01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Friday, July 18, 2014

Sri Thyagaraja swamy Horoscope - ஸ்ரீ தியாகராஜர் ஜாதகம் - இசையே வாழ்க்கை

ஸ்ரீ தியாகராஜர் அவர்கள் 04-05-1767 அன்று திருவாரூரில் பிறந்தார்.

ஆயுள் – வாழ்காலம் :

கடக லக்னம் கடக ராசியில் பிறந்துள்ளார்.லக்னாதிபதி சந்திரன் லக்னதிலேயே ஆட்சி பெற்று உள்ளார். ஆயுள் காரகனும் எட்டாம் அதிபதியுமான சனி பகவான் லாபஸ்தானத்தில் தனது நண்பன் சுக்கிரனுடன் கூடி சுக்கிரன் வீட்டில் நின்று பலம் பெற்று உள்ளார். ஆயுள் ஸ்தானம் என்று சொல்லப்படும் எட்டாம் வீட்டில் பாவிகள் யாரும் அமரவில்லை.

நவாம்சத்தில் சனிபகவான் தனது நண்பன் புதன் வீட்டில் எட்டாம் வீட்டில் அமர்ந்து இருகிறார். இப்படி எட்டாம் இடமும் ஆயுள் காரகனும் பலம் பெற்று இருப்பதால் அவர் 85 வயது வரை வாழும் அமைப்பு கொடுத்தது.

தாய் – தந்தை :

நாலாம் அதிபதி சுக்கிரன் சனி என்ற பாவியுடன் கூடி இரண்டு பக்கமும் பாவிகளால் சூழப்பட்டு பாவகத்தரி தோஷத்தில் சிக்கியுள்ளதாலும் தாய் காரகன் சந்திரன் கேது என்ற பாவியுடன் கூடி நிர்ப்பதாலும் நவாம்சத்தில் நாலாம் வீட்டில் ராகு நிர்ப்பதாலும் சந்திரன் சனியுடன் கூடி எட்டாம் வீட்டில் மறைந்ததாலும் ஸ்ரீ தியாகராஜர் இளம் வயதிலேயே தாயை இழக்கும் அமைப்பு ஏற்பட்டது.
ஒன்பதாம் அதிபதி குரு பகவான் மாரக ஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாம் வீட்டில் இருப்பதாலும் தந்தை காரகன் சூரியன் நவாம்சத்தில் நீச்சம் பெற்று இரண்டு மஹா பாவிகளால் சூழப்பட்டு பாவகத்தரி தோஷத்தில் சிக்கியுள்ளதாலும் தந்தையையும் இவர் இளம் வயதிலேயே இழக்கும் நிலை கொடுத்தது.

கல்வி – இசை – பக்தி :

2,4,5ஆகிய வீடுகளையும் அந்த வீட்டுக்கு அதிபதிகளின் நிலையும் வைத்து கல்வி நிலையை அறிய முடியும்.

இரண்டாம் அதிபதி சூரியன் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று நிற்கிறான். மேலும் கல்வி காரகன் புதனுடன் கூடி நிற்கிறான்.

நாலாம் அதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். இருபினும் பாவகத்தரி தோஷத்தில் சிக்கியுள்ளார். மேலும் மனகாரகன் சந்திரன் கேது என்ற பாவியுடன் கூடியது மன போராட்டம் கொடுக்கும் அமைப்பு. மனதளவில் பல போராட்டங்களை அனுபவிக்க வைக்கும்.

ஐந்தாம் அதிபதி செவ்வாய் மோட்சஸ்தானம் என்று சொல்லப்படும் பன்னிரெண்டாம் வீட்டில் இருப்பதால் ஆன்மீக அறிவை தேடி அலையும் படி செய்தது. தன்னையே தன்னில் உணரும் படி செய்தது. தன்னையே படிக்கும்படி செய்தது.

இசை – கீர்த்தனைகள் – 2400 உருப்படிகள் போன்றவை உருவாகியது எப்படி ?

மூன்றாம் இடம் இசை நாட்டியம் போன்றவற்றை குறிக்கும். சுக்கிரன் இசைக்கும் நாட்டியத்திற்கும் காரகன். புதன் அறிவு காரகன் (intellect ). மூன்றாம் வீட்டின் அதிபதி புதன் பகவான் தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூடி பாக்கியாதிபதி குருவின் பார்வையை பெற்று இருக்கிறான்.

