01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, June 11, 2014

Subhas Chandra Bose - Horoscope ; சுபாஷ் சந்திர போஸ் ஜாதக ஆராய்ச்சி விளக்கம்


ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை பெருமையுடன் முதலில் உச்சரித்து உலக இந்தியர்களையும் உச்சரிக்க வைத்த இந்திய ராணுவ நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் ஜாதக விளக்கம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 23-01-1897 தேதியில் மதியம் 12:00 மணி அளவில் கட்டாக் என்ற அழைக்கப்படும் ஊரில் ( பிரிட்டிஸ் இந்தியா ) பிறந்தார்.


லக்னம் செவ்வாயின் வீடாக இருப்பதாலும் செவ்வாய் நவாம்சத்தில் நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருப்பதாலும் வீரதீர மனிதராக உருவெடுத்தார்.

கல்வி ஸ்தானத்தில் ஞானகாரகன் கேது நின்றான் மேலும் நாலாம் வீட்டு அதிபதி சந்திரன் கல்வியை கொடுக்ககூடிய புதன் வீட்டில் அமர்ந்தான். புதன் தனது நண்பன் சனி வீட்டில் அமர்ந்தான்.

நவாம்சத்தில் சந்திரன் சுப கிரகம் குரு வீட்டில் அமர்ந்தார். இப்படி நாலாம் இடம் பலம் பெற்று இருப்பதால் கல்வி பயிலும் காலத்தில் நல்ல மாணவன் என்ற பெயருடன் படிப்பை முடிக்குமாறு செய்தது கிரக நிலைகள்.

1913 : செவ்வாய் திசை கேது புத்தி : 

லக்னாதிபதி செவ்வாய் புத்தி ஸ்தானம் என்று சொல்லபடும் இரண்டாம் வீட்டில் இருக்கிறான். ஞானகாரகன் கேது பகவான் நாலாம் வீட்டில் இருக்கிறான். இந்த தருணத்தில் தான் பள்ளியிலேயே இரண்டாவது இடத்தை பிடித்து அதிக மதிப்பெண் பெற்று நல்ல புத்திசாலி  மாணவன் என்பதை வெளிக்காட்டினார்.

1919: ராகு திசை குரு புத்தி : 

ராகு பகவான் பத்தாம் வீட்டில் சனியின் வீட்டில் இருக்கிறான். சனி பகவான் அண்டை நாடு என்று சொல்லப்படும் எட்டாம் வீட்டில் இருக்கிறான். ஜல ராசியில் இருக்கிறான். மேலும் புத்தி நாதன் குரு பகவான் பயணத்தை குறிக்ககூடிய 12 ம் இடம் மற்றும்   9 ம் இடம் ஆகிய இரண்டு இடத்திருக்கு சொந்த காரன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார்.

இப்படி இடமாற்றத்தை உறுதியாக கொடுக்க கூடிய திசை புத்தியில் தான் இவர் மேல் படிப்பு கருதி இங்கிலாந்து பயணம் சென்றார்.

Indian civil services தேர்வில் தேர்ச்சியும் பெற்றார்.ஆனால் தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் வீட்டில் விரோதி ஸ்தான அதிபதி புதன் மற்றும் பாவி ராகு கூடி இருப்பதாலும் பத்தாம் அதிபதி சனி எட்டாம் வீட்டில் இருப்பதாலும் ஆங்கிலேயர்கள் அரசாங்கத்தில் பணி செய்வதை இழுக்காக நினைத்து பணியில் சேர மறுத்தார்.

பொதுவாக ஆறாம் அதிபதி கேந்திரம் பெற்று மேலும் ஒரு பாவியுடன் கூடினால் சிறை யோகம் என்று அழைக்கபடுகிறது. அதாவது அரசாங்கத்தின் கோவத்திற்கு ஆளாகும் நிலை கொடுக்கும்.

மேலும் இவர் SWARAJ, The Indian Struggle மற்றும் FORWARD போன்ற பத்திரிக்கைகளை நடத்தினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுதவும் ஆரம்பித்தார்.

மூன்றாம் அதிபதி புதன் கேந்திரத்தில் பத்தாம் வீட்டில் இருக்கிறான். மூன்றாம் வீடு எழுத்து துறை மற்றும் பப்ளிகேசன்ஸ் போன்ற துறையில் ஜீவனம் செய்ய வைக்கும். இருபினும் ராகு என்ற பாவியுடன் கூடி நிற்பதால் எழுத்து துறையால் இவர் சிறை செல்லும் அமைப்பு கொடுத்தது.

1925 – 1927: ராகு திசை புதன் புத்தி மற்றும் கேது புத்தி :

ராகு பகவான் சனியின் வீட்டில் இருக்கிறான். சனி எட்டாம் வீடு என்ற துஸ்தானத்தில் இருக்கிறான். மேலும் புதன் ஆறாம் வீட்டு காரன் பலம் பெற்று பத்தாம் வீட்டில் பாவி ராகுயுடன் கூடி நிற்கிறான். இவை அனைத்துமே ஒருவரை சிறையில் வாழ வைக்கும். புதன் பகவான்,  சூரியன் என்ற அரசியல் கிரகத்துடன்  சேர்ந்து நிற்பதால் அரசியல் காரணதிற்காக சிறை செல்லும் அமைப்பு கொடுத்தது.

1928 : ராகு திசை சுக்கிர புத்தி :

சுக்கிரன் ஏழாம் வீட்டு காரன் , அவன் லாபஸ்தானம் என்று சொல்லப்படும் பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து பாக்கியாதிபதி குருவின் பார்வையை பெற்றான். இந்த நேரத்தில் தான் இவர் இந்திய இளைஞர்களை அழைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்படும் வகையில் ஒரு ராணுவ குழு அமைக்கும் கூட்டத்தை கூட்டினார்.”  General Officer Commanding (GOC) Congress Volunteer Corps

1930: ராகு திசை சூரிய புத்தி :

ஐந்தாம் அதிபதி சூரியன் பத்தாம் இடத்தில இருப்பது அரசியலில் புகழ் பெரும் அமைப்பு . இருபினும் ஆறாம் வீட்டுக்காரன் புதன் சேர்க்கை மற்றும் பாவி ராகு சேர்க்கை மீண்டும் இவரை சிறையில் வாழுமாறு செய்தது .(  ஆங்கிலேயர் சட்டத்தை மதிக்காத காரணத்திற்க்காக ).

இருப்பினும் சூரியன் கேந்திரத்தில் பலம் பெற்றும் நவாம்சத்தில் லாபஸ்தானத்தில் இருப்பதாலும் இவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மேயர் பதவியில் அமர்ந்தார்.

ஜனவரி 1941 : குரு திசை கேது புத்தி :

பன்னிரெண்டாம் அதிபதி குரு இடமாற்றத்தை கொடுக்க வேண்டும் மேலும் நாலாம் வீட்டில் நிற்கும் கேது புத்தியை கொடுத்தாலும் வீடு வாசல் சுகம் போன்றவற்றில் இடையுறு கொடுக்க கடமைப்பட்டு இருக்கிறார். ஆகையால் குரு திசை கேது புத்தி நடந்தபோது இவர் ஆப்கான் வழியாக ஜெர்மனி இக்கு தப்பி செல்லுமாறு செய்தது.

1937 :திருமணம் : குரு திசை சனி புத்தி :

குரு பகவான் பாக்கியாதிபதி . ஏழாம் அதிபதி சுக்கிரன் சனியின் வீட்டில் இருக்கிறான்.   ஆகவே  குரு பகவான் திசையில் சனியின் புத்தியில் திருமணம் நடைபெற்றது. களத்திரகாரகன் சுக்கிரன்  தனது நண்பன் சனியின் வீட்டில் லாபஸ்தானத்தில் பலம் பெற்று குருவின் பார்வை பெற்று இருக்கிறான். நவாம்சத்தில் சுக்கிரன் தனது நண்பன் புதன் வீட்டில் லக்னத்தில் இருக்கிறான்.

இப்படி ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன் நன்றாக இருப்பதால் நல்ல பெண் மனைவியாக அமைந்தாள். சந்திரனுக்கு ஏழாம் அதிபதி குரு பகவான் சந்திரனுக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தார். ஆகவே வெளிநாட்டு பெண் மனைவியாக வரும் நிலை உண்டானது. ஆஸ்திரியா நாட்டு பெண்ணை மணந்தார்.

ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன் நன்றாக இருந்தாலும் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய் என்ற பாவி இருப்பதாலும் எட்டாம் இடத்தில் சனி என்ற பாவி அமர்ந்தும் இரண்டு மகா பாவிகளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டும் எட்டாம் இடத்தையும் இரண்டாம் இடத்தையும் வெகுவாக பாதித்து இருப்பதால் சமூகதிருக்கு ஒவ்வாமல் இந்து மதத்தை சேர்ந்த மனிதர் வெளிநாட்டு பெண்ணுடனும் கிறித்துவ பெண்ணுடனும் மணம் அமைந்தது.

பொதுவாக எட்டாம் இடம் அளவுக்கு அதிகமாக பாதிக்கபட்டால் மண வாழ்க்கை வித்தியாசமாக அமையும்.

கூட்டு முயற்சி வெற்றி : ஏழாம் அதிபதி லாபஸ்தானத்தில் குரு பார்வையுடன் :

ஏழாம் அதிபதி சுக்கிரன் தனது நண்பன் சனி பகவான் வீட்டில் லாபஸ்தானத்தில் இருக்கிறான். மேலும் பாக்கியாதிபதி குரு பகவான் பார்வை பெறுகிறான். ஆகையால் ஜெர்மனியுடன் கூடி ஹிட்லரின் ஆதரவை பெற்று சிறை கைதிகளை ராணுவ வீரர்களாக மாற்றி இந்தியாவை ஆளும் ஆங்கிலேரை எதிர்த்து போர் தொடுக்கும் முயற்சி வெற்றி பெற்றது.

மரணம் : 18-8-1945 : குரு திசை – சந்திர புத்தி – சுக்கிரன் அன்திரம்;

குரு பகவான் 12 ம் வீட்டு அதிபதி மேலும் சந்திரனுக்கு ஏழாம் வீட்டு சொந்த காரன். மேலும் சந்திரன் ஆறாம் வீட்டில் நிற்கிறான். சுக்கிரனோ லக்னத்திற்கு ஏழாம் வீட்டுக்காரன். இப்படி 7,12 ம் வீட்டுடன் சம்பந்தம் உள்ள குரு பகவான் மாரகம் கொடுக்கும் வலிமை பெற்று உள்ளார். மேலும் ரோகஷ்தானத்தில் நிற்கும் சந்திரன் மற்றும் 2,8 ம் வீட்டில் செவ்வாய் மற்றும் சனி நின்று ஆயுள் ஸ்தானத்தை பாழ் படுத்தி இருப்பதால் ரத்தம் சிந்தி மரணம் சம்பவிக்க வாய்ப்பு உண்டு.

செவ்வாய் ரத்த கிரகம் அவன் இரண்டாம் வீட்டில் நின்று எட்டாம் வீட்டில் நிற்கும் பாவி சனியை பார்ப்பதால் அகோர மரணம் உண்டு என்பதையும் விபத்து மரணம் உண்டு என்பதையும் காணமுடிகிறது.

மேலும் எட்டாம் வீடு ஜலராசியாக இருப்பதாலும் எட்டாம் வீட்டை பாவிகள் சூழ்ந்து இருப்பதாலும் கடல் கடந்து செல்லும் போது விபத்து உண்டாகும் என்பதையும் காண முடிகிறது.

அதிகார பூர்வமாக நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் விமானத்தில் செல்லும் போது வெடித்து சிதறி உடல் முழுவதும் கருகிய நிலையில் கீழே விழுந்தார் என்றும் மேலும் மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் 18-8-1945 ம் நாள் மரணம் அடைந்தார் என்றும் அறிவித்தனர்.

1 comment :