னத்தில் இருந்து பாவி சனியின் பார்வையை பெறுவதால் இப்படி சிறைசாலை செல்லும் அமைப்பு ஏற்பட்டது.

திருமண வாழ்கை :

7 ம் அதிபதி குரு 5 ம் வீட்டில் இருக்கிறார். 7 ம் வீட்டிற்கு 6 ம் அதிபதி செவ்வாயின் பார்வை உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரன் ராசியிலும் நவாம்சத்திலும்  பாவி மாந்தியுடன் கூடி நிற்கிறான். மேலும் நவாம்சத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்று பலம் இழந்து உள்ளார்.
இந்த அணைத்து அமைப்புமே சரியான மண வாழ்வு கொடுக்காது. ராசியிலும் நவாம்சதிலும் 12ம் வீட்டில் பாவிகளும் பாவ கத்தரிதோஷமும் உண்டாகி இருப்பதால் அயன சயன சுகம் குறைவு தான். ( திருமணம் அமையவில்லை )

புத்திர பாக்கியம் :

புத்திரகாரகன் குரு பகவான் புத்திர ஸ்தானம் என்று சொல்லபடும் 5 ம் வீட்டில் நின்று காரகோபாவநாசம் என்ற அமைப்பை உண்டாகி புத்திர ஸ்தானத்தை பாழ் படுத்தி விட்டன.
5 ம் அதிபதி சுக்கிரன் மாந்தியுடன் கூடி நிற்பதும் நவாம்சத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்று இருப்பதும் , சந்திரனுக்கு 5 ம் வீட்டில் பாவ கத்தரி தோஷம் உண்டாகி இருப்பதும் கடுமையான புத்திர தோஷம் கொடுக்கும் அமைப்பு. ( புத்திரர்கள் இல்லை ).

தற்போது உள்ள காலம் எப்படி ? தேர்தல் களம்


சந்திர திசை புதன் புத்தி : ( 13-07-2014 வரை )

நீச்ச பங்க ராஜயோகம் பெற்ற சந்திரன் 6 ம் வீட்டில் இருந்து திசையை நடத்துகிறார். புதன் லக்னாதிபதி அவர் விரைய ஸ்தானம் என்று சொல்லப்படும் 12 ம் வீட்டில் இருக்கிறார். புதன் 4 ம் வீட்டிற்கும் அதிபதி அவர் 12 ல் நிற்பது சுக குறை கொடுக்கும். தாய்க்கு கெடுபலன் கொடுக்கும். மேலும் புதன் 12 ல் இருந்து இரண்டு பக்கமும் பாவிகள் சூழ்ந்து பாவ கத்தரி தோஷத்தில் சிக்கி இருப்பதால் புதனால் பெரிய பலனை கொடுக்க இயலாது.
இருபினும் சந்திரனுக்கு ஏழாம் வீட்டில்  இருந்து புதன் புத்தி நடைபெறுவதால் சுமாரான பலனை கொடுக்க கடமை பட்டு இருக்கிறார்.

மேலும் தற்போது குரு பகவான் கோட்சார ரீதியாக எட்டாம் வீட்டில் மறைந்து கிடப்பதும் சனி விரயத்தில் நின்று ஏழரை சனியை நடத்துவதும் பின்னடைவு கொடுக்கும் அமைப்பு.


Courtesy : Date of birth and time of birth has been taken from ganeshaspeaks. thanks to them.