இப்படி மூன்றாம் அதிபதி பலம் பெற்று தொழில் ஸ்தானத்துடனும் குருவின் பார்வையையும் பெற்று இருப்பதால் இசை ஞானி என்ற அளவிற்கு முன்னேற வைத்தது. மேலும் இசை காரகன் சுக்கிரன் சனியுடன் கூடி லாபத்தில் இருப்பதால் இசை துறையில் மேலும் முன்னேற வைத்தது.

இசையை பகவான் ஸ்ரீ ராமரை மட்டும் வழிபடவும் தொழவும் பயன்படுத்தியது எதனால் ? இசையை பொழுதுபோக்கும் நிகழ்ச்சியாக பார்க்கவில்லை ஏன் ?

அறிவு மற்றும்  ஆன்மீக ஸ்தான அதிபதியும்  ஐந்தாம் வீட்டு அதிபதியுமான செவ்வாய் மோட்ச ஸ்தானமான பன்னிரெண்டாம் வீட்டில் இருப்பதாலும் பன்னிரெண்டாம் அதிபதி புதன் தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் வீட்டில் இருப்பதாலும் தொழிலே இசையாகவும் அதை இறைவனுக்காகவும் செய்யும் நிலை கொடுத்தது.

எத்தைனையோ மன்னர்கள் சபையில் இசை அமைக்க அழைத்தபோதும் செல்லவில்லை.

இறைவனை பாடவே இசை என்று எந்த நேரமும் ஸ்ரீ ராமனை பாடி கொண்டு இருந்தார்.

ஆன்மீக சிந்தனை எப்போதும் ஏன் ?

ஆன்மீக கிரகம் மற்றும் ஒன்பதாம் வீட்டு அதிபதி குரு பார்வை மோட்ச ஸ்தான அதிபதி புதன் மீது விழுந்தது.

ஐந்தாம் வீட்டு காரன் செவ்வாய் மோட்ச ஸ்தானத்தில் அமர்ந்தான். ஆன்மீக அறிவு மேலோங்கியது. இறைவனை தேடி அலைய செய்தான். இறைவனை பற்றி அறிய வைத்தான்.

மோட்ச காரன் புதன் கர்ம ஸ்தானத்தில் அமர்ந்து ஆன்மீக கிரகம் குருவின் பார்வை பெற்றான்.

கடகத்தில் கேது மகரத்தில் ராகு இருந்தால் அந்த ஜாதகன் தன்னை தானே அறியும் இறை நிலை அடைவான். இந்த அமைப்பு  ஸ்ரீ ராமலிங்க அடிகளார் மற்றும் ஸ்ரீ கிருபானந்த வாரியார் போண்டோர்களின் ஜாதகத்திலும் காணபடுகிறது. இவர்கள் அனைவருமே ஆசிரியர் இல்லாமலே தன்னில் தன்னை உணர்ந்தவர்கள் .

மணவாழ்க்கை - இரண்டு தாரம் ஏன் ?

ஏழாம் அதிபதி சனி பகவான் லாபஸ்தானத்தில் அமர்ந்தான். ஏழாம் வீட்டில் பாவி ராகு அமர்ந்தான். நவாம்சத்தில் சனி பகவான் எட்டாம் வீட்டில் மறைந்தார். பொதுவாக ஏழாம் வீட்டில் பாவிகள் இருந்து பதினொன்றாம் வீட்டில் இரண்டு கிரகம் இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட மணம் அமையும். இவருக்கும் அதே நிலை தான் ஒரு மனைவி இறந்து பிரிவு ஏற்பட்டது. பிறகு இரண்டாவது மணம் முடித்தார்.

புத்திர இழப்பு – வம்ச விருத்திக்கு தடை ஏன் ?

ஐந்தாம் அதிபதி செவ்வாய் பன்னிரெண்டில் மறைந்து ஒரு பக்கம் சனி மறு பக்கம் கேது போன்றோர்கள் இருந்து கடுமையான பாவ கத்தரி தோசத்தை உண்டாக்கி இருப்பதால் ஒரு வம்சம் விருத்தி அடையாமல் போனது.
ஒரு பெண் குழந்தை பிறந்து அதுவும் இறந்து விட்டது.

1 comment :