01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Monday, April 14, 2014

ஆனந்தமாயி மா – ஆன்மீக உலகில் புகழ் பெற்று விளங்கிய அம்மையாரின் ஜாதக விளக்கம்

5116 தமிழ் வருடம் சித்திரை மாதம்  1 ம் நாள் ஜோதிட மடல்  :

ஆன்மீக உலகில் புகழ் பெற்று விளங்கிய ஆனந்தமாயி மா – அவர்களின் ஜாதக விளக்கம்


"to find yourself is to find God, and to find God is to find yourself".

30-04-1896  ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு உட்பட்ட பிரமன்பாரியா என்ற மாவட்டத்தில் பிறந்தார். இப்போது இது வங்காளதேசத்தில் உள்ள மாவட்டம் ஆகும்.

மோட்சம் / ஆன்மிகம் :

லக்னாதிபதி குரு ஆன்மீக ராசி கடகத்தில் உச்சம் பெற்று உள்ளார். பன்னிரெண்டாம் அதிபதி எட்டாம் வீட்டில் உச்சம் பெற்று உள்ளார். தெய்வீக வீடு என்று சொல்லப்படும் ஒன்பதாம் வீடு அதிபதி செவ்வாய் மோட்ச ஸ்தானம் என்று சொல்லப்படும் பன்னிரெண்டாம் வீட்டில் மோட்சகாரகன் ராகு உடன் கூடி நிற்கிறான். ஸ்திரமான ஆன்மீக அறிவு மேலோங்கியது.

பன்னிரெண்டாம் வீடும், அயன / இல்லற சுகமும் :

பன்னிரெண்டாம் வீடு இல்லற சுகத்தையும் குறிக்கும் இடம் ஆகும். அங்கே இரண்டு இயற்கை மஹா பாவிகள் செவ்வாய் மற்றும் ராகு கூடி நின்று பாழ் படுத்தி விட்டதால் இல்லற / படுக்கை அறை சுகம் என்பதே இல்லாமல் போனது.

மேலும் ஏழாம் வீட்டிற்கு இரண்டு பக்கமும் சனி மற்றும் கேது போன்ற மகா  பாவிகள் அமர்ந்து பாவ கத்தரி தோசத்தை உண்டாக்கி இருப்பதாலும் ஏழாம் அதிபதி புதன் மூன்றாம் வீட்டில் மறைந்து ராகுவுடன் கூடிய செவ்வாயின் பார்வையை பெறுவதாலும் ஏழாம் வீட்டிற்கும் செவ்வாயின் கோரமான எட்டாம் பார்வை இருப்பதாலும் மணவாழ்வு சுகம் இல்லாமல் செய்தது.

மேலே கூறிய அணைத்து கிரக அமைப்புமே மண வாழ்வு மறுக்கப்படும் அமைப்பு தான்.

இந்த நிலையால் சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் மனம் லயித்தது.

இறுதிவரை கரை படியாமல் வாழ்ந்து முடிந்தார். ஹரித்துவார் நகரத்தில் ஆனந்த ஜோதியாக இன்றும் அணைத்து ஆன்மீக நெஞ்சங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ஆனந்தமாயி மா அவர்கள்.