01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, March 26, 2014

N.R.NARAYANA MURTHY - INFOSYS SOFTWARE COMPANY DIRECTOR HOROSCOPE ANALYSIS - திரு , நா.ரா. நாராயண மூர்த்தி ஜாதகம்மலர் ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாள் செய்திகள் : 

ஆன்மிகம் மற்றும் ஜோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த வாசக பெரு மக்களுக்கு என் மன மார்ந்த நன்றி. தொடங்கிய 2 வருடத்திற்குள் வருகை தந்த சுமார் 4 லட்சம்  அன்பு நெஞ்சங்களுக்கு மீண்டும் நன்றி.

                                           ********         *********        **********

நாகாவாரா ராமராவ் நாராயண மூர்த்தி என்கிற N.R.Narayana murthy அவர்கள் கணினி துறையில் மிக பெரிய சாதனையை செய்து கொண்டு இருகிறார்கள். ஆறு கணினி துறையை சேர்ந்த  பொறியாளர்கள்  பத்து ஆயிரம் ரூபாய்  முதலீட்டில் ஆரம்பித்த கம்பனி தான் இன்போசிஸ் ( INFOSYS  SOFTWARE COMPANY ) கணினி நிறுவனம் . தற்போது பல பில்லியன் சொத்துகளுக்கு அதிபதியாக உள்ளது.


இது எப்படி சாத்தியம் ஆனது ? திரு N.R. நாராயண மூர்த்தி ஜாதகம் எப்படி உள்ளது என்பது பற்றி ஒரு ஆராய்ச்சி விளக்கம் .

N.R.நாராயண மூர்த்தி அவர்கள் 20-8-1946 ஆம் ஆண்டு மைசூர் நகரத்தில் பிறந்துள்ளார். துலா லக்னம் ரிசப ராசியில் பிறந்துள்ளார்.

லக்னாதிபதி சுக்கிரன் தனது நண்பன் புதன் வீட்டில் நின்று நீசபங்க ராஜயோகம் பெற்று உள்ளான்.

கல்வி :

நாலாம் அதிபதி சனி பகவான் இவருக்கு யோககாரன் . இந்த யோககாரன் சனி பகவான் கல்விகாரகன் புதனுடன் கூடி தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் வீட்டில் கேந்திரத்தில் பலமாக நிற்கிறான்.

இப்படி நாலாம் அதிபதிக்கும் புதனுக்கும் சம்பந்தம் உண்டானதாலும் சனியும் புதனும் நெருங்கிய நண்பன் ஆகையாலும் கல்வியில் மிகுந்த ஆர்வமாகவும் நல்ல முறையிலும் படிக்கவும் செய்தது.

அந்த காலத்திலேயே மிகவும் புகழ் பெற்ற கான்பூர் ஐ ஐ டி பொறியியல் கல்லூரியில்  முதுநிலை  பொறியியல் படிப்பை முடித்தார்.

கணணி துறையில் சம்பந்தம் ஏற்பட்டது  ஏன்? எப்படி?

புதன் பலம் பெற்றால் ஒருவனை கணித துறையிலும் கணினி துறையிலும் அக்கௌன்ட் துறையிலும் மிக பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும். இங்கே இவர் ஜாதகத்தில் கணினி காரகன் புதன் , யோககாரன் சனி யுடன் கூடி தொழில் ஸ்தானத்தில் கேந்திரத்தில் பலமாக அமர்ந்தான்.

இந்த காரணத்தினால் கணினி துறையில் மிக பெரிய முன்னேற்றம் கொடுத்தது.

மேலும் யோககாரன் சனி நாலாம் ( கல்வி ஸ்தானம் ) வீட்டை பார்த்தான். கல்விகாரகன் புதனும் நாலாம் வீட்டை பார்த்தான். கல்வியில் மிக பெரிய நிலையை எட்ட வைத்தான்.

அறிவு ஸ்தானத்தில் ஞானகாரகன் கேது உச்சம் பெற்று அமர்ந்தான் புதியவைகளை கண்டுபிடிக்க செய்தான். ( கேது பகவான் விருச்சிகத்தில் உச்சம் பெற்று நிற்கிறார்.)

