01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Saturday, June 28, 2014

Lionel Messi - Star Football player - Horoscope


கால் பந்து ஆட்டத்தில் சிறு வயதிலேயே உலக புகழ்பெற்ற ஆட்டக்காரர் லியோனல் மெஷ்ஷி ( Lionel Messi ). ROSARIO என்ற ஊரில் 24-06-1987 நாள் பிறந்தார்.

கால் பந்து ஆட்டத்தில் ஏன் புகழ் பெரும் நிலை ஏற்பட்டது?

ஜோதிட ரீதியில் லக்னம் தலை என்றும் இரண்டாம் வீடு வாய் நக்கு தொண்டை என்றும் மூன்றாம் வீடு கை மற்றும் காது என்றும் இவ்வாறாக ஒவ்வொரு வீடும்  உடலின் ஒரு உறுப்பை குறிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அப்படி பதினோராம் வீடு கால்கள் என்றும் பன்னிரெண்டாம் வீடு பாதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் ஜாதகத்தில் கால் என்று சொல்லப்படும் பதினோராம் இடம் எவ்வாறு பலமாக உள்ளது என்பதை பார்ப்போம்.

லக்னாதிபதி சூரியன் லாபஸ்தானம் என்று சொல்லப்படும் கால்களை குறிக்ககூடிய பதினோராம் வீட்டில் ஆட்சி பெற்ற புதனுடன் கூடி பலம் பெற்றும் “ புதாத்திய யோகம் ” பெற்றும் உள்ளார். மேலும் யோககாரன் செய்வாய் பகவானும் கால்களை குறிக்ககூடிய பதினோராம் வீட்டில் பலம் பெற்று உள்ளார்.

பொதுவாக பாவிகள் பதினோராம் வீட்டில் பலம் பெற்றால் பெரும் சொத்து சேர்க்கை மற்றும் புகழ் உண்டாகும்.

மேலும் சந்திரனுக்கு பதினோராம் வீட்டில் ராகு நிற்பதும் பலமே.

 லக்னத்தில் இருந்தும் சந்திரனில் இருந்தும்  இப்படி கால்களை குறிக்க கூடிய பதினோராம் இடம் பலம் பெற்று இருப்பதால் கால் சம்பந்த பட்ட கால் பந்து விளையாட்டு துறையில் ஈடுபடுத்தி புகழ் பெறுமாறு செய்தது.

பெரிய பணக்காரக இருப்பது ஏன் ?

லக்னாதிபதி லாபஸ்தானத்தில் இருந்தான் பணக்கார வீட்டில் பிறக்குமாறு செய்தான்.

லாபாதிபதி புதன் லாபத்தில் ஆட்சி பெற்றான் யோககாரன் செவ்வாயும் பதினோராம் இடத்தில் நின்றான் பணத்திற்கு பஞ்சமில்லாமல் செய்தான். கோடிகளில் புரளுமாறு செய்தான்.

2012 ல் பார்சலோனா கால் பந்து கிளப் ஐந்து வருட காண்ட்ராக்ட்  போட்டு பேசிக் ( BASIC SALARY ) சம்பளம்  ($21.2 million) மில்லியன் என்று அறிவித்தது.

மணவாழ்க்கை எப்படி ?

ஏழாம் அதிபதி சனி பகவான் கேந்திரம் என்று சொல்லப்படும் நாலாம் வீட்டில் நின்றான் . உச்சம் பெற்ற சந்திரன் மற்றும் சுக்கிரனின் பார்வை ஏழாம் வீட்டில் விழுந்தது. அழகான பெண்ணை மணக்கும் அமைப்பு கொடுத்தான்.

ஏழாம் வீட்டில் பாவிகள் இல்லை ஏழாம் அதிபதி சனியுடனும் பாவிகள் சேர வில்லை. சுக்கிரன் பாதிக்கபட வில்லை . மணவாழ்வில் சோதனைகள் ஏதுமில்லை. திருப்தியான மணவாழ்வு கொடுத்தான்.

புத்திரபாக்கியம் ?

ஐந்தாம் வீட்டு  குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் பலம் பெற்றார். ஐந்தாம் வீட்டில் பாவிகள் இல்லை. குருவும் பாவிகளுடன் சேரவில்லை. நல்ல குழந்தையை பெற்று எடுத்தார்.

தொழில் / வெற்றி / புகழ் எப்படி ?

தொழில் ஸ்தான அதிபதி சுக்கிரன் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்றான். மூன்றாம் வீட்டு அதிபதி சுக்கிரன் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்றான். மூன்றாம் வீடு இசை நாட்டியம் விளையாட்டு பொழுது போக்கு போன்றவை சம்பந்தப்பட்ட தொழிலை கொடுக்கும். இப்படி மூன்றாம் வீட்டு சுக்கிரன் ஆட்சி பெற்று உச்சம் பெற்ற சந்திரனுடன் கூடி பத்தாம் வீட்டில் நின்றான். விளையாட்டு துறையில் பெரிய புகழ் பெற்றார்.

கருணை இல்லம் மற்றும் பொது மக்களுக்கு செலவு செய்யும் மணம் ஏன் ?

மோட்ச ஸ்தான அதிபதி சந்திரன் கர்ம ஸ்தானம் என்று சொல்லபடும் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்றான். கருணை சம்பந்தப்பட்ட துறையில் பணத்தை செலவிட செய்தான்.

ஐந்தாம் அதிபதி குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்தான். தர்ம சிந்தனையை ஊக்குவித்தான். பொதுவாழ்வில் ஈடுபட செய்தான்.

பொதுவாக ஒன்தாம் இடத்தில் சுப கிரகம் நிற்கும் போது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்கள். பொதுவாழ்வில் செலவிடுவார்கள்.

2007 இல் ராகு திசை சுக்கிர புத்தியில் LIO MESSI FOUNDATION என்ற அமைப்பை உருவாக்கி ஏழை குழந்தைகளின் கல்வி மற்று உணவிற்காக தனது சொத்தை செலவிட்டார்.

குரு பகவான் வீட்டில் நிற்கும் ராகு பகவான் குருவின் பலனை தரவேண்டும். குருவோ ஐந்தாம் வீட்டு அதிபதி தர்மஷ்தானம் என்று சொல்லப்படும் ஒன்பதாம் வீட்டில் உள்ளார். மேலும் சுக்கிரனோ மோட்சகாரகன் சந்திரனுடன் கூடி தொழில் ஸ்தானத்தில் உள்ளார். இப்படி குருவும் சுக்கிரனும் ராகுவும் 5,9,12  ம் வீட்டுடன் தொடர்பு கொண்டு பலம் பெற்று இருப்பதால் மரியாதைக்குரிய செலவு செய்யும் நிலை உண்டானது.

இப்படிபட்ட லியோனல் மேஷ்ஷி இக்கு தற்போது குரு திசை நடை பெறுகிறது. குரு பகவான் இவருக்கு ஐந்தாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் உள்ளார். இந்த திசை முழுவதுமே இவர் மேலும் மேலும் பல சாதனைகளை செய்வார்.

No comments :

Post a Comment