01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, August 27, 2014

SHARUKH KHAN - BOLLYWOOD ACTOR HOROSCOPE ANALYSIS


இந்திய பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அவர்கள் நவம்பர் மாதம் 2 ம் நாள் 1965 ம் ஆண்டு புது டெல்லி யில் பிறந்து உள்ளார்.

சிம்ம லக்னம் மகர ராசியில் பிறந்து உள்ளார்.

லக்னாதிபதி சூரியன் கலைகளை குறிக்க கூடிய மூன்றாம் வீட்டில் நீச்சம் பெற்று அந்த வீட்டின் அதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் சந்திரனுக்கும் லக்னத்திற்கும் கேந்திரத்தில் இருப்பதால் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றும் உள்ளார்.

பன்னிரெண்டாம் அதிபதி சந்திரன் ஆறாம் வீட்டில் நின்று விபரீத ராஜயோகம் பெற்று உள்ளார்.


ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று சனி பகவான் ஷஷ யோகம் பெற்று உள்ளார்.
நாலாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று நின்று ருச்க யோகம் பெற்று உள்ளார்.

தாய் தந்தை : ( 1990 )

நாலாம் வீட்டில் பாவிகள் செவ்வாய் மற்றும் கேது கூட்டம் போட்டு இருக்கிறார்கள். தாய் காரகன் சந்திரன் ரோகஷ்தானம் என்று சொல்லப்படும் ஆறாம் இடம் பெற்று விட்டான்.

நாலாம் வீட்டிற்கு மாரகஸ்தானமான பத்தாம் வீட்டில் நிற்கும் ராகு திசையில் ரோகஷ்தானத்தில் நிற்கும் சந்திரன் புத்தியில் தாய்க்கு மரணம் ஏற்பட்டது.  

கல்வி :
நாலாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று நின்றான் . கல்வி காரகன் புதன் நாலாம் வீட்டில் நின்றான் . கல்வியில் மேல்நிலை கொடுத்தது. அறிவும் மேலோங்கியது. கல்வி ஸ்தானத்தில் நிற்கும் புதன் இவரை பொருளாதாரம் ( Bachelor of Economics ) பற்றி படிக்க செய்தார்.
தொலைக்காட்சி மற்றும் சினிமா துறை :

கலைத்துறை : 

பத்தாம் அதிபதி கலைக்காரகன் சுக்கிரனாக இருப்பதாலும் லாபஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் பார்வை சுக்கிரன் மீது இருபதாலும் லக்னாதிபதி சூரியன் கலைகளை குறிக்க கூடிய மூன்றாம் வீட்டிலும் சுக்கிரனுடைய வீட்டிலும் இருப்பதாலும் கலை துறையில் முன்னேற்றம் கொடுத்தது.

எட்டு திக்கும் புகழ் :

ஒருவன் புகழ் பெற வேண்டும் என்றால் ஸ்திரமான யோகம் இருக்க வேண்டும்.
இவரின் ஜாதகத்தில் எத்தனையோ யோகங்கள் இருந்தாலும் புகழ் பெறுவதற்கு காரணமான யோகம் கேந்திராதி யோகமே.

அதாவது லக்னத்திற்கு நான்கு கேந்திரதிலும் பலமான கிரகம் அமைந்தது தான் மிக பெரிய யோகம் மற்றும் பாக்கியம்.

லக்னதிருக்கு நாலாம் வீட்டில் ஆட்சி பெற்ற செவ்வாய் , ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்ற சனி பத்தாம் வீட்டில் உச்சம் பெற்ற ராகு. இப்படி அணைத்து கேந்திரமும் பலம் பெற்று இருப்பதால் இவரின் புகழ் எட்டு திக்கும் பரவியது.

திருமணம் : (25-10-1991 ) ராகு திசை செவ்வாய் புத்தி :

ஏழாம் வீட்டை பார்க்கும் செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் இவரின் புத்தியில் மண வாழ்வு அமைந்தது.

மண வாழ்கை எப்படி ?

ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்ற சனி அமைந்தான் ஒரே சீரான மண வாழ்கை கொடுத்தான். சுக்கிரனுடன் சேர்ந்த ராகு கலப்பு மண வாழ்வு அமைத்து கொடுத்தான். இஸ்லாமிய ஷாருக்கான் ஹிந்து கௌரியை மணக்கும் நிலை ஏற்பட்டது.

ஏழாம் இடம் மற்றும் ஏழாம் அதிபதி  சுத்தமாக இருப்பதாலும் ராசியில் சுக்கிரன் திரிகோணம் ஏறி இருப்பதாலும் மண வாழ்வு நன்றாக இருக்கிறது.

புத்திர பாக்கியம் : குரு திசை புதன் புத்தி : 1997

ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான் திசையில் குடும்பஷ்தான அதிபதி புதன் புத்தியில் அழகான ஆண் மகனை பெற்றார்.

சுக்கிர புத்தியில் :

ஐந்தாம் வீட்டில் நிற்கும் சுக்கிரன் புத்தியில் பெண் குழந்தையை பெற்றார்.

பத்ம ஸ்ரீ விருது : 2005 :  குரு திசை ராகு புத்தி :

லாபஸ்தானத்தில் நிற்கும் குருவின் திசையில் உச்சம் பெற்ற ராகு பகவான் புத்தியில் இவருக்கு மரியாதைக்குரிய பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது.   

சனி தசை ( 2008 – 2027 ):

தற்போது சனிதிசை கேது புத்தி டிசம்பர் 2014  நடைபெறுகிறது. கேது நாலாம் வீட்டில் இருந்து திசையை நடத்துவதால் கொஞ்சம் அலைச்சல் டென்சன் சுக குறை இருக்க செய்யும்.

ஆனால் 2015 ஜனவரி முதல் சுக்கிர புத்தி ஆரம்பம் ஆகிறது. அப்போதிலிருந்து சினிமா துறையில் மேலும் பல சாதனைகளை செய்வார். சுக்கிரன் திரிகோணத்தில் இருப்பதாலும் குருவின் பார்வை இருப்பதாலும் மிக பெரிய சாதனை செய்ய வைக்கும்.