மனைவி :

ஏழாம் இடத்திற்கு நாலாம் இடம் அதாவது பத்தாம் இடம் மனைவியின் கல்வியை குறிக்கும் இடம் ஆகும். இங்கே யோககாரன் சனி பகவான் கல்விகாரகன் புதனுடன் கூடி இருப்பதாலும் ஏழாம் இடத்தை யோககாரன் சனி பகவான் பார்வை செய்வதாலும் ஏழாம் அதிபதி செவ்வாயையும் யோககாரன் சனி பகவான் பார்வை செய்வதாலும் நன்கு அதிகம் படித்து பட்டம் பெற்ற பெண் மனைவியாக அமைந்தாள்.

இவரின் மனைவி திருமதி சுதா மூர்த்தி அவர்கள் இளநிலை பொறியியல் கல்லூரியில் பயிலும் போது கல்லூரியில் முதல் இடம் பெற்று தங்க மடல் பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது.

மேலும் முதுநிலை பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதும் முதல் இடம் பெற்று தங்க மடல் பெற்றவர் என்பதும் குறிப்பிட தக்கது.

புத்திரர்கள் :

ஐந்தாம் அதிபதி சனி பகவான் யோககரகனாக இருந்து பத்தாம் வீட்டில் பலமாக அமர்ந்து இருப்பதாலும் சனி பகவான் நவாம்சத்தில் ஒன்பதாம் வீடு என்ற பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதாலும் நல்ல பிள்ளைகளை பெற்று எடுக்கும் அமைப்பு கொடுத்தது.

கெளரி யோகம் :

பத்தாம் அதிபதி நவாம்சத்தில் யார் வீட்டில் இருக்கிறானோ அந்த வீட்டின் அதிபதி ராசியில் பத்தாம் வீட்டில் உச்சம் பெற வேண்டும்.
இங்கே இவர் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி சந்திரன் நவாம்சத்தில் சனியின் வீட்டில் இருக்கிறார். சனி பகவான் ராசியில் பத்தாம் வீட்டில் உள்ளார். இது பாதி கெளரி யோகம் தான். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் அரசால் பாராட்ட படுவார்கள்.

காகல யோகம் :

மேலும் நாலாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் இணைந்து இருப்பதால் காகல யோகம் உண்டாகி உள்ளது.

இப்படி லக்னத்தில் குரு பகவான் வர்கோத்தமம் பெற்றும் காகல யோகம் மற்றும் கெளரி யோகமும் உண்டாகி இருப்பதால் இவருக்கு பத்ம விபூஷன் விருதும் பத்மஸ்ரீ விருதும் கிடைக்கும் நிலை உண்டானது. அரசால் பாராட்டும் பெற்றார்.

ராகு திசை :
ராகு திசையின்  இறுதியில் இவர் இன்போசிஸ் என்ற நிறுவனத்தை மற்ற ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். பதினோராம் இடம் நண்பர்களை குறிக்கும் இடம். இவர் ஜாதகத்தில் பதினோராம் அதிபதி சூரியன் ஆட்சி பெற்று சிம்மத்தில் உள்ளார். ஆகையால் நல்ல நண்பர்களை பெற்றார். அதன் மூலம் லாபத்தையும் பெற்றார்.

குரு திசை :

லக்னத்தில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றுள்ள குரு பகவான் திசை முழுவதுமே இவர் நிறுவனம் நன்றாக வளர்ச்சி கண்டது மேலும் இவர் அந்த நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்தார்.

சனி திசை :

1999  வருடம் முதல் சனி திசை ஆரம்பம் ஆனது. இந்த திசை மிக பெரிய முன்னேற்றத்தை கொடுத்தது. சனி பகவான் யோககாரன் இந்த யோக காரன் திசையிலும் நல்ல முன்னேற்றம் கொடுத்தது. மேலும் 2018 வரையும் இந்த சனியின் திசை நடை பெறுவதால் மிக பெரிய வளர்ச்சி உண்டு.

புதன் திசை :

அதனை அடுத்து வரும் புதன் திசையும் யோகம் கொடுக்கும். புதன் பாக்கியாதிபதி அவர் தொழில் ஸ்தானம் என்று சொல்லபடும் பத்தாம் வீட்டில் இருப்பதால் மேலும் யோககாரன் சனியுடன் கூடி இருப்பதாலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு.